About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Saturday, August 24, 2013

பந்தம் தரும் பாதுகாப்பு

Add caption
Add caption
என்னைக் காக்கும் அண்ணா உன் வாழ்வு சிறக்கட்டும்.
அண்ணன்  கை காண்பிக்கத் தங்கையின் கரம் பிடிக்கும் சொக்கநாதர்.

 ரக்ஷாபந்தன் விழா நடந்து  முடிந்திருக்கும்  இவ்வேளை.
வடநாட்டு வழக்கம்   என்றாலும்

இந்தப் பாசப் பிணைப்பு நம்மிடமும்  இல்லாமல் இல்லை.

கனுவுக்கும் கார்த்திகைக்கும்   தம்பியோ அண்ணாவோ கொண்டுவரும் சீர்....அது பத்தோ நூறோ ஆயிரமோ
புடவையோ   எதுவோ  கொண்டுவந்து கொடுக்கும்போது கிடைக்கும் ஆனந்தம் அளவற்றதுதான்.
கடைகளில் அலை மோதும் பெண்கள்  கூட்டத்தாஇப் பாஅர்த்து அதிசயித்தேன்.
நம்மூர்ப் பெண்களுக்கு   இத்தனை ஈடுபாட என்று அங்கிருந்த ஒரு குட்டிப் பெண்ணிடம் கேட்டபோது. ,நிறைய வாங்குகிறாயே அம்மா
உனக்கு இவ்வளவு சகோதரகளா என்று கேட்டேன்.
இல்லை ஆந்டி,
இது    தொந்தரவு செய்யும் கல்லூரி நண்பர்களிடமிருந்து
தப்பிக்க நாங்கள்   செய்யும் தொந்தரவு.
எங்களுக்கு வேண்டுவது நட்பு.
அவர்களுக்கு வேண்டுவது ஊர்சுற்றல்.கன்னாபின்னானு செலவு. இரவு நேரம் கழித்து வீடு திரும்புவது.

சிலசமயம் எங்கள் பாக்கெட் பணமும் செலவாகிவிடும்.
அதுதான்  முன்னேற்பாடாக  நல்ல  குணம்பொருந்திய
நண்பர்களை ராக்கி அண்ணாக்களாகப் பாவித்து அவர்களுக்கு இந்த ரட்சையைக் கட்டிவிடுவது.

எப்பொழுதும் உன்னைக் காப்பேன் துணை இருப்பேன்
என்ற உறுதி மொழி இதில்  முக்கியம்.
அதுவும்  இப்பொழுது  நகர்களில் பாதுகாப்பு குறையும் போது
நாங்கள் வேறு வேறு  இடங்களுக்குச் சென்று படிக்க நேரும்போது
அவர்களும் துணை வருவார்கள். வீடுவரை கொண்டுவந்து விட்டுச் செல்வார்கள்.
இதைக் கேட்டதும் என் பெண்படித்த காலம் நினைவுக்கு வந்தது.
அவளும் சி ஏ  படித்ததால் இரவு ஒன்பது மணியாகும் வீடு வர.

அவள் நண்பர்கள் இரு   சகோதரர்கள். மந்தைவெளியில் வீடு,. இருந்தாலும் இவளைத் தெருமுனை வரை வந்து விட்டுப் பிறகு பஸ் ஏறிப் போவார்கள்.
அந்தப் பையன்கள் இப்பொழுது வேறு வேறு நாடுகளில் இருந்தாலும் ரக்ஷாபந்தன் கடிதம் வந்துவிடும்.
தெருமுனையிலிருந்து வீட்டு அண்ணன் அழைத்துக் கொண்டு வந்துவிடுவான்!!

இப்பொழுது காலம் மாறிவிட்டாலும்,
ஏதோ துளி அளவு பாசமாவது  மிஞ்சியிருந்தால் பெரும்பாலான
குற்றங்கள் தவிர்க்கப் படும்.

இறைவந்தான் அருளவேண்டும். என் அன்பு இணைய சகோதரிகளுக்கும் சகோதரர்களுக்கும்  பந்தபாசம்  எனும்  சிறு நூலைக் கட்டிவிடுகிறேன்.
வாழ்க வளமுடன்.ராக்கி  கட்டிக்கொள்ள மறுத்து  ஓடும் நண்பர்களையும் பார்த்திருக்கிறேன்:)

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

13 comments:

Geetha Sambasivam said...

பந்தம் என்ன பாதுகாப்புக் கொடுத்தும் என்ன! மும்பைச் செய்தி மனதைக் கலங்க அடிக்கிறது. :(

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி அம்மா...

ஸ்ரீராம். said...

கணு போலவே எங்கள் வீடுகளில் நாக சதுர்த்தி, கருட பஞ்சமி சமயங்களிலும் சகோதர நோன்பு உண்டு. திருமணம் ஆகி வேறு வீட்டுக்கு நம் வீட்டுப் பெண் சென்று விட்டாலும் சகோதரர்கள் அவர்களை மறந்து விடக் கூடாது என்பதற்குத்தான் எத்தனை வழக்கங்கள்?

இராஜராஜேஸ்வரி said...

இப்பொழுது காலம் மாறிவிட்டாலும்,
ஏதோ துளி அளவு பாசமாவது மிஞ்சியிருந்தால் பெரும்பாலான
குற்றங்கள் தவிர்க்கப் படும்.

இறைவந்தான் அருளவேண்டும். என் அன்பு இணைய சகோதரிகளுக்கும் சகோதரர்களுக்கும் பந்தபாசம் எனும் சிறு நூலைக் கட்டிவிடுகிறேன்.
வாழ்க வளமுடன்.

பந்த பாசம் வாழ்க..!

கோமதி அரசு said...

என் அன்பு இணைய சகோதரிகளுக்கும் சகோதரர்களுக்கும் பந்தபாசம் எனும் சிறு நூலைக் கட்டிவிடுகிறேன்.
வாழ்க வளமுடன். //

ஏற்கனவே உங்கள் அன்பு எனும் பிடியில் இருக்கிறோம்.
மேலும் சிறு நூலைக்கட்டி அந்த பிடியை இறுக்குவதற்கு நன்றி அக்கா.
வாழ்க வளமுடன்.

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு வல்லிம்மா.

/துளி அளவு பாசமாவது  மிஞ்சியிருந்தால் பெரும்பாலானகுற்றங்கள் தவிர்க்கப் படும்./

ஆம். சரியாகச் சொல்லியுள்ளீர்கள்!

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கீதா. இது ஒரு பிரார்த்தனை ப் பதிவு தான்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.

வல்லிசிம்ஹன் said...

பெண்களும் பிறந்தகத்தை மதிக்கவேண்டும்.சகோதரர்களை மதித்து
வாழ்வில் ஒன்றவேண்டும்.ஸ்ரீராம். அதைத்தான் எல்லாப் பெண்களும் செய்கிறார்கள் என்றே நம்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி இரஜராஜேஸ்வரி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி. நீங்கள் இருக்கும் ஊரில் இதை எல்லாம் கொண்டாடுகிறார்களா.
நம் அன்பு க்கு நூல் கூடத் தேவை இல்லை.நினைப்பு ஒன்றே போதும்.
நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி.நிலமை சீரடையட்டும்.

மாதேவி said...

ரக்ஷாபந்தன் வாழ்த்துகள்.

நம் ஊரில் இப்படியான விழாக்கள் இல்லையே என நினைப்பேன்.