Blog Archive

Saturday, September 08, 2012

தர்மம் எனும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்

ஸ்ரீக்ருஷ்ணனும்   அவனுக்கு கண்டருளப்பண்ணிய வெண்ணெய்,தயி,பால்,அவல் சர்க்கரை,சுக்கு வெல்லம்,சீடை,அப்பம் ,வடை,
கண்ணன் பிறந்தான்  எங்கள் கண்ணன் பிறந்தான்
பால  கிருஷ்ணா வா  வா





இந்த வருடம் இரண்டு தடவை ஸ்ரி கிருஷ்ணன் வந்துவிட்டான். அவனோடு  தடால் படால் என்று இடி மின்னலோடு மழை நேற்று இரவு.
நல்லவேளை பூ மாலை எல்லாம் நேற்றே வாங்கி வந்தேன்.

எங்கள் வீட்டுக் கிருஷ்ணனுக்க்கு   உபவாசம் இருந்து
செய்ய வேண்டிய   பலகாரங்களைச் செய்யவில்லை.
நறுக்கிய பழத்துண்டுகள். கிண்ணத்தில் தேன்,
வெண்ணெயும் சர்க்கரையும்,
அவல் பாயசம், சுக்கும் வெல்லமும் ஜீரணத்துக்கு,
நாலு வடை,நாலு சீடை.
உன்னையும் பத்தியக் கிருஷ்ணன் ஆக்கிவிட்டோம்     கண்ணா.
கடையில் வாங்கிவந்து உன் கண்ணில் காட்டி அதையும் நாங்கள் தானே சாப்பிட வேண்டும்.

அதற்குப் பதில் உன் ஊஞ்சலைத் தேய்த்துவைத்து,உனக்குத் திருமஞ்சனம் செய்து, புது மெத்தையிட்டு,  வீட்டில் இருக்கும் உன் படங்களை ஒன்று சேர்த்துப் பூமாலை சூட்டிப் பாமாலையும் பாட நினத்திருக்கிறேன்.
எல்லாம் சரியாகச் செய்ய  உன் அருள் வேண்டும்.

தாளாதத் துயர் எல்லாம் தீர்க்கும் கண்ணா
எங்கள் கண்களில் இருக்கும் அஞ்ஞானத்திரையை நீக்கு.
உன்னை நண்பர்களாக்கிக் கொண்டவர்களை எனக்கும் நண்பர்களாக்கு.
ஹரே ராம  ஹரே ராம ராமராம ஹரே ஹரே
ஹரேகிருஷ்ணஹரேகிருஷ்ண கிருஷ்ணகிருஷ்ண ஹரே ஹரே

அனைவரையும் காத்து இரு கண்ணா.


 குழலூதி மனமெல்லாம்  கொள்ளைகொண்ட கண்ணன் இருக்கையில்
குறையேதும் நமக்கு ஏது?


தொட்டிலுக்குள் எட்டிப் பார்ப்பது குட்டித் தவழும் கிருஷ்ணன்










எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

19 comments:

ஸ்ரீராம். said...

இடி என்னும் வாண வேடிக்கை முழங்க, மழை பூமழை தூவ ஸ்ரீ கிருஷ்ணர் விஜயமா...? என்ன அழகிய படங்கள்?

'எண்ணம் போலக் கண்ணன் வந்தான் அம்மம்மா.....!'

எல் கே said...

கன்னக் பிறந்தபொழுது இரவு நேரம். மழை பெய்தது. நேற்றும் மழை, கரென்ட் இல்லை இருட்டு. என்ன பொருத்தம்

Geetha Sambasivam said...

தர்மம் என்னும் தேரில் ஏறிக்கண்ணன் வந்தான்;
தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்.

கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்;
கேள்வியே பதிலாகக் கண்ணன் வந்தான்.

வெங்கட் நாகராஜ் said...

இன்று ஸ்ரீஜெயந்தி... திருவரங்கத்தில் கோலாகலமாக இருக்கும்....

வல்லிசிம்ஹன் said...

இன்னும் சீடை எல்லாம் அவனுக்கு நைவேத்யம் செய்யவில்லை. நடுவில் பவர் போவதற்குள் பதிவிற்கு வந்தேன். உண்மைதான் சப்த ஜாலங்களுடன் ஊரை மிரட்டிவிட்டான்.
நன்றி ஸ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

நீங்கள் கவனித்துக் கொண்டே வாருங்கள் கார்த்திக். கண்ணன் வரும் நாள் கண்டிப்பாக மழை பெய்யும். ரெண்டு தூறலாவது உண்டு:)

வல்லிசிம்ஹன் said...

கருணை என்னும்கண் திறந்து காக்க வேண்டும்.
கண்ணன் கதை எழுதுபவர்களையும் காக்க வேண்டும் கீதா.

வல்லிசிம்ஹன் said...

காலயில் நினைத்தேன்.வெங்கட்,. அங்கே எப்படியெல்லாம் கொண்டாடுவார்களோ. கீதாம்மா எழுதுகிறாரோன்னு பார்க்கலாம்.

Geetha Sambasivam said...

கூட்டமாக இருந்தால் போக முடியாது வல்லி. :(((( கூட்டம் ஒத்துக்காது. திருநாகேஸ்வரத்துக் கூட்டம் தான் ஒருவாரமாய்ப் படுத்தல். :))))

Unknown said...

குழலூதி மனமெல்லாம் கொள்ளைக்கொண்ட பின்பு துயரேதும் எனக்கேதடி ஊத்துக்காடு வேங்கடகவியின் பாடல் சுதா ரகுநாதன் அவர்களின் குரலில் நாளெலாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.நல்லதொரு நாளில் நல்லதொரு பகிர்வு லோகாசமஸ்தா சுகினோ பவந்து.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான படங்கள் அம்மா... மிக்க நன்றி...

பால கணேஷ் said...

கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல... கள்ளும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல... நாச்சியார் தளத்தில் கண்ணன் படங்களைப் பார்க்கப் பார்க்க... மனது உற்சாகத்தில் துள்ளும் நிறைய நிறைய.... அருமைம்மா.

ADHI VENKAT said...

பெருமாள் புறப்பாடு பார்த்து விட்டு, தாயாரை சேவித்து, கிருஷ்ணர் ராதா ருக்மிணியையும் பார்த்து விட்டு வீடு வந்து சேர்ந்தோம்.நேற்று உறியடி விழா...கோலாகலம் தான்...

வல்லிசிம்ஹன் said...

வரணும் இந்திரா. உண்மைதான் இன்னிக்கு செய்தி சானலில் பார்க்கும் போது கிருஷ்ணரே வந்தால் தான் நிலைப்படும் என்று தோன்றுகிறது.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கீதா. தொலைக்காட்சியில்
காண்பித்தால் நன்றாக இருந்திருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க தனபாலன் தொடர் வருகைக்கும் பின்னூட்டம் இடுவதற்கும் மிக நன்றி

வல்லிசிம்ஹன் said...

வரணும் கணேஷ். அடுத்தாற்போல பிள்ளையாரும் வரப் போகிறாரே. இன்னும் மகிழ்ச்சிதான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆதி,நீங்கள் போய்க் கோவிலில் தரிசனம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வெங்கட் மிகவும் ஆதங்கப் பட்டிருந்தார்.

மாதேவி said...

அழகிய படங்கள்.

கண்ணன் வந்த நேரம் துன்பங்கள் தீர்ந்து அனைவரும் இன்புற்று இனிதாக வாழட்டும்.