Blog Archive

Monday, May 20, 2013

மே மாதம் நல்ல மாதம்

என் அம்மாவுக்குப் பிடித்த அவர் கணவர்
என் அம்மாவுக்குப் பிடித்த மென்மை
உணவாகிறேன்
நான் தான் எவ்வளவு அழகு

 மே மாத  20க்கு எட்டு வருடங்களும் ஓடிவிட்டது அம்மா.

இனி உன்னை நினைத்து வருத்தப் படமாட்டேன்.
உனக்கு அன்பானவர்களைத் தேடி  நீ போயிருக்கிறாய்.

நீ இருக்கும் இடத்தில் ஆனந்தமாக  இருக்கவேண்டும்.

நீயும் அப்பாவும்  சொன்ன அறிவுரைகளை
மட்டும்  நினைவில் வைத்துக் கொள்கிறேன்.
நீங்கள் நடந்த தர்ம வழியில் நடக்கப் பழகுகிறேன்.
அப்பழுக்கில்லாத    நலம் தரும் சுத்தமான சுற்றுப்புறத்தை வைத்துக்
கொள்ள ப் பழகிக் கொள்கிறேன்.
உங்களின் தெய்வ பக்தியும் எங்களிடம் வளரட்டும்.

இறைவனாக  எங்களைப் பாதுகாத்த அன்னை தந்தையைக் கொடுத்த
இறைவனை என்றேன்றும் வணங்கும்
நற்புத்தியையும் எளிமையையும் கொடுங்கள் அம்மா.
என் அருமைத்தாய்க்கு  நமஸ்காரங்கள்.



 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

20 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//என் அருமைத்தாய்க்கு நமஸ்காரங்கள்.//

அழகான பதிவு.

என் தாயாரும் மே 23 அன்று தான் என்னை விட்டுப் பிரிந்து போனார்கள். [23.05.1997]. அப்போது அவர்களுக்கு வயது 87. இப்போது நினைத்தாலும் கண்ணீர்தான் வருகிறது.

[வரும் சனிக்கிழமை 25/05/2013 ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா ஜயந்தி அன்று ஸ்ரார்த்தம் வருகிறது.]

பகிர்வுக்கு நன்றிகள்.

Geetha Sambasivam said...

நானும் சேர்ந்துக்கிறேன். உங்கள் அம்மா அழகோ அழகு!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோபு சார். என்ன ஒரு பாக்கியம். ஜயஜய சங்கர என்றூ சொல்லிக் கொண்டே அம்மாவுக்குச் சிரத்தையா சிரார்த்தம் செய்யலாம். அம்மா சந்தோஷப்படுவார். அம்மாவிடமிருந்து வரும்போதும் ஔகிறோம். அம்மா நம்மைவிட்டுச் சென்ற பிறகும் வருத்தம் மிஞ்சுகிறது.
என் அம்மா நான் வருத்தப் படுவதே விரும்பியதே இல்லை.இனி அவள் பெயரில் நல்ல காரியங்களில் செய்யப் போகிறேன். நன்றி கோபு சார்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கீதாம்மா.
எல்லா அம்மாவும் அழகுதான். உங்கள் பழைய படத்தைப் பார்த்தாலெ த்ரியும். உங்க அம்மா எவ்வளவு அழ்காஅ இருந்திருக்கிறாரென்று!!!நன்றி மா.

ராமலக்ஷ்மி said...

நெகிழ்வான நினைவாஞ்சலி.

உங்கள் அம்மாவுக்கு என் வணக்கங்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான அழகான பகிர்வு...

சாந்த முகம் வாய்த்த அம்மாவிற்கு நமஸ்காரங்கள் பல...

பால கணேஷ் said...

உங்களின் எழுத்தில் அம்மாவைப் பற்றி படிக்கையில் இதயம் நெகிழ்ந்தது. உங்களுடன் சேர்ந்து நானும் வணங்குகிறேன்!

இராஜராஜேஸ்வரி said...

அருமைத்தாய்க்கு நமஸ்காரங்கள்.

கோமதி அரசு said...

மென்மை பிடித்த மென்மையான அம்மா.
அம்மாவுக்கு வணக்கங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி நன்றிமா.

அன்பு கோமதி மீண்டும் நன்றி.
அன்பு கணேஷ் வருகைக்கு நன்றி பா.
அன்பு தனபாலன் வருகைக்கு நன்றி மா.
அன்பு இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

கைவிரல் கட்டு பிரித்துவிட்டதால் வலி அதிகமாகிவிட்டது. அதனால் தனிதனியாக நன்றி சொல்ல முடியவில்லை .

தி. ரா. ச.(T.R.C.) said...

there is no substitute for MOTHER irukkum pothu therivathai vita illathapothuthaan theriyarathu,,,,,,
i share my feelings with you valliyamma
MAY 20 is offcial date of Birthof Mahaperiyava 20 05 1904

தி. ரா. ச.(T.R.C.) said...

I share your feelings valliyamma.
God can not be every where so he created MOTHER
incidentally May 20 th 1904 Mahaperiyava birthdate .

மாதேவி said...

உங்கள் மென்மையான அம்மாவுக்கு எனது நமஸ்காரங்கள்.

எனது அம்மாவின் நினைவும் வந்தது.

Ranjani Narayanan said...

உங்களுடன் சேர்ந்து நாங்களும் உங்கள் அழகான தாயாருக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.

ஸ்ரீராம். said...

எனக்கு(ம்) என் அம்மா ஞாபகம் வந்தது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் டிஆர்சி சார்.
அன்பான வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி.
உண்மைதான்.இருக்கும்போது எப்பவும் இருப்பார்கள் என்ற நினைப்பு. இல்லாத போது இன்னும் எல்லாம் செய்திருக்கிறக்கலாமோன்னு சம்சயம்.
சரியாகச் சொன்னீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரஞ்சனி,வருகைக்கும் வார்த்தைக்கும் மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்.
உங்கள் மாதிரி சிறியவர்கள் இருக்கும்போது நானும் இன்னும்
திடத்துடன் இருக்கப் பழகி கொள்ளவேண்டும்.

துளசி கோபால் said...

இந்த அம்மாக்களே அழகுதான்ப்பா.

அதுலே கொஞ்சம் நமக்கும் கொடுத்திருக்கப்டாதோ!!!!

அம்மாவின் நினைவு மனம் நெகிழச் செய்கிறது.