About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Thursday, July 25, 2013

வராத நிலவு

தேய் பிறை நிலா26/7/2013
குரு பூர்ணிமா

 இந்த மாத முழுநிலவைப் பார்க்கவே முடியவில்லை.
ஒரே  மேக மூட்டம். 14ஆம் நாளாவது   எடுத்திருக்கலாம்.:(

அதற்குப் பதிலாக அமெரிக்க  நிலாவை அனுப்பச் சொன்னேன்
மகளிடம்.
 தாய் சொல்லைத் தட்டாமல் அனுப்பிவிட்டாள்.
சென்னையில் ஆடிக்காற்றைக் காணோம்.
ஏதோ வசந்த காலம் போல குயில்களும் இனம் அறியாத பறவைகளும் காலையில் மாமரத்தில் கூடுகின்றன. அவைகளே மழைக்காலமா வசந்த காலமா என்று திணறுவதாக எனக்குத் தோன்றுகிறது.

இந்த வருடம் என்ன!!!திரையுலகத் தாரகைகளுக்கும்,பாடகர்களுக்கும்,இசை அமைப்பவர்களுக்கும்,நடிகர்களுக்கும்  மறையும் வருடமா தெரியவில்லை.

ஒருவர் பின் ஒருவராக விடை பெறுகிறார்கள்.

அவர்கள்  நமக்குத் தந்த மகிழ்ச்சிகளுக்கு நன்றி.

வந்திருந்த குழந்தைகளுக்கு ஒரு மாறுதலாக இருக்கட்டும் என்று மஹாபலிபுரம் போனோம். அங்கும்   மேக மூட்டம்.
அலைகள் ,''கிட்ட வராதே'' என்று பயமுறுத்தின.
அவைகளின் ஆக்ரோஷத்திலும் ஒரு அழகு தெரிந்தது.

அங்கு காவல் இருந்தவர் சொன்னார். வழக்கத்துக்கு மாறாக
அலைகளின் வேகம் அதிகமாக இருக்கிறது.

ஆனால் எவ்வளவு மணலை அரித்து உள்ளே    கொண்டு  போனதோ அத்தனையையும்   மீண்டும் கொண்டு வந்து கரையில் சேர்த்துவிடும்.
அடடா. மணல்  கொள்ளை அடிப்பவர்கள் சகவாசம் இந்தக் கடலுக்கு ஏற்படவில்லை போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்:)
இயற்கையின் அதிசயம்.

மீண்டும் பார்க்கலாம்.
பழைய நிலா.
 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

27 comments:

அமைதிச்சாரல் said...

இறக்குமதி செய்யப்பட்ட நிலாவும் அழகுதான் :-)

திண்டுக்கல் தனபாலன் said...

பலரின் மறைவினால் நிலவிற்கு கோபம் வந்து விட்டதோ...?

அன்று வந்ததும் அதே நிலா...
இன்று வராததும் அதே நிலா...
இன்பம் தந்ததும் ஒரே நிலா...
ஏங்க வைப்பதும் ஒரே நிலா... ஆஆஆஆ...
ஏங்க வைப்பதும் ஒரே நிலா...

ஸ்ரீராம். said...

மணல் கொள்ளையர் சகவாசம் ஏற்படவில்லை இல்லை, அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறதோ என்னவோ....!!

ஆடிக் காற்று இல்லை, ஆனால் வானிலை ரம்யமாக இருக்கிறது.

ராமலக்ஷ்மி said...

அழகு.

இங்கேயும் முழுநிலா தலையைக் காட்டவில்லை நேற்று. ஒரே மேக மூட்டம்.

ஆம், நம்மை மகிழ்வித்த திரைக் கலைஞர்கள் பலரும் விடைபெற்ற வருடமாகிப் போய்விட்டது 2013.

கோமதி அரசு said...

இயற்கையின் அதிசயம்.//
இயற்கையின் அதிசயத்தை வியந்தது ரசிக்கும் படி இருந்தது.
திரை உலகின் பலரின் மறைவு அதற்கு வருத்தமாய் தான் இருக்கும். திரை உலகினரை வானத்து தாரகை என்று அன்னாந்து பார்த்த காலம் உண்டு அல்லவா!
நிலா அழகு.

மாதேவி said...

பூரணை நிலாவும் ஒளிந்துவிட்டாளா.

மகாபலிபுரம் சென்றீர்கள்போலும் அருமையான இடம்.

Ranjani Narayanan said...

DD அவர்கள் எழுதியிருக்கும் பாடல் வரிகள் தான் எனக்கும் நினைவுக்கு வந்தது அமெரிக்க நிலவைப் பார்த்தவுடன்.

மகாபலிபுரம் எத்தனை மாறியிருக்கிறது, இல்லையா? சிறுவயதில் பார்த்த கடற்கரை கோவில் இப்போது தடுப்பு சுவர் எழுப்பப்பட்டு, சுற்றிலும் வேலிகள், மரங்கள் என்று ரொம்பவும் வித்தியாசமாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் சாரல். இன்று காலை வந்த நிலாவையும் படம் எடுத்த பிறகுதான் மனம் சாந்தி அடைந்தது:))))

வல்லிசிம்ஹன் said...

ஆஹா தனபாலன். உங்கள் குரல் ஒலிப்பது போலவே எனக்குத் தோன்றியது. எவ்வளவு அழகான பாடல்.மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஸ்ரீராம். வானிலை நடக்கச் சொல்கிறது.
கடலோரம் வாங்கிய காற்று என்று பாடச் சொல்கிறது வெகு ரம்யம்.!!

வல்லிசிம்ஹன் said...

அங்கேயுமா.பங்களூரிலிருந்து வந்தவர்கள் தினம் தினம் மழை பெய்வதாகச் சொன்னார்கள்..ஹ்ம்ம் .இப்படியும் ஒரு மாதம்:)

வல்லிசிம்ஹன் said...

உண்மையிலேயெ மிக ஆச்சரியம் தந்த நிகழ்ச்சி கோமதி.
இந்த வருடம் தான் இவ்வளவு திரை உலக நஷ்டங்களைப் பார்க்கிறேன்.
வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் மாதேவி.அழகான இடம்தான்.
இப்பொழுது மாறிவருகிறது:(
நிலா அம்மாவும் மேகங்களுக்கு ப் பின்னால் மறைந்து கொண்டுவிட்டாள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ரஞ்சனி.

முன்பிருந்த மஹாபலிபுரம் எப்ப்பொழுதும் உற்சாகம் தரும். இப்பொழுது குப்பையும் அழுக்கும் மிகுந்துவிட்டது. எங்கும் வியாபார மனப்பான்மை.கடற்கரைக் கோவில் அருகேயே போகமுடியவில்லை.வேலி போட்டு அதன் அழகே மறைந்துவிட்டது.

வெங்கட் நாகராஜ் said...

அட இது அமெரிக்க நிலா! :)

படங்களை ரசித்தேன்.

sury Siva said...


அமெரிக்காவிலிருந்து வந்த நிலவுக்கு ட்யூடி கட்டினீர்களா ?

நான் நயாகராவிலேயே அந்த நிலவைப் பார்த்தேனே !!


சுப்பு தாத்தா
www.menakasury.blogspot.com

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுப்பு சார். நயாகராவும் மாமியும் பூர்ணிமாவுமா:)
ம்ஹூம்.
என்ன பாடல் பாடினீர்களோ என்று யோசிக்கிறேன்!!

இராஜராஜேஸ்வரி said...

இயற்கையின் அதிசயம்
ஆச்சரியம் தான் ..!

அப்பாதுரை said...

பழைய நிலா பொழிகிறது..

வல்லிசிம்ஹன் said...

வரணும் இராஜராஜேஸ்வரி. மணலை அரிப்பது ஏன். மீண்டும் கொண்டு போடுவது ஏன் என்ற கேள்வியே எனக்குள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை.
பழைய நிலா பொழிகிறது.
மீண்டும் புதிய நிலா ஆகிறது:)

Geetha Sambasivam said...

http://sivamgss.blogspot.in/2013/07/blog-post_27.html

தொடர்பதிவுக்கு உங்களை அழைத்துள்ளேன். நேரம் இருந்தால் இயன்றால் தொடரவும். கட்டாயமெல்லாம் எதுவும் இல்லை. தங்கள் வசதிப்படி செய்யவும். நன்றி. :)))))))

Geetha Sambasivam said...

நிலாவைப் பார்க்க வரமுடியலை. அன்னிக்குத் தான் வீட்டில் விருந்தினர்கள் வருகை, மறுநாளும், அதனால் எங்க மொட்டை மாடிக்கே போயும் பார்க்கலை. :)))) அமெரிக்க நிலாவும் அழகுக்குட்டி தான். :))))

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்பதிவு அழைப்பு :

http://sivamgss.blogspot.in/2013/07/blog-post_27.html

தொடர வாழ்த்துக்கள்...

மாதேவி said...

கணினி அனுபவம் தொடர்பதிவுக்கு உங்களையும் அழைத்துள்ளேன்.

உங்கள் சுவையான அனுபவத்தை படிக்க ஆவலாக இருக்கின்றோம்.

முடிந்தபோது தாருங்கள் மகிழ்ச்சியடைவோம்.
நன்றி.
http://ramyeam.blogspot.com/2013/07/blog-post_27.html

துளசி கோபால் said...

அழகு!