About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Tuesday, February 12, 2013

பின்னூட்டங்களுக்குப் பதில் பதிவுAdd caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

உலகத்திலியே  மகா பெரிய பிரச்சினை, இந்த வலைப்பதிவாகப் போய் விட்டது:)
எழுத்ததெரிந்த கையே உனக்கு
படிக்கத் தெரியாதா  ஆஅ.ஆ
பதிவு போட்ட பின்னால்
பதிவை திறக்கத் தெரியாதா...
திறந்தபின்னும் கையே
பதில் கொடுக்க முடியாதா.
என்ன கொடுத்தாய் என்று நினைக்க முடியாதா
கையே நினைக்க முடியாதா??????????????????
பின்னூட்டம் இட்ட அனைவருக்கும்
நன்றி.
இராஜராகேஸ்வரி,
ஆதிவெங்கட்,
வெங்கட்நாகராஜ்
கோபு சார்,கீதாமா
இவர்கள் இப்போதைக்கு நினைவில் இருக்கிறது:0)
எந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் இட்டார்கள் என்று குழம்புகிறது.
அதனால் நான் செய்யப் போவது
ஜிமெயிலில்  பின்னூட்டம் வந்ததும்   குறித்துவைத்துக் கொண்டு
தகுந்த பதிலகளைப் பதிவாக இட்டு விடுகிறேன்.
இன்னும் 12 நாட்களில் சென்னை.
அங்கே என் கணினியார்     முறைக்காமல் இருக்கணும். இன்வர்ட்டர் சார் என்ன வெல்லாம் செய்தாரோ.:(
இருக்கவே இருக்கு. இப்பவே என்ன கவலை.!!!!

19 comments:

புதுகைத் தென்றல் said...

கமெண்ட் பப்ளிஷ் செய்யும்போதே கீழே இருக்கும் ஈமெயில் ஃபாலோ அப்படை டிக் செஞ்சீங்கனா கமெண்ட்கள் உங்க இமெயில்லுக்கு வந்திரும் வல்லிம்மா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மேலே “புதுகைத்தென்றல்” அவர்கள் சொல்லியிருப்பது போல, ஒவ்வொருவரும் பிறருக்கு பின்னூட்டம் அனுப்பும் போது, ஒவ்வொருமுறையும் பின்னூட்டப்பெட்டிக்கு அடியில் இருக்கும் SUBSCRIBE என்பதை க்ளிக்கி விட்ட பிறகு தான் அனுப்ப வேண்டும். இதைப்பழகிக் கொண்டு விட்டால், பிறகு பிரச்சனையே இல்லை. நம் பின்னூட்டம் PUBLISH செய்யப்பட்ட பிறகு, நமக்கு அது மெயில் மூலம் தகவலாக வந்து விடும்.

இது தெரியாமல் நான் சுமார் 18 மாதங்கள் கஷ்டப்பட்டுள்ளேன்.

ஆனால் யார் யாருக்கு என்ன பின்னூட்டம் கொடுத்திருந்தாலும் அது நமக்கும் தொடர்ந்து தகவலாக வந்து கொண்டே இருக்கும்.

தேவையில்லாமல் நிறைய மெயில்கள் வருவது போலத்தோன்றினால், மறுபடியும் அதே பதிவுக்குப்போய் UNSUBCRIBE என்பதைக் க்ளிக் செய்துவிட்டால், பிறகு அதுபோல வராமல் நின்றுவிடும்.

>>>>>

திண்டுக்கல் தனபாலன் said...

இன்னும் நிறைய பதிவுகள் போடுங்க அம்மா... நன்றி மொத்தமாக சொல்லி விடலாம்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

என்னைப்பொறுத்தவரை நான் எப்போதாவது தான் பதிவுகள் வெளியிடுகிறேன்.

மிகச்சிலரின் பதிவுகளை மட்டுமே போய்ப் படித்தும் வருகிறேன்.

எனக்கு வரும் பின்னூட்டங்களை நான் மிகவும் மதிக்கிறேன். ரஸிக்கிறேன்.

அவை தான் நமக்கு மேலும் மேலும் எழுத ஊக்கமும், உற்சாகமும் தரும் டானிக் என நினைக்கிறேன்.

அதனால், பல்வேறு வேலைகளுக்கு இடையே, என் பதிவினை முழுவதுமாக சிரத்தையுடன் படித்து விட்டு கருத்துச் சொல்பவர்களுக்கு, நானும் சோம்பல் படாமல், பதில் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய பதில்களும் ’சும்மா நன்றி என்ற ஓர் வார்த்தையுடன் வெறும் சொல்லாக’ இருக்கவே இருக்காது.

அதுவே ஒரு குட்டிப்பதிவு போலவே சுவாரஸ்யமாகவே இருக்கும்.

அவற்றை [அதாவது நான் தரும் பதிலகளை மட்டுமே] விரும்பிப்படிப்பவர்களே நிறைய பேர்க்ள் உள்ளனர்.

இதுபற்றி நிறைய பேர்கள் என்னிடம் மனம் திறந்து மெயில் மூலம், பாராட்டிப் பேசியும் / பேசிக்கொண்டும் உள்ளனர்.

இதுபோல கொடுக்கப்படும் ஆத்மார்த்த்மான பதில்கள் மட்டுமே, ஒவ்வொரு பதிவர்களுக்கும் உள்ள ஆரோக்யமான நட்பினை வளர்க்கக்கூடியதாக இருக்கும்.

சும்மா அடிக்கடி பதிவுகள் தருவதை விட்டுவிட்டு, தரமான பதிவுகளாக, எப்போதாவது கொடுத்துக்கொண்டு, வந்து சேரும் பின்னூட்டங்களை மதித்து, அதற்கு பொறுமையாக பதில் FEEDBACK தருவது தான் சாலச்சிறந்தது என்பது என் அபிப்ராயமாகும்.


அப்பாதுரை said...

ha!

வல்லிசிம்ஹன் said...

அன்பு தென்றல்,பப்ளிஷ் செய்யற கமெண்டையே,
இதோ இப்பதான் பார்க்கிறேன். நான் எழுதினதையே
படிக்க முடியாமல் போகிறது.ப்லாக்கர் இஸ் நாட் ரெஸ்பாண்டிங்னு ஒரு செய்தி வந்து கொண்டே இருக்கு.
ஈமெயில் ஃபாலோ அப் செய்கிறேன். இல்லாவிட்டால் பதிவெழுதாமல் இருக்கேன்:)
நன்றி கண்ணா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வைகோ சார். இதோ அந்த ஃபாலோ அப்பைக் க்ளிக் செய்துட்டேன்.
முன்னால் இந்த ஆப்ஷன் வைத்திருந்தேன். இங்க வந்துதான்பதிவுக்குப் போக முடியாத துன்பம்.
மெனக்கிட்டு வந்து சொன்னதற்கு மிகவும் நன்றி.
ரொம்ப ஸ்ட்ரெஸா இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

இந்த ஹா! எதுக்காகன்னு தெரியலையே துரை:)
இரண்டு மூன்று அர்த்தம் தெரிகிறதே:)

அப்பாதுரை said...

ரெண்டு ஹா எழுத சோம்பல் பட்டு ஒரு ஹாவை க&பே செய்யலாம்னு.. மறந்துபோச்சு.

ஸ்ரீராம். said...

ஒருவேளை பதிவு தேத்தற டெக்னிக்கோ! ஹிஹி... என்னைப் போலவே எல்லோரையும் நினைக்கக் கூடாதுதான்! :))

வல்லிசிம்ஹன் said...

அப்படியே செய்கிறேன் தனபாலன்:)
இன்றைக்கு பாருங்கள் வலைப்பதிவு ஒத்துழைக்கிறது.!

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கோபு சார். எழுதுவதில் வல்லமை எல்லோருக்கும் வந்திடாது.
என் எண்ணங்களைச் சொல்லவே நான் பதிவிடுகிறேன். என்னுடைய டயரி இது.:)

வல்லிசிம்ஹன் said...

சரி துரை உங்களுக்காக இரண்டு ஹா ஹா போட்டாச்சு:))

வல்லிசிம்ஹன் said...

அப்படி எல்லோரும் நினைக்க வாய்ப்பு இருக்கு ஸ்ரீராம்.
நான் சாதித்து ஒன்றும் ஆகப் போவதில்லை.
சாதனையில் ஆசையும் இல்லை.:)

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...

உலகத்திலியே மகா பெரிய பிரச்சினை, இந்த வலைப்பதிவாகப் போய் விட்டது:)

பிரச்சினையே பதிவாகவும்
ஆகிவிட்டது ..

கோமதி அரசு said...

பின்னூட்ட பதில் ’நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா ?/
பாணியில் இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

கண்டு பிடிச்சுட்டீய்ங்களா கோமதி:)

ஒரே சோகம் பா:)

வல்லிசிம்ஹன் said...

test