Blog Archive

Monday, February 25, 2013

சித்திர ராமாயணம் பழைய விகடனில்!

ராவணன் சீதையிடம் உரையாட முற்படுகிறான்.
பி ஸ்ரீ அவர்கள் எழுதிவந்த  சித்திரராமாயணத்தின் இரு பாகங்களைப்
படிக்க முடிந்தது  இந்தப்  புத்தகத்தில்.
சித்ராலயா    என்று    ஓவியம் வரைந்தவரின் பெயர்  இடம் பெற்றிருக்கிறது.
அநேகமாக இது மாயா அவர்களின்    இன்னோரு  பெயராக இருக்கும் என்றே தோன்றுகிறது,.
உருவம்,முகங்கள் எல்லாம் அவருடைய முத்திரை  பதிந்திருக்கிறது.

இராவணன்  சீதையின் கண் முன் மாயாஜாலத்தினால்
அவள்   தந்தை ஜனகனைக் கட்டியிழுத்து வந்து புழுதியில் புரளவைப்பது போலத் தோற்றம் காண்பிக்கிறான்.

கம்பராமாயண    வரிகள்  மேற்கோள் காட்டப்பட
''அஞ்சலை  அன்னன் அன்னாய்'
என்று அவளை விளீக்கிறான்.
நீ மட்டும் எனக்கு இணங்குவதாக இருந்தால்
ஜனகனை நான் தொழுவேன். அவனுக்கு வேண்டிய  ராஜ்யங்களையும் முன்பைவிட  அதிகமாக்கிக் கொடுப்பேன்  என்று இனிய பசப்பல் வார்த்தைகளைக் கூறுகிறான்.
''இலங்கை ஊர் இவனுக்கு ஈந்து
வேறிடத்திருந்து வாழ்வேன்''

சீதை மனம் இன்னும் ர்துடிக்கிறது.
பெரியோர்களெ  என் தந்தை இவ்வாறு துடிக்கவும் வேண்டுமோ . அநுமன் இல்லையோ நும்பால்'' என்று கதறுகிறாள்,.
இராவணன் மேலும் கூறுகிறான்.

சீதே உன் இனிய மழலையால் ஒரு இன்சொல் சொன்னால்
கூடப் போதும்.

''இந்திரன்  கவித்த மௌலி  இமையவர் இறைஞ்சி ஏத்த
மந்திர மரபில் சூட்டி,வானவர் மகளிர் யாரும்
பந்தரின் உரிமை செய்ய,யான் இவன் பணியில் நிற்பன்!
சுந்தரப்  பவள வாயால் ஒரு மொழி சிறிது சொல்லின்!!
அமிழ்தில் வந்த மகாலட்சுமியே உனக்கு சேவை செய்வாள் என்றவனுக்கு இன்னோரு சந்தெகம் வருகிறது
''செந்திரு நீரல்லீரேல் அவளும் வந்து ஏவல் செய்யும்!


ஒருதந்தைக்கு எந்த மகளும் இதுவரை செய்திருக்காத ஒரு உதவியை நீ செய்தவளாவாய்.
இந்திரலோகம் ஆளும் தந்தையாக்குவாய் ஜனகனை.

எல்லாம் உன் அழகினால் அவனுக்குக் கிடைக்கப் போகும் பாக்கியம்.
என்று முடிக்கிறான் இராவணன்.

இந்த ஒரு அத்தியாயம் கிடைத்தது இந்தப் புத்தகத்தில்.
படிக்க முடிந்தது என் பாக்கியம் தான்.

ஏதாவது பிழை இருந்தால்  மன்னிக்க வேண்டும்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

29 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கிடைக்கும் போது மேலும் பதிவிடுங்கள் அம்மா... நன்றி...

RAMA RAVI (RAMVI) said...

சிறப்பான பதிவு.

நானும் நான் சமீபத்தில் படித்த ராமகதை பற்றி ஒரு பதிவு எழுதி வைத்திருக்கிறேன் வெளியிட வேண்டும்.

Geetha Sambasivam said...

//சித்ராலயா என்று ஓவியம் வரைந்தவரின் பெயர் இடம் பெற்றிருக்கிறது.//

அது சித்ரலேகா என்னும் ஓவியர் வல்லி. பழைய விகடன் புத்தகங்களில் பெரும்பாலும் புராண, இதிகாசங்களுக்கு இவரே ஓவியம் வரைவார். சிலம்புச் செல்வம் என்ற பெயரில் சிலப்பதிகாரமும், மணிமேகலை இன்னொரு பெயரிலும் வரும். அதில் வரும் கோவலன், கண்ணகி, மாதவி, மணிமேகலை, மணிமேகலா தெய்வம் போன்றவர்களின் முகங்கள் என் நினைவில் இன்னமும் உள்ளது.

Geetha Sambasivam said...

மாயாவெல்லாம் அந்த நாட்களில் படம் வரையவே வந்திருக்க மாட்டார். பின்னால் ஐம்பதுகளின் கடைசியில் அல்லது அறுபதுகளின் ஆரம்பத்தில் தான் வந்திருக்கிறார்.

ஸ்ரீராம். said...

எங்களிடமும் சித்திர ராமாயணம் இருந்த நினைவு இருக்கிறது. பக்கம் பக்கமாகக் கழன்று விட்டது. மாயாவின் மறு பெயர்? சந்தேகமாக இருக்கிறது. ஆனால் அவர் ஒரு சித்திரப் பள்ளிக்கூடம் இந்தப் பெயரில் நடத்திக் கொண்டிருந்தாரோ?

வெங்கட் நாகராஜ் said...

வாவ்.... இன்னும் புத்தகங்கள் இருந்தால் அவற்றிலிருந்தும் பகிர்ந்து கொள்ளுங்கள் வல்லிம்மா....

பால கணேஷ் said...

ரசனை! பழையவை படிக்க என்றுமே இனியவை எனக்கு! ‌தொடருங்கள் வல்லிம்மா!

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் செய்கிறேன் தனபாலன்.
இந்தப் புத்தகத்தை எடுத்ததிலிருந்து வேறெதிலும் மனம் போகவில்லை.
வீரத்தமிழன் என்றோரு தொடர் வந்திருக்கிறது.அதையும் படிக்கவேணும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரமா,அந்தக் காலத்தில் எத்தனை நல்ல தமிழ் உலா வந்திருக்கிறது என்று இப்பொழுது தெரிகிறது.
நீங்களும் பதிந்துவிட்டு எனக்கு ஒரு மெயில் அனுப்பிவிடுங்கள்மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா.
சித்ரலேகா நினைவு இருக்கிறது
அவர் சாயலில் மாயா வரைந்தாரோ என்னமோ.
அப்பாவீட்டிலிருந்து கிளம்பிய போது இன்னும் நிறைய புத்தகங்கள் எடுத்துக் கொள்ளாமல் போய் விட்டோமே என்று ஆதங்கமாக இருக்கிறது.
இளமையின் அறியாமை,கேட்கத் தயக்கம் என்று விட்டுவிட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். எங்கள் பேரன் பூணலின் போது அச்சடிக்க அவரது சித்ராலயா அச்சகத்தை தான் அணுகினோம்.
பலவிதமாக அழைப்பிதழ் வைத்திருந்தார். அவரது ஓவியங்கள் பல விலைக்குக் கொடுக்க வைத்திருந்தார். நான்தான் வாங்கவில்லை.அசோக் பில்லர் பக்கத்தில மாயாவின் சித்ராலயா இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெங்கட். இந்த இரண்டு புத்தகம்தான் கிடைத்தது மா.அரிய பலவிஷயங்களை வாழ்க்கையின் ஓட்டத்தில் விட்டுவிட்டேன் என்று தோன்றுகிறது.:(

வல்லிசிம்ஹன் said...

வரணும் கணேஷ்.
முழுமையாகக் கிடைத்தால் கட்டாயம் பகிர்ந்து கொள்கிறேன்.
ரொம்ப நன்றி மா.

Anonymous said...

பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி. நல்ல ரசனை. எங்களையும் ரசிக்க வைத்தது.

கோமதி அரசு said...

அருமையான பகிர்வு வல்லி அக்கா.
படங்கள் அழகு. துளி தேன் ருசிக்கு போல் உள்ளது, மீதியும் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

சாந்தி மாரியப்பன் said...

ஹைய்யோ.. பொக்கிஷம்ன்னா இதான் பொக்கிஷம். பகிர்விற்கு நன்றிம்மா.

Geetha Sambasivam said...

அருமையான பொக்கிஷப் பகிர்வு. அது சித்ரலேகா தான் வல்லி, சந்தேகமே வேண்டாம். இந்த ராமாயணம் வெளிவந்த காலத்தில் மாயா என்ற பெயரில் ஒரு ஓவியரே இல்லை என்பதும் நிச்சயம். :)))))) அவர் சாயலில் மாயா வரையவும் இல்லை. எந்த வருஷத்துப் புத்தகம்??? நாற்பதுகள் என்றால் நிச்சயம் சித்ரலேகாதான். மாயா பின்னர் வந்தவர்.

மாதேவி said...

நல்ல ரசனை. தங்கப் பொக்கிசம்தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மீனாக்ஷி,
இன்னும் நிறைய அத்தியாயங்கள் இல்லையே என்றிருக்கிறது.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோமதி.
படிக்கப் படிக்க அருமை. எவ்வளவு ஈடுபாடு இருந்திருக்கவேண்டும். இந்த மாதிரி உழைப்பு இருந்ததால்தான்,
எல்லா விஷயங்களும் நல்லபடியாகப் படிக்கப் பட்டு இருக்கின்றன.முடிந்தவரை
கிடைத்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

இது போலப் புத்தகங்களை விகடனே வெளியிடலாமே என்று தோன்றுகிறது.
அள்ளிக்கொண்டு போக நாம் இருக்கிறோமே.ஏதாவது செய்யணும் சாரல்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா, அநெகமாக ஐம்பதுகளின் இறுதிகளில் மணியன் கதைகள் வரத்துவங்கிய காலங்களில் மாயாவின் ஓவியங்களும் வர ஆரம்பித்தது.தமிழ்வாணன் தொடர்கதைகளுக்கும் அவர் வரைந்தது நினைவு இருக்கிறது.ஸாரதியும் வரைந்து கொண்டிருந்தார்.முகமெல்லாம் இன்னும் தீர்க்கமாக இருக்கும் அவர் படங்களில்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மாதேவி. பொக்கிஷமேதான்.

sury siva said...

எனக்கு என்னமோ அந்தக் காலத்து ராவணன்கள் எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது.

பொறுமையுடன் அது வாங்கிதாரேன், இது உனக்குத் தாரேன் என்று சொல்லிக்கொண்டு நிற்கிறார்கள்.
வெறி புடிச்சு ஏதும் செய்யாம ...

இந்தக் காலத்து ராவணன்கள் கையிலே ஆசிட் பாட்டிலுடன் அல்லவா திரிகிறார்கள் ?

சுப்பு தாத்தா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுப்பு சார். ராவணனுக்கு,பெண்ணின் அனுமதியில்லாமல் தொட்டால் தலைசிதறி வெடித்துப் போவான் என்கிற சாபம் இருந்தது. இப்போதைய காளைகளுக்கு ஆசிட் தூக்கும் முன்னரே அந்த சாபம் பலித்தால் நன்றாக இருக்கும்.

ADHI VENKAT said...

தாங்கள் வைத்திருந்த புத்தகத்தில் உள்ளதை எங்களோடும் பகிர்ந்து கொள்வதற்கு நன்றிம்மா.

அப்பாதுரை said...

இப்பத்தான் அறிமுகம்.
சித்திர ராமாயணம்னு பெயரில் சித்திரக்கதை போலவே இல்லையே?

(கீதா சாம்பசிவம் எல்லாத்தையும் விரல் டிப்புல வச்சுருப்பார் போல)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆதி,
ஏதோ பூர்வ புண்ணியம். இந்தப்புத்தகம் கிடைத்தது.முடிந்தவரை நன்றாக இருக்கும் பக்கங்களைப் பதிவிடுகிறேன் பா.நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் எனக்கும் முதலில் அப்படித்தான் தோன்றியது துரை.
இது கம்பனின் சித்திரம். ராமாயணத்தைச் சொல்லோவியமாகக் கொடுத்திருக்கிறார் இல்லையா.
இந்தப் புத்தகத்தை நானென் பதினைந்தி பதினெழு வயதில் தான் பார்த்தேன். அம்மா இந்த வீட்டு வைத்தியப் புத்தகத்தை உபயோகப் படுத்துவார்.

நான் இதில் இருக்கும் சீதாவுக்குப் பொட்டு வைக்கிறேன் அப்பா என்று சொல்லிக் கேட்டால் அப்பா மறுப்பார். சீதை சோகத்தில் இப்படித்தான் அம்மா இருந்தாள். அதை நாம் மாற்றக் கூடாது என்பார்.

இப்பொழுது நானும் எழுதினேனெ சித்திர ராமாயணம்!!அதை நினைத்து வெட்கமாக இருக்கிறது.:(

இந்தப் பக்கங்களைப் படித்து எழுதி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

கீதா ஒரு கலைக் களஞ்சியம். நோ அப்பீல் ஓவர் தட் மேட்டர்!!!!