Blog Archive

Monday, October 29, 2012

சபை நாகரீகம்

தோழியின் பரிசு உரலில் கட்டுண்ட தாமோதரன்(ராமலக்ஷ்மிக்காக)
கண்ணன் சபை


நவராத்திரி  கோலாஹலம் பூர்த்தியாகி,    சச்சியின் உதவியோடு
பெரிய பொம்மைகளை   முதலில் பேப்பரில் சுற்றிப் பிறகு  பழைய
புடவைகளில் சுற்றி  மாடிப்படிகளில் ஏறிப் பெட்டிகளுக்குள்   பிரகாசமாக ஓய்வெடுக்கப் புகுந்தார்கள்.
குட்டித்
தெய்வங்கள் .

கொலு நடுவில் சுண்டல் மகிமையால் சிங்கத்துக்கு வயிற்றுவலி. மழை என்று   ஒரு கொலுவீட்டுக்குக் கூடப் போகவில்லை.

நல்ல வேளையாக அழைத்தவர்கள் அனைவரும் வந்து கௌரவப் படுத்திச் சென்றனர்.

வாங்கி வைத்திருந்த,பழங்கள் தேங்காய்கள்,ரவிக்கைத் துணிகள்  ஒரு குட்டி
ஹனுமான் என்று சுண்டலோடு கொடுத்தது மனம் நிறைவாக இருந்தது.
இவர்களில்  வீட்டுத் துணிமணிகளை இஸ்திரி செய்து  உதவி  செய்யும்  மீனாவின்  பெரிய பெண் செய்த  சீர்வரிசை ஆச்சாரியமாக இருந்தது.

என் இரண்டு கைகளுக்கும்  ஒவ்வொரு  டஜன்  கண்ணைப் பறிக்கும் கண்ணாடி வளையல்கள் ,பழங்கள் என்று   கொண்டு வந்திருந்தாள்.
வளையலைப் பார்த்ததுமே மனம் நெகிழ்ந்துவிட்டது. ஏம்மா செலவு செய்தாய் என்றால், நாங்கள் கொலு வைக்கும் வழக்கம் கிடையாதம்மா.

ஆனால் பதில் மரியாதை செய்வது நல்லது என்று என் மாமியார் சொன்னார்.

அவளுடைய இரண்டு குழந்தைகளையும் நல்ல பள்ளியில்  படிக்க வைக்கிறாள். இது ஒரு சந்தோஷம்தான்.
இன்னோருவர் நம் வலையுலகத்தைச் சேர்ந்தவர்
  பழங்கள்  நிறைந்த பையோடு தம்பதி சமேதராக வந்து  கௌரவம்
செய்தார்,.

அவர்கள் கிளம்பிப் போனவுடன் பார்த்தால் ...அத்தனை ஆபிள், மாதுளம்பழங்கள்  என்று  பெரிய பை நிறையப் பழங்கள்.
அவர் ரொம்பக் கூச்ச சுபாவம் உடையவராதலால் அவரைப் படம் எடுக்கவும் எனக்கு மனமில்லை.:) நம்மவர் எங்களவர் என்று பெருமைப் பட்டுக் கொண்டேன்.
இன்னோரு தோழி அழகான உரலில் கட்டின கிருஷ்ணனைக்  கொண்டு வந்து வைத்தார். அமைதியான அந்தத் தோழியின் பாசத்தை மெச்சிக் கொண்டேன்.

அழகா   இருக்கு கொலு, ஆனால் படிகட்டாமல் வைப்பது சாஸ்திரமில்லையே
என்று  அலுத்தவர்   ஒருவர்..
என்ன செய்வது என்னிடம் இருக்கும் இடத்தில் மற்றவர்களைச் சிரமப் படுத்தாமல்  நவராத்திரி நாயகிகளையும் அவர்கள் நாயகர்களையும்  மரியாதை செய்த நிறைவு இருக்கிறது.

இனி செய்ய வேண்டியது   கொலுவுக்கு அழைத்தவர்கள் வீட்டிற்குப் போய் மன்னாப்புக் கேட்க வேண்டியது பாக்கி. :)
அடுத்த நவராத்திரியில் எல்லாவற்றையும் சரிசெய்துவிடலாம்;)
தீவுளிக்கு   உடைகள் எடுத்தாச்சா.

இந்தத்தடவை நம் வீட்டில் பட்டாசு கிடையாது.
காசும் மிச்சம். கரியும் மிச்சம்.


என்று சொன்னவர்களும் உண்டு:)




 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

23 comments:

சாந்தி மாரியப்பன் said...

நிறைவா இருக்கு கண்ணன் சபை.

ராமலக்ஷ்மி said...

அன்பால் உயர்ந்து விட்ட அழகிய பரிசு கண்ணாடி வளையல்கள். தோழியின் நேசமாக வந்து சேர்ந்த உரலில் கட்டிய பாலக் கிருஷ்ணனை படத்தில் தேடினேன். சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு எனப் பட்டாசு பல ஆண்டுகளாக வாங்குவதில்லை.

துளசி கோபால் said...

அருமை!!!!

வளையல் கொடுத்த அன்புள்ளத்தை நினைச்சால் மகிழ்ச்சியாவும் பெருமையாவுமிருக்கு!

தீவுளிக்குப் புடவை .... கப்போர்டை ஆராய்ஞ்சால் கட்டாயம் கிடைச்சுரும்.

மூகாம்பிகை காம்ப்ளெக்ஸில் மூணு வருசத்துக்கு முன் நாம் போய் ஒரு புடவை வாங்கினோமே .... அதைத்தான் முந்தாநாள் வீட்டு விழாவுக்கு ரிலீஸ் செஞ்சேன்:-)

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகாக அருமையாக எல்லாம் சொல்லி நவராத்திரிக்கு விடைகொடுத்து விட்டு தீபாவளியை வரவேற்றுள்ளது, மனதுக்கு நிறைவாக உள்ளது. பாராட்டுக்கள்.

ஸ்ரீராம். said...

உரலில் கட்டிய கிருஷ்ணர் அழகு. என் கண்ணில் படவில்லையே என்று பார்த்தேன். ஒரு வழியாக நவராத்திரிக் கொலு முடிந்தது. இனி தீபாவளிதான்!

வளையல் அன்பளிப்பு... உங்கள் அன்புக்கு அவர்களின் பதில் அன்பு!

Geetha Sambasivam said...

உரலில் கட்டுண்ட குட்டிக் கிருஷ்ணனை எடுத்துக் கொஞ்சணும் போல இருக்கே! இங்கேயும் வளையல்கள் நிறைய வந்தன. எல்லாம் ஒரு பெட்டியில் போட்டு வைச்சிருக்கேன். :))))மற்றபடி சிறு பெண்குழந்தைகள் தினம் தவறாமல் வந்து பாட்டுப்பாடி, கொட்டம் அடித்து நவராத்திரியைச் சிறப்புறச் செய்தார்கள். ஆக இங்கேயும் நிறைவான நவராத்திரிதான். தீவுளிக்கும் எடுத்தாச்சு.

Geetha Sambasivam said...

போன தீவுளிக்குப் பையர், மாட்டுப்பெண்ணோடு ஹூஸ்டனில் கொண்டாடினோம். இந்த வருஷம் இங்கே! :)))

இராஜராஜேஸ்வரி said...

நிறைவாய் , அழ்கான கொலு பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

ராமலக்ஷ்மி said...

உரலில் கட்டிய தாமோதரன் அழகோ அழகு:)! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி வல்லிம்மா.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... வாழ்த்துக்கள் அம்மா...

வெங்கட் நாகராஜ் said...

உரலில் கடிட்டிய தாமோதரன் மிக அழகு!

சிறப்பான பகிர்வு...

//கொலு நடுவில் சுண்டல் மகிமையால் சிங்கத்துக்கு வயிற்றுவலி.// :) பாதி வீட்டில் இதே தொல்லை தானாம்!

வல்லிசிம்ஹன் said...

இன்னும் நல்லபடியா வச்சிருக்கலாம் சாரல்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி.அந்தப் பெண் வளையல்கள் எனக்குப் பிடிக்கும் என்று தெரிந்து கொண்டு வாங்கி வந்தது.
வருடத்துக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வரும்.மாமியாரையும் விடாமல் அழைத்து வரும்.

ரொம்பப் பொறுமையான பெண்.
கண்ணனை வைத்த பிறகு படம் எடுக்கவில்லை. இப்பொழுது எடுத்துவிட்டேன்மா:)

வல்லிசிம்ஹன் said...

ஆஹா மறக்க முடியாத நிகழ்வு இல்லை நாம் மூகாம்பிகா காம்ப்ளெக்ஸ் போனது:)புடவை வாங்கி மூணு வருஷம் கட்டாமல் இருந்த புண்ணியவதின்னு பட்டம் கொடுக்கப் போகிறேன்:)
துளசி இப்பொழுது தோழிகள் கொடுத்த வளையலகளால் என் பெட்டி நிறைந்தது. அதுவும் சண்டிகர்ல ஒருத்தங்க இருந்தாங்க. அவங்க கொடுத்ததும் பளபளப்பா மின்னுது:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் விஜிகே சார். அப்ப அப்ப நடக்கிறதைப் பதிந்துவிடணும்னு நினைக்கிறேன். இல்லாவிட்டால் மறதி வந்துவிடும்.
வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்.வளையல் கைகளை நிறைத்தால் ,பழங்கள் நாவுக்குச் சுவையும் உடலுக்கு பலமும் கொடுத்தன. மொத்தத்தில் அன்பு உள்ளத்தை நிறைத்தது.
உங்களுக்கும் திருமதி ஸ்ரீராமுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.வலைப்பதிவுகள் எத்தனை இனிய உறவுகளைக் கொடுக்கின்றன பார்த்தீர்களா.

வல்லிசிம்ஹன் said...

சென்னையில் பெண்களுக்குப் பாட்டுப்பட மறந்துவிட்டது ..இல்லாவிட்டால் எனக்குத்தான் இசை தெரிந்த பெண்கள் தோழிகளாக இல்லையோ!!
ஸ்ரீரங்கத்தில் பரவாயில்லை. குழந்தைகள் இல்லாத கொலு சோபிக்குமா. கீதா, அந்த விதத்தில் உங்கள் கொலு பாக்கியம் செய்தது.உங்கள் உபசாரத்தில் அந்தப்பிள்ளைகள் மீண்டும் மீண்டும் வந்ததில் வியப்பேதும் இல்லை.

வல்லிசிம்ஹன் said...

நன்றி இராஜராஜேஸ்வரி.
நவராத்திரி நாட்கள் எட்டேதான் இந்தத் தடவை.
மழை நான்கு நாட்களை விழுங்கிவிட்டது.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி.நீங்கள் சொல்லியிராவிட்டால் ,இந்தக் கண்ணனைப் படமெடுத்துப் போட்டிருப்பது சந்தேகமே.

வல்லிசிம்ஹன் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி தனபாலன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்,வெங்கட்.
இத்தனைக்கும் பார்த்துப் பார்த்துத்தான் சமைக்கிறோம்.

வாய்வு பிடிப்பு நம்மை விடுவதில்லை:(

ADHI VENKAT said...

உரலில் கட்டுண்ட தாமோதரன் கண்ணை பறிக்கிறது. சுத்திப் போடுங்க.....:)

வளையல் வாங்கிக் கொடுத்தது மனதை நெகிழ்த்தியது...

தீபாவளி இங்கேயும் வந்தாச்சு. திருச்சி புகழ் சாரதாஸில் முடிந்தது. வடக்கும், தெற்குமாக இரு புடவைகள்....:)

Unknown said...

மிகவும் அருமை நன்றி