Blog Archive

Monday, May 27, 2013

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே:) .....1963ஆம் வருடம்

 

 இரும்பு  கிராதிக்குப் பின்னால் வண்டியின்  ஹார்ன் கேட்டது.
அவசரமாக ஒலிப்பதைக் கேட்ட   விமலா
தோட்டக்கார பலராமனைக் கூவினாள். 'ஐயா வந்துவிட்டார்.
ஓட்டிப் போய்க் கதவைத் திற.
ஏய் மாலு இன்னும் என்ன ஃபோன்ல... அப்பா வந்தாச்சு  ஃபோனைக் கீழே வை'


இதோ நல்ல காப்பி கொண்டு வருகிறேன் என்று கனத்த சரீரத்தைத் தூக்கிக் கொண்டு பால் காய்ச்சும் அறைக்குச் சென்று குளிர்ப் பெட்டியிலிருந்து பாலை வெளியில் எடுத்தாள்.

அதற்குள்  கணவர் வேகமாக நடந்துவரும் சத்தம் அவள் வயிற்றைக் கலக்கியது.
என்ன சமாசாரமோ .குத்தகைப் பணம் கைக்கு  வந்து சேர்ந்ததோ.வராததால் தான் இந்தக் கோபமோ.
கூடத்தில்  ஊஞ்சல்  வேகமாக ஆட ஆரம்பித்தது.

பத்துகஜமும் அழகாக உடலைச் சுற்றி யிருக்க அப்பொழுது கறந்த பாலைக் காய்ச்சிக் கலந்த காஃபியை மணக்க மணக்க
எடுத்துக் கொண்டுவந்த விமலாவை,
ஓரகத்தி மாடிப்படியின் பக்கம்   வந்து ''என்ன சமாசாரம் ? மச்சினருக்கு என்ன கோபம்''என்று சைகையால்  விசாரிக்க,

கண்களை உயர்த்தி  எனக்கு ஒன்றும் புரியலை என்றபடி ஊஞ்சல் பக்கத்தில்
வந்து நின்றாள்.

இப்போதான்  இன்னோரு ஃபோனுக்கு   அப்ளிகேஷன் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன்.அதுவரை பொறுமையாக   இருக்கலாம் எல்லாரும்.'
என்றார்    சுந்தரம்.

எதுக்கு இன்னோரு ஃபோன்? குழப்பத்தோடு  கேட்டாள் விமலா.

காஃபியை  ஒரு மடக்குக் குடித்தவர் கொஞ்சம் தெளிவடைந்தாற்போலத் தெரிந்தது.
'நான் எங்கே போயிருந்தேன்?
மாங்காடு,குன்னத்தூர் பக்கம்..

அங்கேயிருந்து இங்க வந்து ஒரு   ஃபைல்  எடுத்துக் கொண்டு போக
எவ்வளவு நேரம் ஆகும்?
என்ன   ஒரு  இரண்டு மணி நேரம் ஆகும்.

இதையே ஃபோனில சொன்னால் உன் பெண் இன்னோரு வண்டி எடுத்துக் கொண்டு    என்னிடம் ஃபைலைக் கொடுத்திருக்கலாம் இல்லையா?

'ஆமாம்''
ஆங்க்.

ஃபோன் கிடைத்தால்  சொல்லி இருப்பேன்.
திடிரென்று  அவர் குரல் உயர்ந்தது.

யார் இத்தனை நேரம் போன் பேசினது. நானும் வெற்றிலைபாக்குக் கடைப்பக்கம்   ஏதோ ஃபோன் கிடைத்ததுனு  கூப்பிட்டுக் கொண்டே இருந்தால்
எங்கேஜ்டாகவே இருக்கு. ரெண்டு மணி நேரம் பேச உங்களுக்கெல்லாம்
என்ன விஷயம்.
வெய்யில்ல வெந்து கொண்டு ,வியாபாரம் பேச வந்தவனோட  விவாதம் செய்ததற்கு என்ன லாபம்.
எனக்கும்   பொறுமைக்கு எல்லை இல்லையா. வியாபாரத்துக்கு வாங்கின ஃபோன் தானே இது. !!!!


அவர் கத்த ஆரம்பித்தால் இரத்த அழுத்தம் எகிறிவிவிடும்.
குற்றவாளி மாலுதான் என்று விமலாவுக்குத் தெரியும்,.
மாலுவையும் காண்பித்துக் கொடுக்க முடியாது.
மௌனமாக இருந்தாள்.

படிப்பறையைவிட்டு   வெளியே வரவே இல்லை   மாலு.

ட்ரிங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்
அலறியது தொலைபேசி. எல்லோருக்கும் தூக்கிவாரிப் போட்டது.

அந்த .....கோவிந்தலுவாகத்தான் இருக்கும்.
என்ன சொல்லப் போகிறானோ'
என்றபடி எழுந்து   போய் ஃபோனை எடுத்துக் காதில் வைக்கும் முன்
கீச்சென்றது ஒரு பெண்குரல். 'ஏய் மாலு  ஏன் ஃபோனை வச்சுட்ட. நாளைக்கு க்ளியோ பாட்ரா போகலாம்னு பேசிண்டிருந்தோமே.
என்று வளவளத்தது   மறு முனையில் பெண்குரல்.

யாரு  சாருவாம்மா. இரண்டு வாரத்தில எக்ஸாம் வரதே நினைவில்லையா. நீதான் இத்தனை நேரம் அரட்டை செய்த்ததா,. அடுத்த தெருவில தானே

இருக்கே.
நேரிலியே வந்து அளந்திருக்கலாமே'என்ற  பெரியவரின் குரலைக் கேட்டதும் அந்தப் பெண் வெலவெலத்துவிட்டது.


மாஆஆஆலூஉ  உனக்குப் ஃபோன் மா.
.நான் மாங்காடு போறேன். உங்களுக்குச்
சினிமா டிக்கட் புக் பண்ண   வேணும்னால் நான் கியூல நிக்கட்டுமா.என்றவர்
பீரோவைத் திறந்து  ஒரு  ஃபைலை எடுத்துக் கொண்டு,

அடுத்தபடி அவர் செய்ததுதான் எல்லார் வாயையும் பிளக்க வைத்தது!!!

விமலா நான் டாக்ஸி பிடித்துக் கொண்டு போகிறேன்
.ஏழுமணிக்குள்   வரப் பர்க்கிறேன். நீ  உன் மன்னி,உன் மாமியார் எல்லோரும் கதை கேட்கப் போங்க.
மாலு சினிமா போகட்டும்.''

அவர் வாயிலை நோக்கி த் தோட்டத்தைத் தாண்டி நடந்த போது ஒலித்தது அவர்குரல் தான்

''என்னதான் நடக்கும் நடக்கட்டுமே'   இருட்டினில்  நீதி  ஒளியட்டுமே.
தன்னாலே வெளிவரும்  தயங்காதே''

அவனுக்கென்ன தூங்கிவிட்டான்.அகப்பட்டவன் நானல்லவோ''


இதற்கப்புறம்   வெகு நாளுக்கு அந்த வீட்டில் ஃபோனைத் தொட பயந்தது
பெரிய கதை.:)


உண்மை சம்பவம்!



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

32 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இரண்டு மணிநேரம் குறைவு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்... ஹிஹி... எல்லோரும் இனிதாக புரிந்து கொண்டு வாழ வேண்டும்... நன்றி அம்மா...

வல்லிசிம்ஹன் said...

வரணும் தனபாலன். இது நடந்த வருஷம். அவர்கள் இருந்தது கோடம்பாக்கம். இப்போது போல
போக்குவரத்து கிடையாது. மாங்காடு,குன்றத்தூர் எல்லாம் கிராமங்கள்.
சுந்தரம் மாமா வைத்திருந்தது நல்ல வண்டி.
இது போக அந்த விமலா அம்மாவுக்குப் புரிந்த கணக்கு அவ்வளவுதான்:)

Geetha Sambasivam said...

கடவுளே, மணிக்கணக்கா என்ன பேச முடியும்???? புரியலை!!!!!!!!!!!!!!!!!!!!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

உண்மைச்சம்பவம் படிக்க சுவாரஸ்யமாகவே இருக்குது.

அந்த நாள் ஞாபகம் எனக்கும் வந்தது.
நல்ல பதிவு. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி said...

உண்மைச்சம்பவம் ரசிக்கவைத்தது ..!

வெங்கட் நாகராஜ் said...

மணிக்கணக்கா பேச நிறைய விஷயம் இருக்கிறதே இவர்களுக்கு! - தில்லியிலிருந்து ஒரு முறை ஆக்ரா செல்லும்போது கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் பயணம் முழுவதுமே பேசிக்கொண்டு வந்தார் ஒரு பெண்! எனக்கும் இதே யோசனை - என்னதான் இருக்கும் பேச! ராஜா காது அப்போது எழுதாததால் காதைத் தீட்டவில்லை! :)

அப்பாதுரை said...

ஆஹ்ஹா.. தொலைபேசி! எனக்குத் தெரிந்த ஒருவர் டெலிபோனில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவார் - வீட்டுக்குப் போய் நேரில் பேசினால் வாயே திறக்க மாட்டார். அவர் வீட்டுக்குப் போய் வந்தவுடன் போன் அடித்து மறுபடியும் மணிக்கணக்காக..

ஸ்ரீராம். said...

கொடுமைதான் இல்லையா? இவ்வளவு நேரம் பேச முடியுமா என்ன!



Angel said...

உண்மை சம்பவம் அருமை ...
பாவம் மாலு ..இப்ப மொபைலில் இன் கமிங் அலெர்ட் வர மாதிரி அந்த காலத்தில் இருந்திருந்தா பயந்திருக்க மாட்டார் :))

அவர் பாடி சென்ற என்னதான் பாடலும் ,அவனுக்கென்ன பாடலும்..superb situation songs !!!..டி எம் எஸ் அவர்களின் தங்க குரலில் வந்த பாடல்கள் நினைவுக்கு வருது

ராஜி said...

ரெண்டு மணிநேரத்துக்கே இத்தனை அலப்பறையா?! நாங்கலாம் போன் வொயர் பிய்யுற வரைக்கும் நாள்கணக்குல பேசுவோம்ல

ராமலக்ஷ்மி said...

இப்போ எல்லோர் கையிலும் ஃபோன். அந்தக் காலத்தில், இருக்கும் ஒரே ஃபோனில் மணிக்கணக்காய் பேசி அதை எங்கேஜ்டாக வைக்கிறவர்களை நானும் பார்த்திருக்கிறேன்:). பெருந்தன்மையான பெரியவர்.

துளசி கோபால் said...

ரெண்டு மணி நேரமெல்லாம் ஒரு கணக்கா?

எங்க மச்சினர் பேச ஆரம்பிச்சால் அஞ்சு மணி நேரம் கேரண்டீ:-))))

வீட்டைவிட்டு வெளியே வந்து கேட்டுப்பக்கம் நின்னு பாருங்க. காதில் ஒட்டிவச்ச ஃபோனோடு யாரும் போகலைன்னு சொல்லுங்க பார்ப்போம்!!!

Geetha Sambasivam said...

//வீட்டைவிட்டு வெளியே வந்து கேட்டுப்பக்கம் நின்னு பாருங்க. காதில் ஒட்டிவச்ச ஃபோனோடு யாரும் போகலைன்னு சொல்லுங்க பார்ப்போம்!!!//

கவலைப்படாதீங்க, நாங்க இருக்கோம்(வாசன் ஐகேர் விளம்பர பாணியில் சொல்லிப் பார்த்துக்குங்க)

துளசி, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வெளியே போறச்சே ஞாபகமா ரெண்டுபேரோட செல்லையும் வீட்டிலேயே வைச்சுட்டுப் போயிடுவோம். போன இடத்திலே ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சாட்டிப்போம். :)))) ஒருதரம் நினைவில்லாமல் (ஹிஹிஹி) ஹான்ட்பாகில் வைச்சுட்டுப்போயிருந்தேன். அப்புறமா அதை எடுக்க மறந்துட்டேன். அன்னிக்குனு பார்த்து சீக்கிரமாத் தூங்கப் போக, பையர், பொண்ணு எல்லாம் லான்ட்லைனில் கூப்பிட்டு அலுத்துப்போய் செல்லில் கூப்பிட்டு அதையும் எடுக்காமல்,

ஹிஹிஹி, சென்னை வரை போயிட்டது விஷயம். காலங்கார்த்தாலே எழுந்ததும் ஒரே தொலைபேசி அழைப்பு மயம், என்ன ஆச்சு, என்ன ஆச்சுனு! :))))))) அதுக்கப்புறமா ஏதேனும் ஒரு செல்லைப்படுக்கைக்கு அருகே உள்ள ஷெல்ஃபில் வைச்சுட்டுப் படுத்துக்கறோம்.

வல்லிசிம்ஹன் said...

கீதாமா,
மாமா வீட்டில் 6 மணிக்கு மாமியார் டைம். சமையல் முடிந்த பிறகு மருமகள் டைம். அதற்குப் பிறகு நான்கு பெண்களின் டைம்.
தந்தை இருக்கிற வரை சத்தம் இருக்காது.
வசதியா மேல ஃபான். உட்கார வசதியா பிரம்புச் சேர்.கேட்பானேன்!!!!
நான் என் திருமணத்தின் போதுதான் தொலைபேசியைத் தொட அனுமதிக்கப்பட்டேன்;)

வல்லிசிம்ஹன் said...

என் பெண் அப்பொழுதுதான் பள்ளியில் தோழிகளோடு பேசிவிட்டு வந்திருப்பாள்.

வந்ததும் டிஃபன் முடிந்ததும் தொலைபேசியிடம் சரணம். இந்த மாதிரி பழக்கம் எங்கேருந்து வருகிறது என்றுதான் தெரியவில்லை. கோபு சார்.

வல்லிசிம்ஹன் said...

மாமா வெடிகப் போகிறார் என்று யோசித்த போது தண்ணீர் தெளித்தபாலாகப் பாட்டுப் பாடிக் கொண்டே போனதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது:)இராஜராஜேஸ்வரி!!!

வல்லிசிம்ஹன் said...

ஆஹா நாலு மணி நேரமா வெங்கட்!!!

நாங்கள் வேண்டும் என்கிறதுக்குத் தான் தொலைபேசியைத் தொடுவது.இப்போது இணையம் வந்துவிட்டதால் ஸ்கைப்பில் உறவினர்கள் தோழிகள்.ஆனால் கைபேசி வந்தபிறகு தொங்கவிட்டகையை நான் பார்க்கவே இல்லை:))

வல்லிசிம்ஹன் said...

இது புதிசாக இருக்கே துரை.
அவங்க மறுபாதி மறுப்பாங்களோ:)

எனக்குத் தெரிந்த ஒருவர் அவருடைய கைபேசியில் பேசும் அளவு அவர் வீட்டுக்குப் போனால் பேச மாட்டார்:)
ஏண்டா.ன்னு கேட்டால் ஐ ஃபீல் ஃப்ரீ ஓவர் மொபைல் என்பார்:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்.இதெலாம் ஜுஜூபி.:)

எங்க வீட்டுக்கு உதவிக்கு வர அம்மாவின் மொபைல் அடித்துக் கொண்டே இருக்கும்.
கணவர், அம்மா, தம்பி,பெண்கள் என்று பேசிக் கொண்டே இருப்பார்கள்:)
எனக்குக் கொஞ்சம் பொறாமையாகக் கூட இருக்கும்.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்ஜலின்.அருமையான பாடல்கள்

எனக்கே சிடுவேஷன் அம்மான்னு பேரு:)பரமசிவன் கழுத்திலிருந்து அடிக்கடி பாடுவேன்!

அப்போ எல்லாம் ஒரே ஒரு கறுப்புத் தொலைபேசி. விரல் தேய்ந்துவிடும் எண்களைச் சுற்றிச் சுற்றி.
இப்பொழுது லான்லைன் என்னை மாதிரி ஓல்டீஸ் கிட்டதான் இருக்கிறது:) நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ராஜி!!!!!!!!!!
நீங்க அடுத்த பரம்பரைம்மா.
அப்படித்தான் இருப்பீர்கள்.
அப்படியே இருங்கள் சந்தோஷமாக.

வல்லிசிம்ஹன் said...

துளசிமா. யார் போன் பில் கட்டுவாங்க:)

வல்லிசிம்ஹன் said...

கீதா,
அப்படியே நாங்களும். உனக்கெதுக்குமா மொபைல்னு பெரியவன் கேட்பான். பெண் கூலாக இருப்பாள்:)

Geetha Sambasivam said...

ஹாஹா, அந்தப் பழைய தொலைபேசியில் பேசிய நாட்களை மறக்கவே முடியாது. அதிலே பேச்சுத் தெளிவாய்க் கேட்டாப்போல் தொழில் நுட்பம் முன்னேறி இருக்கும் இந்நாட்களில் கேட்பது இல்லை! :((((

பொதுவாக அவசியத்துக்கு இல்லாமல் தொலைபேசியில் அழைப்பதே இல்லை என்பதை நான் ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன்.

சாந்தி மாரியப்பன் said...

இப்பல்லாம் என்னை விட்டுடுங்கன்னு போனே கதர்ற வரைக்கும் பேசறாங்க இக்கால இளவட்டங்கள் :-))

வல்லிசிம்ஹன் said...

அச்சோ அதையேன் கேக்கறீங்கப்பா சாரல்.கைபேசின்னு பேர் வந்தாலும் வந்தது.கையைவிட்டு அகலுவதே இல்லை:)
காதுகள்ல மாட்டிக்கிக்கிட்டுத் தனக்குத் தானே சத்தமா வேற பேசிக்கிட்டுப் போறாங்க.
கலஹ யுகம்தான்.:)

வல்லிசிம்ஹன் said...

ஓ! அந்த இரண்டு மணிநேரமா. அந்தக் காலத்துக்கு அது டூமச் தனபாலன்:)

வல்லிசிம்ஹன் said...

நல்ல கொள்கை கீதா.
அரட்டையிலேயே காலம் கழிப்பவர்களைப் பார்த்திருக்கிறேன்.
ஏகப்பட்ட தலைகள் உருளும்.
நாம் தான் ஜாக்கிரதையாக இருக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி பின்னூட்டக் கணக்குத் தப்பா வருதேன்னு எண்ணி எண்ணிக் கொண்டிருந்தேன். கவனம் தப்பியது. மன்னிக்கணும் ராஜா.
எங்க மாமாவைப் பார்க்க ஆறடிக்கு மூணடின்னு நிஜமாகவே பேரியவர். அவர் குரலோ பூம்''தான்.
பாவம் அவர் அத்தனை வெய்யிலிலும் வயல் காடு என்று அலைந்துவிட்டுத் தவித்தாலும் தன் பெண்ணைக் கோபித்துக் கொள்ளவில்லை:)பெருந்தனமையே தான் காரணம்.

ராமலக்ஷ்மி said...

எனக்கும் பலமுறை நிகழ்கிற ஒன்றே. எண்ணி எண்ணிப் பார்ப்பேன்:). பெரிய வார்த்தை ஏன்? ஒவ்வொருவருக்குமான உங்கள் பதிலில் எப்போதும் மேலும் சில சுவாரஸ்யமான பகிர்வுகள் எங்களுக்கு கிடைப்பதால் வருகிறது ஆர்வம்.

மாதேவி said...

சம்பவம் சுவாரஸ்யம்.

அந்தக்காலம் ஊருக்கு ஓரிரு வீடுகளில் போன்.இப்பொழுது கைபேசி இல்லாமல் முடியாது என்றகாலம். அளவுடன் தான் பேசுவேன்.

கோமதி அரசு said...

ஊருக்கு போய் இருந்தேன், ஓர்ப்படியின் பேரன் (10 மாதம்)செல்லை காதில் வைத்துக் கொண்டு பேசுகிறான்.
காலம் இப்படி இருக்கிறது.