Blog Archive

Wednesday, November 28, 2012

திருக் கார்த்திகைக் காட்சிகள்

முருகா சரணம்

 இன்று என் காமிரா பாதிக்கண்ணைதான்  திறப்பேன் என்று விட்டது.
நமக்கோ அதை எப்படி சரி செய்வது என்று தெரியாது.

ஃப்ளாஷ்  சரியாக   வேலை செய்தது. ஆனால்  தீபங்கள் எல்லாம்
பறக்கும் தட்டுகள்   மாதிரி தெரிகின்றன:)
கடவுள் கிருபையில் கார்த்திகைத் திருநாளை நன்றாகவே நடத்திவைத்தார் இறைவன். இந்த நேரங்களில் என்பேத்திகள் இருந்தால் வீடு முழுவதும் தீபங்கள் சுடர் விட்டிருக்கும்.

அந்த நாளும் வருமாயிருக்கும்.
அனைவரின் வாழ்விலும் ஒளி பரவட்டும்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

18 comments:

வெங்கட் நாகராஜ் said...

:)

சிறப்பான பகிர்வு. உங்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் திருக்கார்த்திகை திருநாள் வாழ்த்துகள்.

ADHI VENKAT said...

பறக்கும் தட்டு போல் இருந்தாலும் ஜோர்.....

எங்களுக்கும் இங்கே இனிமையாக நடந்தது. திருவண்ணாமலை தீபமான நேற்று தான் எங்களுக்கும். வீட்டை சுற்றி விளக்குகள் வைத்து அப்பமும், பழங்களும் வைத்து நிவேதனம் செய்தாச்சு.

பரணி தீபமும் வைத்தேன். இன்றும் வைத்தாயிற்று. கோவிலில் இன்று தான்.

திண்டுக்கல் தனபாலன் said...

பளீரென்று இருக்கின்றன...

தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

அப்பாதுரை said...

நானும் அதைத்தான் கேட்க நினைச்சேன்.. ஸ்கேட் பண்ணிகிட்டே எடுத்தீங்களானு?

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட்:)பறக்கும் கார்த்திகை விளக்குகள்.!

வல்லிசிம்ஹன் said...

என்ன எல்லாம்செய்தீங்க ஆதி. எங்க வீட்ல தேங்கய் பழம் பாயசம் வடை அப்பம் தான்.
வருகைக்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

பழைய கால சினிமாக்கள்ல இப்படித்தான் டூயட் பாடுவாங்க தனபாலன்:)
உங்களுக்கும் நல்வாழ்த்துகள்.

Ranjani Narayanan said...

ஒற்றைக் கண் திறந்த காமிராவை வைத்துக் கொண்டு இத்தனை அழகாக எடுத்திருக்கிறீர்களே!

தீபங்கள் காற்றில் அலை பாய்ந்து கொண்டிருந்தனவோ என்று நினைத்தேன்.
திருக் கார்த்திகை இங்கும் நன்றாக நடந்தேறியது.

திருக் கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்!

சாந்தி மாரியப்பன் said...

அரைக்கண்ணில் எடுத்தாலும் அஞ்சாவது படத்தை அழகாத்தந்திருக்கு உங்க காமிரா :-)

Matangi Mawley said...

Nice pictures! :)

வல்லிசிம்ஹன் said...

ஸ்கேட்டுக்கு நான் எங்க போவேன். நடையே நாட்டியம்:)

உங்க ஊரில சில்லு காத்து. எங்க ஊரில கார்த்திகைக் கத்து. அவ்வளவுதான் வித்யாசம் துரை.

ஸ்ரீராம். said...

அதே மெனுவோடு இங்கும் கார்த்திகைக் கொண்டாட்டம் நடந்தேறியது! 'தீபங்கள் பேசும்... திருக்கார்த்திகை மாசம்...'

:))

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் .காற்றும் அடித்தது. விளக்கு வச்சதும் காத்துவரும்னு அம்மா சொல்வார்:)

இர்ண்டுமா சேர்ந்து விநோத காட்சியாக அமைந்தது. நன்றிமா ரஞ்சனி.

வல்லிசிம்ஹன் said...

வேற ஏதாவதுனா கழட்டிப் பார்க்கலாம். காமிராவை என்ன செய்வது சாரல்.:)
வருகைக்கு நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மாதங்கி.தான்கீஸ்;)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். தீபங்கள் பேசி ஆடிய
திருக்கார்த்திகை.

நிங்களும் என் வழிதான் என்று தெரிய நிறைய சந்தோஷம்!!!!

ராமலக்ஷ்மி said...

காற்றில் ஆடும் தீபங்கள் என வைத்துக் கொள்வோம் வல்லிம்மா:). அழகான காட்சிகள். இனிய வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

திருக்கார்த்திகை படங்கள் எல்லாம் அழகு.லக்ஷ்மி நரசிம்மரும். அம்மனும் அழகு.

குழந்தைகளை நினைத்துக் கொண்டு தான் தீபங்களை ஏற்றுகிறேன் நானும்.
ஊரிலிருந்து வந்தவுடன் திருக் கார்த்திகை என்பதால் இந்தமுறை எளிமையான திருக்கார்த்திகை கொண்டாட்டம்.