About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Monday, August 20, 2012

கண்ணிலே ஈரமுண்டு, கண்கள் தான் அறியும்


கண்கள்  இன்னும் சரியாகத் தெரியாததற்குக்
காரணம் தெரிந்து விட்டது.
சும்மா இருந்தவளை டபடீஸ் கண்ணைக் கெடுத்துவிடும்.
காடாரக்ட் செய்துவிடுங்கள்.
இனிமேல் கண்ணாடியே   போட வேண்டாம்.
உயர்ந்த லென்ஸைப் பொறுத்துகிறோம்.

ஒருவாரத்தில் அத்தனை டெஸ்ட்,பரிசோதனை செய்தார்கள். எல்லாம் ஓகே. நீங்கள் இந்த லென்ஸை ஏற்க்த் தகுதி உடையவர்..

இரண்டு  கண்களும் லென்ஸை ஏற்றன.
கண்  தெரிகிறது. கூடவே  கண் எரிகிறது. வலிக்கிறது.
ஏனென்று கேட்டால்  பழகிவிடும் என்ற பதில்.
உங்க கண் ஆப்பரேஷன் கம்ப்ளீட்   சக்ஸஸ்!
ஆறு மாதங்கள் கடந்தும் சரியாகவில்லை..

கண்ணாடி போட்டுக் கொள்ளச் சொன்னார்கள்.
போட்டேன். மீண்டும் சகிக்க முடியாத தலைவலி.

டாக்டர் ராஜன் ஐ கேர் போகலாம். விடுதலை கிடைக்குமா என்று பார்க்க.
போனேன்.
இரண்டு நிமிடங்களில் கண்கள் பின்னால் இருக்கும்
படலங்களை லேசர்  வைத்து   எடுத்தார்.
அம்மா இனிமே தலைவலி வராது.
அவர்கள் உங்கள் கண்களில் ஆஸ்டிக்மாடிச்ம் இருக்கு.
அதற்கு அவர்கள் வைத்த லென்ஸ் ஒத்துக் கொள்ளாது.

நீங்கள் இரண்டு வாரத்தில் என்னை வந்து பாருங்கள். வேறொரு  கண்ணாடிக்குப் ப்ரிஸ்க்ரிப்ஷன் கொடுக்கிறேன். அது ஒத்துக் கொண்டால்  சரி.
இல்லாவிட்டால் இன்னுமொரு 40000  இரண்டு கண்களுக்கும் செலவழிக்கவேண்டும்.
அவர்கள் வைத்த லென்ஸ்களை எடுத்துவிடலாம்.
:((((((((((((((((((((((((((((((((((((((((((

பார்க்கலாம்.ஏன் இப்படி நடக்கணும். ஒரு பிரசித்த வைத்தியருக்குக் கண்ணின் மஹிமை தெரியாதா.
ஏன் இப்படி யோசிக்காமல் செய்தார்கள். டயபெடிஸ் என்பதால் இன்ஷுரன்ஸும் கிடைப்பதில்லை.

இது புலம்பல் இல்லை. எல்லோரும் கண்ணின் விஷயத்தில் நல்ல வைத்தியரை அணுகுங்கள் என்று சொல்லத்தான்  பதிந்தேன்.
 
எனக்கு   இந்த ஆஸ்டிக்மாடிசம் இருப்பது
ஏன் தெரியவில்லை என்று லென்ஸ் பொறுத்தியவர் கேட்டார்.(பழைய டாக்டர்)
நான் டாக்டர் இல்லையே. .
நீங்கள் சொன்னதால் தெரியும்.   என்றேன்.
டாக்டர்  மோஹன் ராஜன் என் கண்களைச் சரிப்படுத்திவிடுவார் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

24 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விரைவில் நன்றாக வேண்டும் என்று வேண்டுகிறேன் அம்மா...

பால கணேஷ் said...

அடாடா... மருத்துவர்கள் மிக கவனமாகச் செயல்படா விட்டால் நாம்தான் எத்தனை வேதனையை அனுபவிக்க வேண்டியுள்ளது, உங்களின் கஷ்டம் மனதை கனப்படுத்துகிறது. நல்ல மருத்துவரால் விரைவில் நீங்கள் நலம் பெற்று உற்சாகமாய்ச் செயல்பட இறையை வேண்டுகிறேன்மா.

Geetha Sambasivam said...

ரொம்ப வருத்தமா இருக்கு வல்லி. அடுத்தடுத்துப் பிரச்னைகள் வந்தாலும் தாங்க வேண்டிய தைரியத்தை இறைவன் கொடுக்க வேண்டும் எனப் பிரார்த்தித்துக்கொள்கிறேன். எழும்பூர் அரசுக் கண் ஆஸ்பத்திரியிலேயே உலகத் தரத்துக்குச் சிகிச்சை கொடுப்பதாய் எல்லாப் பத்திரிகைகளிலும் வந்திருக்கு; அதை விட்டால் சங்கர நேத்ராலயா போயிருக்கலாமோ? என்னவோ, போறாத நேரம்! :((((((

கவனமாய் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

சரியாகிவிடும் தனபாலன்.
இவ்வளவு நண்பர்களின் வேண்டுதல் பலனளிக்காமல் போகுமா.

வல்லிசிம்ஹன் said...

தாங்கக் கூடியதைதான் அவன் நமக்குத் தருவான். என் முன் உதாரணமே நீங்கள் தான்.எத்தனை உடல் வேதனைகளP பொறுத்துக் கொள்கிறீர்கள்
நீங்கள் சொல்லும் இடங்கள் தான் சரியான தேர்வாய் இர்யுக்கணும். வீட்டிற்கு அருகாமை என்பதால் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தோம்.தேடி வரவழைத்த தலைவலி.:((

ஸ்ரீராம். said...

இப்போதைய மருத்துவர்களுக்கு பேசக் கூடப் பொறுமை இருப்பதில்லை என்று தோன்றுகிறது. நடந்தவை நடந்தவையை இருக்க இனி நடப்பது நல்லவையாய் இருக்க எங்கள் பிரார்த்தனைகள். சீக்கிரம் வலி வேதனைகள் விலகி ஒளி வீசட்டும்.

ஹுஸைனம்மா said...

//நல்ல வைத்தியரை அணுகுங்கள் //

நல்ல வைத்தியர் யாருன்னு தெரிஞ்சுக்கீறதுலதானே பிரச்னையே ஆரம்பிக்குது!! :-(((((

காடராக்ட் சிகிச்சை செய்தபிறகு, கடையில் உங்களை ஒரு பெண்மணி பார்த்து, யாரிடம் எப்படி செய்தீர்கள் என்று விசாரித்ததும், தனக்கு ஆதரவாக யாரும் இல்லாததால், யாரையும் நம்ப முடியவில்லை என்று அழுததும் நினைவுக்கு வருகிறது. அவரின் பயம் இப்போ நியாயமாகத் தோன்றுகிறது.

ஹுஸைனம்மா said...

பின் தொடர...

அமைதிச்சாரல் said...

தகவல் தொடர்புச் சாதனங்களில் ஒண்ணு பழுதாயிட்டாலும் கஷ்டம்தான்..

சீக்கிரமே நலம் பெற வேண்டுகிறேன்..

கவிநயா said...

இப்போதாவது கண்டு பிடித்தார்களே என்று தோன்றுகிறது அம்மா. இந்த முறை கண்டிப்பாக சரியாகி விடும். என்னுடைய பிரார்த்தனைகளும் உண்டு.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். கண்ணில் வலி என்று போன முதல் தடவை என்னைப் பார்த்தவர்தான். அதற்குப்பின் அவரது உதவியாளர்தான் பார்த்தார். ஒரு வரி சண்டை கூட போட முடியாமல் போச்சு:)
இப்பப் பார்த்த டாக்டர் அருமையாகக் கவனித்தார்.கேட்ட கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் சொன்னார். இத்தனைக்கும் ஏதோ பயணத்துக்கு அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தார்.
பிரார்த்தனைகள் கண்டிப்பகப் பலிக்கும் மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஹுசைனம்மா.நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. என் கதியே இப்படி. அந்தாம்மா தம்பி மகனை நம்பியே எல்லாம் செய்து கொள்வதாகச் சொன்னார். முதிர்ந்த வயதில் வரும் தளர்ச்சிகளில் அவரது நம்பிக்கை இன்மையும் ஒரு காரணம்.

ஒரே ஒரு வித்தியாசம். நான் நம்பி ஏமாந்தேன். அவர் ஏற்கனவே சந்தேகம் வந்துவிட்டதால் கண்டிப்பாக வெற்றி பெற்றிருப்பார்.
சரியான பாயிண்டை எடுத்துச் சொன்னீர்கள். இனிய ஈத் நாள் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

சரியாகச் சொன்னீர்கள் சாரல். ஐம்புலன்களில் எது பழுதானாலும் வம்புதான்.
நம்மையும் மீறி நடக்கும் இந்த விஷயங்களுக்கு என்ன செய்வது. சும்மாவா சொன்னார்கள் மனிதன் நினைக்க கடவுள் தான் நினைத்ததை நிறைவேற்றுகிறார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மீனா.கண்டிப்பாகச் சரியாகிவிடும்.
உங்கள் நம்பிக்கை மிகுந்த பிரார்த்தனைகளுக்குக் கண்டிப்பாக்ப் பலன் உண்டு.

அப்பாதுரை said...

very sad. புலம்பினாலும் தப்பில்லை - உங்கள் தப்பில்லையே இது? டாக்டரே நம்மைக் கேட்பது.. சரியாப் போச்சு போங்க. பொருந்தாத வைத்தியம் பார்த்ததற்காக வழக்கு போடமுடியுமா?
புது டாக்டர் வைத்தியம் பொருந்தி நீங்கள் குணமாக வேண்டுகிறேன்.

அப்பாதுரை said...

இத்தனைக்கும் நடுவுல பதிவு எழுதத் தோணியிருக்குப் பாருங்க உங்களுக்கு... அதான் committedங்கறது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை.
பசங்க ஸ்கைப்ல பேசும்போதே சொன்னார்கள் யூ அர் நாட் ஃபோகஸிங்னு.
பழைய நம்பிக்கைகளில் ஊறின மூளை. அப்படித்தான் இருக்கும் சரியாகிவிடும் என்று நினைத்தேன்.
டாக்டர் ராஜன் கருத்துப்படி,அவர்கள் வாங்கின பணத்துக்கான இம்போர்ட்டட் லென்ஸ் வைக்கவில்லை. லோகல் லென்ஸ் தான் வைத்திருக்கிறார்கள்.ஆகக் கூடி இழந்த பணம்60000த்துக்குப் பக்கம் போகிறது.
அவர்கள் சர்ஜரி ப்ரொசீஜருக்கு முன் 27 இடங்களில் என் கையெழுத்தை வாங்கினர்கள். கண் தெரியவில்லை என்றால் எங்கள் பொறுப்பில்லை என்று சொல்லி இருந்தது அதில்.படித்த தைரியமில்லாத முட்டாள் களுக்கு இதுதான் கதி.
எங்கயாவது சொல்லிப் பகிர்ந்துக்கலாம். அதற்கு வலைப்பூதான் வடிகால்.அதுதான் எழுதினேன்.டயரி எழுதுவது போல இது வழக்கமாகிவிட்டது:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு கணேஷ்,நான் உற்சாகமாக இருப்பது என்றே தீர்மானித்துவிட்டேன்.இத்தோடப் போச்சேன்னு இருக்க வேண்டியதுதான். கஜ்ஜை கட்டிண்டு சண்டை போடவும் தெரியாது:)மிக மிக நன்றிமா.

Indhira Santhanam said...

நலம் பெற பிரார்த்திக்கிறேன் அம்மா என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கவனமாய் இருங்கள் கண்ணன் காப்பாற்றுவான்.

Ranjani Narayanan said...

அன்பு வல்லிசிம்ஹன்,
உங்கள் கண்கள் சீக்கிரம் குணமாக என் பிரார்த்தனையும் சேருகிறது. உங்கள் குறையாத உற்சாகம் மிகவும் பாராட்டுக்குரியது.
அன்புடன்,
ரஞ்ஜனி

அப்பாதுரை said...

//அவர்கள் சர்ஜரி ப்ரொசீஜருக்கு முன் 27 இடங்களில் என் கையெழுத்தை வாங்கினர்கள். கண் தெரியவில்லை என்றால் எங்கள்...

smells like malpractice. வெளிலருந்து சொல்றது சுலபம்னாலும்.. நிச்சயமா ஒரு வக்கீலை வைத்துக் கேட்டுப்பார்க்கலாம். consumer protection agencies நிச்சயமா இருக்கும்னே தோணுது. இந்த மாதிரி ஏமாத்து.. this is low.
குறைந்த பட்சம் உள்ளூர் jurisdiction காவல் நிலையத்தில் புகாராவது கொடுங்க.

வல்லிசிம்ஹன் said...

நீங்கள் சொல்வது சரி துரை.
தம்பி மூலமாக அணுகப் பார்க்கிறேன்.
ஏதாவது பலன் கிடைக்கும்.

mal practise enRAl ange ஏன் இவ்வளவு கூட்டம் வருகிறது என்று புரியவில்லை. வாசன் ஐ கேர் ப்பற்றியும் இப்படியே தான் சொல்கிறார்கள். நன்றி துரை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு இந்திரா, ரஞ்சனீ
இருவரது அன்புக்கும் நன்றி.சரியாகிவிடும்.

மாதேவி said...

நலம்பெற பிரார்த்திக்கின்றேன்.