Blog Archive

Wednesday, December 31, 2014

நட்பும் அதன் வரையறைகளும்


சந்தோஷப் பூக்கள்.இந்தப் பதிவைப் புதுப்பிக்க ஒரு காரணம் எங்கள் ப்ளாக்
அரட்டை.
அதில் இந்த நிகழ்வில் வரும் பாலாண்ணாவைப் பற்றி
லதா என்பவர் பேச,
அதை ஃபார்வர்ட் செய்த சுஜாதா யக்ஞராமன்
இடம் நான் கேள்விக்கணை தொடுக்க
இதோ கிடைத்தது,
என் இன்னோரு குடும்பம்.
சந்திராவும் அவள் சகோதரிகளும்
அண்ணா தம்பி பேரக்குழந்தைகள்,
நம் சுஜா எல்லோரும் என்றும் இனிமை 
பெற வேண்டும். இப்படிக்கு ஆண்டாள் என்கிற வல்லிம்மா
என்கிற ரேவதி நரசிம்ஹன்.

1964தோழி வீட்டுப் பிறந்தநாள்

 64 ஆம் வருடம் வாழ்க்கையில் மறக்க முடியாத வருடம்.
கல்லூரியை ஒரே ஒரு வருடம் சுவைத்த காலம்.

காண்டீனில் ஊத்தப்பம் சாப்பிட்ட காலம்.
குழுக்களாகப் பிரிந்து  தோழிகளுடன் ஓரிரு படங்கள் பார்த்த காலம்.

ஆங்கிலப் பேராசிரியை உடுத்தும் உடைகள் மேல் மோகம் கொண்டகாலம்.
ஷம்மி கபூர் ,சாதனா,ராஜ் கபூர்,வைஜயந்தி மாலா,பத்மினி,ஆஷா பரேக் என்று
பேசித்திரிந்தகாலம்.

பாட்டுப் போட்டிகளுக்கெல்லாம் போய்ப் பங்கெடுத்த காலம்.
தமிழ் நிறையக் கற்ற காலம்.நிறைவான நாட்கள்.
அதையெல்லாம் விட இனிப்பான விஷயம் நிறைய தோழிகள் கிடைத்தது.
என் திண்டுக்கல் தோழிகளைப் பிரிந்து, இந்த மெட்ராஸ் தோழிகளைப் பார்த்துப் பேச தயக்கம் நிறையவே இருந்தது.
அதையெல்லாம் மாற்றினவள்  என் அன்புத் தோழி சந்திரா.

அவள் குடும்பம் பெரியது
இரண்டு அண்ணாக்கள்,ஒரு தம்பி
மொத்தம் அவர்கள் ஆறு சகோதரிகள்.
அனைவரும் தங்கங்கள். மிருதுவான பேச்சு.
உயர்ந்த படிப்பு.
நிறைய உழைப்பு,
நல்ல சந்தோஷம்.இதுதான் சந்திராவின் குடும்பம்.

குறும்புக்கு என்றே பிறந்த தம்பி குமார்.
 சகோதரிகள்.
இவளையும் சேர்த்து ஒன்பது  பேர்.


கல்லூரி முதல்நாள் பாட்டி என்னை இவர்கள் வீட்டில் சேர்த்து,சந்திரா எங்கள் ஆண்டாளையும் உன்னுடன் எதிராஜுக்கு அழைச்சிண்டு போகறியா. அவளுக்கு  இங்க ஒன்றும் தெரியாது. என்று சொன்னது தான் தாமதம்.
முழுக் குடும்பமும் எனக்கு உறவாகிவிட்டது.

கலாட்டா,கிண்டல்,மாலை டிபன்,கங்காதீஸ்வரர் கோவில்,ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில் என்று எங்கே போனாலும் சேர்ந்தே போவோம். கனகா,கமலா,சுந்தரா(களக்காட்டுக் காரி) என்று நல்ல நட்பு உருவாகியது.

சந்திராவின் வீட்டு மாடியில் அவளின் டாக்டர் அத்தையும்,ஒரு சித்தப்பாவும் இருந்தார்கள். சித்தப்பாவுக்குக் குழந்தை பிறந்து ஆறு மாதம் ஆகி இருந்தது,.

படித்த நேரம் போக பாட்டு,ரேடியோ,உஷாவோடு விளையாட்டு என்று நேரம் போவதே தெரியாது..
இருட்டுவதற்கு முன்  வீட்டுக்குப் போய்விடவேண்டும்:)
இல்லாவிட்டால் சின்ன மாமா குரல் கேட்கும்.
ஓடிவிடுவேன். அப்பொழுதுதான் ஊத்தாம்மாவுக்கு ஆண்டு நிறைவு வருகிறது என்று தெரிந்து கொண்டேன்.
ஏதோ எங்கள் வீட்டுக் கொண்டாட்டம் போல ஒரே மகிழ்ச்சி.

முதல்நாள் சாயந்திரம் பூராவும் பூ தொடுப்பது, யார் யார் என்ன பாவாடை,தாவணி என்ன பூ.
எத்தனை பேர் வருவார்கள் என்று கேட்டால் தஞ்சாவூரிலிருந்து சித்தியின் உறவினர்கள்.
சந்திராவின் அக்காவோட மாமியார் வகையறா.
சந்திரா அப்பாவின்  ஆஃஃபீஸ் நண்பர்கள்  என்று ஒரு நூறு பேருக்குக் குறையாது என்றதும். நாங்கள் எங்களுக்குள்ளேயே வேலைகளைப் பிரித்துக் கொண்டோம் வரவேற்பு,உபசரிப்பு, பந்தி விசாரிப்பு,
குழந்தையை அழவிடாமல் பார்த்துக் கொள்வது.  இப்படிப் போய்க் கொண்டு இருந்தது லிஸ்ட்.
சந்திராவின் அம்மா, அப்படியே  கோவிலில் இருக்கும் அம்பாள் மாதிரி கனிவு கொண்டவர்.
ரேவதி ,பாட்டி கிட்டச் சரியா  சொல்லிட்டு வரணும். தேடவைக்காதே என்று என்னிடம் சொல்லிவைத்தார். சரி மாமி என்று தலையாட்டிவிட்டேன்.
அப்பொழுதெல்லாம்  காதில் ரிங் போட்டுக் கொள்வது ஃபேஷன்.

கண்ணுக்கு மை,பின்னலுக்கு ரிப்பன் கூடாது.
அதுதானாக வந்து   முன்னால் விழுந்துவிடும்.:)

மாட்சிங்காகக் கங்காதீஸ்வர குளக்கரை கடையில் பச்சை மாலை, பச்சை மணி வைத்த ரிங் என்று எனக்கு வாங்கியாச்சு.  பச்சை கண்ணாடி வளையல்கள்
பச்சைப் பட்டுப்பாவாடை, அப்பொழுது வந்திருந்த ஃபுல்வாயில் தாவணி.

சந்திராவுக்கு எலிட்ரோப்(நாங்கள் தமிழ் பேச மாட்டோம். முடிந்த வரை ஆங்கிலம் தான்:)  )வண்ணத்தில் பாவாடை,பின்க் தாவணி.இரண்டும் கலந்த மேல்சட்டை.,தங்கை நிம்மிக்கு  லட்சுமி   சிவப்பு எல்லாமே. அவள் தங்கை கௌரி
  பாவாடை சட்டை தான்.இரட்டைப் பின்னலோடு மான்குட்டி போல
ஓடுவாள்.
எங்கள் அணிவகுப்பைப் பார்த்துப் பெரியவர்கள் நமட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டார்கள்.

ஹூம் அவர்கள் கண்டார்களா எங்கள் திறமையை.
உஷாப் பாப்பாக்குக் காது குத்தினபோது  நடந்த அமர்க்களம்.!!!
அம்மாடி அலறிவிட்டோம் நாங்கள். கௌரிக் குட்டி
பாப்பாவுக்கு பிஸ்கட் கொடுத்துப் பார்த்துக் கொண்டது.
சந்திரா வாசலில் பன்னீர்சொம்பு,கல்கண்டு சந்தனம் எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு  போற வருகிறவர்களையெல்லாம் பார்த்துக் கொண்டாள். அப்பப்போ  எங்களையும் பன்னீரில் நனைத்துவிட்டுப் போனாள

நானும் நிம்மியும் சாப்பிட வந்தவர்களைக் கவனிக்க ஆரம்பித்தோம்.

உண்மையாகவே   உபசரித்ததால் இருவருக்கும் நல்ல பேர்.

தஞ்சாவூர்த் தாத்தா ஏ பொண்ணே   நீ சுந்தரேசனோட மூன்றாவது பெண்ணா. ஜாடையே இல்லையே என்றார்.
எனக்கு ஆமாம் என்று சொல்ல ஆசை. அதற்குள் நிம்மி
அவ எங்க ஃப்ரண்டு. இங்கதான் இருப்பா. என்றதும் அவர்
கொஞ்சம் நேரம் கழித்துக் கூப்பிட்டார். எல்லாரையும் கவனிக்கணும்.

 உங்கபக்கத்தையே   பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது! என்று   கொஞ்சம் மிரட்டிப் பார்த்தார். நாங்கள் அதுக்கெல்லாம் அஞ்சுவோமா.

தாத்தா இந்தாங்கோ இன்னோரு கப் பால் பாயாசம் எடுத்துக்கோங்கொ' என்று கொண்டு கொடுத்துவிட்டு ஓடினோம்.
.


அடுத்தாப்பில கிளம்புகிறவர்களுக்குத் தாம்பூலம்+பட்சணப்பை.
முதல் இரவே  தயார் செய்துவிட்டதால்
வீட்டு முன்னிருந்த பந்தலில் இருவரும் நின்று  கொண்டு மிகமிக மரியாதையோடு பெரியவர்களுக்குப் பைகளைக் கொடுத்தோம்.

இது யாரு இந்தப் பொண்ணு ? மீண்டும் கேள்வி. நம்ம பாலாண்ணா  ஃப்ரண்டு  கோபு இல்ல  அவனோட அக்கா பொண்ணு. எங்களுக்கும் ஃப்ரண்டு.

எல்லாம் முடிந்து நாங்களும் சாப்பிடப் போனோம்.  அலுப்பில் சாப்பாடு வேண்டி இருக்கவில்லை.

ஒரே பெருமைதான்.

இது நடந்த  பத்து மாதங்களில்
உண்மையிலியே  அந்தப் பாட்டியின் வாக்கு பலித்தது.
ஆமாம்  என் திருமணம்  நிச்சயமானது!!
இதெல்லாம் இவண்ட்மேனேஜ்மெண்டா என்னா என்று கேட்டால்
இல்லைன்னுதான் சொல்வேன். இந்த நிகழ்ச்சியில் ஈவண்ட் என்னை மேனேஜ் செய்தது:)





 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

37 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களின் ஞாபகசக்தியை நினைத்து வியக்கிறேன்... இனிய நினைவுகள்...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

ஹுஸைனம்மா said...

/ஈவண்ட் என்னை மேனேஜ் செய்தது:)//

Wonderful!! :-)))))

ஹுஸைனம்மா said...

ஹி.. ஹி.. அதென்னவோ, எந்த ஈவெண்ட் ஆனாலும், தாம்பூலப்பை மேனேஜ் பண்றது வீட்டு வாண்டுகள்தான்!! நானும் செஞ்சிருக்கேன். :-)))))

வெங்கட் நாகராஜ் said...

அப்பாடி கிட்டத்தட்ட 48 வருடங்கள் முன் நடந்த நிகழ்வுகள்... அப்படியே நேற்று நடந்தது போல எழுத முடிகிறதே உங்களால்....

பாராட்டுகள்மா...

மாதேவி said...

உங்கள் இளமைக்கால இனிய நிகழ்வு எம்மையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்கின்றது.

ஸ்ரீராம். said...

பயங்கர ஞாபக சக்தி.
சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

எல்லாம் இப்பொழுது நடந்த மாதிரி இருக்கிறது தனபாலன்.மறக்க முடியாத நினைவுகள்.
நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அதுதான் கதையே ஹுசைனம்மா.:)
சொன்ன பேச்சைக் கேட்ட காலம் அப்போ.நடுநடுவில் குறும்பு செய்து மாட்டிக் கொள்வதும் உண்டு.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஹுசைனம்மா.
தாம்பூலப்பைகளைக் கொடுக்கும் சாக்கில் இன்னோரு தட்டில் இருக்கும் கற்கண்டு திராட்சை எல்லாம் பாதி குறைந்துவிடும்:)

வல்லிசிம்ஹன் said...

வாழ்வின் பொன்னான காலங்கள் பதின்ம வயதுகள் தானே. எப்படி மறக்கும் வெங்கட்,.
பாராட்டுகளுக்கு மிகவும்நன்றி.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மாதேவி.
இத்தனையும் முடிந்து வீட்டுக்குப் போனால் பாட்டி கையில் பேச்சும் கேட்கணும்.:)

வல்லிசிம்ஹன் said...

எங்க வீட்டுக்காரரைக் கேளுங்கள் .சொல்வார். எந்தத் தீபாவளிக்கு நான் என்ன கேட்டு அவர் என்ன வாங்கித் தரவில்லை என்பதை நான் இன்னும் சொல்லிக்காட்டுவதாக:)
அவருடைய சாய்ஸ் ஷிஃபான்,ஜார்ஜெட் என்று இருக்கும் . என்னுடையது
காஞ்சிப் பட்டு,பனாரஸ் என்று இருக்கும் . அவ்வளவுதான்:)

Geetha Sambasivam said...

அவருடைய சாய்ஸ் ஷிஃபான்,ஜார்ஜெட் என்று இருக்கும் . என்னுடையது
காஞ்சிப் பட்டு,பனாரஸ் என்று இருக்கும் . அவ்வளவுதான்:)//

ஹிஹிஹிஹி

நல்லா இருக்கு மலரும் நினைவுகள். ஈவென்ட் உங்களை அருமையாக மானேஜ் செய்துள்ளது. நல்ல ஞாபக சக்தியும் கூட. தோழியோடு இப்போவும் தொடர்பிலே இருக்கீங்களா?

ராமலக்ஷ்மி said...

நல்ல நினைவாற்றல் வல்லிம்மா உங்களுக்கு.

முடித்த விதமும் அழகு:)!

தொடருங்கள்.

துளசி கோபால் said...

அடடாடா.......... அப்போ முதலே பயங்கர ட்ரெய்னிங்கா இருந்துருக்கே!!!!

அணுஅணுவாய், துளித்துளியாய் ரசித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா. அவளும் அம்பத்தூர் பஸ்ச்டாண்ட் அருகே இருக்கும் ஒரு தெரு மெயின் ரோடை ஒட்டியே இருக்கிறாள். அவள் பையன் பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டது.பெண் அமெரிக்காவில் இருக்கிறாள். பையனும் மருமகளும் பக்கத்தில் இருக்கின்றனர்,ஜியாலஜியில் முதுகலைப் பட்டம்,எமெட் என்று படித்து
கல்லூரியில் பேராசியராக வேலைபார்த்து ஓய்வு பெற்றாள்.

வல்லிசிம்ஹன் said...

இளமைக்காலம் மறக்க முடியாதது இல்லையா.அதனால் பசுமையாக மனதில் தங்கிவிட்டன ராமலக்ஷ்மி.:)

வல்லிசிம்ஹன் said...

எவ்ரிடே கதைதான் துளசி.நடந்ததை எழுதுவது சுலபம் தானே.:)

ADHI VENKAT said...

மலரும் நினைவுகள்..... சூப்பரா ஞாபகம் வெச்சிருக்கீங்கம்மா.

அப்பாதுரை said...

ஒவ்வொரு பேராவும் ரொம்ப சுவாரசியம். அய்ங்கார் பொண்ணு என்பதை எப்படிக் கண்டுபிடிச்சாங்க? ஷாக்கிங். இப்ப எப்படியோ தெரியாது, அப்பல்லாம் கல்யாண விழாக்களில் கல்யாணம் ஒருபுறம், பிள்ளை பெண் தேடல் ஒருபுறம் என்று நடக்கும். சைட் அடிப்பதற்காகவே ஊர் பேர் தெரியாதக் கல்யாணத்துக்கெல்லாம் போயிருக்கிறோம்!

அப்பாதுரை said...

கல்லூரி நாட்களில் பழவந்தாங்கலில் என் ப்ரென்ட் வீட்டில் பாதிநாள் டேரா. ஒரு நாள் மெதுவாக என்னிடம் சொன்னாள், ஒன்றிரண்டு முறை அங்கே வந்த என் நண்பன் மேல் ஆசைப்படுவதாக. "உன் ப்ரெண்டு அய்யராச்சே? அவங்க வீட்ல ஏத்துப்பாங்களா?" - இதுதான் முதல் கேள்வி. பையன் எபப்டி, தேறுவானா.. இதெல்லாம் காணோம்.

பையப் பைய இருவரும் லவ் ட்ரேக் மாறியதும், நண்பன் ஒருமுறை சொன்னதை மறக்க முடியவில்லை. "டேய், அய்ங்கார் வீட்டு ரசம் அவ்ளோ நல்லா இருக்கும்டா, அதுக்காகவே..".

என் ப்ரென்டு அத்தனை அழகாக இருப்பாள், அத்தனை படிப்பு - "அதை விட்டு ரசம் நல்லாயிருக்கும்ன்றியேடா" என்று நாங்கள் அவனைக் குதறியது நினைவுக்கு வருகிறது. ப்ரென்டு அக்கா திருமணத்தில் தான் இவர்கள் கல்யாணமும் நிச்சயமானது. இப்பொழுது அவர்களைப் பார்க்க நேர்ந்தாலும் "உன்னை ரசத்துக்காகத் தான் கல்யாணம் செய்துகிட்டான்" என்பேன்.

சாந்தி மாரியப்பன் said...

ஈவண்ட் உங்களை மேனேஜ் செய்த விதம் ஜூப்பரு :-))

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆதி,ஒவ்வொரு நாளும் புதிதாகப் பிறப்பது போலத் தோன்றிய காலம்.போர் என்ற வார்த்தையே கிடையாது.அதனால் நினைவில் இருக்கிறது மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை. அதுவும் ஒரு நவராத்திரி காலம்தான்.
அவர்கள் எப்படிக் கண்டுபிடித்திருப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தேன். தோழியின் அம்மாவைக் கேட்டிருப்பார்கள்.தோழியின் அண்ணாக்களோடு உரிமையாகப் பழகுவதாகப் பார்த்து வேற ஏதாவது தோன்றித்தோ?இல்லை திருநெல்வேலி அய்யங்கார்னு நெத்தீல எழுதாத வரி ஓடிக் கொண்டிருந்ததோ:)பின்னூட்டம் அருமை நன்றி துரை.

வல்லிசிம்ஹன் said...

அட ரசவாதியா அவர் துரை.:)
அந்த வயதில் தான் எத்தனை விதமாக மனசு சிந்திக்கிறது. வண்ணானுக்கு வண்ணாத்தி,வண்ணாத்திக்கு வேறன்னு சொல்வது போல இங்க உல்டா:)

காதல் மாறாமல் இருக்கிறார்கள் இல்லையா அது போதும்.கல்யாணங்களில் இந்த வேடிக்கைகள் படு தமாஷா இருக்கும்.
ரசாபாசம் இல்லாமல்வெறும் கேலி அளவில் நின்றுவிடும்.பெரியவர்கள் பெண்களைத் தீர்மானிப்பதும் உண்டு. என்னுதும் அப்படியே:)

துளசி கோபால் said...

ஆங்......... நெத்தியிலே இருக்கு சூட்சுமம்!

வைணவர்கள் வீட்டுலே நெத்திக்கு வட்டப்பொட்டு அவ்வளவா இட்டுக்கறதில்லை. எப்பவும் கும்மிடி சுக்கனே:-))))(தெலுகு) திலகம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சாரல்.எங்க அம்மாவே அதிசயப் பட்டார். எவ்வளவு மாறிட்ட நீன்னு.நீ ஆறு மாதம் கழித்துப் பார்த்தால் அப்படித்தான் இருக்கும் என்று சொல்லிச் சிரித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அதேதான் துளசி.வைஷணவத்திலகம் இல்லை. :)மூக்கு கொஞ்சம் சப்பையாக இருக்குன்னு வல்லிப்பாட்டி சொன்னதால் அம்மா ஏற்றுக் கொண்ட முயற்சிகளிலிந்த மைத்திலகமும் உண்டு.இப்ப மூக்கு(லட்சணம்) அவ்வளாவாத் தெரியவில்லைன்னு பாவம் அம்மா சந்தோஷப்படுவார்:)

Geetha Sambasivam said...

//ஒவ்வொரு பேராவும் ரொம்ப சுவாரசியம். அய்ங்கார் பொண்ணு என்பதை எப்படிக் கண்டுபிடிச்சாங்க? ஷாக்கிங்.//

பொதுவாப் பேச்சில் இருந்தும், நமஸ்காரத்தில் இருந்தும் கண்டு பிடிச்சுடலாம். வடகலையா, தென்கலையானு கூட. ஆனால் பாருங்க இங்கே எங்க குடியிருப்பில் உள்ள ஒரு பெண்மணி ஐயங்கார்னு நினைச்சிருக்க, அவங்க ஐயராம். :))))) அவங்க பேச்சிலேயும், நமஸ்காரத்திலேயும், நெற்றிப் பொட்டிலேயும் ஏமாந்து போனேன். :)))))



// இப்ப எப்படியோ தெரியாது, அப்பல்லாம் கல்யாண விழாக்களில் கல்யாணம் ஒருபுறம், பிள்ளை பெண் தேடல் ஒருபுறம் என்று நடக்கும். சைட் அடிப்பதற்காகவே ஊர் பேர் தெரியாதக் கல்யாணத்துக்கெல்லாம் போயிருக்கிறோம்!//

அட, ஆமாம், இதுக்காகவே சொந்தக்காரங்க வீட்டுக் கல்யாணத்துக்குப் போவதை நான் கடுமையாக மறுப்பதுண்டு. அப்புறமா அப்பா, அம்மா திட்ட மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொண்டு போவதுண்டு.

வல்லிசிம்ஹன் said...

இப்ப யாராவது நமஸ்காரம் செய்கிறார்களான்னு தெரியவில்லை கீதா:)

Geetha Sambasivam said...

ஆனால் பாருங்க இங்கே எங்க குடியிருப்பில் உள்ள ஒரு பெண்மணி ஐயங்கார்னு நினைச்சிருக்க, அவங்க ஐயராம். :))))) அவங்க பேச்சிலேயும், நமஸ்காரத்திலேயும், நெற்றிப் பொட்டிலேயும் ஏமாந்து போனேன். :)))))//

செய்யறாங்களே! இங்கே எங்க குடியிருப்பில் ஒரு பெண் எனக்கு நமஸ்காரம் பண்ணினப்போ இரண்டு முறை பண்ணவே தென்கலையானு நான் கேட்க, நெற்றியிலே வேறே ஸ்ரீசூர்ணம்! :))) இல்லை ஐயர்னு அவங்க சொல்ல, நான் திரு திரு திரு.

அநேகமா கொலுவுக்கு வந்த சின்னவங்க எல்லாருமே நமஸ்காரம் பண்ணிட்டே வெத்திலை, பாக்கு எடுத்துண்டாங்க. :)))))

KILLERGEE Devakottai said...

தங்களது நினைவாற்றல் அபாரம் அம்மா.

Yaathoramani.blogspot.com said...

விவரித்த விதம் எங்களையும் அந்தச் சூழலில் இருப்பது போலவே உணரவைத்தது..ஞாபக சக்தி குறித்தும் வியக்க வைத்தது...வாழ்த்துகள்..

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவ கோட்டைஜி,
சிலசமயம் நல்ல நினைவுகள்
மகிழ்ச்சிதான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரமணி சார்,
நன்றி. பழையதெல்லாம் நல்ல நினைவில். இப்போதான்
ஒரு அறையிலிருந்து அடுத்த அறைக்குள்
போவதற்குள் என்ன எடுக்க வந்தோம் என்று மறந்து விடுகிறது:)

கோமதி அரசு said...

மலரும் நினைவுகள் மிக அருமை.
பழைய பின்னூட்டங்களும் இருக்கிறதா?
ஹூஸைனம்மா, சாந்தி மாரியப்பன் எல்லோரும் இருக்கிறார்களே!

Geetha Sambasivam said...

மிக அருமையான மலரும் நினைவுகள். நானும், 2,3 தரம் வந்திருக்கேன் போலே!