Blog Archive

Sunday, December 23, 2012

வானம் வெளுத்தது நீல வண்ணனைப் பாட வாராய்

கீழ்வானம்
காளிங்கன்  பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன்  நீள்முடி ஐந்திலும்

ரவிவர்மா தீட்டிய கண்ணன் பலராமன்
பாடிப் பறைகொண்டு
சிறுவீடு மேயும் எருமைகள்




மூன்றாவதாக  ஒரு பெண்ணை அழைக்க வருகிறாள் கோதை.
அவளை எழுப்புவதற்குப் படாத பாடு பட வேண்டியிருக்கிறது

உன்னை அழைப்பதற்காகக் கோவிலுக்குச் சென்று கொண்டிருக்கும் மற்றப் பெண்களையும்  நிறுத்தி வைத்திருக்கிறேன் எழுந்து வாராய் என்கிறாள்.

எப்பொழுதும்  கலகலப்பாகச் சிரித்துப் பேசும் பெண்ணே என்று புகழ்கிறாள்.

பகாசுரனைக் கொன்றானே அவனைப் பாடவா
என்றும்  நினைவுறுத்துகிறாள். மல்லர்களை  த்வந்தயுத்தத்தில் மாட்டி
அவனை வென்றான்.
அந்தப் பெண் அசைய வில்லை.
வானம் வெளுத்துவிட்டது. மாடுகள் சிறுவீடு மேயப் போய் விட்டன.
நாம், தேவாதி தேவனைத் திருமாலை,
நம் கண்ணனைப் பாட வேண்டாமா
எழுந்து வருவாய்  என்று முடிக்கிறாள்.

இதோ பாடல்
கீழ்வானம் வெள்ளென்று   எருமைச் சிறுவீடு
மேய்வான் பறந்தனகாண்  மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்  கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய்ப் பாடிபறை  கொண்டு
மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதிதேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்றாராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்...

இந்தப் பாட்டை எம் எல்வி அம்மா பாடும்போது நமக்கே எழுந்துக் கோவிலுக்கு விரைய வேண்டும் என்று  ஆசை எழும்.

கோதை வசப்பட்ட கண்ணனையும் கோதையையும் தொழுவோம்.





எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

8 comments:

ராமலக்ஷ்மி said...

/எம் எல்வி அம்மா பாடும்போது/

உண்மைதான். அருமையாகப் பாடியிருப்பார்.

அழகான பகிர்வு. நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

கோதை வசப்பட்ட கண்ணனையும் கோதையையும் தொழுவோம்

சிறப்பான படங்களுக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்..

வெங்கட் நாகராஜ் said...

’பகாசுரனைக் கொன்றானே” படம் மிகவும் அருமை. மற்ற படங்களும் தான்....

சிறப்பான பகிர்வும்மா.

sury siva said...

எருமை வீடு என்று சொன்ன உடனேயே
எனக்கு என் வீடு நினைவுக்கு வந்து விட்டதே !!

இதோ எழுந்து விட்டேன்.
இதோ பாடியும் விட்டேன்.
ஸ்ரீமன் நாராயண ... பௌளி ராகத்துலே ட்ரை பண்றேன்.
கொஞ்சம் எருமை சத்தமாத்தான் இருக்கும்
பொறுத்துக்கோங்கோ....

சுப்பு தாத்தா.

கோமதி அரசு said...

இந்தப் பாட்டை எம் எல்வி அம்மா பாடும்போது நமக்கே எழுந்துக் கோவிலுக்கு விரைய வேண்டும் என்று ஆசை எழும்.//

உண்மைதான் அக்கா.

முன்பு எல்லாம் எல்லா கோவில்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் தான் வைப்பார்கள். இப்போது அவர்களுக்கு இஷ்டப்பட்ட பாடல்கள் வைக்கிறார்கள்.
கோதை வசப்பட்ட கண்ணனையும் கோதையையும் தொழுவோம்//
கோதை தாள் வாழ்க.

ஸ்ரீராம். said...

சமீபத்தில் கிருஷ்ணகான சபாவில் ஜாகிர் ஹுசைன் 'நாச்சியார் திருமொழி' என்ற தலைப்பில் காலை 9.30 மணிக்கு ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்தப் பாடல் குறித்தும் பேசினார். பகிர்வுக்கு நன்றி.

சீனு said...

அருமையான படங்களுடனும் விளக்கங்களுடனும் பதிவு அருமை அம்மா

Ranjani Narayanan said...

அருமையான விளக்கமும் படங்களும்.

பகிர்வுக்கு பாராட்டுக்கள் வல்லி!