About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Saturday, March 02, 2013

"புதுவாழ்வு"...எழுதியவர் ஸி.ஆர்.ராஜம்மா

வாழ்வு பிறக்கிறது.

அந்தக் காலத்தில் 40களிலிருந்து ஐம்பதுகள் வரை  சமூக அமைப்புகள்

எந்தவிதமாக    இயங்கி வந்து இருக்கின்றன என்று ஒரு மாதிரி
புலப்படுகிறது.

எண்பது சதவித நேர்மையும்   இருபது சதவிகித  அநீதிகளுமாக நடந்திருக்கவேண்டும். குடும்பக் கதைகளைப் படிக்கும் போது நேரே பார்ப்பது போல நினைக்கத் தோன்றுகிறது.
பழைய நினைவுகளைக் கிளறிவிடுகிறது.

நாராயணன்  23 வயது வாலிபன்.
தாயில்லாதவனை வளர்த்தது அன்பு மிக்க சித்தி,அப்பாவின் இரண்டாந்தாரம்.

அவள் மேல் அவ்வளவு பாசத்தோடு இருப்பவனுக்குத் தந்தை திருமணம் முடிக்க ஏற்பாடு செய்கிறார்.

சேந்தமங்கலத்தில்   பெண் பார்த்து மணமும் முடிகிறது.
பதினைந்து வயதே  ஆன பங்கஜம்   பக்குவப்படவில்லை.
பெரியவளானதும் உங்கள் வீட்டுக்கு அனுப்புகிறோம் என்று சொல்லி

விடுகிறார் அவள்  தாய்மாமன்.அவளை வளர்த்தவர்..
நாராயணனின் தந்தைக்கு வருத்தம். மணம் முடித்தும் மருமகள் வீட்டுக்கு
வரவில்லையே என்று.

நோய்வாய்ப்படுகிறார். ஆனால் சித்தியின் அன்பான கவனிப்பில்
தேறிவிடுகிறார்..

அதிசயத்திலும் அதிசயமாக அவர்களுக்கு   ஒரு குழந்தையும் பிறக்கிறது.
அழகான தம்பியிடம் நாராயணன் அன்பைச் சொரிகிறான்.

தம்பிக்கு மூன்று வயது இருக்கும் போது தந்தை மறைகிறார்.

அப்போது துக்கத்துக்கு வந்த  பங்கஜத்தின்மாமா
'மாப்பிள்ளையிடம் சொத்துக்களைப் பிரித்துக் கொண்டு தங்களோடு வந்துவிடுமாறு சொல்கிறார்.

உங்க சித்தி மனம் எப்படி மாறுமோ. பங்கு கேட்பாள்.
எதற்கும்  தமிழ் வருஷப்பிறப்பிற்கு  ஊருக்கு வாங்க  ன்னுட்டுப் போய்விடுகிறார்.
நாரயணனுக்கு மூக்கு மேல்  சினம் வந்தாலும் இளம் மனைவியைப் பார்க்கும் ஆர்வத்தில் .  வருவதாக ஒத்துக் கொள்கிறான்.
பங்கஜத்தின்   மாமா

கொஞ்சம் பேராசை பிடித்த ஆசாமி.

நாராயணன்  இந்தத் தடவை மனைவியைச் சந்திக்க முடிகிறது.
அவளோ  செழுமையான பூங்கொடியாகச் சுற்றி வருகிறாள்.
.
இவன் ஒன்றும் அறியாமல்,அவளைப் பார்க்கும் தருணத்தில் இன்னும் இங்கே ஏன் இருக்கிறாய்.எனக்கு நல்ல வேலை  ஆகிவிட்டது. என்னோடு கிளம்பி வா என அழைக்க,
அவள் கிளிப்பிள்ளை போல''நான் வரவில்லை. மாமா சொல்வது போலச் சொத்தைப் பிரித்துக் கொண்டு, வந்துவிடுங்கள்'என்று பார்க்கும் போதெல்லாம் சொல்கிறாள்.

இவன் வருத்தமும் சினமும் மேலிட இனி  உங்களுக்கும் எனக்கும் பந்தம் இல்லை,என்று சட்டென்று கிளம்பி வந்துவிடுகிறான்.
மருமகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சிற்றன்னை,
தன் மகனின் துயரம் கண்டு   வருந்தியே உயிர் விடுகிறாள்.

அதற்குப் பிறகு அந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல்
நிலபுலன்களைக் குத்தகைக்கு விட்டுவிட்டு,வீட்டை விற்றுப் பணத்தையும் எடுத்துக் கொண்டு  தான் வேலை  செய்யும் சென்னைக்கே,
குட்டித் தம்பியுடன் வந்துவிடுகிறான். இரண்டு வருடங்கள் கழிகின்றன.
தம்பியை அருகில் உள்ளப் பாடசாலையில் முதல் வகுப்பில் சேர்க்கிறான்.


நன்றாகச் சமைக்கக் கற்றுக் கொண்டுத் தானும் உண்டு
குழந்தைக்குச் சாதம் ஊட்டி,அன்பாக வளர்த்து வருகிறான்.

பக்கத்துவீட்டுப் பாட்டி இந்தக் குழந்தையை,நாராயணன் வேலையிலிருந்து வரும் வரை பார்த்துக் கொள்கிறாள்.
ஒரு சனிக்கிழமை  .அடுத்தநாள் வருடப் பிறப்பு.
அண்ணா பாயசம் செய்து தரயா. மணி எல்லாம் சாப்பிடுவானாம் நாளைக்கு என்கிறது    பையன்.
அதுக்கென்னடா நாம ஓட்டலுக்குப் போய் ஜம் ஜம்னு சாப்பிடலாம்
என்று தம்பியை அணைக்கும் போது குழந்தை முகம் சிணுங்குகிறது.
 குழந்தைக்கு  அவசரமில்லாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டலாம்   என்று   அவனை அழைத்துச்   சட்டையைக் கழட்டுகிறவன்  திடுக்கிறான்.
குழந்தையின் முதுகில்  பழுப்பு நிறத்தில் கோடு போலத் தெரிகிறது  காயம்.
ஏதடா  இது ,யார் உன்னை அடித்தது
என்று  கேட்கிறான்.
குழந்தை       மென்று முழுங்கியபடி  டீச்சர்தான் அடித்தார் அண்ணா
என்கிறான்.  அவ்வளவுதான்!!
ஆஹா  குழந்தை முதுகில் கைவைக்கப் போச்சா?

இதோ உடனே  பள்ளித் தலைமை ஆசிரியரிடம் போய்  அவளை உண்டு இல்லை என்று செய்கிறேன் பார்.
என்றபடி தன் சட்டையை மாட்டிக் கொள்கிறான்.

டீச்சர் நல்ல டீச்சர் அண்ணா. ஒண்ணும் பண்ணாதே  என்று கெஞ்சுகிறது குழந்தை.
ஏன் நீ என்ன செய்தாய் இத்தனை அடிப்பதற்கு?
ஒரு பையனோட புது பென்சிலை எடுத்தேன் அண்ணா.
அதுக்கு இப்படி அடிப்பதா
இல்லை இரண்டாந்தரமும் எடுத்து ஒளித்து வைத்தேன்'

என்ன இருந்தாலும் அவள் உன்னை அடித்திருக்கக் கூடாது.
நீ வா அந்த டீச்சர் வீட்டுக்கே போகலாம். தெரியுமா இடம்?
ஓ.தெரியுமே பக்கத்துவீட்டு    பாலு  கணக்குக்  கத்துக்கொள்ள டீச்சர் வீட்டுப் போவான். நானும்போயிருக்கேன்.

நாராயணனின் முகம்  சுருங்கியது. என்ன வெல்லாம் எனக்குத் தெரியாமல் இந்தக்  குழந்தை பண்ணுகிறானோ  என்று யோசிக்கும் போதே டீச்சர் வீடு வருகிறது.


ஒரு வீட்டின்   பல குடித்தனங்களுக்கு நடுவே
ஒரு சிறிய பகுதியைத் தம்பி காண்பித்ததும்
புயலாக    உள்ளெ நுழைகிறான்.
திடுக்கிட்டு எழுந்திருகிறாள்    ஒரு இருபது வயதுப் பெண்.
இப்போது நாராயணன்  முறை  அவளைப் பார்த்து வெறிக்கிறான்.
பங்கஜம்!
இவள் எங்கே இங்க வந்தாள்
என்று நினைத்தபடி ஏன் குழந்தையை இப்படி அடித்தாய்
என்  தம்பி என்றதாலா?
என்று கேள்விகளை வீசுகிறான்.

அவள் அவன் இருக்க ஒரு நாற்காலியைப்  போட்டுவிட்டு
வா கண்ணா  என்று குழந்தையை அழைக்கிறாள்.

அவனும் அவள் புடவையோடு ஒட்டிக் கொள்கிறான்.

இன்னும் கோபமடையும் நாராயணன்  ஏன் அடித்தாய். பிஞ்சு முதுகு பிளந்து போயிருக்கும்.!!

முதலில் நான் சொல்வதைக் கேளுங்கள்.
அவன் தவறு என்று தெரிந்தே செய்தான். மெதுவாகத் தான் அடிக்க நினைத்தேன்.
பலமாகப் பட்டு விட்டது.
கண்ணா வலிக்கிறதா.   என்றபடி குழந்தையை  அணைத்துக் கொள்கிறாள்.

நான் இந்த ஊருக்கு இரண்டு மாதங்கள் முன்னால்தான் வந்தேன்.
நீங்களும் இங்கே இருப்பீர்கள் என்று தெரியாது.......''

''என்ன ஆச்சு உங்க மாமா மாமிக்கு.''

அவர்கள் செய்கை பிடிக்காமல் தான் தனியே ஹாஸ்டலில் இருந்து படித்துப் பிறகு இந்த ஆசிரியைத் தொழிலில் சேர்ந்தேன்.

அவர்களுக்கு ஏகப்பட்ட கடன்.
என்னை மிகவும் தொந்தரவு செய்து  உருவேற்றி  உங்களிடம்  ஒப்பிக்கச் சொன்னதை அப்படியே உங்களிடம் சொன்னேன்.

இப்போதுதான்  நான் செய்த தவறை உணர்கிறேன்.
என்னை மன்னியுங்கள் என்று மெதுவாகச் சொல்கிறாள்.
இப்போதும் அவர்களுக்கு என் சம்பாத்தியத்தில் ஒரு பங்கை அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறேன்   என்றும் சொன்னாள்.

குழம்பியபடியே வீடு திரும்பும் நாராயணன் பழையதையெல்லாம் யோசிக்கிறான்.
அடுத்தநாள் புத்தாண்டாக துன்முகி பிறக்கிறது.மன்மத வருடம் முடிகிறது.

சற்றுத் தாமதமாக எழுந்திருக்கும்   கண்ணனின்  காதில் அண்ணாவும் இன்னோருவரும் சிரிக்கும் ஓசை கேட்கிறது.
டீச்சர்  என்று விளித்தபடி  ஹாலுக்கு ஓடிவருகிறான்.
அங்கே நின்று பேசிக்கொண்டிருக்கும் டீச்சரைப் பார்த்து  ஆச்சரியப்
படுகிறான்.

இங்கே வா கண்ணா என்கிறாள்  அவள். அண்ணாவைத் திரும்பிப் பார்க்கும்
கண்ணனிடன்
நாராயணன் இனிமேல் இது மன்னி டா. டீச்சர் இல்லை. என்று சிரிக்கிறான்.
கண்ணனுக்கு உறவு புரியாவிட்டாலும் பிடித்திருக்கிறது.
மன்னி பால் பாயசம் செய்கிறாயா என்றபடி அவளை அணைத்துக் கொள்கிறான்.
அவளும் அவனைக் கட்டி அணைத்து நிறையச் செய்து தருகிறேனடா
'என்று முடிக்கிறாள்.
கொஞ்சம்  நீண்ட கதைதான். நேற்று ஆரம்பித்து இன்று முடிக்க முடிந்தது.
சி.ஆர்.ராஜம்மாவின் கதைகள் எனக்கு மிகவும்    விருப்பம்.

.

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

30 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அண்ணாவைத் திரும்பிப் பார்க்கும்
கண்ணனிடன் நாராயணன் "இனிமேல் இது மன்னி டா. டீச்சர் இல்லை" என்று சிரிக்கிறான்.

கண்ணனுக்கு உறவு புரியாவிட்டாலும் பிடித்திருக்கிறது.

"மன்னி பால் பாயசம் செய்கிறாயா" என்றபடி அவளை அணைத்துக் கொள்கிறான்.

அவளும் அவனைக் கட்டி அணைத்து "நிறையச் செய்து தருகிறேனடா"
என்று முடிக்கிறாள். //

அருமையான கதை. பால் பாயஸம் சாப்பிட்டது பொன்றதோர் நிறைவு.

பகிர்வுக்கு நன்றிகள்.

RAMVI said...

//எண்பது சதவித நேர்மையும் இருபது சதவிகித அநீதிகளுமாக நடந்திருக்கவேண்டும்//

இப்பொழுது அப்படியே மாறி போய்விட்டதோ என்று தோன்றுகிறது.

மிகவும் நல்ல கதை. கணவன் மனைவி ஒன்று சேர்ந்து நல்ல விதமாக முடிவது மனதுக்கு சந்தோஷமாக இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

அடடா. இப்போதுதான் பப்ளிஷ் பண்ணினேன்.
முதல் பின்னூட்டமே அருமையாகக் கொடுத்துவிட்டீர்கள் கோபு ஜி.

எவ்வளவோ சுருக்கிவிட்டேன். சற்றே நீண்ட கதை.
நல்ல குடும்பக் கதை. அதற்கேற்ற ஓவியம்.

ஸி.ஆர்.ராஜம்மா என்பவர் எபடி இருப்பார் என்று கூடத் தெரியாது. ஆனால் கதைகளை எங்கே பார்த்தாலும் படித்துவிடுவேன். இந்தப் புத்தகத்திலும் பார்த்தது மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்தது.
மிக நன்றி.ஜி.

கோமதி அரசு said...

கதை நன்றாக இருக்கிறது. அந்தக் காலத்தில் சித்தி என்றால் கொடுமைக்காரி என்பதை மாற்றிய கதை .

அன்பே வடிவான சித்தி, சிற்றன்னையின் மகனிடம் சொந்த தம்பியாக பாசம் வைக்கும் அண்ணன் . கணவனின் அனபை புரிந்து கொள்ளாத (பக்குவம் வராத) மனைவி, பின் அதற்கு வருந்தி தன் கணவனிடம் சேர்ந்து குட்டி கொழுந்தனுக்கு பால் பாயஸம் செய்துக் கொடுத்து கதையை நிறைவாய் இனிப்பாய் முடித்த ஸி.ஆர் ராஜம்மாகதை அருமை.

கதையை அழகாய் சுருக்கி அதன் அழகு கெட்டுவிடாமல் கொடுத்த உங்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள் அக்கா.

அப்பாதுரை said...

எளிமையான இனிமையான கதை. அழகாக அளவாக சுருக்கியது படிக்க சுவாரசியமாக இருக்கிறது. ராஜம்மா கதைகள் ஒன்றிரண்டு படித்திருக்கிறேன். அவர் சமகால எழுத்தெல்லாம் நீளம் என்று தோன்றியதுண்டு. சுஜாதாவுக்கு முன் சுஜாதாவுக்குப் பின் என்று நினைத்ததுண்டு. இப்போது கொஞ்சம் உணர்ந்து திருந்தியிருக்கிறேன் :)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ரமா.
எத்தனை ட்விஸ்ட் ஒரு கதையில்!!!
பாங்காக எழுதி,
பாசிடிவாக முடித்திருக்கிறார்கள்.
இப்பொழுதும் இதுபோலக் கதைகள் வராதா என்று ஆசையாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

சித்தி சந்தானலக்ஷ்மி அருமையாக அந்தக் குடும்பத்தை முன்னுக்குக் கொண்டுவருகிறாள்.

நேர்மையாக வளர்ந்த பிள்ளையாக இருப்பதால்தான் நாராயணனுக்கும் பெண்டாட்டியை விட்டு வரமுடிந்தது.

காலமும் கூடிவரக் கதையை இனிமையாக முடித்திருக்கிறார் ராஜம்மா.
இந்த நுணுக்கங்களை கச்சிதமாகக் கவனித்திருக்கிறீர்கள் கோமதி.அழகான பின்னூட்டம்.நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் துரை.
எங்களுக்கும் சுஜாதா என்கிற மாற்றுப் புயல் கவர்ச்சியாகத் தான் இருந்தது. இப்பொழுதும் அவர்கதைகளை மீண்டும் படிக்கும் போது விதவிதமான உணர்வுகள்.
இந்தப் பழைய புத்தகத்தில் இருக்கும் கதைகளில் மாயம் இருக்காது. யதார்த்தம் நிறைய இருக்கும்.மனதில் தங்கும். பழைய புத்தகங்கள் விற்கும் கடைகளுக்குப் போய்த் தேட ஆசையாக இருக்கிறது:)

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான நல்ல கதை... ...ம்... இப்போதெல்லாம் எங்கே இது போல்...?

ஸ்ரீராம். said...

மறுபடியும் அழகான பகிர்வு. நல்ல கதை.

மாதேவி said...

கதையை சுவையாக சொல்லியுள்ளீர்கள்.

ராமலக்ஷ்மி said...

வாசித்த கதையை நீங்கள் சொல்ல நாங்கள் சுற்றியிருந்து கேட்டது போல் ஒரு உணர்வு. உங்கள் நடையில் மிக அழகாக விவரித்துள்ளீர்கள். நல்ல கதை. அருமையான பகிர்வு.

ராமலக்ஷ்மி said...

சித்திரமும் அருமை:)!

Ranjani Narayanan said...

அந்தக் காலக் கதைகளில் எல்லோருமே நல்லவர்கள்தான். கொஞ்சம் கெட்டவர்கள் போலத் தெரிந்தாலும் அந்தச் சூழ்நிலையில் மட்டுமே கெட்டர்வர்களாக இருப்பார்கள். பிறகு திருந்தி விடுவார்கள். படிக்க மிகவும் இதமானதாக எல்லாக் கதைகளும் இருக்கும்.

நாராயணன், பங்கஜத்தை சந்திக்கும் இடம் நல்ல திருப்பம்.

கதையை சுவையாக சுருக்கி சொல்லியிருக்கிறீர்கள் வல்லி, பாராட்டுக்கள்!

sury Siva said...

கண்ணன் தம்பி இல்லை.
தங்கக் கம்பி.

எப்படி அண்ணாவையும் மன்னியையும் சேத்து வைத்து இருக்கிறான் பாருங்கள்.

இப்போ இருக்கற ப்ராதாக்கள் எல்லாமே பிரிச்சு போடரதுலே தான் சதுரர்கள்.

பங்கஜம் நாராயணன் இப்ப இருந்தா நூறு வயசுக்கு மேல் இருக்குமே ....
இருந்தா போய் ஒரு நமஸ்காரம் பண்ணனும்.


சுப்பு தாத்தா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தனபாலன். நல்லவைகளைச் சொல்வது என்பது எழுதப் படாத இலக்கணமாக அப்போது இருந்திருக்கணும். பிறகு பத்திரிக்கை விற்க பல உத்திகளைக் கையாண்டு வேறு விதமாகக் கதைகள் வர ஆரம்பித்தன..மீண்டும் பழைய கதைகள் படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது என் அதிர்ஷ்டம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் நல்ல உணர்ச்சிகளைச் சொல்ல வரும்போது கதைகளும் வளம் பெறுகின்றன.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி எவ்வளவோ நம் வாழ்வில் நடை பெறுகின்றன. அவைகளில் நல்ல வற்றை மட்டும் பிரதி பலிக்கும்போது நல்ல வாசிப்பு கிடைக்கிறது என்று நம்புகிறேன்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,மிக மிக நன்றி மா.
ச்சும்மாவா!!திருமணமாகிப் புகுந்த வீடு வந்தபோது குட்டீஸ் நான்கு இருந்தன. நாத்தனார்களின் குழந்தைகள். அவர்களுக்கு மாமி கிட்டக் க்தை கேட்கணும். நாமு, இராஜகுமாரன்,சாகலேட் மரம்,ஐஸ்க்ரீம் மலை என்று கதை அளப்பேன். இப்போது அவர்களுக்கெல்லாம் 50 வயது:)
அந்தப் பழக்கம் தான் இது என்று நினைக்கிறேன்.சித்திரம் வரைந்தது ஸாரதி என்பவர்.

அமைதிச்சாரல் said...

இப்ப இதுமாதிரியெல்லாம் கதை வர மாட்டேங்குதேன்னு ஏக்கமாயிருக்கு வல்லிம்மா.

உங்க புண்ணியத்தில் பழங்கதைகளை ஒரு பிடி பிடிச்சிட்டிருக்கோம். இதுவும் விருந்துதானே. கதை விருந்து :-))

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரஞ்சனி,
கதையின் சாராம்சம் நன்றாக இருந்தல் சொல்வதும் ரசமாக இருக்கும் இல்லையாமா.
இனிதான் இடங்களையும் சுருக்கிவிட்டேன். பதிவு நீண்டால் தொடரும் போட வேண்டிவரும்.:)
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சாரல். இன்னும் இரண்டு மூன்று கதைகள் இருக்கின்றன. படு சோகமாய் இருந்தால் பதிய மாட்டேன்:)

நானும் எதிர்பாராத திருப்பம் கணவன் மனைவி சந்திப்பது.
இனிப்பாக கதையை பூர்த்தி செய்திருக்கிறார் திருமதி ராஜம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுப்பு அண்ணா.

வாழ்க்கையை நடத்தும் நேர்மையை அண்ணனிடமிருந்து அந்தப் பிள்ளை கற்றுக் கொள்கிறது.
இந்தக் காலம் அப்படி இல்லைதான்.
அண்ணன் தம்பிகள் தானே பிரியாவிட்டாலும் சேராமலிருக்க எத்தனையோ நபர்கள் முயற்சிப்பார்கள். நாம் ராமா கிருஷ்ணா என்றிருக்கலாம்.

Geetha Sambasivam said...

//எண்பது சதவித நேர்மையும் இருபது சதவிகித அநீதிகளுமாக நடந்திருக்கவேண்டும்//

இப்போ 100% அநீதிகளாக இருக்கின்றன. :(( என்ன செய்யறது. இந்தக் கதையில் வந்திருப்பது போன்ற சித்திகளை, (அதாவது தகப்பனின் இரண்டாவது மனைவிகள் மூத்தாளின் குழந்தைகளைச் சொந்தம் போல் நடத்துவது) நேரிலேயே பார்த்திருக்கிறேன். இப்போவும் அம்பத்தூரிலேயே ஒரு சித்தி இருக்கிறார். அவர் சொந்தப் பிள்ளையிருந்தாலும் மூத்தாள் பிள்ளையிடம் தான் இருக்கிறார். அவங்களும் அருமையாப்பார்த்துக்கறாங்க.:)))))

Geetha Sambasivam said...

அப்பாதுரை, வை.மு.கோ. மட்டும் படித்தால் போதாது. வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியாரையும் படியுங்கள். பிரதாப முதலியார் சரித்திரம் படிச்சிருக்கீங்க தானே? வடுவூரின் திகம்பர சாமியார் கதை தான் அறிவாளி திரைப்படமாக வந்தது என என் அம்மா சொல்வார். அறிவாளி நான் பார்த்தது இல்லை. ஜிவாஜி படம்! :)))))

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா. எனக்கும் அதுபோலச் சித்திகளைத் தெரியும்.
வேற யாராவது சொல்லும் வரை நமக்குத் தெரியக் கூடத் தெரியாது. மாற்றுச் சித்திகளையும் பார்த்திருக்கிறேன்.வந்தபிறகு
நேர்மை படும் பாட்டையும் வரிகட்டப் போனபோது பார்த்துவிட்டேன்:)

கோவை2தில்லி said...

அழகான கதை. சுருக்கி அருமையா தந்திருக்கீங்கம்மா. சித்தி நல்லவளாய் இருப்பதே ஆச்சரியமாக உள்ளது...

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான். ஆதி. நல்லவங்களும் தான் இருக்காங்க. அவங்க அம்மா வா சித்தியா இருக்காங்க. பிள்ளைகளைக் கவனிப்பதில் பாசம் காட்டுவதில் கருத்தாக இருந்தால் எந்தப் பெண்ணும் அம்மாதான்.அதைத்தான் இந்தக் கதையில் சொல்லவருகிறார் என்று தோன்றுகிறது.

இராஜராஜேஸ்வரி said...

வித்தியாசமான அருமையான கதைப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..