Blog Archive

Saturday, March 23, 2013

Meet the Parents... படத்தின் அலசல்

பாமீலா  க்ரெக்  பாவப்பட்ட ஜோடி:)
நீயா   நானா!1
மாமானாரும் அவரது     செல்லமும்:)
கடவுளே   காப்பாத்து


 பெற்றோரைச் சந்திக்கலாமா!  (Meet  the parents... a  comedy)
**********************************************************************************
Meet the Parents இந்த படம்  தொலைக்காட்சியில் பார்த்தது.

சிகாகோ  சென்ற போது திரை அரங்கிலும் பார்த்தேன்.
2001   என்று நினைக்கிறேன்.

ஒரு நல்ல  காமெடி பார்த்த நிறைவு.

நடிகர்களைப் பொறுத்த வரையில்  ராபர்ட் டி நிரோ,பென் ஸ்டில்லர்
இருவரின்
நகைச்சுவை  படத்தைப் பிடிக்க வைக்கிறது.
ஹீரோ  பென்ஸ்டில்லர்(க்ரெக்) ஒரு  ஆஸ்பத்திரியில் நர்ஸாக வேலை பார்ப்பவர். வெகுளி.
எப்பொழுதும் நல்லதையே நினைத்து அதனாலேயே வம்பில் மாட்டிக் கொள்கிறவர் . அவர் காதலிக்கும் பெண்
பாமீலா  என்னும் பாம் ஒரு   மாந்தசோரி ஆசிரியை.

அவள் அப்பா ஒரு மிலிட்டரியிலிருந்து (ஓய்வுபெற்ற) அதிகாரி/
வீட்டிலும்  இரணுவ முறைப்படி எல்லாம் நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்.

முதல் பெண்ணுக்குத் திருமணம் செய்ய ஒத்துக் கொள்ளும் முன் மாப்பிள்ளையின் பெற்றோரை
பரிபூரணமாக   விசாரித்துத் திருமணத்துக்கு ஒத்துக் கொள்கிறார்.

இப்போது இரண்டாவது பெண் ஒரு Jewமாப்பிள்ளையை,
அதாவது பாய்ஃப்ரண்டைப் பற்றிப் பேசும்போது அவருக்கு ரத்த அழுத்தம் ஏறிவிடுகிறது.
என்னவெல்லாமோ செய்து  திருமணத்தை நிறுத்த  ஏற்பாடுகள் செய்கிறார்.
க்ரெக்கின்' பெற்றோர் பெயர் ஃபாக்கர் என்பதில் ஆரம்பித்து அவனுடைய
ஒவ்வொரு நடவடிக்கையையும் கேலிக்குள்ளாக்குகிறார்.
இந்த நிலையில் தான்  காதலர் இருவரும் பமீலாவின்
 பெற்றோரைச் சந்திப்பது என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

பமீலா,காதலனின் அன்புக்கும், தந்தையின் வெறுப்புக்கும் இடையில் திண்டாடுகிறாள்.

மத வேறுபாட்டினால் சாப்பிட உட்காருகிற முறையிலிருந்து பமீலாவின் அப்பா தப்பு கண்டுபிடிக்கிறார்.
எல்லாவற்றையும்  தன் இயல்பான புத்திசாலித்தனத்தினால்
சமாளிக்கிறான் க்ரெக்.
இதற்கிடையில்  வரப்போகும் மாமனாரின் செல்ல நாய்க்குட்டியின் தொல்லை

 தாளாமல் அதை எப்படி  ஒழித்துக் கட்டுவது என்று க்ரெக் யோசித்து விரட்டியும் விடுகிறான்:)
அவனுக்குத் தெரியாதது மாமனார் எல்லா இடங்களிலும் கண்காணிப்புக் காமிரா பொருத்தி இருப்பது!!

இதை வைத்தே அவனைத் தன் பெண் வாழ்க்கையிலிருந்து
தள்ளிவிடலாம் என்று திட்டமிடுகிறார்.
இந்த நிலையில்தான்,
மாமனாரப் பற்றிய பெரிய ரகசியம் க்ரெக்கிற்குத் தெரிய வருகிறது.
அவர் இன்னும் சிஐஏ  வின்  ஆளாக உலவி வருகிறார் என்று.

விக்கிரமாதித்யனைப் போலத் தளராமல் முயற்சி செய்தும்
காதலியின் கோபத்துக்கும் ஆளாகிறான் க்ரெக்.
அவன் ஒரு மாரியுவான அடிக்ட் என்று நிருபித்து(பொய்யாக)க்
காண்பிக்கிறார்.

கடைசியில் எல்லாம் தெரிய வர  மாமனாரே ஏஏர்ப்போர்ட்டுக்கு வந்து மருமகனாகப் \
போகிறவனைப் போலீசின் பிடியிலிருந்து விடுவித்து அழைத்துச் செல்கிறார்.


இதுதான் கதை.
நடுவில் வரும் சம்பவங்கள் வாய்விட்டுச் சிரிக்கவைக்கும்.
ராபர்ட் டி னீரோ போன்ற பெரிய நடிகரிடம்,அசராமல் தன் பன்முகத்திறமையக்
காட்டி நடித்திருக்கும் பென் ஸ்டில்லர் ஒரு  திறமைசாலி.
நீங்கள் ஏற்கனவே பார்க்கவில்லை என்றால்
கணினியிலியே பார்க்கலாம்.:)
கூகிளார் துணை செய்வார்.









எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

13 comments:

ஸ்ரீராம். said...

க்ரெக்தான் அவர் பெயரா? அவர் நடித்த நைட் அட் மியூசியம் பார்த்திருக்கிறேன். ராபர்ட் டி நீரோ நடித்த படம் எதாவது பார்த்திருக்கிறேனா தெரியவில்லை! ஆங்கிலப்படங்கள் அதிகம் பார்ப்பதில்லை!!

அப்பாதுரை said...

பென் ஸ்டில்லர் உச்சியில் இருந்த போது வந்த படம். பூனையை பெயிண்ட் அடித்து ஒப்பேற்றும் காட்சி ஒரு வோடவுஸ் கதையில் இன்னும் ரகளையாக இருக்கும்.
நன்றாக ஓடியதென்று இதன் தொடர்ச்சியாக இரண்டு மூன்று படங்கள் எடுத்து துவம்சம் செய்துவிட்டார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அவர் பெயர் பென் ஸ்டில்லர்.படத்தில் க்ரெக். ஸ்ரீராம்.
த ஃபேமஸ் டி(ஜாங்கோ) படம் பாக்கலியா. என்னது இது.
இன்னிலிருந்து ஆங்கிலப் படம் பார்க்கப் போறேங்க.சரியா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் துரை.
இதோட மற்ற பகுதிகள் கொஞ்சம் அத்துமீறி இருந்தன,.

மீட் த ஃபாக்கர்ஸ் எல்லாம் பார்க்கவில்லை:)

திண்டுக்கல் தனபாலன் said...

எப்போதோ பார்த்த ஞாபகம்...

நன்றி அம்மா...

கோமதி அரசு said...

படம் பார்க்க தோன்றும் விமர்சனம்.

Geetha Sambasivam said...

எங்கே? பகல் பொழுதுகளில் ஆறு மணி நேரம் மின்சாரத்தைப்பிரிச்சுப் பிரிச்சுக் கொடுக்கிறாங்க. இணையத்துக்கு வரதே பெரிய விஷயம். மடிக்கணினியை சார்ஜ் பண்ணறது பெரிய விஷயம். :((((

வல்லிசிம்ஹன் said...

ஒரு மாறுதலுக்குப் பார்க்கலாம். கோமதி.
நல்ல வேளை படம் பார்க்கிற பைத்தியம் எல்லாம் விட்டுப் போச்சு.:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.
புது விதமக இருக்கு பார்க்கலாம் வான்னு மகள் அழைத்துப் போய்ப் பார்த்த படம்.கொடுத்த பணத்திற்குப் பாதகம் இல்லை!!!

வல்லிசிம்ஹன் said...

அடக் கடவுளே கீதா.இன்னும் வெய்யில் காலத்தில் எப்படி இருக்குமோ.

மடிக் கணினியைச் சார்ஜ் செய்யக்கூட மின்சாரம் இருப்பதில்லையா.கொடுமைதான்.:(

வை.கோபாலகிருஷ்ணன் said...

பட விமர்சனம் அருமை. பாராட்டுக்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கோபு சார்/. விமரிசனம் என்றேல்லாம் இதைச் சொல்ல முடியாது.:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட் வருகைக்கும் கருத்துக்கும்.