Blog Archive

Monday, April 15, 2013

ஒரு பெண் குழந்தை பிறக்கிறது

கண்ணே    என் கண்மணியே

 சித்ரா பௌர்ணமி!
ஜயாம்மா  வாசலுக்கு வந்து  வானத்தில்நிலாவைத் தேடினாள்.

ஆஹா!அதோ .எத்தனை அழகு.மஞ்சள் நிறத்தில்  எவ்வளவு பக்கத்தில் தெரிகிறது.
ராமேஸ்வரத்தில் அவரும் பார்த்திருப்பாரோ. இராமநாத ஸ்வாமி கோவிலில் விசேஷ பூஜைகள் இருக்குமே.

ஆனால்  இவருக்குத் தபால் லெட்ஜர்களிலிருந்து  தலையைத் தூக்கி வெளியே
பார்க்க நேரம் ஏது?
சின்னவன்   பரிட்சையெல்லாம் எப்படி எழுதினானோ.
தினம் தபால் எழுதாமல் இருக்க முடியவில்லை அவனுக்கு.

இவர் தானாகட்டும். வெள்ளெழுத்துக் கண்ணாடியோட போராடிண்டு
 முத்து முத்தாப் பெண்ணுக்கு எழுதற  அதிசயம்!!!ம்ம்ம்ம்.

இந்தப் பெண்ணும் விடுவதாயில்ல. அப்பா இன்னிக்கு லெட்டர் போடலயாமானு
கேட்கிறது.  20 வயசுல இரண்டாவது குழந்தையும் பொறக்கிற  நாளும் வந்தாச்சு. இன்னும் அப்பாச் செல்லம்  விட மனசில்ல.
 நல்ல அப்ப நல்ல குழந்தைகள்.
இப்படி ஓடாத் தேஞ்சு மாய்ஞ்சு  மாஞ்சு உழைக்கிறார்.
குழம்பு  செய்தால் எண்ணேயும் காரமும் தான் இருக்கு.

சின்னவன் எழுதி இருந்தானே அப்பாவுக்கு வயிற்றுவலி வந்து கஷ்டப்பட்டார்  என்று.
அந்த ஊரில டாக்டர் என்ன தரப் போகிறார் /
சீக்கிரம் குழந்தை பிறந்து  மே மாசம்   அழைத்துப் போக
மாப்பிள்ளை அனுமதி தரணும்.
காரைக்குடிக்கு வேற மாற்றல் வந்துடுத்தாமே. நான் இல்லாமல் இரண்டு பேரும்
எப்படி  எல்லாத்தையும் ஏறக் கட்டுவா.
நானும் வந்து பத்துநாளாச்சு. இன்னிக்கொ நாளைக்கோன்னு
இந்தப் பொண்ணு முனகிண்டு இருக்கு.
நல்லபடியப் பெத்துப் பிழைக்கட்டும்.

அதென்னவோ ப்ரீச்  பேபின்னாளே அந்த  டாக்டர்.
ஏடாகூடமா ஆகாம  திருப்பதி பெருமாள் தான் பார்த்துக்கணும்.

மாப்பிள்ளையோ இன்னும் வீட்டுக்கே வரவில்லை .அப்படி என்ன  வொர்க்ஷாப்போ.
எப்ப பார்த்தாலும்  வண்டி டெலிவரி. கஸ்டமர் விசிட்னு ஜீப்ல பறக்கிறார்.

எனக்கோ நேர்ல நின்னு பேசக் கூச்சமா இருக்கு. இந்தப் பெருசு இருக்கே.
அம்மா புதுப் பாப்பா கொண்டு வருவாடா.
உனக்கு ஜாலிதான் என்றால் பாப்பா வேணாம் ங்கறான்:(
சவலை.

ரெண்டையும் எப்படிச் சமாளிக்கப் போறாளோ.

'அம்மா  உள்ள வரயா.ஏதோசங்கடமா இருக்கு'' உள்ளே இருந்து
பெண்ணின் குரல் கேட்க,
உடனே  விரைந்தார் ஜயாம்மா.
என்ன பண்றதுமா.
சாப்பிட்ட வடை ஒத்துக்கலையா. கஷாயம் வச்சுக் கொடுக்கட்டுமா.
இல்லமா இது வயித்துவலி இல்லை.அந்த வலி.....
ஓ!எப்படிச் சொல்கிறே. இரு எதுக்கும்  சீராக் கஷாயம் கொடுக்கிறேன். அவசரப் பட்டுண்டு
ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டாம்.
டாக்டர் கோவிச்சுக்கப்  போகிறாள். உங்க இவரையும் காணோமே.

நல்ல வேளை இந்த அம்முப் பொண்ணு பெரியவனைத் தூக்க்கிக்கும்.
எத்தனை நல்ல குழந்தைடி இந்தப் பொண்ணூ. அக்கா அக்கான்னு உன் மேல எத்தனை பாசமா இருக்கு.
காலில் ஊனம் இருந்தாலும் எத்தனை  சம்த்து. மேட்டூர் ஜலத்தை எவ்வளவு கொண்டு வந்து கொட்டறது பாரு.
உங்க மாமியாருக்குத் தந்தி கொடுக்கச் சொல்லணும்.
அவர் வந்துட்டா எனக்கு நிம்மதி.

அம்மா நிற்காமல் பேசுவது இதுவே முதல் தடவை.பாவம். இப்படிக்கூட ஒரு அப்ராணி இருக்குமா.
''கவலைப் படாதே அம்மா.  நான் தைரியமா  இருப்பேன்.
மாப்பிள்ளை வராவிட்டால் பரவாயில்லை' நானும் நீயும் சாரதாவும் நடந்து  ,ஆஸ்பத்திரிக்குப் போயிடலாம்.
ஒரு மணிநேரத்தில் இது நிஜவலியான்னு தெரியும்.''

பாபு,இங்க வா செல்லம்.
மாத்தேன்'
சுருட்டை முடியும் வெள்ளைவெளேர்னு பால் வெள்ளை முகமும்,
பெரியகண்களும்,கண்ணை நிறைக்கும் நீண்ட இமைகளும்
என்னை வெறித்தன.  அம்மா  தூக்கு என்று கைகள் விரிந்தன. என் மனம் வலித்தது.
ஒரு கணம் என்னைவிட்டு  அகல மாட்டான். 16  மாதம் தான் ஆகிறது.
அதற்குள் இன்னோரு ஜீவனைத் தன் வாழ்வில் வரவேற்க வேண்டிய சுமை அவனுக்கு.
அப்பா  இருந்திருந்தால் அவரோடு ஒட்டிக் கொண்டுவிடுவான். அவரோ வரக் காணோம்.

கஷாயத்துக்கு   மசியவில்லை  வலி .மணி 11 ஆகிவிட்டது.
இனிமேல் கிளம்ப வேண்டியதுதான். இருட்டில் சேலத்தில் அப்போது தெருவிளக்குகள்
அவ்வளவு  வெளிச்சம்  கொடுக்காது.
எங்கள்  காம்பவுண்டைத் தாண்டுவதே பெரிய  வேலை.
ஒரு 40 வயசு,ஒரு 20 வயசு,
ஒரு பனிரண்டுவயது,,அதன் தோள்மேல் எங்க பாபு
வரிசையாக மெதுவாகத் தாண்டிப் போனோம்.

நல்லவேளையாக ஆஸ்பத்திரியின் விளக்குகள் அணைக்கப் படவில்லை.

அம்மாவுக்கு வந்த தைரியத்தைத்தான் சொல்லணும்.
  கதைவைத் தட்டித் திறக்கச் சொன்னார். கூர்க்கா வந்துட்டு
எங்களைப் பார்த்தவுடன் கேட்டை திறந்து உள்ள வாங்கம்மா. டாக்டரமா இல்ல.
ஆயாக்களைக் கூப்பிடறேன்.
என்றவாறு  உள்ளே விரைந்தான். மெள்ள மெள்ளப் படிக்கட்டுகளில் ஏறும்போது
வெள்ளைப் புடவை அணிந்த ஆயா வந்தார்.
என்னம்மா  வலி சரியா வந்தாச்சா..இல்ல முன்னாடியே வந்துட்டீங்களா.

என் அம்மாவைப் பார்க்கணும்.!!  வாய்திறக்காத   அம்மா க் கோபித்து அப்போதுதான் பார்த்தேன்
 உங்க பேரு தெரியாது
 இரண்டு மணி நேரம்
 வலி அனுபவித்த பிறகுதான் இங்க வந்திருக்கோம்.
இன்னாருடைய மனைவி .
சீக்கிரம் கவனிங்க.''
உடனே நாற்காலி வந்தது.
அப்பாடா என்று உட்கார்ந்த என்னை உள்ளே தூக்கிச் சென்றனர்.

போன  அடுத்த நிமிடம் கால்களில் சில்லென்று உணார்ச்சி.
அம்மா    அடடா  உடனெ அறைக்குச் சென்றுவிடலாம் என்று விரைந்தார்.
டாக்டருக்குஃபோன் செய்தீர்களா.
பனிக்குடம் உடைந்தாச்சு.
குழந்தை வர நேரம் வந்தாச்சு என்றதும். அவரும்  மாடியில் இருக்கும்
டாக்டரம்மாவை அழைக்க விரைந்தார். இன்னாத்துக்குத்தான் இந்தப் பிள்ளைங்கள்ளாம்
ராத்திரிதான் வரணும்னு அடம்  பிடிக்குதுங்களோ!!!!!

இந்தம்மா  பிள்ளையெல்லாம் சீக்கிரம் வந்துடாது. பொறுமையா  இரு.''

இத்தனைக்கும் நான் முனகக் கூட இல்லை. அவ்வளவு பயம்.
அம்மா என் கையைப் பிடித்தவாறு இருந்தார்.
டாக்டர் அழகா மல்லிப்பூ வைத்துக் கொண்டு சிரித்தபடி வந்தார்.

பரிசோதித்து, வயிற்றைக் குடலைச் சுத்தம் செய்யக் கட்டளையிட்டு ஏதோ ஒரு ஊசி போட்டார்.
வலிகுறையும்மா. சீக்கிறம் குழந்தை பிறந்துவிடும்.
நாங்கள்  மருத்துவமனையில் நுழைந்த நேரம் 12.

குழந்தை  வெளிவந்த  நேரம் மூன்று மணி.
அதற்குள் வீட்டு எஜமானர்  பரபரப்பாக வந்துவிட்டார்.
அம்மா ஹார்லிக்ஸைக் கரைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

நான் இவர் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
அம்மா மட்டும் அவரிடம் பாபுவை வீட்டுக்கு அழைத்துப் போய்ப் பால் கொடுத்துத் தூங்கவைக்கும்படிச்
சொன்ன பிறகே நான் கண்ணைத்திறந்து பார்த்தேன்:)

சரி இந்தக் கதை இப்போது எதற்கு.
அந்தப் பெண்ணும் வளர்ந்து தானும் ரெண்டு பசங்களைப் பெற்றுக் கொண்டு
என்னையும்  அவ்வப்போது அதட்டிக் கொண்டு அறிவுரை சொல்லித் தாயாக வளர்த்து வருகிறாள்.

14 ஆம் தேதி பிறந்தநாள்  காணும்(கண்டுவிட்ட) என் இனிய மகள் எல்லாவளமும் பெற இறைவன் அருள்வான்.
வாழ்கவளமுடன்.
பின் குறிப்பு

பிறகு ஒரு வார காலத்துக்கு தினம் ஆர்ச்சி காமிக்ஸும், எம் அண்ட் பூன்
ரொமான்ஸ் கதைகளும் வாங்கி  கொடுத்து ஐய்யா தாஜா செய்தார்!!!

நிகழ்ச்சி  நடந்தது 1968.









 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

25 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய மகளின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் பல...

அப்பாதுரை said...

ஆகா!
வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி.நல்லவர்களின் வாழ்த்துகள் வேண்டியே இந்த நிகழ்வைப் பதிவிட்டேன் தனபாலன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை ''ஆஹா''வுக்கு மிகவும் நன்றி.
வாழ்த்துகளைச் சேர்த்துவிடுகிறேன்.

கோமதி அரசு said...

இனிய மகளின் வரவை என்ன அழகாய் சொல்லிவிட்டீர்கள்!

இப்போது எல்லாம் நமக்கு அறிவுரை சொல்லும் அம்மாக்கள் தான் நம் குழந்தைகள்.
அருமை மகளுக்கு வாழ்த்துக்கள்.
எல்லா, நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
வாழ்கவளமுடன்.

இராஜராஜேஸ்வரி said...

14 ஆம் தேதி பிறந்தநாள் காணும்(கண்டுவிட்ட)தங்கள் இனிய மகள் எல்லாவளமும் பெற இறைவன் அருள்வான்.
வாழ்கவளமுடன்.

மனம் நிறைந்த இனிய் வாழ்த்துகள்...

துளசி கோபால் said...

ஆஹா ஆஹா....மகளுக்கு எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் அன்பு மகளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

பழைய கதையாயினும் இன்று நடந்தது போல சுவைபட எழுதியுள்ளீர்கள்.

பாராட்டுக்கள். ;)

ஸ்ரீராம். said...

இந்தக் காலத்திலேயே கூட நள்ளிரவில் வலி வந்தால் கஷ்டம். அப்போது இன்னும் சிரமமாக இருந்திருக்கும். நல்ல வேளை,அருகிலேயே ஆஸ்பத்திரி போலும்.

மகளுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்:)! மிக அழகான பகிர்வு.

முழுநிலவின் மேல் உங்களுக்கு ஏன் இத்தனை பாசம் என்பதும் புரிந்து போனது:)!

வல்லிசிம்ஹன் said...

அதுதான் நமக்குக் கவலை இல்லை கோமதி:)
என்ன வேண்டுமானாலும் புத்திமதி வந்துடும். அது பொருத்தமாகவும்
இருக்கும். வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி கோமதிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு இராஜராஜேஸ்வரி,வருகைக்கும் அன்பான வாழ்த்துகளுக்கும் ம்கவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

சித்திரை முதல் நாள்தான் அவளுக்குப் பிறந்த நாள் துளசி.நான் பதிவு போடுவது தெரியாது;)
வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.

sury siva said...

அடே !! என்னோட மூத்த பெண்ணும் ( ஃபர்ஸ்ட் சைல்டு பையன் )
காலைலே மூணு மணிக்குத்தான் பிறந்தா. ஆனா 1970 லே.

11 மணிக்கு திருச்சிலே சின்ன கடை வீதி வரைக்கும் நடந்து வந்து ரிக்ஷா கிடைக்காம‌
அப்புறம் ஒரு ரிக்ஷாவைப்பிடிச்சு,

அம்மா...அம்மா....

கொஞ்சம் பொறுத்துக்கோடி.... இதா வந்துடும்.. வந்துடும்... அப்படின்னு

......கொஞ்சம் கொஞ்சமா...

ஏ...ரிக்ஷாக்காரா...கொஞ்சம் மெதுவா போடா....மேடு பள்ளத்திலே பாத்து ஓட்டு....

அம்மா...அம்மா..

கொஞ்சம் பொறுத்துக்கோ ...அஞ்சே நிமிசத்திலே ஆஸ்பத்திரி வந்துடும்..

திருச்சி டவுன் ஸ்டேஷன் மேட்டுப்பாலம் ஏறி....

தில்லை நகர் வந்து இரண்டாம் க்ராஸா அம்மா...

ஆமா....உனக்கு சகுந்தலா நர்சிங்க் ஹோம தெரியாதாப்பா...

அத சொல்லவெ இல்லையே நீங்க...

இதோ வந்தாச்சு....

அப்படின்னு.... வந்து... இறங்கி... கைத்தாங்கலா அழைச்சுண்டு போய்...

இன்னும் 2 மணி நேரத்துலே புறந்துடும்... அப்படின்னு...
அங்கே டாக்டர் ப்ரத்யக்ஷம்.

கரெக்டா மூணு மணிக்கு பெண் குழந்தை சுப ஜனனம்.

Please convey our hearty greetings on the Happy birthday of your Beloved daughter.
மீனாட்சி பாட்டி.

www.subbuthatha.blogspot.in

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் மகளுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்......

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோபு சார். வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.
இது போல நிகழ்வுகளே என்னுடைய பொக்கிஷங்கள்:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.சின்னவனும் பிறந்ததும் இரவு 1 மணிக்குதான்.

வீடு ஒரு பெரிய காம்பவுண்டு.க்குள் அமைந்திருந்தது. .3 ஆவது வீடு.
அந்த நிலையில் வாயில் கேட்டைத் தாண்டிப் போவது மிக்வும் சிரமம்.
வீட்டுக்கு மிகவும் அருகிலேயே நர்ஸிங்ஹோம்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி ,இது பரம்பரைத் தொற்று:)
அம்மாவுக்கு நிலாச் சோறு கொடுப்பது மிகவும் பிடித்த விஷயம்.
வீட்டுக்குள் படுத்துக் கொள்ளமுடியாத கோடைகாலங்களில் வீட்டு முற்றப் பந்தலடியில் தாத்தாவுக்குக் கட்டிலும் எங்களுக்கெல்லாம் பாயும் தான் அடைக்கலம்.நித்தியமல்லி வாசமும் அப்பாவின் கதைகளும் எங்களை வேற உலகத்துக்கு அழைத்துச் சென்றுவிடும்.வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மீனாட்சி அம்மா, சுப்பு சார். அந்த வேதனையில் பொறுமையாக இத்தனை தூரம் வந்திருக்கிறீர்கள். உங்கள் மனைவிக்கு வாழ்த்துகள். எங்கள் மாப்பிள்ளை குடும்பம் கூட தில்லை நகரில் கொஞ்ச காலம் இருந்ததாகச் சொல்வார்கள்.
உங்கள் மகளுக்கும் அவர் குடும்பத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.உங்கள் அனுபவம் கதையாகக் கண்முன் விரிகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் ,வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றி மா.

சாந்தி மாரியப்பன் said...

மகளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் வல்லிம்மா.

Geetha Sambasivam said...

தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் உங்கள் மகளுக்கு. சித்ரா பெளர்ணமிக்குப் பிறந்ததாலே சித்ரானு பெயர் வைச்சீங்களா? :)))

வல்லிசிம்ஹன் said...

நன்றிமா சாரல். தாமதாகச் சொல்கிறேன்.
கண்ணைச் சரிப்படுத்தாமல் மேலும் மேலும் வேலை கொடுக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

சித்ரா பௌர்ணமிக்கு அடுத்தநாள். ஆங்கிலக் காலண்டர் முறையில்:)
சித்ரா என்று பெயர் வைக்கவில்லை கீதா. ராமாயணத்திலிருந்து ஒரு பெயர்:)

மாதேவி said...

மகளுக்கு இனிய வாழ்த்துகள்.