Blog Archive

Sunday, January 13, 2013

கோதை ஆண்டாள் நம்மை ஆண்டாள்.

சீர் வரிசையுடன் ஆண்டாளும் ஸ்ரீரங்கனும்
அலங்கர ரங்க  மணவாளன்
காப்புநாண் கட்டக் கனாக் கண்டேன் தோழி
திருமணத்திற்கு எழுந்தருளும் ஆண்டாள்
வெறும் அரங்கன்  ஆண்டாளின் அரங்கன் ஆகிவிட்டான்.

வல்லிசிம்ஹன்
என்கிற ஆண்டாள் ஆறு  வருடங்கள் மட்டுமே ஸ்ரிவில்லிபுத்தூரில் வாழும் பாக்கியம் கிடைத்தது.
பெற்றோர் ஊட்டிய   உணவில் ஆண்டாளும் உள்ளே புகுந்தாள்.

இத்தனை   ஆண்டுகளுக்குப் பிறகு அவளை எழுத ஆசி வழங்கினாள்.

ஏகப்பட்ட பிழைகள் இருந்திருக்கும்.
எல்லாவற்றையும் மன்னித்து  இந்தப் பதிவுகளை அங்கீகரித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
நாளை ஜெயா தொலைக்காட்சியில் ஆண்டாள் அரங்கன் திருமண ஒளிபரப்பு11 மணி  அளவில் (என்று நினைக்கிறேன்)இருக்கிறது. அனைவரும் கண்டு களிக்கலாம்.
முன் கொடுத்த செய்தி  தவறு.நண்பர்கள் என்னை மன்னிக்கணும்.

ஸ்ரீஆண்டாள் அரங்கன் திருவடிகளுக்கு   எங்கள் நமஸ்காரங்கள்.



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

28 comments:

இராஜராஜேஸ்வரி said...

அருமையான ஆண்டாள் பகிர்வுகள்.. பாராட்டுக்கள் ..

இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

sury siva said...

சென்ற முப்பது நாட்களாக விடியற்காலையில் எழுந்த உடனேயே உங்கள் பதிவினைப்பார்த்து
கோதை ஆண்டாள் பாசுரங்களையும் அதன் விளக்கங்களையும் தெரிந்து கொண்டது மட்டுமன்றி
அவற்றினைப் பாடி மகிழ்ந்திடவும் ஒரு அரிய தொரு வாய்ப்பினை நீங்கள் அளித்திருக்கிறீர்கள்.

மனமார்ந்த நன்றி.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் ஆசிகள்.

பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

சுப்பு தாத்தா.
மீனாட்சி பாட்டி.

நீங்கள் எழுதிய கடைசி வரிகள் எங்களை அந்த அரங்கனின் காலடிகளில் சேர்த்துவிட்டன என்றால் மிகையாகாது.
உங்களை எழுதப்பணித்ததும் அதைத் தொடர்நது படித்ததும் கோவிந்தன் அருளே .
கோவிந்தா !! கோவிந்தா.

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!!

கல்யாணத்தன்னிக்கூட என்ன படுக்கை வேண்டிக்கிடக்கு பாரேன்:-)))

மாசம் பூராவும் அருமையா அமைஞ்சதுப்பா.

ரொம்ப மகிழ்ச்சி.

இங்கே ஜெயா யூ ட்யூபில் வருதான்னு பார்க்கணும்.

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

Ranjani Narayanan said...

நல்லபடியாக முப்பதும் தப்பாமல் எழுதிவிட்டீர்கள் வல்லி!

நாங்களும் உங்களது தயவால் உட்கார்ந்த இடத்திலேயே புகைப்படங்களை தரிசித்து, விளக்கங்களைப் படித்து புண்ணியம் சேகரித்துக் கொண்டோம்.

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

அருமையாக மார்கழி முப்பதும் தப்பாமல் உங்கள் பாடலை கேட்கும் பேற்றை இறைவன் கொடுத்தார் அவருக்கும் உங்களுக்கும் நன்றி.
திருமண வைபவ நிகழ்ச்சியை சங்கரா தொலைக்காட்சியிலும் வைப்பதாய் சொன்னார்கள் மணி சரியாக தெரியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி
இராஜராஜேஸ்வரி. உங்கள் எல்லோருடைய வரவும் அவ்வளவு மகிழ்ச்சி கொடுத்தன. மிகவும் நன்றிமா

வல்லிசிம்ஹன் said...

காலை வேளையில் தொலைக்காட்சி பெட்டியிலியே அத்தனை பாவைச் சொற்பொழிவுகளும் வந்தன. உங்களுக்கெல்லாம் தெரிந்த விளக்கங்களே. இங்கேயும் அவள் பெருமையைப் படிக்க வந்த உங்கள் பெருந்தன்மைதான் காரணம்.
நீங்கள் சொல்லியது போலஎல்லாம் அரங்கனும் கோதையும் செய்த அருள்.
மீனாட்சிப்பாட்டிக்கு ,சுப்பு ஐயாவுக்கும்
எங்கள் இருவரின் நமஸ்காரங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அது கோதை கண்ட கனவு இல்லையா. அதான் அங்கே அவள் துயில இங்கே திருமணம் நடக்கிறது என்று நினைக்கிறேன்.
வாரணமாயிரக் காட்சியாகவும் இருக்கலாம். எத்தனை ஜோடனை பாருங்கள்.இங்கே வரவில்லைப்பா. ஒருவேளை நாளைக்கோ என்னவோ!!நன்றி துளசிமா.

வல்லிசிம்ஹன் said...

இனிய பொங்கல் வாழ்த்துகள் ரஞ்சனி.
மறக்காமல் நீங்கள் கொடுத்த ஆதரவுதான் என்னால் எழுத முடிந்தது. உங்கள் திருவரங்கம் அப்டேட் செய்யவில்லையா. வேர்ட்ப்ரஸ்ஸில் மறுமொழி கடினம். கூகிள் ப்ளஸ் இருப்பது ஒரு சௌகரியம்.

வல்லிசிம்ஹன் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக நன்றி அவர்கள் உண்மைகள்.
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய பொங்கல் நன்னாள் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,நல்லவார்த்தைகளுக்கு மிகவும் நன்றி .
சங்கரா தொலைக்காட்சியை நானும் பார்க்கிறேன்.
தைப்பொங்கல் இனிதே நடக்க வாழ்த்துகள்.

துளசி கோபால் said...

அட க்ருஷ்ணா!!!!!

//அவள் துயில...//

நான் 'அவனை'யல்லவா சொன்னேன்:-)))))

அவள் மடியில் தலை வச்சு தாய்ச்சுண்டு இருக்கானே படத்தில்!!!!

Ravichandran M said...

முப்பது நாளும் அன்னையின் புகழ்பாடி தங்களின் இறைவனுக்கான இனிய பங்களிப்பினை அளித்து, அவனின் அருளுக்கும் கருணைக்கும் பாத்திரமானது கண்டு உள்ளம் நெகிழ்ந்து போனோம். அவனருள் இல்லாவிடில் தொடர்ந்து எழுதிட இயலுமா? அவனின் கருணை இருந்தால் எதுவும் நடவும்!

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான பகிர்வுகளை மாதம் முழுவதும் தந்ததற்கு மிக்க நன்றிம்மா.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி திரு கிருஷ்ணாரவி.
நன்மையே விதைத்து நன்மையே விளைப்போம். இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி சாரிமா. தப்பா புரிந்து கொண்டேன். இன்று நம் மாதவப் பெருமாள் கோவிலில் இந்த காட்சி கிடைக்கும் என்று நினைவு.
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் மா. கோபாலும் நீங்களும் மதுவும் எப்பவும் சந்தோஷமா இருக்கணும்

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
உங்களுக்கும் எங்கள் மனம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் மா.ரோஷ்ணி குட்டி,ஆதி,நீங்கள் அம்மா அப்பா எல்லோரும் நோய் நொடி இல்லாமல் சிறப்பாக சந்தோஷமாக இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

ஸ்ரீராம். said...

கல்யாணக் கோலமும், ரங்கா மணவாளனின் க்ளோஸ்-அப்பும் மற்றும் அனைத்துப் புகைப்படங்களுமே அருமை.

வல்லிசிம்ஹன் said...

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் ஸ்ரீராம்.குழந்தைகளுக்கும் சுஜாதாவுக்கும் மனம் நிறைந்த நல் வாழ்த்துகள் மா.பால் பொங்கி வளம் நிறைய வேண்டும்.

Anonymous said...

நடுவுல கொஞ்சம் படிக்க முடியாம போச்சு. சேத்து வெச்சு படிச்சுடறேன். ரொம்ப பிரமாதமான படங்களோடவும், அருமையான விளக்கத்தோடவும் தினம் எழுதி அசத்திடீங்க. வாழ்த்துக்கள்!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கவிஞர் பாரதிதாசன்,
வருகைக்கும் கருத்துக்கும் மிகமிக நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்நாள் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மீனாக்ஷி இனிய பொங்கல் தினவாழ்த்துகள். பரவயில்லைம்மா. மெதுவாகப் படியுங்கள்.
அன்புள்ளத்துக்கு மிகவும் நன்றி.

Unknown said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா. தாமதமாய் வருகிறேன் . பாசுர பதிவுகள் பால் பொங்கல்போல் மிக அருமை. மீண்டும்மீண்டும் படிக்கத் தோன்றுகிறது.நன்றிஅம்மா.

குமரன் (Kumaran) said...

முப்பது நாளும் அருமையான படங்கள் அம்மா. மிக்க நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் இந்திரா. வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.உங்கள் வீட்டிலும் பால் பொங்கி வளம் எப்பவும் நிலைக்கணும்.
திருப்பாவை எப்பொழுதும் அலுக்காது. தினமுமே படிக்கலாம். நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் குமரன். குழந்தைகளும் நீங்களும் நலமா. குளிர் வாட்டுமே.
நீங்கள் எழுதாத ஆண்டாளா. என்னையும் கௌரவித்ததற்கு ரொம்ப நன்றிமா. வாழ்க்கை நலமோடு இருக்கட்ட்டும்.

Vetirmagal said...

பல நாட்கள் கழித்து உங்கள் பதிவுகளை பார்க்க வாய்ப்பு. அழகாக ஆண்டாளையும் பார்த்து மகிழ முடிந்தது.

நன்றி!