About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Tuesday, March 05, 2013

பாஸ்கரனின் அம்மா'''எழுதியவர் பிரேமாகிருஷ்ணமூர்த்தி

G
 இது  புதுவிதமான  ஆனாலும் பழைய கருத்து கொண்ட கதை.
சீதா  ,அவளுக்குத்    நடந்து,கணவனின்  துர்க்குணங்களை அனுசரித்து   வாழ்வு நடத்தும்போது  குழந்தை  தரிக்கிறாள்.
  பிறக்கும் போது  சீதாவின்  நரம்புகள் பாதிக்கப் பட்ட நிலையில் பிறந்த குழந்தையும் இறந்துவிடுகிறது.

ஹிஸ்டீரியா வியாதி தாக்குகிறது.

  உடல் ரீதியாகப் பாதிக்கப் பட்டபோது,அவள் கணவனுக்கு அவளை ஒதுக்கிவிடத் தோன்றி  வாரணாசிபாளையத்திலேயே   கொண்டுவந்து விட்டுவிடுகிறான்.
சிலமாதங்களில் முழுக் குணம் அடைந்தாலும் அவளை ஏற்க  மறுக்கும் கணபதி  திரும்பிப் பார்க்கவில்லை.
கணவனால் கைவிடப்பட்ட  பெண்மணி. பிறந்தகத்திலியே விடப்பட்ட வாழ்விழந்தவள் என்று அழைக்கப் படுபவளாகிறாள்..

அவளைக் கைவிட்ட கணவன் இன்னோரு பெண்ணை மணந்து
மும்பையில்  குடித்தனம் வைத்து  ஐந்தாறு   குழந்தைகளையும் பெற்றுக் கொள்கிறான்  ..

சீதா அம்மாவீட்டில் அனுசரித்துக் கொண்டு மனம் நைந்துபோனாலும்
கோவில்,நல்ல புத்தகங்கள்,கைவேலை என்று தன் வாழ்க்கையை
நெறிப் படுத்திக் கொள்கிறாள்.
அவள் ஒரே பெண்தான் அந்தவீட்டில். தந்தையும் இவள் மணம் முறிந்த போதே இறைவனடி சேர்கிறார். தாய் மட்டும்
துணையாக இருக்கிறாள்.

பத்தொன்பது வருடங்கள் இவ்வாறு கழிந்த நிலையில்
ஒரு கண்ணயரும் மதிய வேளையில் தபால் ஒன்று வருகிறது.

அதப் பார்த்த மாத்திரத்தில் கணவனின் கையெழுத்தைப் புரிந்து
கொண்டுப் படபடப்புடன் பிரிக்கிறாள்.
அவள் அம்மா பெயரில் கடிதம் ஆரம்பிக்கிறது.
மதிப்புக்குரிய   ருக்மணி அம்மாவுக்கு தங்கள் மாப்பிள்ளை கணபதி எழுதும் அவசரக் கடிதம்.
இங்கே என் மனைவி கடைசிப் பிரசவத்தில் எங்களைத் தவிக்கவிட்டுப் போய்விட்டாள்.
இரண்டு மாதக் குழந்தை தாயின் அரவணைப்பில்லாமல் நோயுற்று வருந்துகிறது.
இந்தக் கடிதத்தை எழுதின கையோடு நனும் என் மூத்த பையனும் கிளம்பி வருகிறோம்.
தாங்கள் சீதாவை எங்களுடன் அனுப்ப வேண்டும். பழையதெல்லாம் மறந்து
என்னை மன்னித்து  என் குடும்பத்தைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.
கணபதி///////

இதைப் படித்த சீதாவுக்கு உடலெல்லாம் நடுங்குகிறது..
சத்தம் கேட்டு வந்த அம்மாவிடம் கடிதத்தைக் கொடுத்துவிட்டுச் சமையலறைக்குப் போய்விடுகிறாள்.
ருக்மணி அம்மாளும் படித்துவிட்டு வயதான சரீரம் தளர்வடைய,மகளைத் தேடி வருகிறாள்.
'என்னடி இது புது சோதனை?''

எனக்குத் தெரியவில்லை என்றபடி சுருங்கிக் கொள்கிறாள்.கண்ணிலும் முகத்திலும் படபடப்பும் சோகமும்.

இதற்குள் அக்கம்பக்கத்துவீட்டுக்காரகளுக்கு விவரம் பரவி
பத்துப் பதினைந்து பெண்மணிகள் வந்து கணபதியைக் கண்டபடித்
திட்டித் தீர்க்கிறார்கள்.
தங்கள் ஊர்ப் பெண்ணை வதைத்தவனாயிறே!

இரண்டு நாட்களில்  கணபதியும் அவரது முதல் மகன் 16 வயது
பாஸ்கரனும் வருகிறார்கள்/

சீதா,அடுப்பங்கரையிலிருந்து  வெளியே  வரவில்லை.
கதவிடுக்கிலிருந்து ஒருகணம்  கணவனைப் பார்க்கிறாள். முகத்தில் கம்பீரமும் அகம்பாவமும்  தெரிகின்றன.

ஓஹோ!  அந்த சுயநலம் இன்னும் போகவில்லை'
என்று மீண்டும் உட்கார்ந்துவிட்டாள்.

வந்திருந்தவர்கள் அனைவரும் கணபதையைக் கேட ஆரம்பிப்பதற்கு முன்னால்
அவரே  பேசுகிறார்.
நான் தவறு இழைத்தவந்தான்.
ஆனால் இப்போது   என் வயது வந்த மகள், அவளது தம்பிகள், கடைசியாகப் பிறந்த  ஆறு மாதக் குழந்தை எல்லோருமே  கஷ்ட திசைக்கு வந்துவிட்டோம்.
உங்கள் தயவில் தான் என் குடும்பம் தழைக்கவேண்டும்'என்று சுருக்கமாகச் சொல்லிமுடிக்கிறார்.
வயதின் அடையாளங்கள் உடலிலும் முகத்திலும் தெரிகின்றன.

ருக்மணி அம்மாள்
சொல்லால் பாய்கிறாள்.
இப்போது சீதா  எதற்கு உங்களுக்கு.
உங்களுக்குக் கல்யாணம் செய்து கொள்ளத் தெரியுமே.
பணம் இருக்கும் போது இன்னோரு மனைவி கிடைக்க மாட்டாளா.
நாங்கள் சீதாவை அனுப மாட்டோம். அவளை அழைத்துப் போய் மீண்டும் நட்டாற்றில் விடமாட்டிர்கள் என்று என்ன  நிச்சயம்'
என்று ஆற்றாமையோடு முடிக்கிறாள்.

கணபதி மௌனமாகிறார்.
என் குடும்பம் பாழடைந்து கொண்டிருகிகிறது. அங்கே குழந்தைகள் என்ன பாடு படுகிறார்களோ.
முடிந்தால்    சீதாவை அனுப்புங்கள் நாங்கள் பிழைப்போம்.

சீதா உள்ளே தவிக்கிறாள்.
குழந்தைகள் என்ன பாவம் செய்தது.
இருந்தாலும் பன்னிரண்டு வருடங்கள் பிரிந்தாலே
கோவிலில் தான் பார்க்கவேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறதே!
என்ன செய்வேன்.

இப்படி யோசிக்கும்பொதே அம்மா என்றோரு அறைகூவல் அவள் காதில் வந்துவிழுகிறது.
திடுக்கிறது அவள் உடலும் மனமும். இறந்து போன தன் குழந்தைதான் அழைப்பதுபோல  பிரமிக்கிறாள்.
எட்டிப் பார்க்கிறாள்.
அங்கே வேட்டியும் சன்னமான சட்டையும் போட்ட பாஸ்கரன் கைகூப்பி நிற்கிறான்.

அம்மா!எங்களைக் காப்பாற்றுங்கள்.
தங்கை தம்பிகள் சின்னப் பாப்பா எல்லோரும் உங்களை நம்பித்தான் இருக்கிறோம்.
வாருங்கள் அம்மா. எங்கே இருக்கிறீர்கள்?
என்று கண்ணீர் தாரை தாரையாக  விழ
கைகளை நீட்டி நிற்கும் பிள்ளையைப் பார்க்கிறாள்.

இதோ இருக்கேன் அப்பா.
உங்கள் அம்மா. உன்னோடு உன்னை நம்பி வருகிறேன்.
என்று வெளியே  வருகிறாள்.

கணபதியும் பார்க்கிறார்.
நலிந்த உருவமும் ,முகத்தில் தவம் செய்த வலிமையுமாகச் சீதா தென்படுகிறாள்.
அவர் கண்களிலும் அன்பு தெரிகிறது.
உடனே சுதாரித்துக் கொள்கிறாள்   ருக்மணி அம்மாள்.
சரி இதுதான் தீர்ப்பு என்றால். உடனேஎ அகிலாண்டேஸ்வரி கோவிலுக்குப் போய் வாருங்கள். சாப்பிட்டுவிட்டு ஊருக்குக் கிளம்புங்கள் என்று

ஆணையிடுகிறாள்.
இருந்த ஒரு நல்ல படவையைக் கட்டிக் கொண்டு
கோவிலுக்குப் போகும் சீதாவை பலவித வம்புக் கண்ணோட்டதில் எல்லோரும் பார்த்தாலும்,
சீதையின் மனதில் மன்னிப்பின் மகத்துவம்

முகத்தில் சுடராக    வெளிப்படுகிறது.
நண்பர்களே.
இப்படியும்  ஒரு கதை.
அவரவர் மனநிலைக்கு ஏற்றவாறு வாழ்வு,

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்