About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Friday, November 16, 2012

பச்சை மண்....1

Add caption
 


கிருஷ்ணா     வைகுந்தா மாதவா


'' பிலாஜி கிங்''
*******************
இது ஒரு பலகாரம். இனிப்புப் பட்சணம். வாயில் போட வேண்டியதுதான்.
ம்ம்ம் என்பதற்கு முன்னால் தொண்டைக்குள் போய் விடும்.

''எனக்குப் பிடிக்கலை பாட்டி. இட் இஸ் ஸோ ஸ்வீட்.''
இது   பேத்தி.

ஓ!  இட் இஸ்  ஓகே ஐ  கஸ்'' இது பெரியவர்:)

பிலாஜி கிங் பெஸ்ட்  பாட்டி. அம்மா  மேட் இட்.

இது நடுப் பெருமாள்.:)
என்னடா அது புதுப் பேரா  இருக்கே.
அது ஸ்விம் பண்ணும் பாட்டி.
என்னது!!!!!!

ஸ்வீட்   வாட்டர்ல  ஸ்விம் பண்ணும்.
ஓ வெள்ளையா இருக்குமா.???

இல்லாஆஆ.
ப்ரௌன்  கலர்.

வெல்லச் சீடையா செய்தா உங்க அம்மா. தீபாவளிக்கு.
அவனைச் சீண்டினேன்.

இல்ல பிலாஜி கிங்.

அம்மா பாட்டிக்குத் தெரியவே இல்ல. நீ சொல்லு.
என்னடிம்மா பண்ண?
வாயில நுழையாத ஸ்வீட்  பேரா இருக்கே!!அவன் சாப்பிட்டது இரண்டு தான் மா.
அதுல  நாக்குத் தமிழ்ல  புரளறது.:)பலவிதமாச் சொல்லிப் பார்த்து இந்தப் பெயர்ல வந்து நின்னிருக்கான்:)

குலாப்ஜாமுன்  தான் இந்தப் பாடு பட்டுவிட்டது.:)

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

21 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

குலாப்ஜாமுன் தானா...!

'பிலாஜி கிங்'கும் நல்லா இருக்கு...

வல்லிசிம்ஹன் said...

வரணும் தனபாலன்.
அவன் அம்மா,
காது வாங்கித்தாப்பான்னு அழுதாள். மூணு வயசில. கோயம்பத்தூர் கடைகளில் பலகாரக் கடையில் கிடைத்தது.
எனக்குப் பயம் பொண்ணு நர மாமிசம் கேக்கறாளான்னு.
குட்டிக் கைகளினால் காட்டினாளே ஒரு பெட்டியை. நல்ல வறுத்த வைத்த முழு முந்திரி!!!!

Vasudevan Tirumurti said...

:-)))
குழந்தைகள் உலகம்... சொர்க்கம்!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் தம்பி வாசுதேவன்.
இரண்டாவது பேத்தி ர னா வரலை இன்னும்.
வாதே வாதே போகணும்னு ஒரே பிடிவாதம்.
சும்மா விடும்மான்னு பையன் சொல்லிட்டான்.
பிறகுதான் தெரிந்தது. ராதே ராதேன்னு ஒரு குஜராத்தி சாப்பாட்டுக் கடை. அதில் இவளுக்கு ஒரு மசல்லா பால் பிடிக்கும். அதைத்தான் ராதையை வாதே ஆக்கிவிட்டாள்:)

geethasmbsvm6 said...

ஆஹா, நினைச்சேன். ப்ரவுன் கலர்னதுமே. :))) இனிமே பிலாஜிகிங்கு தான்! :))))))

அமைதிச்சாரல் said...

"பிலாஜி கிங்".. குலாப்ஜாமூனை விட இனிக்குதே இந்த ஸ்வீட் :-)

வல்லிசிம்ஹன் said...

ஆமா கீதா. அப்படித்தான் ஆகிப் போகிறது.
தமிழ்ல பேசினால் ஆங்கிலத்தில் பதில் சொல்றான்.அவன் அம்மா தினப்படி தமிழ் க்ளாஸ் நடத்துகிறாள்.:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் சாரல். தீபாவளி ஓய்ந்ததா.

அம்மாவுக்குத் தெரிந்து ஒண்ணு. தெரியாம இரண்டுனு முழுங்கி இருக்காரு ஆளு. இப்போ வயிறு மந்தம்:)பிலாஜி கிங் வேலை!!!!

ஸ்ரீராம். said...

இனி இந்தப் பெயரே நிலைக்கட்டும்! நல்லா இருக்கு! நான் கூட என்னமோ ஏதோ, பின்னாடி ரெசிப்பி வரும் என்று படித்துக் கொண்டு வந்தேன்! :))

இராஜராஜேஸ்வரி said...

nice sweet ...

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம், நான் ரெசிபி எழுதற நாட்கள் இன்னும் கொஞ்ச காலம் கழித்து.:)

இப்போதைக்கு பிலாஜி கிங் தான்.:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் இராஜராஜேஸ்வரி. மிகவும் நன்றி.

Ranjani Narayanan said...

அடடா! எங்க வீட்டுல இந்த தீபாவளிக்கு பிலாஜி கிங் தான்!

காமென்ட்ல எழுதி இருக்கிற 'காது' பற்றியும் பதிவிலேயே போட்டிருக்கலாம்.

'வாதே' வும் இனி பிரபலம் ஆகி விடும்!

சுவாரஸ்யம்!

குழந்தைகளின் மழலைப் பேச்சுக்கு ஈடு இணை உண்டா?

வல்லிசிம்ஹன் said...

பெரிய பேரன் ஸ்பஷ்டமாப் பேசுவான் ரஞ்சனி. மிச்ச நாலும் மழலையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
பிலாஜி கிங் சொன்னவந்தான் அல்லிகா புத்தர் சொன்னான்:)
(ஹெலிகாப்டர்)
வாகுளமீன் தெரியுமா:)
வாக்க்குவம் க்ளீனர்!!!! நிறைய வார்த்தைகளை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.நன்றி மா.

மகேந்திரன் said...

பிலாஜி கிங்
king of sweet தான் அம்மா...

வல்லிசிம்ஹன் said...

வாங்க மகேந்திரன்.
உங்கள் அன்பு வார்த்தைகளில் தெரிகிறது.அது அந்தக் குழந்தைக்கு அப்படியே வந்து சேரட்டும். மிக நன்றி.

கோவை2தில்லி said...

பிலாஜி கிங் சூப்பரா இருக்கே....

இனி இது தான்.....

மழலை மிகவும் அழகானது.

மாதேவி said...

ஆகா! படிக்கும்போது இதாகத்தான் இருக்கும் என நினைத்தேன்.

சூப்பர் பிலாஜி கிங்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆதி, உங்களுக்கு ரோஷ்ணியின் மழலை நினைவிருக்கும் போது எழுதிவையுங்கள் அளவில்லாத இன்பம் அது மட்டுமே தரும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,குழந்தைகள்
உலகம் தனி.
இதையே சினேகிதனின் பிறந்தநாள் விழாவில் என்ன சாப்பிட்டான் என்று ஆங்கிலத்தில் பிசிறு தட்டாமல் விவரிப்பான்.
தமிழும் வந்துவிட்டால் நன்றாக இருக்கும்.
நன்றி மா.

கோவை2தில்லி said...

அன்பு வல்லிம்மா,

எங்கள் குழந்தையின் மழலை மொழி பற்றி என் கணவர் எழுதியுள்ள பதிவின் சுட்டி இங்கே....

http://venkatnagaraj.blogspot.com/2010/10/blog-post.html

நேரம் கிடைக்கும் போது வாசித்து பார்த்து கருத்தை சொல்லுங்கள்.