Blog Archive

Monday, July 01, 2013

பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்..


மாடியின் வளைவில் ஏறி வரும்  பொன்னியைப்  பார்த்தான்   சாமி ...............................எப்படி வளர்ந்துவிட்டாள்!.  கண்ணுக்கு  இனிமையான பச்சை பட்டுப் பாவாடைவெள்ளையில் பலவிதபூக்கள்   போட்ட தாவணி. கையில் பச்சை வளையல்கள்  முகம்     மலர்ந்த புன்னகை,வெட்கம்   ஏன் இந்த மாற்றம்.   அம்மாவை அழைக்க எழுப்பிய குரல் தொண்டையில் சிக்கியது. வா வா எப்ப வந்த    மெட்ராஸ்க்கு?.   பரீட்சையெல்லாம் பாசாவியா. இல்லை கணக்கில்   கோட்டை விடுவியா என்று    கேலியும் சிரிப்புமாக  அவளை வரவேற்றான்.   மாடி  ஏறி அவனை நிமிர்ந்து பார்த்தவள் சிரித்தபடி  மாமி என்றழைத்தபடி உள்ளே  சென்றுவிட்டாள்......................................................மனதில் எழுந்த   ஏமாற்றத்தை மறைத்தபடி          அவளைத் தொடர்ந்தான்.                             ..அவனது அம்மாவும் பொன்னியைப் பார்த்து வாயைப் பிளந்தாள் .................................ஏ குட்டி எவ்ளொ  வளந்துட்ட...ம்ம் கலயாணம் கட்ட வேண்டியதுதான்.என்று ஆசையாக  அண்ணன் மகளைப் பார்த்தாள்........................................................என்னது   கல்யாணமா.!! மாமி இப்பதான்   ஒம்போதாவது வந்திருக்கிறேன். இன்னும் ரெண்டு வருஷமாவது படிக்கணும்.     சாமிக்குக் கட்டி வைங்க. அவந்தான் வளர்ந்துட்டான் பனை மரத்தில பாதி:0  என்று சிரித்தாள் பொன்னி..........................................................................................................அவனும் இப்பதானெ  காலேஜ் போயிருக்கான். சம்பாதிக்க  வேண்டாமா. ....    மருமகளை வச்சுக் காப்பாத்தப் பணம் வேணுமே குட்டி!!!!!................................................சாமிக்கென்ன , தொட்டால் நானூறு சம்பளம் வாங்கிடுவான்.  படு  சாமர்த்தியம்.  என்றவாறு சாமி இருக்கும் பக்கம் கண்ணை ஓட்டினாள் பொன்னி.. ........................ஏதோ ஒரு நாணம் அவனை முழுவதும் பார்க்க விடாமல் தடுத்தது.......அதற்குள் மாமியின் இன்னோரு பெண் சித்ரா வந்துவிட்டாள் அவளும் இவளும் ஒரே வயது.

 இரண்டு வருடங்களாகப் பார்க்காதவர்கள் உடனே மாடிக்குப் போய்விட்டார்கள். தாயம்,புளியமுத்து  எல்லாம் விளையாடியபடி  பொழுது போனது.  ....................பாட்டீ தேடுவாங்கப்பா என்றபடி எழுந்தவள் ,சாமி உள்ளே நுழைவதைக் கண்டு தயங்கினாள்...

..நம்ம சாமிதானே ஏன் இப்படி  ஒதுங்கறே என்று கேலி காட்டினாள்  கீதா........இல்ல நான் போகணும்  என்று தாவணித் தலைப்பைத் திருக ஆரம்பித்தாள் பொன்னி.  கைகளில் ஆங்கிலப் புத்தகங்களை வைத்திருந்த  சாமி...........பொன்னியிடம் கொடுத்தான். இதெல்லாம் டிடெக்டிவ் ஸ்டோரீஸ்.முன்ன வாசிச்ச ஃபாண்டம் அது போல இல்ல.  லீவு நாளை வீணாக்காமல் படி என்று........................................................பெரிய மனித தோரணையில் அவள் கையில் கொடுத்தான்...குனிந்து    கொண்டே வாங்கிய பொன்னி தான்க்ஸ் சொல்லிவிட்டு

அடுக்களையில் மாமியின் அடையை ருசிக்கப் பறந்தாள்..................................மாமியும் மறக்காமல் அவளுக்குப் பிடித்த  மிளகு குழம்பு சாதமும் ,அடையும் வெண்ணெயுமாகத் தாமரை இலையில் வைத்திருந்தாள்.   அடுக்களை வெகு எளிமையாக இருந்தது. அடுப்பு, குமுட்டி அடுப்பு என்று வசதிகள் குறைவான இடம்தான்  .........................மேலே ஓடுவேய்ந்த கூரை. நடுவில் எட்டிப்பார்க்கும் சூரியப் பொட்டுகள். அனைத்தையும் ருசித்தபடி  இருந்தவளை ஏதோ ஒன்று திருப்பிப் பார்க்கவைத்தது......சாமி.
அதற்கு மேல் ஒன்றும் தொண்டையில் இறங்கவில்லை அவளுக்கு......எப்படியோ     சமாளித்தவள் மாமியைப் பார்த்தாள்.....மாமி கண்ணில் நீர்.....அச்சோ எப்பதான் ஓடு மாற்றுவோமோ   உன் மாமாவின்    மனம் என்னிக்குச் சரின்னு படறதோ அன்னிக்குத்தான் எல்லாக் கல்யாணமும்......என்ற    படி  எழுந்தவள்....
...சமத்தா இருந்துக்கோ. படி......பாட்டி தேடப் போகிறாள்.
 ரிக் ஷாவைக்   கூப்பிடட்டுமா?  என்றபடி வெளியே வந்தார்கள். பால்கனியின் கோடியில்        நின்று கொண்டிருந்த  சாமி  நான் முனியாண்டியைக் கூப்பிட்டு விட்டேன்மா. .பணமும் கொடுத்துவிட்டேன்.  பொன்னி பத்திரமாகப் போய்விடுவாள் என்றபடி......பொன்னியைப் புன்னகையோடு ஏறிட்டான்.   ........................அவள் மனதில் ஏதோ சங்கடப் படுத்தியது..நான் வரேன் என்று தலையை ஆட்டி விடை பெற்றுக் கொண்டு படியிறங்கினவளை ஏதோ ஒன்று திரும்ப வைத்தது. சாமி அதே புன்னகையோடு நின்றுகொண்டிருந்தான்........................................................அவனும் தலையை ஆட்டி விடை கொடுத்தான்.                      
 பாட்டி வந்ததும் கோபித்துக் கொண்டாள் .உன்னை யார் அங்க போகச் சொன்னது...................வீட்டொடு இரு.
எல்லாம் போதும் இந்த சகவாசம்......................பொருத்தம் கிடையாது.
 கற்பனை எல்லாம் வேண்டாம்......   இதெல்லாம் நடந்து நாலைந்து வருடங்களில் சாமி தில்லி  போய்விட்டான். ..............
.......................பொன்னி     மன்னார்குடியில் திருமணம் செய்துகொண்டு பணக்கார    நிலச் சுவான்  தாரின் மருமகளானாள்.   சாமியின் பார்வையை மட்டும் அவள் என்றும் மறக்கவில்லை.# பதின்ம வயதில் ஒரு ராகம்.

28 comments:

துளசி கோபால் said...

அடடா............. :(


ராமலக்ஷ்மி said...

அந்தக் காலத்தையும் அன்பான பார்வையில் மனங்கள் பறி போனதையும் மிக அழகாகச் சொல்லி விட்டீர்கள். அருமை வல்லிம்மா.

இராஜராஜேஸ்வரி said...

பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்..

அழகான பார்வை..!

Geetha Sambasivam said...

இப்படி எத்தனை எத்தனை உள்ளங்கள்! :(( வாய்ப்பிருந்தும், முறையான உறவிருந்தும் பிரிக்கப்பட்டது. :((((

ராஜி said...

கண்ணை பறிக்கின்றது மலர்கள்

ADHI VENKAT said...

எத்தனை உள்ளங்கள் இப்படி திசை மாறிப் போனார்களோ....

வல்லிசிம்ஹன் said...

எத்தனையோ நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.தங்கம் என்று எனக்கு ஒரு தோழி இருந்தாள்..அவள் வாழ்விலும் இந்த சோகம் வந்தது.

சாந்தி மாரியப்பன் said...

அருமை வல்லிம்மா.

பார்த்துக்கொண்டே இருந்தால் மட்டும் எல்லாம் நல்லபடியாக ஆகிவிடுகிறதா.. ஹூம்.

வல்லிசிம்ஹன் said...

மனதைப் பிழியும் வண்ணம் நடந்த கதை ராமலக்ஷ்மி.ஊருக்கு வந்து என் தோழியின் மனம் வேறெதிலும் செல்லாமல் இருந்தாள்.பிறகு படிப்பு கவனத்தை மாற்றியது.

வல்லிசிம்ஹன் said...

நன்றி இராஜராஜேஸ்வரி.அந்தக் காலம் கட்டுப்பாடுகளுக்கு அடங்கியது இல்லையா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கீதா.நம் குடும்பங்களிலேயே எத்தனை யோ இது போல அநாவசியமான எண்ணங்களை விதைத்துவிட்டுப் பிறகு அந்த உள்ளங்களைப் பிரிப்பது வழக்கம்தானே.எங்கள் குடும்பத்திலியே இது போல நடந்திருக்கிறது.இரண்டு பையன்களில் ஒருத்தரை மாமா பெண்ணுக்கும் இன்னொருவரை அத்தை பெண்ணுக்கும் கொடுப்பதாக இருந்தது. நடுவில் கிராமத்திலிருந்து யாரோ வந்து விஷயத்தைக் கெடுத்துவிட்டார்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பாட்டி வந்ததும் கோபித்துக் கொண்டாள். உன்னை யார் அங்க போகச் சொன்னது.................. வீட்டொடு இரு. எல்லாம் போதும் இந்த சகவாசம் .................. பொருத்தம் கிடையாது. கற்பனை எல்லாம் வேண்டாம்......//

;))))

/பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்.." /

என்ற தலைப்பு அருமை. உண்மை. இதுபோல ஆங்காங்கே எவ்வளவோ நிகழ்வுகள்.

சிலவற்றை வெளியில் சொல்லவே முடியாது. மனதில் பூட்டிப்பூட்டித் தான் வைக்க முடியும். ;)

வல்லிசிம்ஹன் said...

மனமும் மலரைப் போன்றே மெல்லியதுதானே. ராஜி.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் .ஆதி.சமூக ஏற்பாடுகள் எவ்வளவோ மாறிவிட்டன.

வல்லிசிம்ஹன் said...

அப்போ எல்லாம் சேர்ந்து பேசுவதோ, எண்ணங்களப் பரிமாறிக் கொள்வதோ நடக்காத காரியம் சாரல். அவர்கள் வயதும் அந்த மாதிரி.யாரையும் எதிர்த்துக் கொள்ள முடியாது. பொன்னியின் மாமா ஒரு பள்ளி ஆசிரியர். சாமி நன்றாகப் படித்து நல்ல வேலையில் சந்தோஷமாகவே இருக்கிறார். துரை அவர்களின் கதையைப் படித்ததும் இந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது.

திண்டுக்கல் தனபாலன் said...

சிலவற்றை மறைக்க முடியும்... மறக்க முடிவதில்லை அம்மா...

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோபு சார்.வீட்டுக்கு வீடுஎத்தனையோ கதைகள். இன்று என் தோழியின் நினைவு அதிகமாக இருந்தது எழுதிவிட்டேன்:)

மாதேவி said...

அந்தநாள் உணர்வை அழகாக எழுதிவிட்டீர்கள்.

தலையங்கம் ரொம்ப பிடித்தது.

ஸ்ரீராம். said...

சொல்லாமலே இருந்த காதல் சொல்லாமலேயே சென்று விட்டது.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் தனபாலன். முதல் காதல் என்று தான் பெயர் வைக்க இருந்தேன். அந்த ஒரு நாளைத் தவிர பிறகு அவர்கள் சந்திக்கவே இல்லை.விகல்பமில்லாத நிறைவேறாத ஆசை. மறக்க முடியாததும் தான்.நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மாதேவி. முன்னாள் பாட்டின் முதல் வரிதான் மா அது.இவர்கள் போல இல்லாமல் தைரியமாகத் திருமணம் செய்து கொண்டவர்களும் உண்டு. ஒரு பத்து சதவீதம் இருக்கும்:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். பார்வையில் முடிந்த காதல்.14ம் 19ம் என்ன சாதித்திருக்க முடியும் அதுவும் கண்டிப்பு நிறைந்த அந்தக் காலத்தில்.?

அப்பாதுரை said...

கச்சிதமான காதல் வலி. அழகாச் சொன்னீங்க.

வல்லிசிம்ஹன் said...

நன்றி துரை.அந்த நினைவு மட்டும் பொன்னியின் மனசில் தங்கியே இருந்தது. போனவாரம் தான் தெரிந்தது அவர் இனம் தெரியாத நோயில் மறைந்தது. யாரும் இல்லாத ஒரு மதியத்தில் எனக்குத் தொலைபேசியில் அழைப்பு அவளிடமிருந்து வந்தது. ஒரே ஒரு பையன் பிறந்து அவனுக்குத் திருமணமாகிக் குழந்தைகளும் பிறந்து பாட்டியும் ஆன பொன்னி என்னிடம் மட்டும் சொல்லி அழுதாள். உங்கள் கதைதான் என்னை எழுத வைத்தது.

Ranjani Narayanan said...

உங்களின் கதை சொல்லும் பாங்கில் நாங்களும் மனதை பறிகொடுத்தோம். படித்துவிட்டு எத்தனை பேர் பெருமூச்செறிந்தார்களோ!

பார்வையுடன் நின்றுவிட்ட காதல்!

வல்லிசிம்ஹன் said...

வரணும் ரஞ்சனி. நிஜம்தான்.அந்தச் சின்னவயசின் சோகம் அவளை இப்படிப் பாதிக்கும்னு நாங்கள் நினைக்கவில்லை. யார் யாருக்கு என்ங்அனு போட்டு இருக்கோ அதுதானே நடக்கும்.

வெங்கட் நாகராஜ் said...

காதல் வலி.....

அந்தக் கால காதல் கண்முன்னே!

வல்லிசிம்ஹன் said...

காலை வணக்கம் வெங்கட். கட்டுப்பாடான குடும்பங்களில் இப்படித்தான் இருந்தது. எப்படியோ இருவரும் ஈர்க்கப்பட்டுப் பிரிந்து விட்டார்கள். நான்கு மணிக் காதல் னும் சொல்லலாம்.:(