Blog Archive

Friday, August 09, 2013

ஆளப் பிறந்தவள் ஆண்டாள் அவளின் ஆடிப்பூரத்திருநாள் இன்று

ஆண்டாளுக்கு முதல் அபிஷேகம்
ஆண்டாளின் மாலைபோல இனியாரும் காணமுடியாது மதுரையிலிருந்து தொடுக்கப்பட்டு பக்தி பரவசமாகச் சூட்டப் படும் மாலை அவள் சூடிக் கொடுத்தவள்
திருநீராட்டல் கண்டருளும்  ஆண்டாள் கூடியிருந்து குளிர்கிறாள்
ஆண்டாள் வலம் வரப் போகும் திருத்தேர் என்ன பாக்கியம் செய்ததோ.

பாண்டியன் பொற்கிழி அறுத்து திருநாரணனேமுதல் தெய்வம் என்று பறை சாற்றிய பெருந்தகை.ஸ்ரீரங்கநாதனின் மாமனார்.ஸ்ரீஆண்டாளின் தந்தை,குரு சகலமும் இவரே


வானில் காட்சி கொடுத்த கருடவாகனனுக்குப் பல்லாண்டு பாடிய பெருந்தகை.

 திருவாடிப்பூரத்து ஜகத்துத்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள்  வாழியே
உயர் அரங்கற்கெ கண்ணி உகந்துதளித்தாள்வாழியே
மருவாறும் திருமல்லி வளநாடு வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே
ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னார்  திருவடிகளெ சரணம்
ஸ்ரீ ஆண்டாளும் ரங்கமன்னாரும்


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

13 comments:

இராஜராஜேஸ்வரி said...

ஆளப் பிறந்தவள் ஆண்டாள் அவளின் ஆடிப்பூரத்திருநாள் இன்று அழகான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..!

Geetha Sambasivam said...

கடைசியிலே என்னிக்குக் கொண்டாடினீங்க? இன்னிக்கா? இன்னிக்கும் பூரம் இருக்கு போலிருக்கு! :)))) ஶ்ரீவில்லிபுத்தூரில் தேர் இன்னிக்குத் தான். :)))

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். மானிட குலத்தில் அவதரித்த பூமகள்.ராஜேஸ்வரி.
ஊராரின் கேலிக்கூத்திற்கெல்லாம் பயப்படாமல் அரங்கனின் மனதையே கவர்ந்தவள்.
அவனே வந்து அவளை மணம் புரிந்தான்.அவன் மனத்தை ஆண்டவள் அவள் தான்:)

வல்லிசிம்ஹன் said...

நேத்திக்கும் இன்னிக்கும் கீதா. நேற்று கற்பகாம்பாளுக்காக. இன்னிக்கு ஆண்டாளுக்காக:)

ஸ்ரீராம். said...

ஆண்டாளின் அருள் அனைவருக்கும் பூரணமாகக் கிடைக்கட்டும்.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான படங்கள்....

ஆண்டாளின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.....

நேற்று தில்லியில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் ஆண்டாளுக்கு ஆடிப்பூரம் அலங்காரம் பூச்சாற்று என நன்றாக நடந்தது....

ராமலக்ஷ்மி said...

படங்களும் பகிர்வும் அருமை. கோபுரமும் தேரும் அருகருகே தெரியுமாறு அமைந்த படம் அழகு.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம். வில்லிபுத்தூர் போக முடியாத சங்கடத்தைப் பதிவாகப் போட்டுவிட்டேன்:)
வையத்தை வாழ்விக்க வந்த பெருமகள். அவள் நாமம் நம்மை உய்விக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அப்படியா வெங்கட்.
தமிழரும் பாவையும் பிரிக்க முடியாத பிணைப்பில் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். செய்திக்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி.தேர்தான் முக்கியம். அதன் வடத்தைப் பார்த்திருக்கிறீர்களா.
இரண்டு கையாலயும் அணைத்தாலும் அடங்கத வலு.

காரஞ்சன் சிந்தனைகள் said...

மனம் கவர்ந்த பதிவு! பகிர்விற்கு நன்றி!

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி திரு சேஷாத்ரி.

மாதேவி said...

ஆடிப்பூர நன்நாளில் ஆண்டாள் பக்திபோற்றும் பகிர்வு.

அனைவருக்கும் அவள் அருள் கிடைக்கட்டும்.