About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Sunday, December 30, 2012

எல்லே இளங்கிளியே

இளங்கிளியே  எழுந்திரு!
வல்லானைக் கொன்றானை எல்லெ  இளம்கிளியே  இன்னம் உறங்குதியோ
சில்லென்றழையேன்மின்  நங்கைமீர்  போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய்  உனக்கென்ன வேறுடைமை
எல்லாரும் போந்தாரோ போந்தர் போந்தெண்ணிக்கொள்
வல்லானைக் கொன்றானை  மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.
***************************************************

15 ஆம் நாள் பாசுரமாக மலர்கிறது   கிளிப்பாட்டு.
கடைசியாக  எழுப்பப்படும் பெண்  வம்பு பேசுகிறாள்.
சின்னம்சிறு கிளிபோல ஓயாமல் பேசுபவளே
இன்னும் எழுந்திருக்காமல் இருப்பது ஏன் என்று குழு கேட்கிறது.

ஏற்கனவே  குளிருகிறது,நீங்கள் வேறு சுள்ளென்று  பேசாதீர்கள் வரேன் வருகிறேன் என்றுவிட்டு மீண்டும் அமைதியாகிறாள்.

ஆஹா உன் பேச்சைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா
பேச்சில் வல்லவள்  நீயல்லவோ, எங்களைச் சொல்லாதே அம்மா''

என்கிறது குழு.சரி நானாகவே இருக்கட்டும் என்ன செய்யவேண்டும் என்கிறாள். கொஞ்சம் வெளியே வா,வந்து  எங்களைப் பார் என்கிறார்கள் வெளியே நிற்பவர்கள்.
மற்றவர்கள் எல்லாரும் வந்துவிட்டார்களோ என்று மீண்டும் கேட்கிறாள்
துயிலைக்கலைக்க விரும்பாத அந்தப் பெண்.

வந்துவிட்டார்கள் வெளியே வந்து எண்ணிப்பார்.
இப்படி ஒருத்தி இருப்பாளா. நாம் பாட வேண்டாமா  கண்ணன் புகழை.
எப்பேர்ப்பட்டவன் அவன்.
எல்லா  உயிர்களிலும்   நிறைந்திருப்பவன் ,மாயன்  அப்படியும் கொடுமை இழைக்கவந்த குவலயாபீடம் என்னும் யானையை  சின்னம் சிறுவயதில் வீழ்த்தியவனை, தர்மத்துக்கு எதிராக நடப்பவர்களை,அப்படி நடந்த  கம்சனையும் கொன்றான்.
அவனைப் பாட  உனக்கென்ன  தயக்கம் என்று தூண்டி அவளையும் அழைத்துச் செல்கிறாள்  நம் கோதை.
விட்டுணு சித்தனின் மகளே அவர் குலநந்தன  கல்பவல்லியே
கண்ணனின் அருள் பெற்று ஸ்ரீரங்கராஜனின் குங்குமசந்தனமாகத்திகழ்பவளே
அடியோங்களின் பாபங்களை விலக்கி  அருள்வாய்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Posted by Picasa

16 comments:

ஸ்ரீராம். said...

அருமையான பாடல். நல்ல விளக்கம்.

இளையராஜா இசையில் இதே வரியில் தொடங்கும் பாடல் ஒன்று - அவரேயும் பாடுவார், எனினும் - பி. சுசீலா குரலில் மிக இனிமையாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

ஓ!பாட்டுக்கு லின்க் கிடைக்குமா. நானும் கேட்டிருப்பேன். மறந்துவிட்டேன்.

ஸ்ரீராம். said...


https://www.youtube.com/watch?v=X7YATWD1IUc

Here it is!

பாசுரம் என்று நினைத்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்! :)) சாதாரண சினிமாப் பாடல்தான். ஆனால் நன்றாக இருக்கும்!

ராமலக்ஷ்மி said...

விளக்கமும் தேடித்தந்திருக்கும் படங்களும் மிகவும் அருமை வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும். நல்ல படம் கூட.பாசுரம்னு நினைக்க நான் பழைய ஆண்டாளா:)தான்க்ஸ் ஸ்ரீராம்.

கோமதி அரசு said...

படங்களும், பாடல் விளக்கமும் அருமை. ஸ்ரீராம் கொடுத்த லிங்கில் நானும் பாடலை கேட்டு ரசிக்கிறேன்.
ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

படங்கள் இன்னும் நிறையக் கிடைக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன் ராம்லக்ஷ்மி:)

இராஜராஜேஸ்வரி said...

சிறப்பான படங்களுடன் அருமையான பாசுரப்பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

கவியாழி கண்ணதாசன் said...

படங்களும்,பாடலும் அருமை.
இதையும் படியுங்களேன்

http://kaviyazhi.blogspot.com/2012/12/blog-post_30.html

Sasi Kala said...

அழகான படங்களுடன் அருமையான பாடல் பகிர்வு நன்றிங்க.

தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Ranjani Narayanan said...

தினமும் உங்கள் படங்களையும், பாசுரங்களின் விளக்கங்களையும் படிப்பது நன்றாக இருக்கிறது.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
வருகைக்கு நன்றிமா.

இனிவரும் நாட்கள் இனிய நாட்களாக அமைய இறைவனை வேண்டுகிறேன். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு இரஜராஜேஸ்வரி, வருகைக்கு மிகவும் நன்றிமா. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் இறையருள் என்றும் நிலைத்திருக்க வேண்டுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு திரு கண்ணதாசன்,நன்றி. தங்கள் பதிவுக்கும் சென்று படித்தேன்.

வரும் 2013 ஆம் ஆண்டு புத்தம்ப்து இனிமைகளை அளிக்க இறைவனிடம் எங்கள் பிரார்த்தனைகள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றிமா சசிகலா.
உங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரஞ்சனி,
எளிமையான கருத்துகளைத்தான் எழுதுகிறேன்,. இன்னும் விரிவாக எழுத பிரபந்த ஞானமும் வேண்டுமே:)
பாராடுக்கு மிகவும் நன்றி மா. புத்தாண்டில் எல்லா மங்களங்களும் பெருகட்டும்.