Blog Archive

Saturday, December 29, 2012

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து
ஆம்பல் வாய் கூம்பினகாண்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்  பங்கயக் கண்ணான்.
கோதை நம்மைக் காக்கட்டும்


 உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!



 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

14 comments:

sury siva said...

என்ன ஒரு அழகான பாசுரம் !!
அந்தக் கண்ணனையே பரந்தாமனையே
நேரில் பார்த்த அனுபவம் !

தூங்கும் உள்ளமும்
துள்ளி எழும்
தூயவனின் பாத கமலத்தைத்
துல்லியமாய்ச் சென்றடையும்.

சுப்பு ரத்தினம்.

பால கணேஷ் said...

இரண்டாவதாய் நீஙகள வைத்திருக்கும் ஓவியம் வெகு அருமை. கண்ணன் மீதான ஆண்டாள் பாசுரம் ரசித்து லயிக்க வைக்கிறது.

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!!!

என்ன பொருத்தம்!!நம் வீட்டுப்புழக்கடை வாவியுள் இன்றுதான் தாமரை மலர் ஒன்று பூத்துச் சிரித்தது!

மஹாலக்ஷ்மி இருக்காளான்னு எட்டிப் பார்த்தேன்:-)

பெருமாள்தான் இருந்தார்.....(உங்கள் மார்கழிப் பதிவுகளில்)!!!!!

வல்லிசிம்ஹன் said...

தங்களை எழுப்புவதாகச் சொன்னபெண் ,இன்னும் உறங்குவதைக் கேலி காட்டி,பெண்ணே எழுந்திரு என்று கோதை சொல்வது அழகு.
நன்றி சுப்பு சார்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி பாலகணேஷ்.அந்தப் பெண்தன் என்னமாய் அதிசயிக்கிறாள்,தாமரைப் பூக்களைப் பார்த்து!!1

ஸ்ரீராம். said...

அழகிய பாசுரம். காலை டிவியில் கேட்ட இந்தப் பாடல் என்ன ராகத்தில் ஒலித்தது என்று இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்! :))

சாந்தி மாரியப்பன் said...

பாசுரமும் படங்களும் அருமை வல்லிம்மா.. முதல் படம் கண்ணுக்குள்ளயே நிக்குது :-)

Anonymous said...

என்ன அழகான பாசுரம்! அதற்கான படங்களும் கொள்ளை அழகு. பிரமாதம் வல்லி மேடம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், ராகம் தெரியாதவளிடம் கேள்வி கேட்கிறீர்களே:)
கோதையின் மனத்தடாகத்தில் பூத்த தாமரைகள் அழகாகத்தானே இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி மஹாலக்ஷ்மி உள்ளே இருக்கிறாளே.:)தாமரை பூத்தால் அவள் வந்து விட்டாள் என்று பொருள்!!

வல்லிசிம்ஹன் said...

நன்றிமா சாரல். இந்த அன்புக்கு நான் ரொம்பக் கடமைப் பட்டிருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மீனாக்ஷி,என்னை மேடம்னு சொல்லணுமா. வெறும் வல்லி போதும்.:)வில்லிபுத்தூர்,ஸ்ரீரங்கம் போக முடியாத கவலையைப் போக்கவே இந்தப் படங்கள்:)

கோமதி அரசு said...

படங்கள் எல்லாம் அருமையாக தேர்ந்து எடுத்து கொடுத்து இருக்கிறீர்கள்.

கோமதி அரசு said...

மீள் பதிவு!
ஆனாலும் இப்போது படிக்கும் போதும் இனிமையான அனுபவம்.

வாழ்த்துக்கள் அக்கா.