About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Monday, September 10, 2012

தொடரும் தண்ணீர் ராசி..2 பசுமலை ,புதுக்கோட்டை,சேலம்

பசுமலை    குன்று
புதுக்கோட்டை
திருமண அழைப்பிதழ்
மீனாக்ஷி கோவில் மண்டபம்
பசுமலை   சாலை

 திண்டுக்கல் நாட்கள் பறந்தோடின. நடுவில் தாத்தா பாட்டி காலம் சென்றது. அப்பாவுக்கு  பசுமலை,மதுரைக்கு மாற்றலானது. மீண்டும் மதுரை என்பதே இனிப்பாக இருந்தது

ஆபீசும் வீடும் இணைந்தது  இருக்கும்.வாசலில்   மண் மெழுகிய முற்றம்.
அதற்குப் பின்னால் அழி போட்ட இரும்புக் கதவுகள்.
அதற்கப்புறம் இரண்டு  கதவுகள். ஒன்று அலுவலகம்.
மற்றொன்று வீடு. சுற்றி வர வயல்கள். சுண்டைக்காய்ச் செடி. நந்தியாவட்டை மரம். செம்பருத்தி,போகன்வில்லா என்று கிளி கொஞ்சும் வீடு.
வீட்டுக்குள்ளயே கிணறு.
அந்தத் தண்ணீரும் நன்றாகத்தான் இருந்தது. அம்மாதான் காய்ச்சிதான் சாப்பிடணும் என்று  முனைப்பாக இருப்பார்.
பசுமலை நாட்கள் பசுமையான  நாட்கள்.
திருமணம், குழந்தை பிறந்தது எல்லாம் இங்கதான்.
நான் புதுக்கோட்டைக்குப் போனேன். அம்மா அப்பா வும் தம்பியும்
ராமேஸ்வரம் போனார்கள்.
புதுக்கோட்டையில் மாடிவீடு.. கீழேகிணறு. குட்டிக் குடமாகத் தண்ணீர் கொண்டுவந்துவிடுவேன்.

பிறகு   பிரசவ நேரம் அருகில் வரவர   எனக்கு உதவியாக இருந்த நார்த்தாமலைப் பாட்டி,தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார்.
இவர்  வொர்க்ஷாப் விட்டு வர இரவு ஒரு மணியாகும். அதுவரை எனக்குத் துணையாக வராந்தாவில் படுத்துக்கொள்ளும் பாட்டி. இவர் வந்ததும்.,பாப்பா
நாதாங்கியைப் போட்டுக்கோன்னு கீழே போய்விடும். எத்தனை நல்ல மனசு.
செவ்வாய்  வெள்ளி தவறாமல் எனக்குக் கீழே இருக்கும் குளியலறையில் எண்ணெய்க் காய்ச்சித் தலையில்    தேய்த்துவிடும்..
ம்ம்ம்ம்..அந்த அன்பும் ஆதரவும் இப்பொழுதெல்லாம் கொடுக்க யாருக்கு நேரமிருக்கு.

அடுத்த ஸ்டாப் சேலம். கேஹெ ச்.எம்.எஸ்  காலனி.,பெரமனூர்
இங்கு கிணறு கிடையாது. மேட்டுர் தண்ணீர்  காம்பவுண்டுக்குள் குழாயில் வரும்..
அதைக் கொண்டுவந்து நிரப்பிக் கொள்ளவேண்டும்.
இங்குதான் சரஸ்வதி யை  நினைத்துக் கொள்ளவேண்டும்.
எந்த ஜன்ம உறவோ.   நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று தெரிந்ததும்,அந்தச் சின்னப் பெண் 14 வயதே இருக்கும். நான் கொண்டு வரேன் மா என்று  நான் கு குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பிவிடுவாள்.
என்னைவிட்டு அகல மாட்டாள். என்னுடனே சாப்பிட்டு, என்னுடனே உறங்கி இரவு ஏழு மணிக்குதான் வீட்டுக்குப் போவாள் . அன்பு சரசு எங்கே இருந்தாலும் நன்றாக இரு.
மீண்டும் தொடரலாம்.
 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

20 comments:

Geetha Sambasivam said...

பசுமலை இப்போவும் இப்படிப்பசுமையோட இருக்கா? :((( இல்லைனு நினைக்கிறேன். தமிழ்நாட்டையே ஒரு ரவுண்டு அடிச்சிருக்கீங்க போல! :)))))எந்த வருஷம் பசுமலையிலே இருந்தீங்க?

கல்யாணப் பத்திரிகையைப் பார்த்தேன். நல்ல கண்டிஷன்லே வைச்சிருக்கீங்களே! வாழ்த்துகள். எங்களோடதும் இருக்கு. ஆனால் தேடணும். :))))

உங்க புகுந்த வீட்டிலும் ஸ்ரீவத்ஸ கோத்திரமா? :)))))

புதுகைத் தென்றல் said...

hai pudukkottai photo :))

புதுகைத் தென்றல் said...

.அந்த அன்பும் ஆதரவும் இப்பொழுதெல்லாம் கொடுக்க யாருக்கு நேரமிருக்கு.//

athe athe saba pathe. :(

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான படங்கள்...

அந்த நாள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

ஸ்ரீராம். said...

படங்கள் எல்லாமே அழகு.
கடைசிப் படம் கூடுதல் அழகு.
கல்யாணப் பத்திரிகை...... அட!
//உங்க புகுந்த வீட்டிலும் ஸ்ரீவத்ஸ கோத்திரமா? :)))))//
என்னென்ன கண்டுபிடிக்கறாங்க...! :))

கோவை2தில்லி said...

பசுமலை போட்டொவில் அழகாக இருக்கும்மா.
அந்த பாட்டியைப் போல் நல்ல மனசு ஒரு சிலருக்கு தான் உண்டு....

வல்லிசிம்ஹன் said...

பசுமலையும் திருப்பரங்குன்றமும் கண்டிப்பாக முன்போல இருக்க வாய்ப்பே இல்லை கீதா. அங்கே பசுமலை பங்களா ஹோட்டலாக மாறியது.
வயல்வெளிகளில் வீடுகள் தோன்றி இருக்கின்றன.
அநேகாமாகத் தொலைக்க மாட்டேன். முக்கியமான காகிதங்களை எங்கயாவது வைத்துவிட்டுத் தேடுவது என் வழக்கம்:)அதுபோலக் கல்யாணப் பத்திரிக்கை ஒன்று என்னிடம் இருந்தது.வாதூலத்திலிருந்து ஸ்ரீவத்சம்:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் புதுக்கோட்டை தெறல். ஒரு வருஷம் இருந்தோம்.முதல் பையன் மதுரையில் பிறந்தபிறகு சேலம்:)
ஆமாம்,அந்த வேலைசெய்யும் பாட்டி சொல்லி இருந்தால் சமைத்துக் கூடக் கொடுத்திருப்பார். எனக்குத்தான் கூச்சமாக இருக்கும்:)பெரிய பாதுகாப்பு அவரிடமிருந்து கிடைத்தது.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.கூகிளார் கொடுத்த படங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அதனாலதான் அவங்க இவ்வளவு கூர்மையா எழுதறாங்க ஸ்ரீராம்.பார்வையில் கூர்மை அறிவை இன்னும் நேர் படுத்தும்.

கோவை2தில்லி said...

அம்மா சொல்ல மறந்துட்டேன். நான் ஸ்ரீவத்ஸத்திலிருந்து கெளசிகம்..

Geetha Sambasivam said...

//உங்க புகுந்த வீட்டிலும் ஸ்ரீவத்ஸ கோத்திரமா? :)))))//
என்னென்ன கண்டுபிடிக்கறாங்க...! :))//

Srivathsa gothram oru groupe irukom.

வல்லிசிம்ஹன் said...

வாங்க ஆதி, கௌசிகமா.சரி சரி.
ஸ்ரீவத்சம் நிறைய குடும்பத்தைக் கொண்டது.அந்தவழியில் வந்தவர்களுக்குப் பக்தி நெறியில் ஈர்ப்பு அதிகM என்று கேள்வி.

வெங்கட் நாகராஜ் said...

//செவ்வய் வெள்ளி தவறாமல் எனக்குக் கீழே இருக்கும் குளியலறையில் எண்ணெய்க் காய்ய்ச்சித் தலையில் தேய்த்துவிடும்..
ம்ம்ம்ம்..அந்த அன்பும் ஆதரவும் இப்பொழுதெல்லாம் கொடுக்க யாருக்கு நேரமிருக்கு.//

எங்கம்மாவோட அத்தை - நாங்களும் அத்தைன்னே கூப்பிடுவோம் - இப்படித்தான் எங்களுக்கு சிறுவயதில் எண்ணைய் தேய்த்து குளிப்பாட்டி விடுவார்கள் - சுகமாய் இருக்கும்....

ம்ம்... இனிய நினைவுகள்மா.

எல் கே said...

தலைப்பில் சேலம்னு பார்த்தவுடன் ஓடி வந்துட்டேன். சேலத்தில் எப்பவும் மேட்டூர் தண்ணிதானே ? எந்த வருடம் சேலத்தில் ??

ராமலக்ஷ்மி said...

திருமண அழைப்பிதழ் பார்த்துக் கொண்டோம்:). எளிய மக்களின் அன்புக்கு ஈடு இல்லை. இப்போது அபூர்வமாகவே அப்படியானவர்கள் தென்படுகிறார்கள். உங்களுடன் பயணிக்கிறோம். தொடருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கார்த்திக் .1967லிருந்து 70 வரை இருந்தோம்.

வல்லிசிம்ஹன் said...

வருகைக்கும் அழைப்பிதழைவாங்கிக் கொண்டதற்கும் ரொம்ப நன்றி ராமலக்ஷ்மி.

அந்த வயதில் அந்தப் பாட்டிக்கு நல்ல மரியாதை செய்யவேண்டும் என்று கூடத் தெரியாது ராமலக்ஷ்மி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் வெங்கட் இப்போ எண்ணெய் தேய்த்துக் குளிப்பதே நின்று போய்விட்டது. அதற்கப்புறம்தானே ஆளைத் தேட.:(தேடினாலும் கிடைப்பார்களா என்று தெரியாது.

மாதேவி said...

இனிய தொடர்.

முன்பு இந்தியப் பயணத்தில் ஏற்காடு செல்வதற்காக சேலத்தில் ஒருநாள் தங்கி இருந்தோம்.

தொடர்கின்றோம்.