Blog Archive

Friday, April 19, 2013

ஸ்ரீராமன் பிறந்தான்

எத்தனை ராமனடி!
பானகம்,நீர்மோர்,வடபருப்பு
எங்க வூட்டு ராமரும் சீதையும்
கல்யாணராமன் மதுராந்தகம்
வடுவூர்  ராமன்
ஸ்ரீராமபட்டாபிஷேகம்
பத்ராசல   சீதாராமா லக்ஷ்மண    சரணம்


எத்தனை எத்தனை பிரபாவம்

ஸ்ரீராமா  உன் நாமம் சொன்னாலே போதும்
நினைத்த மாத்திரத்தில்   அத்தனை பாபங்களும் தீரும்.
உன்னை    நினைக்க மனம் கொடு..

அவன் தோன்றியதே அதிசயம்.
கடவுள் மனிதனாகப் பிறந்து மனிதனாகவே வாழ்ந்து மனிதனாக
வருத்தப்பட்டு,மனிதனாகப் பிறர் சொல்லுக்குப் பயந்து,
மனிதனாக  மகிழ்ந்து

சங்கடம் வந்தபோது  மனைவியை  மீட்க வீராவேசம் கொண்டு
வெற்றி பெற்ற ராமனாக அயோத்தி வந்து சேர்ந்தான்.

அவன் சாதுராமன், தோழ ராமன்,
சகோதர ராமன் ,  சீதாவின் இனிய மணாளராமன்,
பாதுகையைக் கொடுத்து பரதனை ரட்சித்த ராமன்.
சபரிக்கும் ,ஜடாயுவுக்கும் மோக்ஷம் கொடுத்தராமன்,
அனுமனுக்கு தூது   சென்ற பெருமையைக் கொடுத்த ராமன்
தசரத ராமன,கௌசல்யா  ராமன்.

ராமா இன்று நீ  வீடு தோறும் பிறந்து எங்களை  வாழ்விக்க வருகிறாய்.

என்றும் கைவிடாத உன் பாதங்களை நாங்கள் என்றும் மறக்காமல் இருக்க நீயே அருள்.

ஜயஜயராம் ஜய சீதாராம்.
ஜய ஆஞ்சனேய ராம்


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

29 comments:

கோமதி அரசு said...

ஸ்ரீ ராமநவமி, உற்சவத்திற்கு அழகிய பதிவு. சீதாராமன் புகழை அழகாய் சொன்னீர்கள்.
ஜயஜயராம் ஜய சீதாராம்.
ஜய ஆஞ்சனேய ராம்.

துளசி கோபால் said...

Happy Birthday Dear Rama!!!

இராஜராஜேஸ்வரி said...

ராமா இன்று நீ வீடு தோறும் பிறந்து எங்களை வாழ்விக்க வருகிறாய்.

ஸ்ரீ ராமநவமி வாழ்த்துகள்..

ஜயஜயராம் ஜய சீதாராம்.
ஜய ஆஞ்சனேய ராம்

sury siva said...


மதுராங்கத்திலே அந்த ராமரைப் பார்த்து ஸேவிக்கணும்னு
பல நாளா , இல்ல பல வருஷங்களா மனசுலே ஒண்ணு சொல்லிண்டே இருக்கு.

யாராவது துணைக்கு மட்டும் வாங்கோ... அப்படின்னு சொல்லிண்டு இருக்கேன்.

இராம பிரானே அவனோட ஜன்ம தினத்திலே ஆத்துக்கே வந்து தரிசனம் தந்தாப்போல இருக்கு.

ரொம்ப சந்தோஷமா இருக்கு.

ராமா ராமா...

என்னை இனியும்

காக்க விடலாமா ?

மதுராங்கத்திலே ஏரி காத்த ராமன் தரிசனம் செய்வித்த‌
வல்லி நரசிம்மன் அவர்களுக்கு
ஸ்ரீ ராமரின் எல்லா அருளும் கிட்டட்டும்.

இங்கேயுமெல்லாரும் வந்து அந்த வடுவூர் கோதண்ட ராமரை தரிசனம் செய்யணும்.

எல்லோருக்கும் பானகமா கானம்.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in

Pandian R said...

இராமன் எத்தணை இராமனடி... கண்ணதாசன் பாடல் நினைவிற்கு வருகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
அவனை எவ்வளவு சொல்ல முடியும்.
கருணாமூர்த்தி இல்லையா.
தினம் அவனைப் பற்றிய சிலவார்த்தைகள் காதில் விழுந்தால் போதும். ஜன்மம் கடைத்தேறும்.
வாழ்த்துகள் மா.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... ஸ்ரீ ராமநவமி நல்வாழ்த்துக்கள்...

Jayashree said...

HBD RAM!
SRI RAMA RAMA SEETHA SAMETHA SOWMITHRI THANAYA SRI RAMA!Bhadrachala rama.
DID you receive my Pasurappadi Ramayanam by Periya vaachchan nambi Mrs Simhan? I sent to you and Thulasi

ராமலக்ஷ்மி said...

ஸ்ரீராம நவமி வாழ்த்துகள் வல்லிம்மா. அழகான பகிர்வு.

வல்லிசிம்ஹன் said...

துளசிமா உங்க ஊர்க் கோவிலில் நடக்கும் உத்சவத்தைப் பார்க்க ஆவலாக இருக்கேன்.

ஸ்ரீராம். said...

ஜெய் ஸ்ரீராம்!

நீர்மோர் பானகம் வடபருப்பு ஆச்சா?

இன்றுகாலை ஒருத்தர் வந்து ஸ்ரீராம்னா உமி...ஸ்ரீராம்னா உமி என்று சொல்லிக் கொண்டே இருக்க, முதலில் புரியவில்லை! அப்புறம்தான் ஸ்ரீராம நவமி என்று சொல்கிறார் என்று புரிந்தது. :))

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராஜராஜேஸ்வரி,
பக்தியுடன் அனைவரும் அவனைக் கொண்டாடுவது மனநிறைவைத் தருகிறது.உங்கள் பதிவில் சொல்லி இருப்பதுபோல ,பாட்டி இருக்கும்போது ஒன்பது நாள் இராமாயணப் பாராயணமும் வைதீகர்களுக்கு சம்பாவனையும் நடக்கும்.மிக இனிமையான நாட்கள் அவை.

வல்லிசிம்ஹன் said...

ராமரஸம் சாப்பிட உங்கபதிவுக்கும் வந்துவிட்டேன்.
சுப்பு சார்.நானும் பல தெய்வ தரிச்னம் செல்லத்தான் காத்திருக்கிறேன்.
நீங்களும் மீனாட்சி அம்மாவும் காரில் சென்று மதுராந்தக இராமனைச் சேவித்துவிட்டு வரலாமே.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.இராமன் அனைவருக்கும் அமைதியைக் கொடுக்கவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

எனக்கும் அந்தப் பாடல் மிகவும் பிடிக்கும் திரு ஃபண்டூ

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஜயஷ்ரீ, எனக்கு வரலையே அம்மா.
இராமன் உங்க ஊரீல் நடக்கும் உத்சவ உற்சாகத்தில் இங்கே வர மறந்துவிட்டானோ:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி மா.

sury siva said...

இன்னிக்கு எந்த பதிவுக்கு போனாலும் ராமா ராமா ராமா தான்.
எங்கேயும் நீர்மோர் பானகம், விசிறி,
ராமன் எத்தனை ராமனடி...

ஜெயராமன், ராஜாராமன், சீதாராமன், வெங்கடராமன், கல்யாணராமன்,
வைகுண்டராமன், தசரத ராமன், ரகுராமன், பலராமன், கோதண்டராமன்,
அயோத்திராமன், ஜானகிராமன், சுப்பு ராமன்....

இத்தனைக்கும் மேலே சாப்பாட்டு ராமன்...

நாந்தான்.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com

வெங்கட் நாகராஜ் said...

ஜெய் ஸ்ரீராம்!

அப்பாதுரை said...

வாழைப்பழத்துக்கு வலதுபக்கம் ஒரு கிண்ணத்துல சிவப்பா இருக்கே, என்ன அது?

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஸ்ரீராமஜயம்
===========

ஸ்ரீராம ந்வமி நல்வாழ்த்துகள்.

//ராமா இன்று நீ வீடு தோறும் பிறந்து எங்களை வாழ்விக்க வருகிறாய்.//

ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

Jayashree said...

Please check your mail Mrs Simhan. let me resend it .

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராமா!!
எல்லாம் ஆச்சு. நோ வடை பாயாசம்.
நீர்மோரும் வடபருப்பும் பானகமும்தான்.
அதென்ன ராமனை உமியாக்கினார் அந்த மனிதர்!! வாயில வெற்றிலையோ என்னவோ:)இல்ல வெள்ளைக்கார மனுஷனோ!!!
ராமன் எல்லாரையும் ரட்சிக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஜெய் ஸ்ரீராம் வெங்கட்.
ராமநவமி வாழ்த்துகள்.

காரஞ்சன் சிந்தனைகள் said...

ஸ்ரீ ராமநவமிக்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது உங்கள் பதிவு!
பகிர்விற்கு நன்றி!

வல்லிசிம்ஹன் said...

அது சந்தனம் துரை.அக்ஷதையும் அதுக்குப் பக்கத்தில் இருந்தது.
சின்ன ரூம். படம் எடுப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது. அடுத்த வருஷம் வென்யூ மாத்திடலாம்.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு வைகோ சார்,
நேற்று முழுவதும் ஸ்ரீராமஜபத்தில் கடந்தது.
உங்கள் வீட்டிலும் ஸ்ரீராமனின் அருள் வெள்ளம் படிந்திருக்கும் என்று நம்புகிறேன்.ராமலக்ஷ்மண ஜானகி
ஜெய் போலோ ஹனுமானுக்கி.

Geetha Sambasivam said...

அப்பாதுரை வடைப்பருப்பைப் பத்திச் சொன்னார். அதான் ஓடி வந்தேன். :))) சுண்டல்னா வீணாகி இருக்கும். இதைக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாமே. நல்லா இருந்தது. சாப்பிட்டு எத்தனையோ வருடங்கள்! :))))

மாதேவி said...

ராம்..ராம் சீதாராம்.