Blog Archive

Thursday, March 28, 2013

ரகசியம் முடிகிறது.பாடு பட்டால் பயனுண்டு


அப்பா  எப்போ வெளில போகலாம்?
இப்படி சந்தோஷமாகப் போஸ் கொடுக்கக் கூடாது மா.:)(ஹிட்ச்காக் புத்திமதி)
ஆம்ப்ரோஸ் தெரு எங்கே இருக்கிறது?
Add caption
சொல்லாதே யரும் கேட்டால்..ஹிட்ச்காக்
சொன்ன ரகசியம் என்ன?
பென்னும் ,ஜோவும் நம்பிய ப்ரிட்டிஷ் மக்களெ மகனைக் கடத்தி இருக்கிறார்கள் என்பது ஒரு அதிர்ச்சி,. இத்தனை முக்கியமான சங்கதியை

ஆங்கில அரசாங்கத்துக்குத் தெரிவிக்க வேண்டிய   அவசிய,.
இருவரும் இங்கிலாந்திற்கு விரைந்து
ஸ்காட்லாண்ட்  யார்டில் செய்தியைச் சொல்லி விடுகிறார்கள் இதனால் மகனுக்கு  ஏதாவது ஆகுமோ என்ற வருத்தம் வேறு.

இதற்கிடையில் ஸ்காட்லண்ட் ஏஜந்த் பென்னிடம் அவர்கள் பையனைப் பிடித்துவைத்திருக்கும்

ட்ரேய்டன் தம்பதியர் ஆம்ப்ரோஸ் தெரு சர்ச்சில் பாதிரியாரக இருப்பதாகச் சொல்லுகிறார்.
அவசரமாக  ஆம்ப்ரோஸ்  தெரு  சாப்பலுக்கு விரையும் டாக்டர் பெஞ்சமினை  அந்த பாதிரியார் உருவிலிருக்கும்  ட்ரேட்டன் ,பென்னைத் தாக்கிவிட்டு  சர்ச்சின்  ஆர்கன் பள்ளத்தில் போட்டுவிட்டு  தப்பிக்கிறான்.
கணவனைத் தேடி அங்கே வரும் ஜோ அவரைக் காணாமல் போலீசின் உதவியை நாடுகிறாள்.
அவர்கள் அனைவரும்    ஆல்பர்ட் ஹாலுக்கு விரைந்து இருப்பதை அறிந்து அங்கே ஓடுகிறாள். அங்கே தான் அந்த மர்மம் உடையப் போகிறது.


அயல் நாட்டுப் பிரதமர் கொல்லப்படப் போகிறார்.
அந்தச் சதிகாரர்களின் கையில் தான் தன் மகன் மாட்டி இருக்கிறான் என்று தெரிந்து துடித்துப் போகிறாள்.

இதற்குள் சர்ச்சில் சுயநினைவு பெற்ற பென்னும் கச்சேரி நடக்கும் இடத்துக்கு வந்து கொலைகாரனைத் தேடுகிறார்.

அதுவோ பெரிய இடம்.
  விரைவாக  ப்ரைவேட்  பாக்ஸஸ்  அமைந்திருக்கும் இடத்தில் உட்கார்ந்திருகும்  பிரதமமந்திரியைக் கண்டுபிடித்து அங்கெ இருக்கும் வெல்வெட் திரை பின்னால் ஒளிந்து கவனிக்கும் போதுதான்
அந்தக் கொலைகாரன் அவர் கண்ணில் பட்டுவிடுகிறான்.

அதற்குள் கச்சேரி ஆரம்பித்துவிடுகிறது.

கொலைகாரகளின் திட்டம்  கடைசியாக அந்த சிம்பல் ஒலிக்கும் சத்தத்தில் பிரதமமந்திரியைச் சுட்டால்
சத்தம் வெளியே கேட்காது என்பதே.

இந்தச் செய்தியை மனைவிக்கு  அவசர செய்தியாக அனுப்புகிறார் பென்.
அவளும் மனம் படபடக்கக் க் காத்திருக்கிறாள்.

பாட்டு  முடியும் நேரம்  அந்தப் பெரிய சிம்பல்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதற்கு முன் ரத்தம் உறையவைக்கும் விதத்தில் ஒரு ஹைபிட்ச்  அலறலை(  SCREAM) வெளியிடுகிறாள்.
இதனால் நிலைகுலைந்த கொலைகாரன் தப்பாகச் சுட்டுவைக்க,பிரதமர் தப்பிக்கிறார்.
சரியாகக் காத்திருக்கும் பென்  எ  ரியல் ஹீரோவாக அவனுடன்  சண்டை போட அவன் கை துப்பாக்கி வெடித்து  அவனே மடிகிறான்.


அயல்நாட்டுப் பிரதமர்  பெஞ்சமினையும் அவர் மனைவி ஜோவையும் வெகுவாகப் பாராட்டி விருந்துவைக்கிறார்.
அந்த மாளிகையின் ஒரு அறையில் தான் அவர்களது மகன்  சிறையிருக்கிறான்.


ஜோ மெக்கென்னா ஒரு  நல்ல பாடகி. பிள்ளையோடு விளையாடும்போது எப்போதும் அவனுக்குப் பிடித்த பாடல் ஒன்றைப் பாடுவாள்.

பிரதமர் அவளைப் பாடச் சொன்னதும் அதே பாடலைத் தொண்டை அடைக்கக் கண்ணில் நீர் வரப் பாடுகிறாள்.
ஹான்க் கைப் பிடித்துவைத்திருக்கும் தம்பதியரில் மனைவிக்கு அவனை வருத்துவதில் இஷ்டமில்லை.

பாடல்  இசை  மிதந்து மேலே வரும்போது ஹான்க்  விழித்துக் கொள்கிறான்.


உடனே கொலைத்திட்டம் இட்ட  கணவனின்  சைகையையும் பொருட்படுத்தாமல்  ஹான்க் ஐ  விசில்  மூலம் பதில் அனுப்பச் சொல்கிறாள்.

  தன்சக்தியெல்லாம் சேர்த்து விசில் அடிக்கிறான்  ஹான்க்.
அதற்குள் தப்பி  ஓட முயற்சிக்கிறார்கள் இந்தத் தம்பதியர்.
சரியான நேரத்தில் விசிலைப் பின்பற்றி  மாடி அறைக்கு வரும் பென் கதவை உடைத்து உள்ளே புகுகிறார்.

தங்களைப் பிடித்தால் ஹான்கைச் சுட்டுவிடுவதாக
மிரட்டுகிறான்  ப்ரிட்டிஷ் வேஷமிட்ட   அந்நிய உளவாளி.

அவன் துப்பாக்கியைத் தட்டிவிட்ட மனைவி தப்பிக்கும் வழியை நோக்கி ஓடுகிறாள்.

அதற்குள் ஸ்காட்லாண்ட் யார்ட் வந்துவிடுவதால்

மேலும்   ரத்தம் சிந்தாமல் முடிகிறது.
இது நான் சேலத்தில் இருந்தபோது 1968இல்   பார்த்த  படம்.

பெயர்கள் எல்லாம் கூகிளிலிருந்து எடுத்துக் கொண்டேன்
நிறைய தவறுகள் இருக்கலாம்.

இந்தக் கதையின் படத்தின் சிறந்த அம்சமே, இந்த அமெரிக்க
தம்பதியர் தங்களுடன் உதவிக்கு வந்தவர்களுக்குக் கூட  தங்கள் பிள்ளைக் காணாமல் போன விஷயத்தைச் சொல்லாமல் இருவருமாகப் போராடுவதுதான்.

அத்தனை பயத்தில் இருப்பது  படம் முழுவதும் விரவி இருக்கும்.
அற்புதமான படம்.

ஆங்கிலப் படங்களுக்கு என்னை அறிமுகப் படுத்திய என் சிங்கத்துக்கு மிக நன்றி.

முதலில் பதிந்திருக்கும் பாடலையும் கேளுங்கள்.
நன்றி,.







 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Wednesday, March 27, 2013

The man Who knew too much/ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கின் த்ரில்லர்

கச்சேரி நடைபெறும் ஆல்பர்ட் ஹால் லண்டன்
மெதுவாக மாடியை நோக்கி நகரும் ஜிம்
எங்கே  இருக்கிறாய் மகனே  '  ஜோ  பாடும் பாடல்
இதுதான் அந்த ரகசியம்.
என்ன செய்வது இப்போது?



 ட்ரெய்லர்   :

http://www.amazon.com/The-Man-Who-Knew-Much/dp/B002H3J3AG
போஸ்டர்



அமெரிக்க தம்பதியர் டாக்டர் பென்ஜமின்  மெக்கென்னா,அவர் மனைவி  ஜோ மெக்கேனா,அவர்கள் மகன் ஹான்க்
அனைவரும் பாரீஸுக்கு ஒரு மருத்துவ சம்பந்தமான  கருத்தாய்வுக்கு வருகிறார்கள்.
அங்கிருந்து மொராக்கொ  நகருக்கு ஒரு   சுற்றுலா  போகலாம் என்று மொராக்கேஷ் நகருக்கு வந்து சேருகின்றனர்.


அங்கே எல்லாமே  வித்தியாசமாகத் தெரிகிறது. அந்நிய தேசத்தைப் பார்க்கும் ஆவலில்
சுற்றிவருகிறார்கள்.
அப்பொழுது பென் என்னும் ஃப்ரென்ச் ஆள் டாக்டரை
 உணவுவிடுதியில் சந்தித்துப் பேசுகிறான்.
டாக்டரின் மனைவிக்கு ஏதோ சந்தேகம் தோன்றுகிறது.
அங்கிருந்து மொராக்கன் கடைவீதியில்  நடந்து கொண்டிருக்கும் போது

ஒரு பரபரப்பு. யாரொ துரத்த ஒரு அரபிய  உடையணிந்த மனிதன் டாக்டர் மேல்
மோதுகிறான்.
அவன்  டாக்டரின் காதில் ஏதோ  முணுமுணுத்தபடி நினைவிழக்கிறான்.
டாக்டர் அதிர்ச்சியுடன்  தன்சட்டையில் படியும் இரத்ததைப் பார்க்கிறார்.
மகன் ஹான்க்கும்,மனைவி ஜோவும் அலறுகிறார்கள்.

போலீஸ் வருகிறது.அவர்கள் டாக்டர் பென் னை விசாரிக்க அழைக்க,
ஜோவும் கூடப் போகிறாள்.  தனியே விடப் படும் ஹான்கைப் பக்கத்தில் இருக்கு ப்ரிடிஷ் தம்பதிகள் தங்கள் விடுதிக்கு
அழைத்துச் செல்வதாகச் சொல்கிறார்கள்.
அங்கிருந்து சஸ்பென்ஸ் ஆரம்பிக்கிறது.
போலீஸிடம் நடந்ததைச் சொல்லும் பென்,அந்த அரபு உடையணிந்த பெர்னார்ட்
ஒரு பிரான்ஸ் நாட்டு  உளவளி என்று அறிகிறார்.
அவர் சொன்ன ரகசியத்தை மனதில் பூட்டியபடி  இருவரும் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்தால் அங்கே இன்னோரு அதிர்ச்சி.
பையனைக் காணவில்லை.

தாங்கள் பையனைக் கடைத்திக் கொண்டு போவதாகவும்  பெஞ்ஜமின் தெரிந்து கொண்ட ரகசியத்தை
வெளியே சொன்னால் அவன் உயிருக்கு ஆபத்து என்றும் கடிதம் கிடைக்கிறது..

அவர்கள்   இங்கிலாந்திற்குச் சென்று விட்டதையும்    அறிந்ததும் அவர்களும் இங்கிலாந்துக்குப் புறப்படுகிறார்கள்.
அங்கேதான் அவர்கள் அறிந்த    ரகசியம் நிறைவேறப் போகிறது.அதைத் தடுக்க  அவர்களும்   அங்கே போகவேண்டும்.
பிள்ளையைப் பிரிந்த  துயரம் சேர ஜோ  உடைந்து போகிறாள்.

பென்,மகனை   எப்படியாவது காப்பாற்றி மீட்டுவிடலாம் என்று ஆறுதல் சொல்கிறார்.
இருவரும்  லண்டனை வந்தடைகிறார்கள்.
அடுத்த பகுதி   அடுத்த பதிவு.
எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாமா.



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Tuesday, March 26, 2013

பங்குனிக் காட்சிகள்

பதிமூன்றாம் நாள் நிலா
Add caption
Add caption
அழகாய்க் காத்திருக்கும் செம்பருத்தி
அதே மரத்தின் உதிரப் போகும் இலை
கள்ளிச்செடியின் மலர்கள்
நாக்கை நீட்டுகிறது இந்த   மலர் தாகமோ 
இதுவும் காக்டஸ் மலர்தான்
நம்வீட்டு  ஆர்க்கிட்  மலர்

Add caption


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Sunday, March 24, 2013

காஸ்லைட் 1944 த்ரில்லர்

உனக்கு மனப்பிரமை  பயப்படாதே!
ஒரு விளக்கு எரியவில்லையே
விருந்துக்குச் செல்லும் புதுமண தம்பதியர்
காஸ்லைட் 1944  போஸ்டர்
கேள்வி கேட்டு  மனம் சலிக்கும் இங்க்ரிட்
கணவனுக்கும் டிடெக்டிவ்க்கும் நடுவில் குழம்பும்   மனைவி
கணவனைச் சந்தேகிக்க ஆரம்பிக்கும்   இங்க்ரிட்(Paula)



   தோழி   ஒருவர் படங்கள் பற்றிப்  பேசும்பொழுது பழைய கறுப்பு வெள்ளைப் படங்களைப் பற்றிப் பேசினோம்.

அதன் பலனாகப் பழைய   டர்னர் க்ளாஸிக் மூவீஸில் வந்த படங்களை ஆய்ந்தேன்.

முக்கால்வாசிப் பழைய படங்கள் மியூசிக்கலாகவோ, காதல் இவைகளை அடிப்படையாக வந்திருந்தாலும்
சில  ஹாரர்,சில த்ரில்லர்  என்ற வகையில் வந்திருந்தன.
ஹிட்ச்காக்கின் சைக்கோ, பறவைகள், த மேன் ஹூ நியூ டூ மச்,(கே  சரா  சரா) பாட்டு வருமே).
சைக்கோ  வின்  பயங்கரம்,இதில் சிறிதே குறைவு.
ஆனால் படபடப்பு  குறையாமல் படம் போகும்.

Paula  வின் அத்தை  ஒரு ஓபரா  பாடகி.
லண்டனில் அவளுடைய நகைகளைத் திருட வந்தவன் அவளைக் கொன்றுவிடுகிறான். நகைகள் கிடைக்காமலேயே ஓடிவிடுகிறான்.
இதைக் கண்முன்னால் கண்ட  சிறுமி
பாலாவின்  அதிர்ச்சி அளவற்றுப் போகிறது.
அவளை இத்தாலிக்கு   மனக்கலவரத்திலிருந்து விடுபடவும்

இசை கற்கவும்   அனுப்பப்படுகிறாள்.

அங்கு ஒரு  அழகிய பெண்ணாக வளருபவள்    க்ரிகாரி  என்பவரைப் பார்த்துக் காதல் வசப் படுகிறாள்.

இருவரும் மணம் முடித்து இங்கிலாந்துக்கே திரும்பலாம் என்று
Gரிகாரி  சொல்ல Pஆலா  பயப் படுகிறாள்.

அவளைச் சமாதான்ப்படுத்தி அத்தையின் லண்டன் வீட்டுக்கேத் திரும்புகிறார்கள்.
மகிழ்வாக    ஆரம்கும் வாழ்க்கையில் சில விபரீதங்கள் குறுக்கிடுகின்றனா.

பாலாவுக்கு வீட்டிம்ன் பரணறையில் யாரோ நடக்கும் சப்தம் கேட்கிறது.

அங்கேதான் அவள் அத்தையின் அனைத்துப் பொருட்களையும் வைத்துப் பூட்டி இருக்கிறார்கள்.

கணவனிடம் சொன்னால் அவன் தனக்கு ஒன்றும் கேட்கவில்லை என்று மறுக்கிறான்.
திடிரென்று பொருட்கள்   காணாமல் போக ஆரம்பிக்கின்றன..
வீட்டில் பொருத்தப் பட்டிருக்கும்  காஸ் விளக்குகள்
விட்டு விட்டு எஇகின்றன.

பாலாவின்  பயம் அதிகரிக்கிறது.

கணவனோ அவளைதிருட்டுத்தனம் செய்பவளாகவும்,மனப்பிரமை கொண்டவளாகவும் பார்க்கிறான்.
அவள் எவ்வளவு மறுத்தும்  நம்ப  மறுக்கிறான்.

வீட்டைவிட்டு வெளியேவிட மறுக்கிறான்.
பிறகு  மனம் மாறி  ஒரு கச்சேரிக்கு அழைத்துப் போகிறான். அங்கு ம்
அவளைக் கலவரப் படுத்துவது போல அவனுடையக் கைகடிகாரம் காணாமல் போகிறது.

உன் கைப்பையையில் போட்டிருக்கிறாய  என்று எல்லோர் முன்பும்வினவ
அவள் அதிர்ந்து போய் மறுக்கிறாள்.
கைப்பையை அவளிடமிருந்து எடுத்துப் பார்த்தால் அதில் அவனுடையக்
கைகடிகாரம் இருக்கிறது.
எல்லோர் முன்னும் அவமானப் பட்ட  பாலா வெளியே ஓடுகிறாள்.

அவளுடைய பழைய கவர்னஸ்  ஒருத்திதான் அவளுக்கு ஆறுதல்.
இன்னோரு வீட்டு உதவிக்காக இருக்கும்

ஆஞ்சலா அவளை    வெறுப்பதை வெளிப்படையாகவே    காண்பிக்கிறாள்.

இந்த  அதிர்ச்சி சம்பவங்களுக்கெல்லாம் முடிவுக்கு வரும் நாளும் வருகிறது.
பக்கத்துவீட்டில் இருக்கும் ஒரு கிழவி,
கிரிகாரி  கையில் ஒரு டார்ச்சுடன் வீட்டின் பின்புற ஏணி வழியாக  ' ஆட்டிக்"
என்னும் பரணுக்குப் போவதைப் பார்க்கிறாள்.

நடுவே ஒரு நாள் டவர் அஃப் லண்டனுக்குப் போகிறாள் பாலா,வீட்டில் இருக்கப் பிடிக்காமல்.
அங்கே ஒரு புதிய மனிதனைச் சந்திக்கிறாள்.
அவளுடைய பதட்ட நிலையைப் பார்த்து அவளை அவன்
விடாமல் அவளைத் தொடர்கிறான்.

அவன்  போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று அறியவரும் பாலா தன் வீட்டில் நடக்கும் விபரீதங்களைச் சொல்லித் தன்னைக் காப்பாற்றச் சொல்கிறாள்.

அவள்தான்  கொல்லப்பட்ட ஓபரா  பாடகி ஆலிஸின் மருமகள் என்று அறிந்ததும் Bryan cameran  kku இந்தக் கேசில் சந்தேகம் ஏற்படுகிறது..
ஒரு நாள் வீட்டிற்கு வருகிறான்.

அவன் சந்தேகம் வலுப்பெறுகிறது.
பாலாவின் கணவனைக் கண்டதும் திடுக்கிடுகிறான்.
அவந்தான் முதன்முதலில் பாலாவின் அத்தையைக் கொன்றவன்.
திட்டமிட்டு இத்தாலிக்குச் சென்று  இளம்பெண்ணாக அன்புக்கு ஏங்கிக் கொண்டிருக்கும் பாலாவைத் தன் வசப் படுத்தித்
திருமணமும் செய்து

லண்டன் வீட்டிற்கே வந்துவிடுகிறான். அவனுடைய உதவியாள் ஆஞ்சலா.
 அவன் மாடிப் பரணில் நகைகளைத் தேடும்போதெல்லாம் கீழே பாலா நடுங்குகிறாள்.
அவன் எடுத்துச் செல்லும் காஸ்லைட்
கீழே இருக்கும் மற்ற  விளக்குகளை மங்கச் செய்கிறது.
ப்ரையனை இன்ஸ்பெக்டர் என்று அறியாமல் பரணுக்கு வழக்கம் போலச் செல்லும்  கிரிகாரி கையும் களவுமாகப் பிடிபடுகிறான்.

நிகழ்ச்சிகளின் விளைவாகத் தைரியம் கைவரப் பெற்ற  பாலா அவனை ஒரு நாற்காலியோடு சேர்த்துக் கட்டி
இடைவிடாது கேள்விக்கணைகளைத் தொடுத்துத் துன்புறுத்துகிறாள்.

போ;ஈஸ் இலாகாவின் தலையீட்டில்   கெட்டவர்கள் சிறைபுக ப்
பாலா மன விடுதலை அடைகிறாள்.

இங்க்ரிட்  பெர்க்மன் என் ஃபேவரிட் ஆர்டிஸ்ட்.
அந்த மாதிரித் திகிலையும், கள்ளம் கபடமற்ற முகத்தையும் எங்கும் காண
முடியாது.
நாலைந்து ஆஸ்கார்கள் கிடைத்தன இந்தப் படத்துக்கு.
கிரிகோரியாக நடித்தவருக்கும்,இங்க்ரிட் பெர்க்மனுக்கும்
பெஸ்ட் ஆக்டர் அக்ட்ரஸ் அவார்ட்.
நான் இந்தப் படத்தை இங்கே சென்னையில் தான் பார்த்தேன்..
அப்போது டாடாஸ்கை ஒளிபரப்பில் டிசிஎம்   இருந்தது. இப்போது இல்லை.


மன உறுதி உள்ளவர்கள்   கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய படம்..






காஸ்லைட் 1944  த்ரில்லர்

















Posted by Picasa

Saturday, March 23, 2013

Meet the Parents... படத்தின் அலசல்

பாமீலா  க்ரெக்  பாவப்பட்ட ஜோடி:)
நீயா   நானா!1
மாமானாரும் அவரது     செல்லமும்:)
கடவுளே   காப்பாத்து


 பெற்றோரைச் சந்திக்கலாமா!  (Meet  the parents... a  comedy)
**********************************************************************************
Meet the Parents இந்த படம்  தொலைக்காட்சியில் பார்த்தது.

சிகாகோ  சென்ற போது திரை அரங்கிலும் பார்த்தேன்.
2001   என்று நினைக்கிறேன்.

ஒரு நல்ல  காமெடி பார்த்த நிறைவு.

நடிகர்களைப் பொறுத்த வரையில்  ராபர்ட் டி நிரோ,பென் ஸ்டில்லர்
இருவரின்
நகைச்சுவை  படத்தைப் பிடிக்க வைக்கிறது.
ஹீரோ  பென்ஸ்டில்லர்(க்ரெக்) ஒரு  ஆஸ்பத்திரியில் நர்ஸாக வேலை பார்ப்பவர். வெகுளி.
எப்பொழுதும் நல்லதையே நினைத்து அதனாலேயே வம்பில் மாட்டிக் கொள்கிறவர் . அவர் காதலிக்கும் பெண்
பாமீலா  என்னும் பாம் ஒரு   மாந்தசோரி ஆசிரியை.

அவள் அப்பா ஒரு மிலிட்டரியிலிருந்து (ஓய்வுபெற்ற) அதிகாரி/
வீட்டிலும்  இரணுவ முறைப்படி எல்லாம் நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்.

முதல் பெண்ணுக்குத் திருமணம் செய்ய ஒத்துக் கொள்ளும் முன் மாப்பிள்ளையின் பெற்றோரை
பரிபூரணமாக   விசாரித்துத் திருமணத்துக்கு ஒத்துக் கொள்கிறார்.

இப்போது இரண்டாவது பெண் ஒரு Jewமாப்பிள்ளையை,
அதாவது பாய்ஃப்ரண்டைப் பற்றிப் பேசும்போது அவருக்கு ரத்த அழுத்தம் ஏறிவிடுகிறது.
என்னவெல்லாமோ செய்து  திருமணத்தை நிறுத்த  ஏற்பாடுகள் செய்கிறார்.
க்ரெக்கின்' பெற்றோர் பெயர் ஃபாக்கர் என்பதில் ஆரம்பித்து அவனுடைய
ஒவ்வொரு நடவடிக்கையையும் கேலிக்குள்ளாக்குகிறார்.
இந்த நிலையில் தான்  காதலர் இருவரும் பமீலாவின்
 பெற்றோரைச் சந்திப்பது என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

பமீலா,காதலனின் அன்புக்கும், தந்தையின் வெறுப்புக்கும் இடையில் திண்டாடுகிறாள்.

மத வேறுபாட்டினால் சாப்பிட உட்காருகிற முறையிலிருந்து பமீலாவின் அப்பா தப்பு கண்டுபிடிக்கிறார்.
எல்லாவற்றையும்  தன் இயல்பான புத்திசாலித்தனத்தினால்
சமாளிக்கிறான் க்ரெக்.
இதற்கிடையில்  வரப்போகும் மாமனாரின் செல்ல நாய்க்குட்டியின் தொல்லை

 தாளாமல் அதை எப்படி  ஒழித்துக் கட்டுவது என்று க்ரெக் யோசித்து விரட்டியும் விடுகிறான்:)
அவனுக்குத் தெரியாதது மாமனார் எல்லா இடங்களிலும் கண்காணிப்புக் காமிரா பொருத்தி இருப்பது!!

இதை வைத்தே அவனைத் தன் பெண் வாழ்க்கையிலிருந்து
தள்ளிவிடலாம் என்று திட்டமிடுகிறார்.
இந்த நிலையில்தான்,
மாமனாரப் பற்றிய பெரிய ரகசியம் க்ரெக்கிற்குத் தெரிய வருகிறது.
அவர் இன்னும் சிஐஏ  வின்  ஆளாக உலவி வருகிறார் என்று.

விக்கிரமாதித்யனைப் போலத் தளராமல் முயற்சி செய்தும்
காதலியின் கோபத்துக்கும் ஆளாகிறான் க்ரெக்.
அவன் ஒரு மாரியுவான அடிக்ட் என்று நிருபித்து(பொய்யாக)க்
காண்பிக்கிறார்.

கடைசியில் எல்லாம் தெரிய வர  மாமனாரே ஏஏர்ப்போர்ட்டுக்கு வந்து மருமகனாகப் \
போகிறவனைப் போலீசின் பிடியிலிருந்து விடுவித்து அழைத்துச் செல்கிறார்.


இதுதான் கதை.
நடுவில் வரும் சம்பவங்கள் வாய்விட்டுச் சிரிக்கவைக்கும்.
ராபர்ட் டி னீரோ போன்ற பெரிய நடிகரிடம்,அசராமல் தன் பன்முகத்திறமையக்
காட்டி நடித்திருக்கும் பென் ஸ்டில்லர் ஒரு  திறமைசாலி.
நீங்கள் ஏற்கனவே பார்க்கவில்லை என்றால்
கணினியிலியே பார்க்கலாம்.:)
கூகிளார் துணை செய்வார்.









எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Thursday, March 21, 2013

ஊரைச் சுற்றும் சளியும் தொந்தரவுகளும்

அடப் பாவமே, சளி பிடிச்சுடுத்தா!!
மூக்கு    ஆதாரங்கள்
எத்தைத் தின்னால் பித்தம் தெளியும்?
நாங்க எல்லாம் ஸ்பெஷல் இல்ல.!!!
 




 ஏதோ ஊருக்குப் போனோமா, கடமையைச் செய்தோமா
வந்தோமான்னு இருக்கத் தெரியாதே'
பச்சத்தண்ணியைத் தலையிலே  விட்டுக்கோன்னு  மாமியாரா விரட்டினார்?

என்னவோ இன்னும்  முப்பதிலியே  நின்னுட்டதா  நினைப்பு./

நாங்க எல்லாம்  வெந்நீர் போட்டுக் குளிக்கலையா. உனக்கு மட்டும் பக்தி மிஞ்சி  இப்படி எல்லாம்  செய்யணும்னு தோணறது பாரு.

ஆஹச்!!

ம்ம் . தும்மு தும்மு. எல்லாம் வெளில வரட்டும்.

எனக்குன்னால் அத்தனை சுக்கையும் என் தலைல கொட்டுவியே!
இப்ப வீட்ல சுக்கே இல்லையோ???

''ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.''
மூக்குதானே கோளாறு.
வாயும் பேச வரலியா.

என்னா தொண்டையா? வரண்டு போயிடுத்தா. வெந்நீர் சாப்பிட வேண்டியதுதானே.

யாரோ சொல்லிப்பாங்க. எனக்கெல்லாம் கோல்டே
பிடிக்காதுன்னு.
அதுதான்  இப்படி வந்திருக்கு.

''ம்ம்ம்ம்ம்.!!!!!''

தோட்டத்தில தான் கற்பூரவல்லி  போட்டு இருக்கியே,
அந்தக் கஷாயம்  சாப்பிடலாமே.
துளசி டீ இருக்கு.

''ஹான்  ஹான். ''

அடக் கடவுளே இது ஹிந்தி சளியா!!!  ஹா ஹா

இப்படி படுத்துக் கொண்டால் எல்லாம் இங்க வருமா.
இரத்த ஓட்டமே இருக்காது. எழுந்துநடந்தால்
பாதி சளி போயிடும்.

இதற்கு மேலத் தாங்காது. நான் எழுந்துவிட்டேன்.
நான் சளித் தொந்தரவில் கஷ்டப் படுவதைவிட இவர்
சிரமப் படுவது இன்னும்   தொந்தரவாக இருக்கு.:)


மேல  இருக்கிற டயலாகெல்லாம் ஆங்கிலத்தில மொழிபெயர்த்துக்கொள்ளவும்.

கோபம் வந்தால்  தமிழ் எங்க வீட்டில தடுமாறும்.)))









எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Monday, March 18, 2013

சென்னையும் தண்ணீரும்


வல்லிசிம்ஹன்.
*****************



 மழையின் அருமை வெய்யிலிலும் தாகத்திலும் தெரிகிறது.

இருவரே இருக்கும் எங்கள் வீட்டுத் தண்ணீர்த்டொட்டியிலும் சென்னை மெட்ரோ  நீர் வரத்துக் குறைந்து கொண்டு வருகிறது.
நல்லவிதமாக எஜமானர் மழை   சேமிப்பு   தொட்டிகள் மூலம் கிணற்றில் நீர் சேர்த்திருப்பதால் வண்டி ஓடுகிறது. சுற்றிவர்க் கட்டிடங்கள் பூதாகர்ரமாக எழுந்து வருகின்றன. ஐந்தடுக்கு ,துளசி சில்க்ஸ் துணிக்கடை,

அடுத்தவீட்டில்  ,எதிர்வீட்டில்,காலனிக்கும்ல்  எங்களோடு வீடு கட்டியவர்கள் எல்லாம்  பழையவிட்டை இடித்துப் புது  வீடு கட்டிவிட்டார்கள்.
சிறிய குழந்தைகளாக வந்தவர்கள்  சம்பாதித்து அம்மா  அப்பா கட்டின வீட்டை இரண்டு சகோதரர்களுக்கான  வீடாகவோ,
இல்லை மூன்று சகோதரிகள் சேர்ந்திருக்கும் பெரிய அபார்ட்மெண்டாகவோ கட்டி விட்டார்கள்.

புத்திசாலிகள் தான்.

இவ்வளவு பெரிய இடங்களை நிர்வகிக்க  இரண்டு ,மூன்று என்று போர்வெல்.

தண்ணீர்(குடிநீர் வாரியம்)  வரும் குழாயைன் மட்டத்தை இறக்கி

ஒருவீட்டுக்கு வரவேண்டிய தண்ணீரை இருமடங்காகப் பெருக்கினால் எங்கள் கதி என்ன.?

என் தோழியும் இன்னும் அதே வீட்டில்தான் இருக்கிறார்.
கணவர் இல்லை.
அந்த வீட்டை இடிப்பதில் அவருக்குச் சம்மதமில்லை.

மகளோ, பழசாகிவிட்டது. இதை விற்று வேறு கட்டலாம். என்னோடு மும்பைக்கு வந்துவிடு என்கிறாள்.
தோழிக்கோ சங்கீதம், உறவுகள்  எல்லாம் இங்கேதான்.
வயதும் 76 ஆகிவிட்டது,.
ஆனால் மன உறுதிக்கு அளவே இல்லை. பணபலமும் உண்டு.

இங்கேயே இருக்கிறேன் என்று சொல்லிவிட்டார்.

சுற்றிவரப் போர்வெல் போட்டதால் இவர்கள் வீட்டில் தண்ணீர் மஞ்சளாக வருகிறது.

இத்தனைக்கும் தன்வீட்டின் கீழ்ப்பகுதியில் தன் உறவுகளையும் வாடகை இல்லாமல் குடிவைத்திருக்கிறார், அன்னை பட பானுமதி போல்!
தாராள மனம்.

இப்போது எங்கள் சாலையில் இரண்டு    பெர்ர்ர்ர்ர்ர்ரிய  ஆஸ்பத்திரிகள்
மூன்று துணிக்கடல்கள்,
இரண்டு மருந்துக்கடைகள்.
ஒரு உணவகம் ,.

பகுகுடும்பியாகிவிட்டது லஸ் சர்ச் ரோட்.
தண்ணீர் வேண்டாமா. வேணும். அதுதான் டான்கர் வந்து நிற்கிறதே ரோடை அடைத்துக் கொண்டு!10000லிட்டர் 3000 ரூபாயாம்.!!

அதற்கேற்ற (பண)வசதிகள்   நாம் பெருக்கிக் கொள்ளவேண்டும்.


எதிர்த்தார்ப்போல்  டீக்கடை.
ஒரு பெஞ்சும் உண்டு.

நாம் வாசல்கதவைத் திறந்தால்   எங்கே போகிறோம் என்று பத்துதலைகளாவது திரும்பும்.
நல்லவேளை  குமரிப் பெண்கள் யாரும் வீட்டில் இல்லை:)))

நகைக் கடை ஒன்றுதான் பாக்கி. அதுவும் வரச் சந்தர்ப்பங்கள் உண்டு.
கேரளா ஜுவல்லரி சொந்தக்காரர்கள்   எதிர்த்தெருவில்தான் இருக்கிறார்கள். ஒரு கிளை இங்கே திறந்தால் நாங்களே பாண்டி பஜார் ஆகிவிடுவோம்.


இன்றைய புலம்பல் இத்துடன் முடிகிறது:))))))





 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Saturday, March 16, 2013

ஆர்க்கிட்ஸ் தோழியின் தோட்டத்திருந்து

Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption


நெடு நாளையத் தோழிக்கு  ஐம்பதாவது திருமண நாள் நடந்தேறியது.
அந்த தினத்தில் நாங்கள்
துபாயில் இருந்தோம்.

விழா அமோகமாக நடந்ததாக க்  கடிதம் அனுப்பி இருந்தாள்.

ஊரிலிருந்து வந்தபிறகு இன்றுதான் நேரம் கிடைத்தது.
பூங்கொத்தும்,  வாழ்த்து மடலும்,அவளுக்கு    மிகப் பிடித்த வளையலகளும்  வாங்கிக் கொண்டு சென்றோம் நானும் சிங்கமும். .

அவர்கள் வீட்டில்   செடி கொடிகள்   நிறைய உண்டு. தோழியின் கணவர்  ஆர்க்கிட் பூக்களை வளர்ப்பவர்.
இதற்காகவே  தாய்லாண்ட் ,சிங்கப்பூர் என்று சென்று வாங்கி

ஒரு   25 வருடங்களாகப்  பண்ணையாக வைத்து நடத்திவருகிறார்..
வீட்டைச் சுற்றிலும் நிழல் தரும் மரங்கள்.
ஆர்க்கிட் வளரவேண்டிய       உஷ்ண நிலையைக் கொண்டுவர ஏற்பாடுகள்..

அவைகளுக்காகத் தண்ணீர் ஏற்பாடு  தனி.

எப்படி இத்தனை சாத்தியமானது என்று கேட்டோம்.

செய்யும்  வேலையிலிருந்து      ஓய்வு பெற்றதும் முழு நேரம் இந்தக் குழந்தைகளைக்   கவனிப்பதையேத்    தொழிலாகக் கொண்டுவிட்டேன்.
வீட்டின் மேல்தளம் ,சுவர்கள்  அனைத்திலும்    படிகள் கட்டி எங்கும் இந்தச் செடிகள் நிறைந்திருக்கின்றன.
இந்த ஆர்க்கிடை வளர்ப்பது மிகச் சிரமம்  என்பது   தெரிந்த சமாசாரம்..


எத்தனை பொறுமையும் உழைப்பும் இந்த வளர்ப்பில் அவர் செலுத்தி இருக்க வேண்டும்.!!!

ஆச்சரியமாக இருந்தது.

மிகப் பெரிய வேலையில் இருந்துவிட்டு
ஓய்வெடுப்பது  பெரிய   மாற்றம்.
அந்த மாற்றத்தை  இந்தச்  செடிகளின் பராமரிப்புத்

தன்வாழ்க்கையில் பெருத்த நிம்மதியைக் கொடுப்பதாகச் சொன்னார்.
எங்களுக்கும் பரிசாக நல்ல வளர்ந்த ஆர்க்கிட் பூக்கள் நிறைந்த செடியைக் கொடுத்தார்..

மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் திரும்பினோம்.







 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்