About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Tuesday, July 02, 2013

பரிசோதனைப் பதிவு

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add captionதமிழ்  எழுத்து தெரிகிறதா. புதுக் கணீனியில் நெருப்பு நரி இறக்கினேன்.எல்லாம் ஜெர்மன் எழுத்தில் வருகிறது::(அவசர அவசரமாக நரியைத் தூக்கிப் போட்டுவிட்டேன். வாலைச் சுருட்டிகொண்டு    ஓடிவிட்டது என்று நினைக்கிறேன்.    இப்ப என்ன பிரச்சினை என்றால்  எண்டர் தட்டினால் அது  எண்டர் ஆக மாட்டேன் என்கிறது.   யார் விட்டா. முயலுவோம்.

23 comments:

அமைதிச்சாரல் said...

அழகான அழகியிருக்க நீங்க ஏன் நரியைத்தேடி ஓடறீங்க. இப்ப பாருங்க வாலறுந்த நரியா அது ஓடிப்போச்சு.

நரி முகத்தில் விழிச்சா நல்லா இடுகை எழுதலாம்ன்னு யாராவது சொல்லி வெச்சிருக்காங்களா வல்லிம்மா :-P

திண்டுக்கல் தனபாலன் said...

தந்திர நரியை விரட்டியது நன்று...

முயற்சியுடன் தொடருங்கள்...

வல்லிசிம்ஹன் said...

தப்புமா தப்பு. நரியை நம்பினது தப்பு:)அழகியே உன்னைச் சரணடைகிறேன் .கண்ணம்மா என்னைக் காப்பாத்தூஊஊஊஊ:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.சீச்சீ இந்த நரி புளிக்கும்னு கணினி சொல்லிட்டது.அதனால் இந்த எண்டர் மட்டும் பார்க்கலாம்.

Geetha Sambasivam said...

முதல்ல புதுக்கணினிக்கு வாழ்த்துகள். நரி நல்லாவே வேலை செய்யும், உங்களுக்குச் செய்யலை போல! நான் எக்ஸ்ப்ளோரர் பக்கமே போகிறதில்லை. :))) நெருப்பு நரியும், க்ரோமும் தான்!

Geetha Sambasivam said...

கணினியில் நெருப்பு நரி, மடிக்கணினியில் க்ரோம். :))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

//யார் விட்டா. முயலுவோம்.//

விடாதீங்கோ. ;)))))

பதிவு எண்ணிக்கைக் கூடட்டும்.

வல்லிசிம்ஹன் said...

பழைய கணினியில் நரிதான். இதூலயும் டௌன்லோட் செய்யலாம்னு நினைத்தேன். கீதா.இனி க்ரோமே கதி:)ஆஹா இரண்டிலயும் வேலை நடக்கிறதா:)

வல்லிசிம்ஹன் said...

பதிவு எண்ணிக்கைக் கூடட்டும்.// இது என் எண்ணம் இல்லை கோபு சார்.

ஸ்ரீராம். said...

க்ரோம் எனக்குப் படுத்தல் நம்பர் ஒன்! எனவே நானும் நெ ந!

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம்.......க்ரோம் தான் இந்த புதுக் கணினியில் ராஜ்யம் செய்கிறது.இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும். என் வழிக்குக் கொண்டு வரப் பார்க்கிறேன்:)

வெங்கட் நாகராஜ் said...

ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொன்று! நெருப்பு நரியில் ஒன்றும் பிரச்சனையில்லையே இங்கே....

புதிய மடிக்கணினிக்கு வாழ்த்துகள்...

வல்லிசிம்ஹன் said...

நெருப்பு நரி வந்துவிட்டது வெங்கட்:0) நன்றிமா.

அப்பாதுரை said...

ஒண்ணுமே புரியலியே?!

வல்லிசிம்ஹன் said...

அந்த நரி ஜெர்மன் நரி. இப்போ நம்ம நரியை இறக்கிவிட்டேன் இனி எல்லாம் நரிமயமே:)))தனபாலன்.

வல்லிசிம்ஹன் said...

அது நேற்றுப் பிரச்சினை துரை. புதுசா விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்தாச்சு. கட்டழகியாத்தான் இருக்கிறாள்.
தொட்டு இயக்குவதுதான் பழகவில்லை.

குழப்பத்தில் நெருப்புநரி ஜெர்மன் மொழியில் இறக்குமதி ஆனது. வாலை வெட்டி அனுப்பிட்டேன்.
இன்னிக்குப் புதுத்தெளிவு வந்து மொசில்லா நரியை டவுன்லோட் செய்தாச்சு.
இப்போ எண்டர் பட்டனும் வேலை செய்கிறது:)

கோமதி அரசு said...

புது கணினிக்கு வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

நரி நன்மை பயக்கட்டும்
புது கணினிக்கு வாழ்த்துக்கள்

Bagawanjee KA said...

புது கணினியை வழிக்கு கொண்டு வர வாழ்த்துக்கள் ...குடிகார கணவனை வழிக்கு கொண்டுவர என் பதிவு >>>......http://www.jokkaali.in/2014/02/blog-post_5018.html
பிங்க் நிற சோளிக்குள் இருப்பதை புரிய வைக்க வருகிறார் மாதுரி

Kanaka Raj said...

ஏதாவது உருப்படியா பேச ஒருத்தரும் இங்கே இல்லையா ?சும்மா நரி ,அழகி ன்னு வெட்டியா வேலை எதுக்கு ?

Kanaka Raj said...

ஏதாவது உருப்படியா பேச ஒருத்தரும் இங்கே இல்லையா ?சும்மா நரி ,அழகி ன்னு வெட்டியா வேலை எதுக்கு ?

Geetha Sambasivam said...

கனக்ராஜ், நரி, அழகிஎல்லாம் வெட்டிப் பேச்சுக்குப் பேசலை. :))))

நெருப்பு நரி என்பது Firefox brouser! அழகி என்பது தமிழ் எழுதப் பயன்படும் மென்பொருள். அதன் பெயரே அழகி தான். ஆங்கிலத்திலும், தமிழிலும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கீதாமா.புரிய வைத்தற்கு>}}