Blog Archive

Monday, May 13, 2013

ஆஜியும் அக்ஷய திரிதையும்(மீள் பதிவு)

Add caption
Add caption
Add caption
தெய்வ அருள்
நிலவளமை இயற்கை அருள்
1982 மே  மாதம் இரண்டாம் தேதி.
நான்கு   மணிக்கே  ஆஜிப்பாட்டி எழுந்தாகி விட்டது. 
முதல் நாள்  என்னிடம் சொல்லி இருந்ததால் நானும் எழுந்து சத்தமில்லாமல் மாடி  குளியலறையில்    சுத்தபத்தமாகக் குளித்துவிட்டு கீழெ  வந்து காப்பி பில்டரில்  முதல் டிகாக்ஷனில் ஆஜிக்குக் காப்பி கொடுத்துவிட்டு
என் மாமியாரை எழுப்பப் போனேன்.
மாமிக்குச்  சர்க்கரை நோயிருந்ததால்  சீக்கிரம் எழுந்து வருவதும் காரியங்கள் செய்வதும்   சிரமம். உணவு உள்ளே சென்றுவிட்டால் 

அப்புறம் ஆளைப் பிடிக்க முடியாது.
மாவிலை கட்டிடுமா. வாசலில் துளி மஞ்சள் கலந்த தண்ணீரைத் தெளித்து

நல்ல மணக்கோலம் போடு.
என்னென்ன  நல்ல காரியம் செய்கிறாயோ
அத்தனையும் உன் அக்ஷயம்.
அக்ஷயம்   என்றால் என்ன  என்று கூடத்தெரியாத மடம் நான்.

மாமியார்   விளக்கினார். நீதான்  தமிழ் படிச்சிருக்கியே . மணிமேகலையின் அக்ஷய பாத்திரம் தெரியுமா.
தெரியும்.
அதில் எடுக்கக் குறையாத  அன்னம் வரும். அவளும் பிட்சை இடுவாள்
நீ படித்திருக்கிறாய் இல்லையா.
ஆமாம்மா.
அதுதான் இந்த நாளின் குணமும்.
இன்னிக்கு  நம் வீட்டுக்கு வருபவர்களுக்கெல்லாம் 
முடிந்த அளவு தர்மம் செய்யவேண்டும். 
வீட்டில் இருக்கும் கடவுளர்களுக்கு அர்ச்சனை ஆராதனம் செய்து
எல்லோரும் வளமோடு இருக்க  வேண்டிக் கொள்ள  வேண்டும்.
குழந்தைகளுக்குப் புத்தகங்கள் வாங்கிப் படிக்கச் சொல்லணும்.

நல்லவார்த்தைகள் பேசவேண்டும்.'
இந்தவிதத்தில் இனிமையாக இந்த நாளைக்  கழித்தால்
ஆண்டு முழுவதும்   அட்சய பாத்திரம் போல ஆநந்தம் பெருகும்.

வீடு முழுவதும்  சந்தன வாசனை. சாம்பிராணி  மணம்.
கோவில்களிலிருந்து வரும் பிரசாதங்கள்.
பாட்டியை  நமஸ்காரம் செய்து புத்தாடை வாங்கிச்  செல்லும்

கிராமத்திலிருந்து இதற்காகவே வந்திருக்கும்  குடியானவர்கள்.
முந்தைய ஆண்டுகளில் ஆஜிப் பாட்டியே அங்கே போய் வேண்டும் என்பதைச் செய்துவிட்டுவருவார்.
இந்த 88   வயதில்  அதெல்லாம்  முடியவில்லை.

விருந்துக்கு வரும் பேரன்கள் பேத்திகள்.
அவர்களுக்கும்   தாம்பூலமும் ரவிக்கைத் துண்டும் உண்டு.

அருமையான  அந்த நாள் இப்போது எங்கே போனது,.
ப்ளாட்டினமும்,சில்வர் மைனும்   தொலைக்காட்சியில் மின்னுகின்றன.

எனக்கு அடுத்த மாதம் என்ன  மின் கட்டணம் வருமோ என்ற பயம் மட்டுமே;)
எல்லாமே    அட்சயதிரிதையை அட்சயம் மாதிரி  விலைகள் தான் உச்சத்தில் இருக்கின்றனவே!!!
அனைவருக்கும்    எல்லா நாளும் மங்கலம்   பொங்க    வாழ்த்துகள்.



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

18 comments:

ஸ்ரீராம். said...

தானங்களும் தர்மங்களும் பெருகட்டும்.. இந்த நாளைப் போல எல்லா நாளும் இனிய நாளாகட்டும். (எங்கள் பாட்டியைக் கூட நாங்கள் அஜ்ஜி என்றுதான் கூப்பிடுவோம்...!)

Asiya Omar said...

மிக நல்ல தேவையான பகிர்வு.இப்ப காலம் மாறி அர்த்தத்தை மாற்றி அஷய திரிதி என்றால் தங்கம் நினைவு வரும் படி செய்து விட்டார்கள்.

சாந்தி மாரியப்பன் said...

மனசு சந்தோஷமா நிறைஞ்சுருந்தா எல்லா நாளுமே நல்ல நாள்தானே.. இல்லையா வல்லிம்மா :-))

பாச மலர் / Paasa Malar said...

நல்ல பாரம்பரியப் பழக்கங்கள் வெறும் சுயநலச் சம்பிரதாயங்களாய் இன்று..

நல்லதொரு நினைவுக்கோர்வை வல்லிம்மா

பால கணேஷ் said...

அனைவருக்கும் எல்லா நாளும் மங்கலம் பொங்கிட வாழ்த்திய உங்களின் அன்பைக் கண்டு வியந்து, நெகிழ்ந்து போனேன். தங்களுக்கும் அதே வாழ்த்தை மனமகிழ்வுடன் சொல்கிறேன்!

வெங்கட் நாகராஜ் said...

இப்படி நல்ல விஷயங்களைச் சொல்லும் நாளினை எப்படி எல்லாம் மாற்றிவிட்டார்கள்....

அனைவருக்கும் எல்லா நாளும் மங்கலம் பொங்கட்டும்.....

வல்லிசிம்ஹன் said...

வரணும்ஸ்ரீராம்.
ஆஜியின் ஒரு பெண் பங்களூரில் வசித்தவரை திருமனM செய்து கொண்டார். அந்த வம்சத்தினர் கன்னடம் தான் பேசுவார்கள். தமிழும் தெரியும் அவசரம் என்றால் கன்னடம் களிநடை போடும்.:)
அவர்கள் பாட்டியை அஜ்ஜி ஆக்கியதால எல்லோருக்கும் அவர் அஜ்ஜி ஆஜி ஆகிவிட்டார்.. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் வளங்கள் அடசயமாகப் பெருகட்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஆசியா. ஒர் நல்ல தினத்த்துக்கு பல வியாபார வடிவங்கள் கொடுத்துவிடுகிறார்கள். ஆனால் ஏழைகள் ஏமாறாமல் இருந்தால் நல்லது.
மிக நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அத்தேரிமாக்!!
சாரல் நல்ல வார்த்தை சொன்னீர்கள்.
இருக்கும் பொருட்களில் ஆநந்தம் அடைந்து திருப்தியாக இருந்தால் போதும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மலர்.உண்மைதான் மா. இதை ஒரு சேகரிக்கும் யோசனையாக பெண்ணைப் பெற்றவர்கள் நினைப்பதில் தப்பில்லை. அவர்கள் ஏமாற்றப் படாமல் இருக்கணும். அரபு தேசங்களில் கிடைக்கும் தங்கM போல் இங்கிருக்கும் தங்கத்தின் சுத்தம் ரசிக்கும்படியாக இல்லை.

வல்லிசிம்ஹன் said...

இதுதான் வேண்டும் கணேஷ்.
போட்டி பொறாமை இல்லாத அன்பு நிறைந்த வாழ்க்கை.
நியாயம் நேர்மை எல்லாம் வளர்ந்து மகிழ்ச்சி நிலவணும். வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், இந்த நந்நாளில்
பாசம், சௌபாக்கியம்,ஆரோக்கியம் அனைத்தும் வளரட்டும். நன்றிமா.

கோமதி அரசு said...

இன்னிக்கு நம் வீட்டுக்கு வருபவர்களுக்கெல்லாம்
முடிந்த அளவு தர்மம் செய்யவேண்டும்.
வீட்டில் இருக்கும் கடவுளர்களுக்கு அர்ச்சனை ஆராதனம் செய்து
எல்லோரும் வளமோடு இருக்க வேண்டிக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்குப் புத்தகங்கள் வாங்கிப் படிக்கச் சொல்லணும்.//

பெரியவர்கள் சொன்னது அவ்வளவும் நல்லவைகளே! (பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி)

இந்த நல்ல நாளில் எல்லோரும் மனநிறைவோடும், வளமோடும், உடல் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவன் அருள்புரிய வேண்டும்.

உங்கள் ஆசிபடி எல்லோருக்கும் எல்லா நாளும் மங்கலம் பொங்கட்டும்.
உங்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா.

ஹுஸைனம்மா said...

//அருமையான அந்த நாள் இப்போது எங்கே போனது,.ப்ளாட்டினமும்,சில்வர் மைனும் தொலைக்காட்சியில் மின்னுகின்றன.//

எல்லாப் பண்டிகைகளுக்குமே இதுதான் இன்றைய நிலைமை!! :-)))

ADHI VENKAT said...

நல்லதொரு நினைவலைகள் அம்மா. இப்ப எப்படியெல்லாம் ஆகி விட்டது.

நான் திருமணமாகி வந்ததிலிருந்து இந்த நாளில் அரிசி வாங்குவதுண்டு. இன்று கூட கல்கண்டு சாதம் செய்து சுவாமிக்கு நைவேத்தியம் செய்தேன்.

எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும்.

மாதேவி said...

மகிழ்ச்சியான நினைவலைகள்.

துளசி கோபால் said...

பாண்டவர் வனவாசம் போனபோது த்ரௌபதிக்கு நம்ம கிருஷ் ஒரு அக்ஷய பாத்திரம் கொடுத்ததும் அந்த நாளில்தானாம்.

அமைதிச்சாரல் சொன்னதேதான். நமக்கு எல்லா நாளுமே நல்லநாட்கள்தான். முடிஞ்சவரை 'தான தர்மங்கள்' செய்வோம்.

விலை மதிப்பும் நமக்குக் காக்காசு செலவில்லாததுமான தர்மம் ஒன்னு இருக்கே! இன்சொல்:-))))

Kala said...

உங்களது எழுத்துக்களை படிக்கும் போது லா . ச . ராமாம்ருதம் அவர்கள் நினைவுக்கு வருகிறார். தூய அன்பு மட்டுமே இவ்வுலகை இவ்வாழ்க்கையை இனியதாக்கும் . நன்றி