About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Monday, March 18, 2013

சென்னையும் தண்ணீரும்


வல்லிசிம்ஹன்.
***************** மழையின் அருமை வெய்யிலிலும் தாகத்திலும் தெரிகிறது.

இருவரே இருக்கும் எங்கள் வீட்டுத் தண்ணீர்த்டொட்டியிலும் சென்னை மெட்ரோ  நீர் வரத்துக் குறைந்து கொண்டு வருகிறது.
நல்லவிதமாக எஜமானர் மழை   சேமிப்பு   தொட்டிகள் மூலம் கிணற்றில் நீர் சேர்த்திருப்பதால் வண்டி ஓடுகிறது. சுற்றிவர்க் கட்டிடங்கள் பூதாகர்ரமாக எழுந்து வருகின்றன. ஐந்தடுக்கு ,துளசி சில்க்ஸ் துணிக்கடை,

அடுத்தவீட்டில்  ,எதிர்வீட்டில்,காலனிக்கும்ல்  எங்களோடு வீடு கட்டியவர்கள் எல்லாம்  பழையவிட்டை இடித்துப் புது  வீடு கட்டிவிட்டார்கள்.
சிறிய குழந்தைகளாக வந்தவர்கள்  சம்பாதித்து அம்மா  அப்பா கட்டின வீட்டை இரண்டு சகோதரர்களுக்கான  வீடாகவோ,
இல்லை மூன்று சகோதரிகள் சேர்ந்திருக்கும் பெரிய அபார்ட்மெண்டாகவோ கட்டி விட்டார்கள்.

புத்திசாலிகள் தான்.

இவ்வளவு பெரிய இடங்களை நிர்வகிக்க  இரண்டு ,மூன்று என்று போர்வெல்.

தண்ணீர்(குடிநீர் வாரியம்)  வரும் குழாயைன் மட்டத்தை இறக்கி

ஒருவீட்டுக்கு வரவேண்டிய தண்ணீரை இருமடங்காகப் பெருக்கினால் எங்கள் கதி என்ன.?

என் தோழியும் இன்னும் அதே வீட்டில்தான் இருக்கிறார்.
கணவர் இல்லை.
அந்த வீட்டை இடிப்பதில் அவருக்குச் சம்மதமில்லை.

மகளோ, பழசாகிவிட்டது. இதை விற்று வேறு கட்டலாம். என்னோடு மும்பைக்கு வந்துவிடு என்கிறாள்.
தோழிக்கோ சங்கீதம், உறவுகள்  எல்லாம் இங்கேதான்.
வயதும் 76 ஆகிவிட்டது,.
ஆனால் மன உறுதிக்கு அளவே இல்லை. பணபலமும் உண்டு.

இங்கேயே இருக்கிறேன் என்று சொல்லிவிட்டார்.

சுற்றிவரப் போர்வெல் போட்டதால் இவர்கள் வீட்டில் தண்ணீர் மஞ்சளாக வருகிறது.

இத்தனைக்கும் தன்வீட்டின் கீழ்ப்பகுதியில் தன் உறவுகளையும் வாடகை இல்லாமல் குடிவைத்திருக்கிறார், அன்னை பட பானுமதி போல்!
தாராள மனம்.

இப்போது எங்கள் சாலையில் இரண்டு    பெர்ர்ர்ர்ர்ர்ரிய  ஆஸ்பத்திரிகள்
மூன்று துணிக்கடல்கள்,
இரண்டு மருந்துக்கடைகள்.
ஒரு உணவகம் ,.

பகுகுடும்பியாகிவிட்டது லஸ் சர்ச் ரோட்.
தண்ணீர் வேண்டாமா. வேணும். அதுதான் டான்கர் வந்து நிற்கிறதே ரோடை அடைத்துக் கொண்டு!10000லிட்டர் 3000 ரூபாயாம்.!!

அதற்கேற்ற (பண)வசதிகள்   நாம் பெருக்கிக் கொள்ளவேண்டும்.


எதிர்த்தார்ப்போல்  டீக்கடை.
ஒரு பெஞ்சும் உண்டு.

நாம் வாசல்கதவைத் திறந்தால்   எங்கே போகிறோம் என்று பத்துதலைகளாவது திரும்பும்.
நல்லவேளை  குமரிப் பெண்கள் யாரும் வீட்டில் இல்லை:)))

நகைக் கடை ஒன்றுதான் பாக்கி. அதுவும் வரச் சந்தர்ப்பங்கள் உண்டு.
கேரளா ஜுவல்லரி சொந்தக்காரர்கள்   எதிர்த்தெருவில்தான் இருக்கிறார்கள். ஒரு கிளை இங்கே திறந்தால் நாங்களே பாண்டி பஜார் ஆகிவிடுவோம்.


இன்றைய புலம்பல் இத்துடன் முடிகிறது:))))))

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

28 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வருத்தமான புலம்பல்கள் அம்மா...

ராமலக்ஷ்மி said...

எல்லா ஊர்களிலும் இதே நிலைதான். அடுக்குக் குடியிருப்புகளின் தேவைகளுக்கு ஈடுகொடுக்க முடிவதில்லை நிலத்தடி நீரால். பக்கத்தில் இருக்கும் தனி வீடுகளும் சிரமத்துக்கு உள்ளாகின்றன. குடியிருப்புப் பகுதிகள் வணிக இடங்களாக மாறுவதும் அதிகரித்து வருகிறது.

வல்லிசிம்ஹன் said...

திண்டுக்கல்லைத் தினம் நினைக்கிறேன் தனபாலன். அங்கேயும் நல்ல தண்ணீர்க் கிணற்றுக்குப் போய்த் தண்ணிர் கொண்டுவருவேன். இப்போது மாறியிருக்கும்.
அப்போது சிறிய வயது.எல்லாம் வேடிக்கை. இப்போது பிரமிப்பாக இருக்கிறது.எப்படி ஒரு ரெசிடென்ஷியல் பகுதியில் ஆஸ்பத்திரிகள், துணிக்கடைகள் எல்லாம் வைக்க அனுமதி பெறுகிறார்கள்?வருகைக்கு நன்றி மா.

துளசி கோபால் said...

அடுத்த விஸிட்டில் உங்க வீட்டில் வந்து ஓய்வெடுத்துக்கிட்டே நகை டிஸைன்ஸ் பார்க்கணும். துணி மணி பிரச்சனை இல்லை. அதான் நான் அஞ்சடுக்கு மாடி கட்டியாச்சே!

ஏம்ப்பா.... ஒரு டாங்கர் தண்ணீர் வாங்கி கிணத்தில் ஊத்தி வைக்க முடியுமா?

இல்லே அதையும் அக்கம்பக்கம் உறிஞ்சிடுமா?

RAMVI said...

தண்ணீர் கஷ்டம், அடுக்கு மாடி குடியிருப்புகள் எல்லாமே வருந்தத்தக்கது.
சரி ஊரை விட்டு வெளியில் தனி வீடு கட்டிக்கொள்ளலாம் என்றாலும் இப்பொழுதெல்லாம் அங்கேயும் அடுக்கு மாடி குடியிருப்புகள்,தண்ணீர் கஷ்டம் வந்துவிட்டது.

எங்கேதான் போவது??

கோமதி அரசு said...

மதுரையில் எங்கள் வீடு இருக்கும் பகுதியில் எங்கள் வீடு மட்டும் இருந்த போது கிணற்றில் மேலேவரை தண்ணீர் இருக்கும் நாம் கிண்ணத்தை வைத்துக் கூட தண்ணீர் எடுக்கலாம்.
பிறகு சுற்றிவர வீடுகள் வர ஆரம்பித்தவுடன் எல்லோரும் ஆழ்துளை குழாய்க்கள் போட்டவுடன் எங்கள் வீட்டு கிணற்றில் தண்ணீர் இல்லை, பிறகு நாங்களும் வேறு இடத்தில் போர்வெல் போடவேண்டியது ஆகிவிட்டது.
இப்போது மழை இல்லை, தண்ணீர் இல்லை , தண்ணீர் விலைக்கு வாங்க வேண்டி உள்ளது.
மதுரை போகாமல் மயிலாடுதுறையிலே இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இங்கும் எவ்வளவு காலம் தண்ணீர் கிடைக்கும் என்று தெரியவில்லை.
இங்கும் பெரிய ஓட்டுவீடுகள் அடுக்குமாடிகுடியிருப்புகளாய் மாறி வருகிறது.
வணிக வாளகத்திற்கு வாடகை அதிகம், அதனாலேயே குடியிருப்புப் பகுதிகள் எல்லாம் வணிக இடங்களாய் மாறுகிறது. குடியிருப்புக்கள் எல்லாம் நல்லா விளையும் வயல்காட்டுக்கு மாறுது.
தண்ணீரும், உணவும் தட்டுபாடாக மாறப்போகிறது.

கோவையில் நான்கு நாட்களுக்கு ஒருமுறை சிறுவாணி தண்ணீர் வருகிறது.

தண்ணீருக்காக மக்கள் படும் கஷ்டம் மிக கொடுமையாக இருக்கிறது.
நானும் உங்களுடன் சேர்ந்து புலம்பி விட்டேன் அக்கா.

KARUNAKARAN VV said...

SINDIKKAVENDIYA PULAMBALTHAN AKKA.

அப்பாதுரை said...

பிட்சாக் கடை?

உங்கள் தோழியின் மன உறுதி inspiring. கொஞ்சம் பயமாகவும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இன்றைய புலம்பல் இத்துடன் முடிகிறது:))))))//


மிகவும் நியாயமான புலம்ப்ல்களே.

தண்ணீர் பிரச்சனைகளை நினைத்தாலே கண்ணீர் தான் வருகிற்து.

ஸ்ரீராம். said...

கஷ்டமாகவும் இருக்கிறது. பயமாகவும் இருக்கிறது. சென்னை என்றில்லாமல் எல்லா ஊர்களிலுமே இந்நிலைதான் ஆகிக் கொண்டு வருகிறது. தமிழ்நாடு குடிநீர் வாரியம் இன்னும் குறைந்த விலையில் தண்ணீர் தருவதாகச் செய்திகளில் படித்து எங்கள் பாசிட்டிவ் செய்திகளிலும் போட்டிருந்தோமே.. அதெல்லாம் வெறும் செய்திதானா? அப்படி அவர்கள் தருவதில்லையா?

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் அப்படியே செய்யலாம் துல்சிமா. உங்க கடை. என்ன வேணா செய்யலாம். ஆர்டர் போட்டாக் கொண்டுவந்து கொட்டிட
மாட்டாங்களா:)
தண்ணிர் கிணத்தில விட்டா பக்கத்துவீட்டுக்குப் போய் விடும்.நாம் கீழே சம்ப்'இல் நிரப்பிக் கொண்டு மேலே தொட்டியிலயும் பம்ப் செய்து ஏற்றவேண்டும். 1983ஆம் வருஷம் தண்ணீர் பற்றாக்குறை வந்த போது இதற்காகவே சிந்தெக்ஸ் தொட்டிகள் இரண்டு வாங்கி வைத்திருக்கிறோம்.

வல்லிசிம்ஹன் said...

அதுதான் ரமா. எங்க போறது. மகன் சோழிங்கநல்லூர் பக்கம் ஒரு வீடு பார்த்து விட்டு நல்ல வேளையாக விசாரித்த போது அங்கே தண்ணீரே கிடையாது.தினம் வாங்குகிறார்கள் என்று தெரிந்தது.:(

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி.
புலம்பாமல் என்ன செய்ய.
நாமாவது பரவாயில்லை. எங்கள் வீட்டில் உதவிக்கு இருக்கும் பெண் எங்கெங்கொ சென்று தண்ணிர் எடுத்துவருகிறாள்.அவர்களிடம் பால் வண்டி இருப்பதால் நிறைய குடங்களில் நிரப்பிக் கொண்டுவந்துவிடுகிறாள். இந்தச் சிரமம் தைமாதமே ஆரம்பித்துவிட்டது. வருண பகவான் தான் கருணை காட்டவேண்டும்.இந்த அழகில் நம் குழந்தைகள் வேறு வீட்டுக்கு வரும்போது தண்ணிர் இல்லாவிட்டால் இன்னும் சிரமம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கருணாகரன்.
சிந்தித்துச் செயல் படவேண்டியவர்கள் நாம் தான்.வேறு யாரைச் சொல்லி நோவது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் எதிராப்பில டீக்கடை. பக்கத்தில் பீட்சா உணவகம்.
அவர்கள் கீழே போடும் காகிதக் குப்பைகள். நடைபாதை நிறைய நிறுத்தும் பைக்குகள்.

நான் சொல்லும் அம்மா விட்டோடு ஆள் வைத்திருக்கிறார்.ஏழு தங்கைகள் அவருக்கு. யாராவது கூட வந்து தங்குவார்கள். வாயில் கதவைத் திறக்கவே மாட்டார். வீட்டுக்குள் இருக்கும் படிகள் வழியே வெளியே போவார். இருந்தாலும் வருத்தமாக இருக்கும். பாவம்.

வல்லிசிம்ஹன் said...

ஏதவது நல்ல சேதி வரணும் என்றால் மழைதான் கதி. யாருக்குமே உள்ளத்தில் ஈரம் இல்லை என்றால் மண்மாதாவும் வரண்டுவிடுகிறாள்.
கோபுசார்.
எல்லோருமே வெளிநாடு போய்விட முடியுமா.துபாயில் கடல்நீரே நந்நீராக மாறி வீட்டுக்கு வருகிறது.
அதுபோல இங்கேயும் செய்ய ஆரம்பித்தார்கள் என்ன ஆச்சு. ஒன்றும் இல்லை.

வல்லிசிம்ஹன் said...

நாங்கள் இன்னும் வாங்கவில்லை ஸ்ரீராம். வாங்கினவர்கள் சொன்னார்கள்.
வானொலிஎஃப் எம்மிலும் தினம் சொல்கிறார்கள். தொலைபேசினால் தண்ணீர் கொடுக்கிறோம்,

சிக்கனமாகச் செலவழியுங்கள் என்று.ச்சும்மாக் கொடுக்க மாட்டார்கள் விலை இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ராமலக்ஷ்மி. விபரீதம் புரியமல்,இல்லை அலட்சியமாக இப்படிச் செயல்பட்டால் என்ன நிலைமையாகும் என்று பயமாகிறது.
விளைநிலங்களே பார்க்க முடியத நாளும் வருமோ.:(

மாதேவி said...

பாண்டிபஜார் எல்லாம் உங்கள் வீட்டுக்குக் கிட்டே வருகின்றதா அடுத்த விசிட் உங்கவீட்டுக்குத்தான் எல்லோரும் கூட்டமாக உங்கள் வீட்டை மொய்க்கப் போகின்றோம் :)))

புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். :((

வெங்கட் நாகராஜ் said...

இப்படி இருக்கும் பல இடங்கள் வணிகமயமாகிக் கொண்டே வர, தண்ணீர் பஞ்சம் மட்டுமல்ல, எல்லாப் பஞ்சமும் தான்! :(

வல்லிசிம்ஹன் said...

இதற்காகவே நீங்கள் வீட்டிற்கு வரவேணும் மாதேவி.
லஸ்,எங்கள் வீடு இருக்கும் சாலை இவற்றில் சுற்றினால் திருமண வேலைகளைக் கூட முடிக்கலாம்:)

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் வெங்கட். ஏன் நிலம் நிலம் என்று அலைகிறார்கள்..
அரிசி 50 ரூபாய்.அடுத்தவருடம் 100 ரூபாய்க்குக் கூட போகலாம்.

sury Siva said...


நான் ஆள்வார்பேட்டை பக்கம் தண்ணீர் ரகம் அளவு பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
அங்கே என் நண்பர் டாக்டர் ஜெயசந்திரன் மருத்துவ அகம் டிரினிடி பக்கத்தில் ஒரு ஃப்ளாட் பழைய விலைக்கு
வந்தது. அதை வாங்கி அங்கே வந்துவிடலாம், இந்த வளசரவாக்கம் தண்ணீர் பிரச்னைக்கு தலை முழுகலாம்
என்று நினைத்தாலும் முடியவில்லை.

இங்கே க்ரௌன்டு வாடர் வான வில்லின் வர்ண ஜாலங்கள் உடன் வருகிறது. கருப்பு, மஞ்சள், பின்க் கலர்களில்.
இதைப்பார்த்துத் தான் என்ன ஒரு புதிய கலர் காம்பினேஷன் புதுசா வாங்கற புடவைக்கு சரியா இருக்கலாம் என்று
யோசிக்கலாம். டீம் வாடர் 20 லிட்டர் ஒன்று ரூபாய் 60 வாரத்திற்கு மூன்று. மாதத்திற்கு 12. கார்ப்பொரேஷன் வாடர்
அதற்கு ஆர்.ஓ. போட்டு சுத்தம் செய்வதற்கு வருட மைன்டினன்ஸ் ரூ 3500 . மாசத்திற்கு கிட்டத்தட்ட ரு 300. ஆக மொத்தம்
தண்ணீருக்கே மாதம் ரூ 1000 செலவு செய்கிறோம்.

என்ன செய்வது என்றே புரியவில்லை.
இதெல்லாம் யோசிச்சுண்டு இருந்தா இருக்கற நிம்மதியும் போயிடும் என்று
பெருமாளை சேவை செஞ்சுன்டு இந்த மோஹனத்தை கேட்டுண்டு, இருக்கலாம்
http://classicalmusicalapana.blogspot.in/?view=sidebar

சுப்பு தாத்தா.

Geetha Sambasivam said...

//தண்ணீர்(குடிநீர் வாரியம்) வரும் குழாயைன் மட்டத்தை இறக்கி

ஒருவீட்டுக்கு வரவேண்டிய தண்ணீரை இருமடங்காகப் பெருக்கினால் எங்கள் கதி என்ன.?//

சென்னை மாநரகம் மக்கள் குடியிருக்க லாயக்கற்றது என ஒரு தொலைக்காட்சியில் காட்டினார்கள். அவங்க காட்டின புள்ளி விபரத்தைப் பார்த்தால் தலை சுற்றல், தண்ணீர் சுத்தமான தண்ணீராக சென்னையில் எங்குமே கிடையாதாம். காற்று கேட்கவே வேண்டாம். ஓசைகள், ஓசைகள், காது செவிடு படும்படியான ஓசைகள், அடுத்துக் குப்பைகள், கடைசியாக நிலம் விற்கும் விலை. எல்லாரும் சென்னையில் என்னமோ கொட்டிக் கிடக்குனு அங்கேயே ஓடறாங்க. ஏன்னே புரியலை. இப்போ நீங்க எழுதவும் ஒவ்வொருத்தரும் அவங்க அவங்களோட நிலவரத்தைச் சொல்றாங்க. சென்னையில் இனி குடியேற்றம் என்பதைத் தடை செய்தால் தான் கொஞ்சமாவது விடிவு. :((((((((((

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுப்பு சார். ஏன் இங்க வர முடியவில்லை.
டாக்டர் ஜயச் சந்திரன் நல்ல பெயர் எடுத்தவர். தருமம்மிகு சென்னை மாறிவிட்டது.

பணம் பழங்கும் இடத்தில் தண்ணீர் குறையும் என்று மாமியார் சொல்வார். அதிரடியாக ஏதாவது நடவடிக்கைகள் எடுத்த்தால்தன் நிலமை சரியாகு,

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்கீதா,
எல்லோருக்கும் பொதுவான பிரச்சினை தானெ.
அதுதான மனக் குமுறல் அதிகமாக இருக்கிறது.
நீங்கள் சொல் வது போலச் சென்னைக்குக் குடியேறுவதை நிறுத்தணும்.

இராஜராஜேஸ்வரி said...

மழையின் அருமை வெய்யிலிலும் தாகத்திலும் தெரிகிறது.

malar balan said...

புலம்பல்களுக்கு விடிவு வருமா தெரியவில்லை இன்றை இயற்கை சூழ்நிலையில் பயமாகத்தான் இருக்கிறது சம்மர் வரும் போதேல்லாம்