Blog Archive

Thursday, January 03, 2013

குத்துவிளக்கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல்....

கிருஷ்ணா  சரணம்
குத்துவிளக்கெரிய
சங்கம்

 திருப்பாவை  19 ஆம் பாசுரம்
*********************************

 குத்துவிளக்கெரிய  கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல்   நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா  வாய்திறவாய்!!

மைத்தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனைபோது துயிலெழ வொட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.
*****************************************
மிக எளிதாகப் புரியும்படியே அமைத்திருக்கிறாள்
நம் ஆண்டாள்.
நப்பின்னையை எழுப்பியாயிற்று.
அவளோ வருவதாகக்  காணோம்,
வளையல் சத்தமும் சந்தனவாசமும் பூக்கள் நறுமணமும் ஆண்டாளை
வந்தடைந்து உள்ளிருக்கும் செய்தியைச் சொல்கின்றன.


கண்ணன் தன் காதலியைப் பிரிய மனமில்லாமல்
அவளை அணைத்த நிலையில் இருக்க,தாயாரான நப்பின்னையாவது அவனை எழுப்ப வேண்டாமா என்ற தாபத்தை விளக்குகிறாள்  நம் கோதை
எவ்வளவு நேரம் இப்படியே கடத்துவது. கொஞ்சம் கருணைவைத்து
வந்து எங்களுக்குக் கண்ணனின்  தரிசனம் கிடைக்க வழி செய்யம்மா'' என்று உருகுகிறாள்.
கோதை எனும் என் தாயே உன் பொறுமை எங்களுக்கும் கிடைக்க வழிசெய்வாய்.
உன்சரணாரவிந்தங்களில்    நமஸ்காரங்கள்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

21 comments:

sury siva said...

இன்னிக்கு இந்த பாசுரத்துக்கு ஏ சர்டிபிகேட் தான் கிடைக்கும் அப்படின்னு
ஆத்து மாமி சொல்றாளே !!



சுப்பு தாத்தா.
www.menakasury.blogspot.com

பூந்தளிர் said...

அம்மா திருப்பாவை பாசுரங்கள் எப்பொழுதுமே கேட்க்கெ ,கேட்க்க இனிமைதான்மா. நான் புது வலைப்பூ தொடங்கி இருக்கிறேன். என் வலைப்பக்கம் வந்து கருத்து சொல்லுங்கம்மா. நன்றி

பூந்தளிர் said...

அம்மா உங்க பக்கம் ஃபாலோவரா எப்படி இணைச்சுக்கனும்?

வல்லிசிம்ஹன் said...

அன்பு சூரி சார்.ஏ கொடுக்கலாம். அந்தக் காலத்தில் இதெல்லாம் சஹஜம். வேறுவித நினைப்பும் வந்ததில்லை. இப்பதான் இந்த சர்டிஃபிகேட் எல்லாம்:) விகல்பமாகத் தெரிகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பூந்தளிர் உங்கள் வலைப்பக்கம் போய்விட்டுத்தான் வரேன்.
என்னுடைய வலைப்பதிவின் கீழ்பாகத்தில் ஃபலோ திஸ் ப்ளாக் னு போட்டுஇருக்கும். அதை க்ளிக் பண்ணினால் ஈசியா வேலை முடிஞ்சுடும்:) மேன் மேலும் வளர ஆசிகள்.

ஸ்ரீராம். said...

குழந்தைகளுக்குச் சொல்வது போல புரியும்வண்ணம் தெளிவுரை எழுதியிருக்கிறீர்கள்.

இராஜராஜேஸ்வரி said...

கோதை எனும் என் தாயே உன் பொறுமை எங்களுக்கும் கிடைக்க வழிசெய்வாய்.

உன்சரணாரவிந்தங்களில் நமஸ்காரங்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம்:)

இரண்டு மூன்றுவரிகளை அர்த்தம் சொல்லாமல் முடித்துவிட்டேன்.
ஏற்கனவே சுப்பு சார் ஏ செர்டிஃபிகேட் கொடுக்கலாமான்னு கேட்டு இருக்கார்:)
நன்றிமா.

Geetha Sambasivam said...

வரவே முடியலை! :))) நான் யார் பதிவுக்கும் போகலைனா என்னோட பதிவுக்கு மட்டும் யார் வருவாங்க? என்றாலும் என்னமோ தெரியலை, நேரம் சரியாப் போய் விடுகிறது.

எளிமையான விளக்கங்களை அளித்து வருகிறீர்கள். நல்லாத்தான் இருக்கு! குறை ஒன்றும் இல்லை. :)))))

கோமதி அரசு said...

கோதை எனும் என் தாயே உன் பொறுமை எங்களுக்கும் கிடைக்க வழிசெய்வாய்.
உன்சரணாரவிந்தங்களில் நமஸ்காரங்கள்.//

பொறுமை மிகவும் அவசியம் நிச்சியம் கோதை அருள்வார்.
படங்களும் விளக்கமும் அருமை.




வல்லிசிம்ஹன் said...

அன்பு இராஜேஸ்வரி,
பக்தி,பொறுமை,சிரத்தை எல்லாம் ஆன்மீகத்தின் அங்கங்கள் அல்லவா.
மிகவும் நன்றிமா..

வல்லிசிம்ஹன் said...

அட ராமா,உங்கள் அளவு ஆராய்ச்சி செய்து அருமையான விஷயங்களைக் கொடுக்க எவ்வளவு நேரம் பிடிக்கும்.
எல்லோரும் படிப்பார்கள். இதென்ன வியாபாரமா.நீ வந்தால்தான் நன் வருவேன் என்று சொல்ல.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
பொறுமை இழந்தால் காரியம் கை கூடாது அல்லவா. அந்த சக்தியையும் இறைவனே கொடுக்கட்டும்.வாழ்கவளமுடன்.
நன்றி மா.

sury siva said...

மத்தியான வேளைலே என்னோட நண்பர் திரு வேங்கடராமனிடம் ( லௌகீக வாழ்வில் அவர் அந்தக்காலத்து இன்கம் டாக்ஸ் கமிஷணர்) இதைப்பற்றி நான் பேசுகையில்
அவர் " கிடந்த " என்று நாலாம் வரியிலே இருக்கும் சொல்லுக்கு என்ன பொருள் என்று
வைஷ்ணவாச்சார்யாளான பிரதிவாதி பயங்கர அண்ணங்கராச்சாரியார் சொல்லியிருப்பதைச் சொன்னபொழுது
நான் திகைத்துப்போய் பிரமித்துப்போய் நின்றது தான் சத்யம்.

ஆண்டாள் பாசுரங்களை நாம் லௌகீகமாகப் புரிந்துகொள்வது ஒன்று. பக்திமார்க்கத்தில் புரிந்துகொள்வது அடுத்தது.
பரந்தாமனே கதி என்று அவனை ஆஸ்ரயித்தவாள் அவன் காலடியில் ":கிடக்கிறார்களே " அவாளுடைய மன நிலையை,
அந்த சான்னித்யத்தைப் புரிந்துகொள்வதற்கு எனக்கு இன்னும் பூர்வ புண்யம் வேண்டும் என்றே தோன்றுகிறது.

நீங்கள் அவரது வியாக்கியானம் வைத்திருக்கிறீர்களா? இன்டெர்னெட்டில் இதுவரை கிடைக்கவில்லை.

சுப்பு ரத்தினம்.

கவியாழி said...

நல்ல பகிர்வு,வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

விட்டுப்போனவைகளையெல்லாம் ஒரே மூச்சாகப் படித்து/பார்த்தேன் இன்று.

எதைச் சொல்ல? எதை விட?

சிம்பிள் அன்ட் ஸ்வீட்டான எழுத்து!

இந்த எளிமையே மயக்குது வல்லி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுப்பு சார்,

நானும் வேளுக்குடி அவர்களின் வியாக்கியானங்களைத்தான் முன்பு கேட்டு இருக்கிறேன். தேடினதில் கிடைத்தது சிலவற்றைப் புரிந்து கொள்ளைஇன்னும் ஞானம் வேண்டும்.சீரிய தமிழில் இருக்கின்றன.மேலெழுந்தவாறு என் புத்திக்கு எட்டியதையே எழுதுகிறேன்.பழைய புத்தகங்கள் பேப்பர்காரனிடம் நாங்கள் வருவதற்கு முன்னேயே சேர்ந்துவிட்டன:(

வல்லிசிம்ஹன் said...

நன்றி கவியாழி கண்ணதாசன்.

வல்லிசிம்ஹன் said...

துளசி,இன்னும் ,திருப்பாவை விளக்க உரைகளைப் படித்துவிட்டு எழுதலாம்.
செய்யவில்லை. கண்ணில் பட்டு புத்தி புரிந்து கொண்டதை மட்டும் எழுதுகிறேன்.

நுனிப்புல் கதைதான்;)
நன்றி மா.

சாந்தி மாரியப்பன் said...

ரொம்ப அழகான பகிர்வு வல்லிம்மா..

ராமலக்ஷ்மி said...

நிலவொளியில் நிற்கிற படம் அழகு:)!

விளக்கம் நன்று.