About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Tuesday, January 22, 2013

ஒரு மாதம் சென்னைக்கு பை பை

தங்க விளக்குகளா!
இப்பொழுது சுடவில்லையாம் இந்தச் சூரியன்


நெடு நாட்களாக அழைத்துக் கொண்டிருக்கிறார்   மகனார். நமக்குத்தான் உடல் நிலை  அலுப்புத்தர எங்கும் செல்லவேண்டாம்  என்று  முடிவெடுத்திருந்தோம்.

சிங்கத்துக்கு இருமலிலிருந்து இப்போதுதான் விடுதலை கிடைத்துக் கொண்டு இருக்கிறது.
என் கண்  நான் உன்னோடுதான் இருக்கிறேன்  என்னைக் கவனி என்கிறது.
உறவினர்களுக்கு உடம்பு முடியாமல் போகிறது.
  இதெல்லாம் இந்த ஊர்ப்பந்தங்கள்.

பேத்தியின் அழைப்பும் அன்பும்  வாழ்க்கையின்
அடுத்தபக்கத்தைக் காட்டி  அழைக்கிறது.

ஓ!ஒரு மாதம்தானே.
சமாளிக்கலாம் என்று ஒரு குரல்.

காலைக் கொட்டிக் கொண்டு கிளம்பியாச்சா'' ஆஜிப்பாட்டியின் குரல் இன்னும் மிரட்டுகிறது.:)

அஸ்தமன அழகைப் பார்த்துக் கொண்டிருப்பதைவிட்டு சூரிய உதயத்தை அனுபவிக்கக் கற்றுக்கொள் என்னும் மாமியாரின் புத்திமதியும் கேட்கிறது.

மாமியார் மெச்சிய மருமகளாக இருக்கத் தீர்மானித்துவிட்டேன்.!!

அங்கே  பேத்தியும் கணினி உபயோகிக்கறளாம்.
அவள் எனக்கு இணையத்தைவிட்டுக் கொடுக்கும்போது உங்களைச்

சந்திக்க வருகிறேன்.
அதுவரை,
விடைபெறும்
வல்லிம்மா.


 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

38 comments:

வல்லிசிம்ஹன் said...

இன்று எங்களுக்கு ஐந்து மணி வரை மின் சக்தி கிடையாது.
சூரிய சக்தியே துணை:)

வெங்கட் நாகராஜ் said...

ஒரு மாதம் விடுமுறையா.... நல்லது. நல்ல ஓய்வு எடுத்துக் கொண்டு புத்துணர்வோடு திரும்புங்கள்...

மீண்டும் சந்திப்போம்!

துளசி கோபால் said...

பேத்தியுடன் மகிழ்ச்சியா நேரம் செலவிட்டு வாங்க. அதேசமயம் கண்ணையும் காதையும் திறந்து வச்சுக் கிடைப்பதையெல்லாம் சேமிச்சால். வந்தவுடன் தொடர்பதிவு தயார்!!!!

மேட்டர் தேத்த ஒரு மாசம் போறேன்னு சொல்லிட்டால் ஆச்சு:-)

டேக் கேர். பை பை

RAMVI said...

//மாமியார் மெச்சிய மருமகளாக இருக்கத் தீர்மானித்துவிட்டேன்.!!//

இப்போது மருமகள் மெச்சும் மாமியாராகப்போகிரீர்கள். பயணம் நல்லவிதமாக அமைய வாழ்த்துகள் மேடம்.

பால கணேஷ் said...

ஓ,,, பேத்தியப் பாக்க பயணமா? இனிமையா அமையட்டும் ஒரு மாதப் பொழுதும். வந்து அனுபவப் பொக்கிஷங்களைப் பகிருங்கள். ஆவலுடன் காத்திருக்கோம் நாங்க.

ஹுஸைனம்மா said...

துபாயா, அமெரிக்காவா? :-)))

ராமலக்ஷ்மி said...

/அஸ்தமன அழகைப் பார்த்துக் கொண்டிருப்பதைவிட்டு சூரிய உதயத்தை அனுபவிக்கக் கற்றுக்கொள்/

என்ன அழகாய் சொல்லியிருக்கிறார்கள்.

பயணம் இனிதே அமையட்டும்.

பேத்தியின் கணினியில் பேத்தியைப் பற்றி பகிர்ந்திடுங்கள்.

காத்திருக்கிறோம்.

அமைதிச்சாரல் said...

ஆஹா!!.. பயணமா?.. நல்லபடியாப் போயிட்டு எஞ்சாய் செஞ்சுட்டு வாங்க வல்லிம்மா.

முதல் படம் அட்டகாசமா வந்துருக்கு :-)

புதுகைத் தென்றல் said...

சென்னைக்கு மட்டும்தானே பைபை. பரவாயில்லை. :)

நல்லா எஞ்சாய் செய்யுங்க வல்லிம்மா.

sury Siva said...

//சூரிய சக்தியே துணை//

இந்த சூரிக்கோ அவன் சக்தியே துணை.

அது சரி. வெளி நாடா , உள் நாட்டுக்குள்ளேயா பிரயாணம் ?

நாங்களும் எப்போடா எப்போடா அப்படின்னு நாப்பத்தி அஞ்சு வருசமா
காத்துண்டு இருக்கோம். வர ஏப்ரல் மாசம் தான் ஹனி மூன் போகணும்.

சுப்பு தாத்தா.
மீனாட்சி பாட்டி.

ஸ்ரீராம். said...

பேத்தியை, மகனைப் பார்க்கும் ஆவல் எழுத்துகளில் தெரிகிறது. இனிய பயணத்துக்கு வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட். ஆண்டவன் கிருபையில் அப்படியே நடக்கட்டும்/.

வல்லிசிம்ஹன் said...

மேட்டர் தேத்த ஒரு மாசம்:)
கண்டிப்பாத் தேறும்/

பதிவு போடற அளவுக்குத் தேறுமா:)எப்படியோ ஆடின காலும் ப்ளாக் எழுதின கையும் சும்மா இருக்காதாமே.என் தோழி சொல்லுவாங்க:)

வல்லிசிம்ஹன் said...

உங்கள் வாக்குப் பலிக்கணும் ரமா.
அங்கெயிருந்து பதிவுகளில் பேசலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கணேஷ்,
நல்ல அனுபவங்களாக் கிடைக்கும்.அதைக் கட்டியெடுத்துக் கொண்டு வந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
மிகவும் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஹுசைனம்மா. இந்தத் தடவை உங்களை விடப் போவதில்லை:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி .சோட்டா பீம் பார்த்தது போக மீதி நேரம் எனக்குத்தான்.
நல்ல குழந்தை.

அந்த மழலையின் நேரம் எனக்குக் கிடைத்தால் போதும்.பெரிய மருந்து அது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சாரல். விமானத்திலிருந்து எடுத்த படம்.
நல்லபடியாப் போய் நல்லபடியா வரோம். நன்றி சாரல்.

வல்லிசிம்ஹன் said...

சென்னைக்கு மட்டும்தான் தென்றல். பின்ன?:)

வந்துருவோமில்ல:)நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அப்போ ஹனிமூன் எங்கயோ சுப்பு சார்.
நாங்கள் போவது நாலாவது ஹனிமூன்:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். அந்தக் குட்டிச்சுட்டிக்குப் பூனைன்னால் ரொம்பப் பிடிக்கும். சோட்டா பீம் பிடிக்கும்.
எல்லாத்துக்கும் மேல பாட்டிதாத்தாமேல் பிரியம்.
உங்கள் நம்பரைத் தான் எங்கயோ வச்சிட்டேன்:(

கோமதி அரசு said...

பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.பேத்திக்கு வாழ்த்துக்கள்.

கோவை2தில்லி said...

உங்கள் பயணம் இனிதாக அமையட்டும். நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டு வாருங்கள்.

ஹுஸைனம்மா said...

//ஹுசைனம்மா. இந்தத் தடவை உங்களை விடப் போவதில்லை:) //

அப்படியா, “பார்க்கிறேன்” நானும்!! :-))))

Kanchana Radhakrishnan said...

பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்

Ramani said...

பயணம் சிறக்க நல்வாழ்த்துக்கள்
பயண அனுபவங்களுடன் பதிவில் சந்திப்போம்

வல்லிசிம்ஹன் said...

நன்றி கோமதி.நான்கு வாரங்கள் நொடியில் ஓடிவிடும் என்று நம்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி காஞ்சனா ராதா கிருஷ்ணன். நலமே இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆதி,துபாய் பக்கத்து ஊர் போல ஆகிவிட்டது.

ரோஷ்ணி குட்டிக்கு என் அன்பு. மெயில் போடுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் ரமணி ஜி.பதிவுகளில் சந்திக்கலாம். மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஓகே.தில்லானா மோஹனாம்பாள் ஸ்ஸ்டைல்ல சபதம் போட்டுட்டோம். நிறைவேற்றிட ஆண்டசன் துணை நிற்கட்டும்.

Pattu Raj said...

என்ஜாய்!

மறக்காமல், படங்களுடன் பதிவுகள் போடக் கோருகிறேன்.

ஸாதிகா said...

மக,மருமகள் பேத்தியுடன் நேரத்தை செலவிட்டு சந்தோஷமாக ஒரு மாதத்தையும் கழித்து வாருங்கள்.அதனை நிறைய படம் பிடித்து எடுத்து வந்து பதிவாக போடுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி பட்டுராஜ். ஒழுங்காய்ப் போய் ஒழுங்காக வந்த்விடுகிறோம்;)

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸாதிகா. தங்கள் தோழிகளுக்கும்ஹலோ சொல்லி அவர்கள் சௌக்கியத்தையும் உங்களிடம் சொல்கிறேன்.

ஸாதிகா said...

வல்லிம்மா,நான் அங்கு வந்து இருந்த பொழுது ஒரு பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்து இருந்தனர்.அதில் நீங்கள்தான் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது.அமீரகத்தில் நிறைய பதிவர்கள் உண்டுதானே.இந்த முறை ஒரு சந்திப்பை நிகழ்த்தி அசத்தி விடுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸாதிகா. அதற்குப் பின் அங்கே செல்லவில்லை.
ஹுசைனம்மாவிற்குத் தெரியும் நாங்கள் வருகிறோம் என்று.
சுந்தரிக்கு மெயிலனுப்புகிறேன். அபுதாபியிலிருந்து ஹுசைனம்மா வந்தால் பார்க்கலாம்.மனோ அம்மாவுக்கும் சொல்கிறேன்.இன்னும் நிறைய பதிவர்கள் இருக்கிறார்கள். தொடர்பு நிறைய இல்லை.:(
மிலாடி நபி நாளுக்கான வாழ்த்துகள் மா.

மாதேவி said...

பயணம் இனிதாக வாழ்த்துகள்.

பேத்தியுடன் பொழுதுகள் இனிதாக இருக்கும். மகிழ்ந்திருங்கள்.

வழமைபோல் எமக்கும் மகிழ்ச்சியைப் பகிர்வீர்கள்தானே ஆவலுடன் காத்திருக்கின்றோம்.