About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Monday, February 04, 2013

47 ஆண்டு சேர்ந்து வாழ்க்கைப் படகு ஓட்டியாச்சுஅன்பின் இணைய நண்பர்களுக்கு ஒர்  சேதி
இற்றைக்கு 47  வருஷங்களுக்கு முன்னால் சுதந்திரப் பறவைகளாகச் சுற்றிய என்னையும் சிங்கத்தையும்
சேர்த்து முடி போட்டு  வீட்டார்கள்.மகிழ்ந்தார்கள்.
நாங்களும் உன்னைப்பிடி என்னைப் பிடின்னு தாண்டிக் குதித்து(!)
இன்னித் தேதி வரை ஒழுங்காக் குடும்பம் நடத்திவரோம்.
துணையிருக்கும் கடவுளர்கள் எப்பொழுதும் காக்க வேண்டும்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

27 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள் அம்மா...

ராமலக்ஷ்மி said...

இருவருக்கும் என் வணக்கங்களும் இனிய வாழ்த்துகளும்.

மீனாக்ஷி said...

ரொம்ப ரொம்ப சந்தோஷம். மனம் நிறைந்த வாழ்த்துக்கள். விரைவில் பொன் விழா ஆண்டை காண போகிறீர்கள். அதற்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள். :))

கோமதி அரசு said...

வாழ்க்கை படகு ஓடிய நாட்களை அழகாய் சொன்னீர்கள்.

உங்களுக்கும் சிங்கம் சாருக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள்.

வர இருக்கும் 7 ம் தேதி எங்கள் திருமண நாள், அதற்கு உங்களிடம் ஆசி பெற்றுக் கொள்கிறோம்.

திருமண நாளை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழுங்கள்.

RAMVI said...

சீக்கிரமே பொன்விழா காணப்போகும் உங்களுக்கும்,சிங்கம் சாருக்கும் வாழ்த்துக்கள் மேடம்.மிகவும் சந்தோஷமாக இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி மனம் நிறைந்த ஆசிகள்.
வாத்துகளுக்கு நன்றி. ஆரோக்கியத்தையும் ஆனந்தத்தையும் ஆண்டவன் அள்ளி வழங்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். வெள்ளைப் பிள்ளையாரைப் பார்க்கும்போது என் நமஸ்காரங்களைச் சொல்லுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மீனாக்ஷி,இறைவன் சித்தம் எப்பொழுதும் எல்லோருக்கும் நன்மை கிடைக்க வேண்டும். உங்களுக்கும் சேர்த்து எங்கள் ஆசிகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,இப்பொழுதே பிடியுங்கள் எங்கள் வாழ்த்துகளையும் ஆசிகளையும்.
மேடு பள்ளங்களைத் தாண்டி வர நமது இறைவனே வழிகாட்டியிருக்கிறான்.
இனிமேலும் நம் நம்பிக்கையைக் காப்பான். நன்றாக இருங்கள் அம்மா.

இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துகள் அம்மா.

உங்கள் ஆசியை வேண்டுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கொத்ஸ், ஆசிகள் எப்பவும் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் உண்டுமா. எல்லோரும் நலமென்று நம்புகிறேன்.
பழகியே குளிரே மிகச் சிரமமாக இருப்பதாகப் பெண் சொன்னார்.
சீக்கிரம் வசந்தம் வரட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரமா. எங்கள் இருவரின் ஆசிகள் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு,.
வருகைக்கு மிகவும் நன்றி. பொன் விழாவுக்கு அனைவரும் கூடலாமா.!!

KARUNAKARAN VV said...

வாழ்த்துக்கள் அம்மா...

KARUNAKARAN VV said...

வாழ்த்துக்கள் அம்மா...

Karunakaran
chennai

ஹுஸைனம்மா said...

மிகவும் மகிழ்ச்சியான செய்தி. இருவரும் இணைந்தே இன்னும் இனிமைகாண இதயபூர்வமாய் இறைஞ்சுகிறேன் இறைவனிடம்.

Geetha Sambasivam said...

இனிய திருமண நாள் வாழ்த்துகள். விரைவில் பொன் விழாக் கொண்டாடி, உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழப் பிரார்த்தனைகளும். சிங்கத்துக்கும் எங்கள் நமஸ்காரங்கள்.

ஸ்ரீராம். said...

இனிய மணநாள் வாழ்த்துகள் அம்மா. உங்கள் இருவருக்கும் எங்கள் நமஸ்காரங்கள்.

sury Siva said...

தங்களுக்கும் தங்கள் அன்புக் கணவருக்கும்
எங்கள் உளங்கனிந்த வாழ்த்துக்கள்.

திருவரங்கத்தான் அருள் மழை
தொடர்ந்து தங்கள் இருவரையும் நனைக்கட்டும்.

சுப்பு தாத்தா.
மீனாட்சி பாட்டி.

வயசிலே நாங்க சீனியர்.
திருமணம் ஆகி 47 ஆண்டுகள் என்றதால் நீங்கள் சீனியர்.

இராஜராஜேஸ்வரி said...

இனிய திருமண நாள் வாழ்த்துகள். துணையிருக்கும் கடவுளர்கள் எப்பொழுதும் காக்க வேண்டும்.

வெங்கட் நாகராஜ் said...

இனிய திருமண நாள் வாழ்த்துகள் அம்மா....

இந்த நன்னாளில் மட்டுமல்ல, எந்நாளும் உங்கள் ஆசீர்வாதங்கள் எங்களுக்குத் தேவை....

அமைதிச்சாரல் said...

இனிய வாழ்த்துகள் வல்லிம்மா. ஆசீர்வாதம் வேண்டி நிற்கிறோம் :-)

அப்பாதுரை said...

so sweet!
வாழ்த்துக்கள்!

கோமதி அரசு said...

உங்கள் வாழ்த்துக்களும், ஆசிகளும் இரண்டு நாட்களுக்கு முன்பே கிடைத்து விட்டது நன்றி அக்கா.

கோவை2தில்லி said...

இனிய திருமண நாள் வாழ்த்துகள் அம்மா. எங்கள் நமஸ்காரங்களை தெரிவித்துக் கொள்கிறோம்..

bandhu said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

Muruganandam Subramanian said...

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். நரசிம்மன் துணையிருந்து தங்களை காக்கட்டும். பொன் விழாவிற்கு முன் கூட்டியே வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கருணாகரன்,
அன்பு கீதாம்மா,
அன்பு ஹுசைனம்மா,
அன்பு ஸ்ரீராம்,
அன்பு சுப்பு அண்ணா மீனாட்சி மாமி,
அன்பு இராஜராஜேஸ்வரி
அன்பு சாரல்,
அன்பு கோமதி,அன்பு வெங்கட்
அன்பு துரை,
அன்பு ஆதி,
அன்பு பந்து,
அன்பு முருகானந்தம் பாலசுப்ரமணியம்
அனைவருக்கும் மிகத் தாமதமாக நன்றி சொல்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் எங்கள் ஆசிகள். இறையருளால் என்றும் நலம் பெறவேண்டும்.