Blog Archive

Thursday, September 27, 2012

ஜிமிக்கி அழகா இருக்கே

 அம்மா தொப்பா வலிக்கிறது:(

வெந்நீர் கொடுக்கறேண்டா. சரியாப் போயிடும். இல்ல இன்னிக்கு நறைய
வலிக்கிறது  ம்ம்ம்ம்.
இரு அப்பாவும் அக்காவும் கிளம்பட்டும் . உனக்கு
மருந்து தரேன்
என்று சொல்லிவிட்டு எட்டு மணிக்குக் கிளம்பவேண்டிய கணவனுக்கு லன்ச்  எடுத்துவைத்துக் காரில் கொண்டுபோய்வைத்துவிட்டு,பெண்ணுக்கு
வேண்டிய நூடில்ஸ் செய்து  ஹாட்பாக்ஸில்  வைத்து வெளியே வந்த பள்ளிப்
பஸ்ஸில் ஏற்றிவிட்டு வந்தாள்.
பெண் ஆறாம்   வகுப்புக்குப் போனதிலிருந்து தம்பிக்கு
பள்ளிக்குப் போவது சிரமமாக இருந்தது.
இவன் வேறு பள்ளி அவள் வேறு பள்ளி.
அது தினப்படி வயிற்று வலியாக  உருவெடுத்தது.:(

அம்மாவுக்கு அது புரிந்தாலும் நிஜமான வயிற்றுக் கோளாறாஆக இருக்குமோ என்ற கவலை வந்தது.
சின்னவனே  இன்னிக்கு டாக்டர்கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கறேன் போலாமா என்றாள்.
அய்ய  அவ்ளோ வலிக்கலைமா. வெந்நீர் சாப்பிட்டதும் இப்போ  சரியாப் போச்சு. நாம ஸ்கூலுக்குப் போலாமா.
என்று உற்சாகமாகப் போகும் மகனைப் பார்த்தவண்ணம் நின்றாள்.

லன்ச் போது நான்வரட்டுமா. வயித்துவலி  இருக்குமா?
அம்மா  நோபடி கம்ஸ்  டு ஸ்கூல் . லன்ச் ரூம்ல அம்மா எல்லாம் வரக்கூடாது.
சீஸ்  டோஸ்ட் வச்சிருக்கியா.
ஆமாம். அப்ப ஐ ஆம் ஒக்கே.
என்று அம்மாவின் கைகளைப் பற்றியபடி   பள்ளியை நோக்கி விரைந்தான் சின்னவன்.

பள்ளிக் கதவுகள் திறந்திருந்தன.
தயங்கினான்.
அம்மா என்னை  என் க்ளாஸ் வரை வரை விடுகிறாயா.
கார்ரிடார் லாங்கா இருக்குமா. இட் ஃபீல்ஸ் ஸ்ட்ரேஞ்ச்.

எனக்கு அனுமதி இல்லையேடா. சரி இன்னிக்கு மட்டும் விடுகிறேன்.
வா என்ற போதே சின்னவனின் வகுப்பு டீச்சர் வந்தாள்.
"ஹை  டார்லிங்
கம் வித் மி  "என்று அழைத்துப் போய்விட்டாள்.
இப்போது அம்மாவுக்கு வயிறு கலங்குவது போல இருந்தது.
ஓ!  இந்த வெளிச்சமில்லாத வழிதான் அவனுடைய வயிற்று வலிக்குக் காரணமா.
என்ன செய்யலாம்   என்று  பள்ளியின் அடுத்தபக்கத்துக்கு வந்தாள். கண்ணாடிக கதவுகள் வழியே பார்க்கும் போது மகன் அவன் வகுப்பில் நுழைவதைப் பார்த்தாள்.
இப்பொழுது    பிரச்சினைக்கு வழி தெரிந்துவிட்டது.
அடுத்த நாள். பின்  கதவு வழியே  அவனை அழைத்துச் சென்றதும் சின்னவன் முகத்தைப் பார்க்கவேண்டுமே. ஹை அம்மா. திஸ் இஸ் பெட்டர்.
அவனது ஐந்துவயது உடல் பூராவும் சந்தோஷம்:0)
அடுத்த நாள்   வயிற்றுவலி வரவில்லை.!!!!







எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Thursday, September 20, 2012

துளசி கோபால் 60!!!மணிவிழா

பதிவர்கள்  திரு சுப்புரத்தினம் சாரும் துணைவி மீனாட்சிப் பாட்டியும்.
பதிவர்களின் துணைவர்கள் அவர்களுடன் பின்னால் சிவஞானம்ஜி,திரு பாரதிமணி, நம் உண்மைத் தமிழன்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Wednesday, September 19, 2012

மணிவிழா காணும் தம்பதியர் துளசி,கோபால்!வாழ்த்துகள்.













நிகழும் நந்தன  ஆண்டு புரட்டாசித் திங்கள்  நான்காம் நாள்

அன்புத் தோழி திருமதி துளசியும் அவரது துணைவர் திருவாளர் கோபால் அவர்களும்
மணிவிழாக் காணுகிறார்கள்.

இரு நல்ல இதயங்கள்.

இளகிய மனம் கொண்ட ஜோடி.
மற்றவர் துயர் காணப் பொறுக்காதவர்கள்

எந்நாளும் நந்நாளாக இணை பிரியாமல் இதே அந்நியோன்யத்தோடு  வளத்தோடு  வாழ வேண்டும்.

இறைவன் எல்லா நலங்களையும் அருள்வான்.



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Tuesday, September 18, 2012

இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்

 

பாலும்  தெளிதேனும் பாகும் பருப்பும்
இவை  நான்கும் கலந்து உனக்கு
நான் தருவேன்..
கோலம் செய் துங்கக்  கரிமுகத்துத்தூமணியே
நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா.
வினையெல்லாம் தீர்த்துவைப்பாய் விநாயகா.
அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Wednesday, September 12, 2012

தண்ணீர்க்கதை...3..சேலம்.கோயம்பத்தூர்,திருச்சி

சேலம் அஞ்சு ரோடு


 இந்தத் தொடரை இன்னும் இரண்டு நாட்கள் ஒத்திவைக்கிறேன்.
வீட்டில் விருந்தினர்கள்:0)

தண்ணிருக்காக நிறையக் கஷ்டப் பட்டாச்சு.
இதை எழுதுவதால் மீண்டும்  அனுபவிக்கும் சங்கடம்.
வேண்டாமே.
போனதெல்லாம் போகட்டும். இனிமேலாவது யாருக்கும் தண்ணிர்த் துன்பம் வரவேண்டாம்.

இருக்கும் தண்ணீரைச் சேமித்து வைக்கக் கற்றுக்கலாம்.
பின்னூட்டம் அளித்தவர்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி.

தண்ணீர் விஷயத்தில் கவனமாக  இருக்க வேண்டும்.
கடல் நீர் ஆற்றில் கலக்கிறதாம்.
ஆற்று நீரில்  கழிவு நீர் கலக்கிறதாம்.

கடவுள் தான் நம்மைக் காக்க வேண்டும்.

















 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Monday, September 10, 2012

தொடரும் தண்ணீர் ராசி..2 பசுமலை ,புதுக்கோட்டை,சேலம்

பசுமலை    குன்று
புதுக்கோட்டை
திருமண அழைப்பிதழ்
மீனாக்ஷி கோவில் மண்டபம்
பசுமலை   சாலை

 திண்டுக்கல் நாட்கள் பறந்தோடின. நடுவில் தாத்தா பாட்டி காலம் சென்றது. அப்பாவுக்கு  பசுமலை,மதுரைக்கு மாற்றலானது. மீண்டும் மதுரை என்பதே இனிப்பாக இருந்தது

ஆபீசும் வீடும் இணைந்தது  இருக்கும்.வாசலில்   மண் மெழுகிய முற்றம்.
அதற்குப் பின்னால் அழி போட்ட இரும்புக் கதவுகள்.
அதற்கப்புறம் இரண்டு  கதவுகள். ஒன்று அலுவலகம்.
மற்றொன்று வீடு. சுற்றி வர வயல்கள். சுண்டைக்காய்ச் செடி. நந்தியாவட்டை மரம். செம்பருத்தி,போகன்வில்லா என்று கிளி கொஞ்சும் வீடு.
வீட்டுக்குள்ளயே கிணறு.
அந்தத் தண்ணீரும் நன்றாகத்தான் இருந்தது. அம்மாதான் காய்ச்சிதான் சாப்பிடணும் என்று  முனைப்பாக இருப்பார்.
பசுமலை நாட்கள் பசுமையான  நாட்கள்.
திருமணம், குழந்தை பிறந்தது எல்லாம் இங்கதான்.
நான் புதுக்கோட்டைக்குப் போனேன். அம்மா அப்பா வும் தம்பியும்
ராமேஸ்வரம் போனார்கள்.
புதுக்கோட்டையில் மாடிவீடு.. கீழேகிணறு. குட்டிக் குடமாகத் தண்ணீர் கொண்டுவந்துவிடுவேன்.

பிறகு   பிரசவ நேரம் அருகில் வரவர   எனக்கு உதவியாக இருந்த நார்த்தாமலைப் பாட்டி,தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார்.
இவர்  வொர்க்ஷாப் விட்டு வர இரவு ஒரு மணியாகும். அதுவரை எனக்குத் துணையாக வராந்தாவில் படுத்துக்கொள்ளும் பாட்டி. இவர் வந்ததும்.,பாப்பா
நாதாங்கியைப் போட்டுக்கோன்னு கீழே போய்விடும். எத்தனை நல்ல மனசு.
செவ்வாய்  வெள்ளி தவறாமல் எனக்குக் கீழே இருக்கும் குளியலறையில் எண்ணெய்க் காய்ச்சித் தலையில்    தேய்த்துவிடும்..
ம்ம்ம்ம்..அந்த அன்பும் ஆதரவும் இப்பொழுதெல்லாம் கொடுக்க யாருக்கு நேரமிருக்கு.

அடுத்த ஸ்டாப் சேலம். கேஹெ ச்.எம்.எஸ்  காலனி.,பெரமனூர்
இங்கு கிணறு கிடையாது. மேட்டுர் தண்ணீர்  காம்பவுண்டுக்குள் குழாயில் வரும்..
அதைக் கொண்டுவந்து நிரப்பிக் கொள்ளவேண்டும்.
இங்குதான் சரஸ்வதி யை  நினைத்துக் கொள்ளவேண்டும்.
எந்த ஜன்ம உறவோ.   நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று தெரிந்ததும்,அந்தச் சின்னப் பெண் 14 வயதே இருக்கும். நான் கொண்டு வரேன் மா என்று  நான் கு குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பிவிடுவாள்.
என்னைவிட்டு அகல மாட்டாள். என்னுடனே சாப்பிட்டு, என்னுடனே உறங்கி இரவு ஏழு மணிக்குதான் வீட்டுக்குப் போவாள் . அன்பு சரசு எங்கே இருந்தாலும் நன்றாக இரு.




மீண்டும் தொடரலாம்.












 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Saturday, September 08, 2012

தர்மம் எனும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்

ஸ்ரீக்ருஷ்ணனும்   அவனுக்கு கண்டருளப்பண்ணிய வெண்ணெய்,தயி,பால்,அவல் சர்க்கரை,சுக்கு வெல்லம்,சீடை,அப்பம் ,வடை,
கண்ணன் பிறந்தான்  எங்கள் கண்ணன் பிறந்தான்
பால  கிருஷ்ணா வா  வா





இந்த வருடம் இரண்டு தடவை ஸ்ரி கிருஷ்ணன் வந்துவிட்டான். அவனோடு  தடால் படால் என்று இடி மின்னலோடு மழை நேற்று இரவு.
நல்லவேளை பூ மாலை எல்லாம் நேற்றே வாங்கி வந்தேன்.

எங்கள் வீட்டுக் கிருஷ்ணனுக்க்கு   உபவாசம் இருந்து
செய்ய வேண்டிய   பலகாரங்களைச் செய்யவில்லை.
நறுக்கிய பழத்துண்டுகள். கிண்ணத்தில் தேன்,
வெண்ணெயும் சர்க்கரையும்,
அவல் பாயசம், சுக்கும் வெல்லமும் ஜீரணத்துக்கு,
நாலு வடை,நாலு சீடை.
உன்னையும் பத்தியக் கிருஷ்ணன் ஆக்கிவிட்டோம்     கண்ணா.
கடையில் வாங்கிவந்து உன் கண்ணில் காட்டி அதையும் நாங்கள் தானே சாப்பிட வேண்டும்.

அதற்குப் பதில் உன் ஊஞ்சலைத் தேய்த்துவைத்து,உனக்குத் திருமஞ்சனம் செய்து, புது மெத்தையிட்டு,  வீட்டில் இருக்கும் உன் படங்களை ஒன்று சேர்த்துப் பூமாலை சூட்டிப் பாமாலையும் பாட நினத்திருக்கிறேன்.
எல்லாம் சரியாகச் செய்ய  உன் அருள் வேண்டும்.

தாளாதத் துயர் எல்லாம் தீர்க்கும் கண்ணா
எங்கள் கண்களில் இருக்கும் அஞ்ஞானத்திரையை நீக்கு.
உன்னை நண்பர்களாக்கிக் கொண்டவர்களை எனக்கும் நண்பர்களாக்கு.
ஹரே ராம  ஹரே ராம ராமராம ஹரே ஹரே
ஹரேகிருஷ்ணஹரேகிருஷ்ண கிருஷ்ணகிருஷ்ண ஹரே ஹரே

அனைவரையும் காத்து இரு கண்ணா.


 குழலூதி மனமெல்லாம்  கொள்ளைகொண்ட கண்ணன் இருக்கையில்
குறையேதும் நமக்கு ஏது?


தொட்டிலுக்குள் எட்டிப் பார்ப்பது குட்டித் தவழும் கிருஷ்ணன்










எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Wednesday, September 05, 2012

உடோபியா நாம் வேண்டும் காலம் கிடைக்கும்.

வெய்யில்க்கேற்ற நிழலுண்டு
Add caption
பன்னீர்புஷ்பங்கள்
சுவரில் விழுந்த சூரிய வெளிச்சம்

விரும்பும்போது வேண்டும் இடங்களுக்குச் செல்ல எப்போதும் ஆசை.
நான் நடக்காவிட்டாலும் பார்வை நடக்கிறது.

கையில் காமிரா இருந்தால் அழகைப் படம் பிடிக்கிறது.
சிலசமயம் பார்வையில் படும் அழகைக் காமிராவில்  அடைப்பதிலேயே ஆழ்ந்துவிட்டால் உண்மையான   இயற்கையை ரசிக்க விட்டுவிடுகிறேன்.
ஒரு  க்ளிக் பல்லாண்டுகள் கணினியிலும் பதிவுகளிலும் இருக்கலாம்.

அந்தக் காற்றையும் வெளிச்சத்தையும்  கடலோரம் நடந்த பெரியவரையும்
அவரைத் தொடர்ந்த நாய்க்குட்டியையும்  இன்னு ம் கொஞ்ச நேரம்   ரசித்திருக்கலாம்.
கடலில் எப்பவோ கரைத்த சாம்பல்களையும் நினைத்திருக்கலாம்.
காலை நனைத்த நுரை என்ன சொல்லவந்தது என்று யோசித்திருக்கலாம்.
''பாட்டி வா'' அங்கயே நிக்காதே  என்று கூப்பிட்ட 
பேத்தியின் குரல்
எதிர்காலமகிழ்ச்சிகளை
எனக்கு நினைவூட்டியது.
அடுத்த கட்டத்துக்கு வந்துவிட்டேன்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Monday, September 03, 2012

மழை வந்ததும் துளிர்த்த செடிகளும் மலர்களூம்

மழை என் மேல்  விழவில்லை.வரணம் மாறினாலும் மணம் மாறாத மலர் நான்
வெற்றிலைப்பூவா. மழைத்துளிக்காக நாக்கை நீட்டும்  மலரா.
இது எங்கள் காலம்
நான் தொட்டால் சிணுங்கிதான். மழை எனக்கு வீரம் தந்தது.
வானம் பார்த்தவள் தான். மழையில் ஆடைநனைந்ததால் உலரக் காத்திருக்கிறேன்
எங்கள் சகோதரிகள் ஐந்தாறு பேர் பூமித்தாயிடம் போய்விட்டார்கள் அவர்களைப் பார்க்கத்தான் கீழே குனிந்தோம்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்