Blog Archive

Wednesday, March 27, 2013

The man Who knew too much/ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கின் த்ரில்லர்

கச்சேரி நடைபெறும் ஆல்பர்ட் ஹால் லண்டன்
மெதுவாக மாடியை நோக்கி நகரும் ஜிம்
எங்கே  இருக்கிறாய் மகனே  '  ஜோ  பாடும் பாடல்
இதுதான் அந்த ரகசியம்.
என்ன செய்வது இப்போது?



 ட்ரெய்லர்   :

http://www.amazon.com/The-Man-Who-Knew-Much/dp/B002H3J3AG
போஸ்டர்



அமெரிக்க தம்பதியர் டாக்டர் பென்ஜமின்  மெக்கென்னா,அவர் மனைவி  ஜோ மெக்கேனா,அவர்கள் மகன் ஹான்க்
அனைவரும் பாரீஸுக்கு ஒரு மருத்துவ சம்பந்தமான  கருத்தாய்வுக்கு வருகிறார்கள்.
அங்கிருந்து மொராக்கொ  நகருக்கு ஒரு   சுற்றுலா  போகலாம் என்று மொராக்கேஷ் நகருக்கு வந்து சேருகின்றனர்.


அங்கே எல்லாமே  வித்தியாசமாகத் தெரிகிறது. அந்நிய தேசத்தைப் பார்க்கும் ஆவலில்
சுற்றிவருகிறார்கள்.
அப்பொழுது பென் என்னும் ஃப்ரென்ச் ஆள் டாக்டரை
 உணவுவிடுதியில் சந்தித்துப் பேசுகிறான்.
டாக்டரின் மனைவிக்கு ஏதோ சந்தேகம் தோன்றுகிறது.
அங்கிருந்து மொராக்கன் கடைவீதியில்  நடந்து கொண்டிருக்கும் போது

ஒரு பரபரப்பு. யாரொ துரத்த ஒரு அரபிய  உடையணிந்த மனிதன் டாக்டர் மேல்
மோதுகிறான்.
அவன்  டாக்டரின் காதில் ஏதோ  முணுமுணுத்தபடி நினைவிழக்கிறான்.
டாக்டர் அதிர்ச்சியுடன்  தன்சட்டையில் படியும் இரத்ததைப் பார்க்கிறார்.
மகன் ஹான்க்கும்,மனைவி ஜோவும் அலறுகிறார்கள்.

போலீஸ் வருகிறது.அவர்கள் டாக்டர் பென் னை விசாரிக்க அழைக்க,
ஜோவும் கூடப் போகிறாள்.  தனியே விடப் படும் ஹான்கைப் பக்கத்தில் இருக்கு ப்ரிடிஷ் தம்பதிகள் தங்கள் விடுதிக்கு
அழைத்துச் செல்வதாகச் சொல்கிறார்கள்.
அங்கிருந்து சஸ்பென்ஸ் ஆரம்பிக்கிறது.
போலீஸிடம் நடந்ததைச் சொல்லும் பென்,அந்த அரபு உடையணிந்த பெர்னார்ட்
ஒரு பிரான்ஸ் நாட்டு  உளவளி என்று அறிகிறார்.
அவர் சொன்ன ரகசியத்தை மனதில் பூட்டியபடி  இருவரும் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்தால் அங்கே இன்னோரு அதிர்ச்சி.
பையனைக் காணவில்லை.

தாங்கள் பையனைக் கடைத்திக் கொண்டு போவதாகவும்  பெஞ்ஜமின் தெரிந்து கொண்ட ரகசியத்தை
வெளியே சொன்னால் அவன் உயிருக்கு ஆபத்து என்றும் கடிதம் கிடைக்கிறது..

அவர்கள்   இங்கிலாந்திற்குச் சென்று விட்டதையும்    அறிந்ததும் அவர்களும் இங்கிலாந்துக்குப் புறப்படுகிறார்கள்.
அங்கேதான் அவர்கள் அறிந்த    ரகசியம் நிறைவேறப் போகிறது.அதைத் தடுக்க  அவர்களும்   அங்கே போகவேண்டும்.
பிள்ளையைப் பிரிந்த  துயரம் சேர ஜோ  உடைந்து போகிறாள்.

பென்,மகனை   எப்படியாவது காப்பாற்றி மீட்டுவிடலாம் என்று ஆறுதல் சொல்கிறார்.
இருவரும்  லண்டனை வந்தடைகிறார்கள்.
அடுத்த பகுதி   அடுத்த பதிவு.
எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாமா.



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

8 comments:

sury siva said...

நான் என்னிக்கோ மதுரை தங்கம் தியேட்டரில் பார்த்த படத்தை நினைவுக்கொண்டு வந்து என்னை
மறுபடியும் மதுரை நினைவுகளில் அமிழ்த்தி விட்டீர்கள்.

அப்பாதுரை மாதிரி நானும் ஒரு பரண் அறைக்கு போய் விட்டேன்.

இது மாதிரி ஒரு த்ரில்லர் படம் அந்த காலத்திலே ரியர் வின்டோ. படம் பார்த்தபின் ரொம்ப நாள் தூக்கம் வல்ல.

சுப்பு ரத்தினம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

த்ரில்லர் படம் பற்றிய த்ரில்லிங்கான விமர்சனம் அருமை.

கடைசியில் ‘தொடரும்’ வேறு போட்டுவிட்டீர்களே ! ;)

ஸ்ரீராம். said...

//எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாமா.//

பார்க்கலாம். ஆனால் சஸ்பென்ஸ் வைக்காமல் சொல்லி விடுங்கள்! :)

Anonymous said...

---------
அடுத்த பகுதி அடுத்த பதிவு.
---------
இதைத் தவிற அனைத்தும் அருமை :-)

அப்பாதுரை said...

டோரிஸ் டேக்காக பார்க்கலாம். (நாலஞ்சு தடவை). ஸ்டூவர்டின் அமோக ரசிகனல்ல. But ஹிட்ச்காக் அவரைத் தான் அதிகம் பயன்படுத்தினார்.

இந்தக் கதையைப் புரட்டிப் போட்டுக் கோரமான  வன்முறை கலந்து நிறைய பேர் பரிமாறியுள்ளனர்.  உறைய வைக்கும் வன்முறை காட்சிகளை ரத்தமின்றிப் படமாக்கத் தெரிந்தவர் ஹிட்ச்காக் மட்டுமே.

சமீபத்தில் நைட் சியாமளன் was promising.. ஏனோ கற்பனை வற்றிய படங்களை தருகிறார் these days.

அப்பாதுரை said...

பரண் விட மாட்டேங்குது பாருங்க.

கோமதி அரசு said...

நானும் பார்த்து விட்டேன் தமிழ் மொழி பெயர்ப்பில் தொலைக்காட்சியில்.

மாதேவி said...

விறுவிறுப்பான விமர்சனம்.