Blog Archive

Saturday, April 27, 2013

பொங்கிவரும் பெரு நிலவு சித்திரை

அம்மா  பார்த்த நிலாவும் நீதானெ! நீயும் அம்மாதான்.!
வட்ட வட்ட நிலாவே  வழிகாட்ட வந்தாயோ
எத்தனை எத்தனை வர்ணங்கள் உன்னைச் சுற்றி
எட்டி எட்டிப் பார்க்கும் மனம் இன்பம் கொண்டாடுதே
மீதி எப்போது வெளீயே வருவாய் அம்மா
வந்தாச்சு!!
பால்நிலவோ ஒளிவெள்ளமோ  கிரஹணம் விலகிய சந்தோஷமோ
சந்திரனோ சூரியனோ நீ அழகுதான்

 சித்திரை மாத நிலவினிலே தென்றல் வீசும்   பொழிலிலே
என்று    ஒரு   பழைய பாடல்.

நிலவில்  பங்கிட்ட   கனிவுக் கணங்களே அதிகம்.

குழந்தைகளுக்குக் கொடுத்த பால் சோறு.
கொஞ்சம் வளர்ந்த பிறகு குழம்பு சாதம்
தயிரும் பாலும் கலந்து
கதையோடு  குழந்தைகள்   மனத்தை அன்பால் நிறைத்த கணங்களும்

எவ்வளவோ.
இப்போதோ  கையில் காமிராவும் வானில் வெண்ணிலாவும்  மீதி.

முதல்  நாள்   சீக்கிரம் வர மறுத்தாள்.
அடுத்த நாள்  இரவு 9ம்  ஆகிவிட்டது.

சிங்கமோ இருட்டில் வெளியே போகாதே
லைட் போட்டுக்கோ என்றால்
யார்கேட்பது.
கொக்குக்கு ஒன்றே மதி.
வாயில் விளக்கைப் போட்டால் நிலாவின் வெளிச்சம் சரியாகக்
காமிராவில் விழாது.
சுற்றிவர  தெரு விளக்குகள். துணிக்கடைகளின் விளக்குக்கள்.
. நிலவுக்குப்
போட்டியாக செயற்கை வெளிச்சத்தை வாரி இறைக்கின்றன.
எப்படியோ நிலவன்னையைக் கண்டுவிட்டேன்.

என்ன   ஒரு அழகு.பூரண வெளிச்சம்.
வரும் கதிர்களிலிருந்து   வழிந்தோடிய  பால்
நேரே   மனத்தில்  வழிந்தது.

இயற்கைக்கு நன்றி.


 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

19 comments:

கோமதி அரசு said...

தயிரும் பாலும் கலந்து
கதையோடு குழந்தைகள் மனத்தை அன்பால் நிறைத்த கணங்களும்

எவ்வளவோ.
இப்போதோ கையில் காமிராவும் வானில் வெண்ணிலாவும் மீதி.//

மனதில் மலர்ந்த நினைவுகள் அற்புதம்.
நிலவின் படங்கள் எல்லாம் அற்புதம்,

வல்லிசிம்ஹன் said...

நன்றி கோமதி.
நிலவின் தண்மையும் அவளின் அருள் வெளிச்சமும் என்றும் உங்கள் வாழ்க்கையில் நிறைந்திருக்க
வேண்டும்.
ஏன் அத்தனை புலவர்களும்,எழுத்தாளர்களும் இவ்வளவு நிலா அன்னையைப் போற்றுகிறார்கள் என்று நேற்றுப் புரிந்தது.:)

Geetha Sambasivam said...

விடாமல் நிலவின் ஒவ்வொரு மாற்றத்தையும் பகிர்ந்து வருவதற்கு நன்றி. :)))) நானும் நினைச்சுப்பேன். ஆனால் மொட்டை மாடிக்குப் போக முடியாமல் ஏதோ வேலை வந்துடும். :))))

வல்லிசிம்ஹன் said...

சித்ரா பௌர்ணமியன்று உறவினர் வீட்டிலிருந்து வரும்போதே தலைவலி. நிலவைப் பார்க்கக் கூடமுடியவில்லை. இந்தப் படங்கள் காத்திருந்து 9 மணி அளவில் நிலா வெளியே வந்தது. சாப்பாடு முடிந்து தூங்கப் போகிற நேரம் அது எங்களுக்கு:)
வழக்கத்தை விடக் கூடாது என்றே எடுத்தேன் கீதா.;)

ஸ்ரீராம். said...

நீங்கள் ஒரு நிலவுப் பிரியை அம்மா...! படங்கள் நன்றாக வந்திருக்கின்றன.

அம்மா குழந்தையிடம் :

நிலவைக் காட்டிக் காட்டி சோறு ஊட்டியதால்தான் நிலவு போலவே அழகாய் இருக்கிறாயோ நீயும்?

'நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது....' சினிமாப் பாடல்களில் ஒன்று.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், காற்று வெளியில் பால்மணமும் தயிர் குணமும் நிலவை அடைந்து அவளை இன்னும் வெள்ளையாக்கிவிட்டது:)

நீங்கள் சொன்னபாடலின் அடுத்தவரி மறந்துவிட்டது!!!தயவு செய்து
ஒரு வரி எழுதவும்.:)

ஸ்ரீராம். said...

//காற்று வெளியில் பால்மணமும் தயிர் குணமும் நிலவை அடைந்து அவளை இன்னும் வெள்ளையாக்கிவிட்டது:)//

ஆஹா....

நீலக் கண்ணன் உன் அழகை என்று வரும் அம்மா.... அந்த வரி எனக்கும் நினைவில்லை. ஆனால் அடுத்தடுத்த வரிகள் நினைவில் உள்ளன..."மனது கொஞ்சம் உறங்கும்போது கனவு வந்தது... அது மலர்ந்தபோது உன்னைப் பற்றி நினைவு வந்தது...." என்று வரும்! 'திருடி' படப் பாடல்! எஸ் பி பி-சுசீலா!

வல்லிசிம்ஹன் said...

கண்டுபிடித்து கூகிள் ப்ளஸ்ஸில் போட்டுவிட்டேன். ஸ்ரீராம்.
விஜயா ஜெய்சங்கர் படம்.
நன்றி மா.
நல்ல பாடல்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, மிகவும் அருமையான புகைப்படங்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

மாதேவி said...

காத்திருந்த கொக்கு:))) கிடைத்ததோ ஒளி வீசும் சித்ரா பெளர்ணமி வெண்ணிலா. உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள்.

அழகு கொஞ்சுகின்றது. அருமை.

Anonymous said...

படங்களைப் பிடித்ததற்கு உங்களைப் பாராட்டியே ஆகவேண்டும்...
ஃஃஃஃ
எவ்வளவோ.
இப்போதோ கையில் காமிராவும் வானில் வெண்ணிலாவும் மீதி.
ஃஃஃஃஃ

மனமெல்லாம் நிறைந்திருக்கிறதே பழைய நினைவுகள். அதையும் சேர்த்துக்கலாம்.

சாந்தி மாரியப்பன் said...

ஜூப்பரு வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி ,இன்று கொக்கு எங்கள் ப்ளாகில் வந்து விட்டது.
என்னசெய்வது.நல்லது நடக்கணும்னால் பொறுமைதான் வேண்டும்.:)

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் பாண்டியன்.
இனிய நினைவுகளைக் கொடுத்த இறைவனுக்கு மிகவும் நன்றி.
பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சாரல்.
சரியாக வந்திருக்கிறதுன்னு நினைக்கிறேன். நன்றிமா.

ராமலக்ஷ்மி said...

எட்டி எட்டிப் பார்க்கும் நிலவு, மிக அழகு.

துளசி கோபால் said...

அழகு அழகு அழகு!!!!

இப்பெல்லாம் எப்போ பௌர்ணமின்னு கூடத் தெரிவதில்லை.

கூடடைஞ்சால் பின்னே வானம் பார்ப்பது அபூர்வம்:(

ADHI VENKAT said...

அழகான படங்கள் வல்லிம்மா...ரசித்தேன்.

Ranjani Narayanan said...

பழைய நினைவுகளுடன் என்றென்றும் புதுமையாகத் தோன்றும் நிலா!

அருமையான புகைப்படங்களுடன் உங்கள் எண்ணச்சிதறல்கள் அற்புதம்!