About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Friday, May 10, 2013

905 பாப்பாவுக்குப் பரிசு....கதை.தி.ஜானகிராமன்

Add caption

 மின்சாரமோ அடிக்கடி கைவிட்டு விடுகிறது.
அதனால் ஏற்பட்ட உபகாரங்களைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம்.


பல கட்டிடங்கள் வருவதால் அவர்களுக்குப் புது லைன்கள் கொடுப்பதற்கு பழைய(எங்கள்)  லைன்களை முடித்துப் போடுகிறார்கள். ஏன்ன்னு கேட்டால்
ரிப்பேருமா.
இத்தனை நாள் இப்படி ஆனதில்லையே

லைனெல்லாம் மாறுதுமா.

ஆமாம் லைன் எல்லாம் மாறவேண்டியதுதான்.
எல்லோரும் மாறவேண்டும். அதுவும் இந்தக் கத்திரி வெய்யிலில் காத்தும் இல்லாமல்  வெளிச்சம் கண்ணைக் குத்த என்ன பண்ணலாம்.
புத்தகம் படிக்கலாம்.
உடனே கண்ணில் பட்டது . தி.ஜா  தான்.
சிறுகதைகள் நிறைய வாங்கிவிட்டாலும்
இந்தப் புத்தகத்தைப் பாதிதான் படித்திருந்தேன்.

எடுத்ததும் 810ஆம் பக்கம் வந்தது.

தலைப்பு பாப்பாவுக்குப் பரிசு.

ஒரு எட்டு வயது சிறுமியைப் பற்றிய சுவாரஸ்யமானகதை.

பாப்பா சமர்த்துக் குழந்தை . அவள் அப்பா வெளியூர் போயிருக்கிறார்.
அவளுக்கு இருட்டு,ராத்திரி வேளை சப்தம் பிடிக்காது.

  அம்மாவும் அவளும் வேலைகளை முடித்துக் கொண்டு முற்றத்தின் பக்கத்தில் படுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சுவர்க்கோழி சத்தமும், எலி  கூரையைப் பிராண்டும் சத்தமும்
பாப்பாவை மிரட்டுகின்றன.
திடீரென்று ஓட்டு மேலே சத்தம்

பூனை மதிரி இல்லை. கன்னுக் குட்டி ஏறிவிட்டதோ என்று நினைக்கிறது குழந்தை. தன் கற்பனையைப் பார்த்து தனக்கே சிரிப்பு வருகிறது.
தமால்  என்று சத்ததோடு  ஒரு ஆள் குதிக்கிறான் முற்றம் வழியாக.பாப்பா சுதாரித்துக் கொள்வதற்கு முன்

அம்மா வாயை இறுக மூடி
கத்தியைக் காட்டி மிரட்டுகிறான்.

அம்மாவாயில் வேட்டித் துணியை அடைத்துக் கைகளையும் கட்டிவிடுகிறான்.

பக்கத்தில் படுத்திருக்கும் சிறுமியைப் பார்த்தால் அசையாமல் படுத்திருக்கிறது. அசந்த தூக்கம்!!!!!

கண்ணோரமாக அவனை அந்தப் பெண்  கவனிப்பது அவனுக்கு இருளில் தெரியவில்லை. நேரே சாமான்கள் வைக்கும் அறைக்கு உள்ளே
போய்விடுகிறான்.
அங்கேதான் அம்மாவுடைய பட்டுப் புடவை இரண்டும் பாப்பாவின் பட்டுப் பாவாடை இரண்டும் இருக்கின்றன.
பாப்பாவுக்குப் பொறுக்கவில்லை.
சட்டென்று எழுந்திருக்கிறாள்.
அம்மாவுடைய கலவரத்தையும்  பொருட்படுத்தாமல்
வாயில் விரலை வைத்தபடி சாமான் அறையை நோக்கி விரைந்து போகிறாள்.


அங்கெ திருடன் ஒரு பெட்டியைப் பார்த்துவிட்டு இரண்டாவது பெட்டியைத்  தீக்குச்சியை உரசி,திறக்க வெளிச்சம்தேடுகிறான்.

பாப்பா  சட்டென்று     ஒற்றைக் கதவைப் பட்டென்று இழுத்துச் சட்டென்று மூடி  நாதாங்கியும் போட்டு விடுகிறாள்.
ஓடிப் போய்
விசிறி எடுத்து வந்து அதன் காம்பையும் சொருகிவிட்டு வெளியே ஓடுகிறது இந்தக் குழந்தை.
பக்கத்து வீட்டுத் தேவர் மாமாவைக் கூப்பாடு போட்டு எழுப்புகிறது. தெருவே சத்தம் கேட்டு வீட்டுக்குள் வந்துவிடுகிறது.
உள்ளே வச்சுப் பூட்டிட்டேன் மாமா'என்கிறது குழந்தை.
எல்லொரும் சேர்ந்து அந்தத் திருடனை மிரட்டும் போது  துப்பாக்கி வந்திருப்பதாகவும் எல்லோரையும் சுட்டுவிடுவதாகவும் சொல்கிறான்.
நம்ம பாப்பா சாமர்த்தியமாக
அவனிடம் கத்திதான் இருக்கிறது. அதை சன்னல் வழியா வெளியே போடச் சொல்லுங்கள்.
என்கிறது.
வேறு வழியில்லாமல் திருடனும் கத்தியை வெளியே எறிகிறான்.
பிறகு  அவன் வெளியே வந்ததும் அத்தனை பேரும் சேர்ந்து அவனை அடிக்கிறார்கள் . அவன் கெஞ்சிக் கண்ணீர் வடிப்பதைப் பார்த்துப்
பாப்பாவுக்குப் பொறுக்கவில்லை. ''விட்டுடுங்க மாமா

பாவம் அவந்தான் இனிமே திருடலைன்னு சொல்றானே'' என்கிறது.

கூட்டத்தினர் இன்னும் ரெண்டு சார்த்தி போலீசில் ஒப்படைக்கிறார்கள்.

கோர்ட்கேசில் பாப்பா சாட்சி சொல்கிறது. மார்பில் கட்டிய பாவாடையும் இறுகப் பின்னிய சடையுமாகக் கோர்வையாகக் கதை சொல்லி, ''எல்லாரும் சேர்ந்து அடிச்சுட்டாங்க. அதே போதும் அவனை விட்டுடலாம்'என்று வேறு பரிந்துரைக்கிறது.
ஜட்ஜ் மாமா சிரிக்கிறார்.
நீதானே பாப்பா பிடிச்சுக் கொடுத்தே,. தண்டனை கொடுக்கணும் என்கிறார்.
பாப்பாவுக்குச் சோகம் தாங்கவில்லை.
அப்பாவிடம்  பாப்பாவுக்கான  அரசு  அவார்டாக 20 ரூபாய் கொடுக்கப் படுகிறது.

அதை  வாங்க மறுக்கிறது  பாப்பா.
யேன் எல்லாரும் அந்தத் திருடனைப் பிடிச்சு அடிச்சீங்க/?
அவன் கத்தி வச்சிருந்தானேம்மா.!!
அவன் தான் அம்மாவைக் குத்தலியே.
வெறுமனே பயமுறுத்தினான்.
அப்படியும் அவ்வளவு அடிச்சாங்க.

 அழுதது பாப்பா.

என்ன  தண்டனை கொடுப்பாங்கப்பா.
இரண்டாண்டு  கடுங்காவல்  கொடுத்திருக்காங்க பாப்பா.
என்ன செய்வாங்க.
செக்கு இழுக்க  வைப்பாங்க.

பாவம்.!
 எனக்கு ஒண்ணும் வேணாம் இருபது ரூபாய்  ''என்று
தூக்கிப் போட்டது பாப்பா.
அப்பா  அந்தப் பணத்தை பட்டுப் பாவாடையும்சட்டையுமாக வாங்கி வந்தார்.

அதைப் போட்டுக் கொள்ள மறுக்கிறது.
வலுக்கட்டாயமாக   அம்மா அதைப் போட்டு அழகு பார்க்கிறாள்.
பாப்பா அதையும் அவிழ்த்துவிட்டு விசுக்கி  விக்கி
அழுகிறது.


இதுதான்  கதை.ஒரு ஈர நெஞ்சத்தின் கதை.
ஒரே சமயத்தில்  வீரத்தையும் கருணையையும் இந்த
பாப்பாவின்   உருவத்தில் வரவழைத்து விடுகிறார் திரு. ஜானகி ராமன்

ஒரு பெரிய எழுத்தாளரின் அநேகமாக எல்லா நாவல்களையும்

சிறுகதைகளையும் தொகுத்து வெளியிட்டிருக்கிறது ஐந்திணைப் பதிப்பகம்.

விலை 280ரூபாய்.
முன்னுரை எழுதியவர் வல்லிக்கண்ணன்.
இது முதல் பாகம் தான்.
இதற்கப்புறம் இரண்டாம் பதிப்பும் வந்திருக்கவேண்டும்.

இந்தப் பதிப்பில் 70 கதைகள்   இருக்கின்றன.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

18 comments:

அப்பாதுரை said...

மின்வெட்டுனால இப்படியொரு பலனா? தி ஜா சமீபமாகத்தான் படிக்கத் தொடங்கினேன். கதையை ரசித்தேன். நன்றி.

வல்லிசிம்ஹன் said...

துரை,
அதற்குள் எழுந்தாச்சா. ஐந்தரை மணிதானே ஆகிறது.

தி.ஜானகிராமனின் உலகமே தனி. ரசனையும் தனி.
இப்பொழுதுதான் எழுத்துப் பிழைகளைத் திருத்தினேன்:)

கோமதி அரசு said...

பாப்பாவின் அன்பும் கருணையும் அருமை, கதை நல்லா இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி அக்கா.

திண்டுக்கல் தனபாலன் said...

நெகிழ வைக்கும் கதை....

நன்றி அம்மா....

Geetha Sambasivam said...

அருமையான கதை, மனம் நெகிழ்ந்தது. இந்தத் தொகுப்புப் படித்ததில்லை.

Ranjani Narayanan said...

எத்தனை சமர்த்து பாப்பா!
வீரம் கருணை இரண்டும் அழகாகத் தெரிகிறது கதையில். ஓர் நல்ல கதைத் தொகுப்பை அறிமுகம் செய்ததற்கு நன்றி வல்லி!

ஸ்ரீராம். said...

அருமை. இரண்டாவது தொகுதியும் இருக்கிறது. நான் முதலில் இரண்டாவது தொகுதியும் அப்புறம் முதல் தொகுதியும் வாங்கினேன்!

Seshadri e.s. said...

அருமையான கதை! பகிர்விற்கு நன்றி!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,வெய்யில் எப்படி இருக்கிறது.
இத்தகைய கதைகள் அந்தக் கால வெகுளித்தனத்தைப் பரிபூரணமாகக் காட்டுகின்றன.
இந்தத் தொகுப்பு முழுவதும் முத்துமுத்தான கதைகள். இரு முறை படித்தாலும் அலுப்பதில்லை. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.
முடிந்தால் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது படிக்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா. இந்தப் புத்தகம் படிப்பது கூட பழைய நாட்களுக்கு அழைத்துப் போகிறது.
காம்பவுண்டு இல்லாத வீடுகள்.

எதுவானாலும் எல்லோரிடமும் கபடமில்லாமல் பேசலாம்.
உதவி கேட்கலாம். கொடுக்கலாம்.
சிறுகதைகளாக இருப்பதில் ஒவ்வொன்றிலும் ஒரு கருத்து வெளிப்படுகிறது.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்புரஞ்சனி உங்கள் பதிவுகளைப் படிக்க முடிகிறது. ஜி ப்ளஸில் பார்த்தால் கருத்து சொல்லமுடிகிறது,. நம் நண்பர்களும் படித்தால் தானே உண்மையான சந்தோஷம்:)
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஓஹோ. இரண்டாம் பகுதி உங்க கிட்ட இருக்கா ஸ்ரீராம்:)
அப்ப எடுத்துக்க வேண்டியதுதான் ஒரு வருஷத்தில் கொடுத்துவிடுவேன்:)
நன்றி மா.

மாதேவி said...

நல்ல கதை.

தி.ஜானகிராமன் கதைகள் நாவல் எனக்கும் பிடித்தமானது.

வெங்கட் நாகராஜ் said...

தி.ஜா.... கதைகள் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

உங்களது பகிர்வும் ரசித்தேன்....

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மாதேவி,அவருடைய உயிரோட்டம் மிகுந்த எழுத்துகள் எப்பொழுதும் நெகிழ வைக்கின்றன.
உங்களுக்கும் பிடித்திருப்பதில் அதிசயம் இல்லை.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெங்கட்.ஸ்ரீரங்கராஜனைப் பார்த்துத் தரிசனம் செய்யும்போதெல்லம் என்னையும் சிபாரிசு செய்யுங்கள்.

என் சகோதரி ஒருத்தி அவர் மேலே ஒரே பைத்தியம் வரிவரியாக ரசிப்பாள். நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வருகைக்கு மிக நன்றி சேஷாத்ரி.
நீங்களும் ஜானகிராமன் விசிறியா.