Blog Archive

Thursday, May 23, 2013

பதின்மூன்றாம் நாள் நிலா

பாதிநிலாவை விண்ணில் வைத்து மீதி நிலாவைக்  கண்ணில்  வைத்தானோ!
காமிரா,கைகள்  நடுக்கத்தில்  பிடிபட்ட  நிலா
Add caption
இலைகள் மேகங்களுக்கு  நடுவில்  சந்திரன்
தோசை கொஞ்சம் பிய்ந்து விட்டது
பறக்கும் தட்டு போலக் காட்சி அளிக்கும் மஞ்சள் நிலா:)
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

21 comments:

துளசி கோபால் said...

எனக்கு பிய்ஞ்ச தோசை வேணாமுன்னு ஒரு காலத்துலே பண்ண அழிசாட்டியம் நினைவுக்கு வருது:-)))

ராமலக்ஷ்மி said...

"பாயும் ஒளி நீ எனக்கு” என இலைகள் மேகங்களுக்கு நடுவே பிடித்திருக்கிறீர்கள்! பறக்கும் தட்டு அழகு:).

ஸ்ரீராம். said...

நீங்கள் நிலவின் ரசிகை! படங்கள் அழகு!

வை.கோபாலகிருஷ்ணன் said...

தோசை நிலா அருமை. பாராட்டுக்கள்.

வல்லிசிம்ஹன் said...

துளசிமா!!!!
நான் பிய்ந்த தோசை சாப்பிடுவேன். உடைந்த அப்பளம்தான் சாப்பிடமாட்டேன்:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி ''பாயும் ஒளி''நல்ல காப்ஷன். நன்றி.இன்றைய நாள் நிலா எப்படி இருக்கும் என்று பார்க்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.மனமே வராது நிலவை விட.
உள்ளே வான்னு எஜமானர் ஆர்டர் போட்ட பிறகுதான் வந்தேன்:)

கோமதி அரசு said...

நிலா படங்கள் அழகு.

இராஜராஜேஸ்வரி said...

நிலவு வ்ந்ததும் படம் மலர்ந்ததா..!

திண்டுக்கல் தனபாலன் said...

அழகு... அருமை...

அப்பாதுரை said...

பிய்ஞ்ச தோசை, இராரா கமென்ட் ரெண்டும் டாப்.

Anonymous said...

இன்று பவுர்ணமிதானே? அதன் சிறப்பு பதிவாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

வல்லிசிம்ஹன் said...

பாட்டி சுட்ட தோசை.கொஞ்சம் பிய்ந்துவிட்டது கோபு சார்;)
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கோமதி மா. வாழ்கவளமுடன். இன்று வைகாசி விசாகம்.

வல்லிசிம்ஹன் said...

இராஜராஜேஸ்வரி.எதிர்பார்க்கவில்லை இந்தப் பாட்டை!!!!நிலவை விட நீங்கள் சொல்லியிருக்கும் வார்த்தைகள் கவிதை.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.இன்றும் நிலா வரும்:)

வல்லிசிம்ஹன் said...

துரை,
உங்கள் கதை படித்த கலக்கத்திலும் நிறைவிலும் இருக்கிறேன். அதனால் திறந்த மனதுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

இன்றுதான் பௌர்ணமி பாண்டியன்.
இந்த நிலவையும் பிடிக்க உத்தேசம்.கடவுள் கிருபையில் நல்லபடியாகப் படம் எடுக்கணும்.

Geetha Sambasivam said...

நேத்திக்கு இந்தப் பிஞ்ச தோசை நிலாவை நானும் பார்த்தேன், அதுவும் பிய்யாத முழு தோசை சாப்பிட்டுவிட்டு! :)))) இன்னிக்குத் தான் படம் எடுக்கலாம்னு ஒரு யோசனை. பார்ப்போம். :))) உங்களைப் போல ஒவ்வொரு பெளர்ணமிக்கும் எடுக்க முடியறதில்லை. சில சமயம் மறந்துடும்.:)))

Geetha Sambasivam said...

தோசை கொஞ்சம் பிய்ஞ்சாலே சாப்பிடப் பிடிக்காது. இப்போல்லாம் நிறைய மாறியாச்சு. ஆனால் தோசை என்னமோ பிஞ்சுக்காமல் முழுசாத் தான் வருது. :)))

வல்லிசிம்ஹன் said...

கீதா நான் வேணும்னால் ஃபோன் செய்யட்டுமா:)இன்னிக்கு 7.30க்குதான் நிலா உதயம்..
இப்போ பிஞ்ச தோசைக்கு வரலாம்.
அம்மா கல்லை அடுப்பில் போட்டதுமே தட்டு எடுத்துக் கொண்டு அம்மாபக்கத்தில் உட்கார்ந்துவிடுவேன்.
எண்ணெய் விட்டுச் சத்தம் வந்ததும் தம்பிகள் வருவார்கள்.
அம்மா சிரித்துக் கொண்டே முதல் தோசை சாப்பிட்டா முட்டாள் ஆக வாய்ப்பு என்றதும் தம்பிகள் விலகி விடுவார்கள். நமக்குதான் நம் புத்தி தெரியும். பசிதான் வெல்லும்.
அதனால் முதல் தோசை குட்டிவட்டமாகச் சற்றே பிய்ந்திருந்தாலும். எடுத்துக் கொண்டு விடுவேன்:)