Blog Archive

Thursday, August 15, 2013

வரலக்ஷ்மி வருவாயம்மா

தாயே  வரமருள்வாய்
வரலக்ஷ்மி வரும் நாள்  வரும் வெள்ளிக்கிழமை
மஹாலக்ஷ்மி அருட்கடாக்ஷம்

 ஆவணி மாதம் பவுர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் வருகிறது. கணவரின் ஆயுள்பலம் அதிகரிக்கவும், குடும்ப ஒற்றுமை சிறக்கவும் பெண்கள் இதனை அனுஷ்டிக்கின்றனர்.

இந்த விரதம் குறித்து ஒரு கதை கூறப்படுகிறது... மகத தேசத்தில் குண்டினா என்னும் ஊரில் சாருமதி என்ற பெண் லட்சுமிதேவியின் பக்தையாக இருந்தாள்.
 அவளது கனவில் தோன்றிய தேவி, தன்னை வரலட்சுமியாக வழிபட்டால், வேண்டிய வரங்களைத் தருவதாக அருளினாள்.
 சாருமதியும் தன் குடும்பத்தினரிடம் இதை தெரிவித்து, ஒரு வெள்ளிக்கிழமையில் வழிபாடு செய்தாள். மற்ற பெண்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளத் தொடங்கினர்.
 வரலட்சுமி விரதத்தன்று, வீட்டை சுத்தம் செய்து, பூஜையறையில் வாழையிலையில் பச்சரிசியைப் பரப்பி, கலசம் வைக்க வேண்டும்.
அதில் மஞ்சள் பூசிய தேங்காயை வைத்து மாவிலையால் அலங்காரம் செய்ய வேண்டும்.
 கலசத்தின் முன்புறம் வெள்ளி அல்லது தாமிரத்திலான லட்சுமி முகத்தை வைத்து ஆபரணங்களை அணிவிக்க வேண்டும்.
 லட்சுமி அஷ்டோத்திரம், சகஸ்ரநாமத்தை சொல்லி வழிபட வேண்டும். இனிப்பு பலகாரங்கள், பழவகைகள் நைவேத்யம் செய்து, தூபதீபம் காட்டி
சாஷ்டாங்கமாக வணங்க வேண்டும். வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு கொடுத்து வழியனுப்ப வேண்டும்.

விரத பலன்கள்:

1. உயர்ந்த ஞானம் கிடைக்கும்.
2. மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
3. மங்கல வாழ்வு அமையும்.
4. மனதில் உள்ள விருப்பங்கள் ஈடேறும்.
5. கல்யாணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

அம்மனை பூஜை செய்ய பூஜாவிதானம் புத்தகங்களில் கூறப்பட்டுள்ள வழியையே பின்பற்றவும். அப்படிப் பின்பற்ற இயலாதவர்களுக்குச் சில எளிய பூஜா மந்திரங்கள் இதோ :

திருமகளே திருப்பாற்கடல் ஊடன்று தேவர் தொழ
வருமகளே உலகெல்லாமும் என்றென்றும் வாழவைக்கும்
ஒருமகளே நெடுமால் உரத்தே உற்று உரம்பெரிது
தருமகளே தமியேன் தலைமீது நின்தாளை வையே
(வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)

மகாலட்சுமி காயத்ரீ :

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்னீ ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீ : ப்ரசோதயாத்

ஸ்ரீ வேதாந்த தேசிகரின்   ஸ்ரீ ஸ்துதி  முதல் ஸ்லோகம்



மாநாதீதப்  பிரபித விபவாம் மங்களம் மங்களானாம்
வக்ஷப் பீடீம் மதுவிஜயனொ பூஷயந்திம் ஸ்வகாந்த்யா
ப்ரத்யாக்ஷனு ஸ்ரவிக மகிமா பிரார்த்தனீனாம் பிரஜானாம்
ஸ்ரேயோ  மூர்த்திம்  ஸ்ரியாம்  அசரணஹ த்வாம் சரண்யாம் பிரபத்யே//***********88888888888888888*******************************

மங்களங்களையெல்லாம் அருளும் மஹாலக்ஷ்மி
திருமாலின் மார்பில் எழுந்து அருள் புரிபவள்
அவளைப் பார்த்துப் பிரார்த்தனை செய்யும் 
அருளையும் அவளே வழங்கி  பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுகிறாள்.

ஸ்ரியை எனும் அவள் பெயருக்கேற்ப மங்களங்கள் தருபவள்.
  திருமாலின் அகத்தாமரையில் வீற்றிருக்கும் தாயாரைச் சரணம் புகுந்துவிட்டால் வேறு எந்தத் தெய்வத்தைத் துதிக்கவேண்டும்.

பதிவில்   ஏதாவது பிழையிருக்குமாயின் மன்னித்தருளவேண்டும்.




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

19 comments:

Kavinaya said...

வரலக்ஷ்மி விரத நாள் வாழ்த்துகள் அம்மா! படம் ரொம்ப அழகு! சுட்டுக்கிட்டேன்...

pudugaithendral said...

அம்மன் படம் ரொம்ப அழகு வல்லிம்மா.

நானும் அம்மனை அழைக்க ரெடியாகி கொண்டு இருக்கிறேன்

Geetha Sambasivam said...

அருமையான படங்களும், பதிவும். எனக்கு இந்த நோன்பு செய்ய ரொம்ப ஆசை. ஆனால் மாமியார் உத்தரவு கிடைக்கவே இல்லை. :(

இராஜராஜேஸ்வரி said...

திருமாலின் அகத்தாமரையில் வீற்றிருக்கும் தாயாரைச் சரணம் புகுந்துவிட்டால் வேறு எந்தத் தெய்வத்தைத் துதிக்கவேண்டும்.

வரலஷ்மி விரதம் பற்றி அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்.!

ஸ்ரீராம். said...



வருடம்தவறாமல் வீட்டில் பூஜை உண்டு, இந்த வருடம் தவிர!

கௌதமன் இந்த பூஜை MP3, மற்றும் ஆவணி அவிட்டம் முகநூலில் லிங்க் கொடுத்துள்ளார்!

வெங்கட் நாகராஜ் said...

படங்களும் பகிர்வும் அருமை.... எங்களுக்கு வழக்கம் உண்டு....

Ranjani Narayanan said...

படங்களும், தகவல்களும் மிக அருமை! தாயார் எல்லோருக்கும் எல்லாவித மங்களங்களையும் வாரி வழங்கட்டும்.

கோமதி அரசு said...

திருமாலின் அகத்தாமரையில் வீற்றிருக்கும் தாயாரைச் சரணம் புகுந்துவிட்டால் வேறு எந்தத் தெய்வத்தைத் துதிக்கவேண்டும்.//
அருமை நீங்கள் சொன்னது.
படங்கள் அழகு.

சாந்தி மாரியப்பன் said...

அருமையான பகிர்வு வல்லிம்மா..

வல்லிசிம்ஹன் said...

அன்பு கவிநயாவுக்கும் வாழ்த்துகள். நல்லபடியாகவிரதம் நடந்தேறி இருக்கும் என்று நம்புகிறேம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தென்றல். அம்மன் வந்து அநுக்கிரஹம் செய்து இருப்பார்.மனம் நிறைந்த வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா.எங்களுக்க்ம் வழக்கம் இல்லை. இருந்தாலும் அஷ்டோத்தரம் சொல்லி அர்ச்சனை செய்வதில் சிரமம் இல்லை.கொண்டாடினால் வரலக்ஷ்மி ஆகி விடுவாள் இல்லையா!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு இராஜராஜேஸ்வரி வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் அடுத்த வருடம் சேர்த்துக் கொண்டாடலாம் மா.எப்பொழுதும் லட்சுமி கடாக்ஷம் இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெங்கட். ஆதியும் அம்மாவும் சிறப்பாகக் கொண்டாடி இருப்பார்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ரஞ்ஞனி. தாயார் அநுக்கிரஹமெப்பொழுதும் நிறைந்திருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி ,
தெய்வ வழிபாடுதானே நமக்கு கதி. அவள் அன்றி எது நகரும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி சாரல்.

மாதேவி said...

வரலஷ்மி அருள் வேண்டி துதிக்கும் பகிர்வு அருமை.

நம் பகுதிகளில் வழக்கம் இல்லை.