Blog Archive

Wednesday, November 14, 2012

மரங்கள் பிட் போட்டிக்கு -நவம்பர் மாதம்

பெண்வீட்டு மரம்(நான் எடுத்த படம்  இல்லை)
நந்தவனத்துக்குள் ஒரு பாதைமரம்
வயலோடு மரம்
Add caption
பிம்பங்களோடு மரங்கள்
அரபு நாட்டு மரங்கள்
ஸ்விஸ் நாட்டின்  பசுமை மரங்கள்
சஃபோட்டா  மரம் பொன்சாய் வழி
மரத்துக்குச் சுவர் பலமா
மஞ்சள் வெய்யில்  மாலையிட்ட மரம்
எங்கெங்கு காணினும் மரங்கள்
கடற்கரை  மரங்கள்
பொன்சாய்  மரம்..கூகிளார் கொடுத்தது
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

31 comments:

sury siva said...

பளிச் அப்படின்னு ஒண்ணு தோன்றது.
புத்தருக்கு போதிமரத்தடியில் ஞானோதயம் .
எனக்கு ஒருவேளை
பொன்ஸாய் ஆக இருக்குமோ என்று ஒரு சபலம்.

நாளைலேந்து அதுக்கடியிலே ஆத்துக்காரிக்குத் தெரியாம‌
உட்கார்ந்து பார்க்கணும்.

சுப்பு தாத்தா
பி.கு: இந்த மரங்களை நீங்கள் பார்க்கவேண்டுமே..
http://www.neatorama.com/2007/03/21/10-most-magnificent-trees-in-the-world

Thozhirkalam Channel said...

உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

மிக வேகமான திரட்டி
http://otti.makkalsanthai.com

பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

இராஜராஜேஸ்வரி said...

குதூகல குழந்தைகள் தின வாழ்த்துகள் ..

ராமலக்ஷ்மி said...

பசுமையான பகிர்வு. ‘எங்கெங்கு காணினும்’ மனதைக் கொள்ளை கொள்கிறது.

ஷைலஜா said...

மரம் பார்த்தபின்பு அதை மறக்க மனம் தோண வில்லையே அட்டகாசம் வல்லிமா.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா... அருமையான படங்கள்...

பொன்சாய் மரம் சூப்பர்....

மாதேவி said...

குழந்தைகள் தினநாளில் பசியமரங்கள் குளிர்ச்சி தந்து மனதை நிறைக்கின்றன.

ஸ்ரீராம். said...

அருமையான படங்கள். இதில் எது போட்டிக்கு அனுப்பப் பட்டிருக்கிறது? கூகிள் படங்கள் போட்டிக்கு அனுப்பலாமா?

வல்லிசிம்ஹன் said...

மரங்களைப் பார்த்து ஒரே அதிசயம். மிக மிக நன்றி சுப்பு சார்.
உங்களுக்கு இருக்கும் ஞானத்தை எங்களுக்கும் பகிர்ந்து கொடுங்கள்.
நம் வாழ்வே நமக்குப் போதி மரம்தானே,

Ranjani Narayanan said...

புகைப் படங்கள் சூப்பர்!

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

அப்பாதுரை said...

சப்போட்டா காய்க்குமா பொன்சாய் சைசில்?

மகேந்திரன் said...

பசுமையைக் கண்டவுடன்
மனம் குதூகலிக்கிறது ....
அழகான படங்கள்...

வல்லிசிம்ஹன் said...

நன்றி இராஜராஜேஸ்வரி .உலக குழந்தைகள் எல்லோரும் சுகமாகச் சந்தோஷமாக இருக்க வேண்டும்

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி. உங்கள் காமிரா மட்டும் அங்கே சென்றால் எத்தனை மாயம் செய்யும் என்று நினைத்துப் பார்த்தே மகிழ்ச்சி அடைறேன்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

மறக்க முடியாத கதை கவிதைகள் படைப்பவரால் மரங்களை மறக்க முடியுமா. காவிரி பூம்பொழில் கருமாணிக்கம் ரங்க நகர் கவிதாயினி இல்லையா.!!நன்றி ஷைல்ஸ்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தனபாலன் . ஒரு பொன்சாய் கூகிளார் கொடுத்தது. மற்றது எங்கள் வீட்டு மரம்.எனக்குப் பொன்சாயில் அவ்வளவு ஈடுபாடு கிடையாது. மறுபாதிக்கு விருப்பம்:)

வல்லிசிம்ஹன் said...

குழந்தைகள் நன்றாக இருக்க மரங்களும் தேவை இல்லையா மாதேவி.
வருகைக்கு மிகவும் நன்றி. குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா. ஸ்ரீராம். அனுப்பறதாவது. கூகிள் படங்களையா. அப்புறம் தருமி கதையாகிடும்:)
இதெல்லாம் நானே எடுத்த படங்களை அனுப்பவேண்டிய போட்டி:)நான் அனுப்பியது வேறு ஒன்று. பிட் ஆல்பத்தில் இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

நன்றி பிரியமுடன் பிரபு. நீங்களும் பங்கெடுக்கிறீர்களா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ரஞ்சனி.
படங்களை ரசித்துப் பாராட்டியதற்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

சஃபோட்டா காய்க்கும் . எலுமிச்சம்பழ சைசில் துரை.நான் சாப்பிட்டதில். மெயின்லி பொன்சாய் மேல் விருப்பமில்லை. அற்புதக்கலைதான்.
ஆனாலும் ஈடுபாடு கிடையாது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மஹேந்திரன்.ரசித்துப் பாராட்டியதிற்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

துரை சாப்பிட்டதில்லை என்று படிக்கவும்:)

Geetha Sambasivam said...

அடக்கி ஒடுக்கி வளர்க்கப் பட்ட குழந்தைகள் நினைவில் வரும், போன்சாய் மரங்களைப் பார்க்கையில். :((( அது அதுக்குனு ஒரு இயற்கை நியதி இருக்கே. அதை மாத்தினால் என்ன இருந்தாலும் மனசுக்கு வேதனையாத் தான் இருக்கு. :(((

மரங்கள் அருமை தான். இன்னிக்குக் காலம்பரத் தான் ஆண்டாளம்மா ரங்கனுக்கு அபிஷேக நீர் தங்கக் குடத்தில் கொண்டு போறதைப் பார்த்தேன். இந்த மரங்கள் இல்லைனா ஆண்டாளம்மா என்ன செய்வா! :)))))

அப்பாதுரை said...

அடக்கி ஒடுக்கப்பட்ட குழந்தைகள் போல் பொன்சாய் மரம் - அபாரமான கவிதை கீதா சாம்பசிவம்.. இதை எதிலயாவது உபயோகிச்சுக்கறேனே?

தக்குடு said...

அடடா!! நம்ப வல்லிம்மா கேமராவோட போட்டிக்கு கிளம்பியாச்சு போலருக்கே!! :)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா.எனக்கும் சம்மதமில்லை.
பூக்களைக் கண்டபடி வளைத்து இகிபானா செய்கிறார்களே அதுவும் பிடிக்காது.
எனக்கென்னவோ நாம் கத்திரிக்கோலை எடுத்து செடிபக்கம் போனாலே அது நடுங்குவது போலத் தோணும்:(
ஆண்டாளம்மாவை அடுத்த தடவை பார்க்கையில் எப்படி இருக்கனு கேளுங்கோ:)

வல்லிசிம்ஹன் said...

நான் கிளம்பி10 வருஷமாச்சு தக்குடு:)
காமிராவோட போட்டி இல்ல. அது என் தோழி.:)

Geetha Sambasivam said...

அப்பாதுரை, தாராளமா, எஞ்சாய்! உங்களுக்கு இல்லாததா! :))))))

Priya said...

அருமையான படங்கள்...!

கவியாழி said...

அத்தனையும் அருமை சத்தமில்லா இனிமை