About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Tuesday, August 14, 2012

மின் வேகம் கட்டப் பணவேகம்


 தொட்டுப் பார்த்தால்  விர்ருனு இழுக்கவில்லை.நல்ல  வேளை.
சமையல் ஆகணுமே.
இருட்டில இருக்கிற  சாமிரூமுக்கு  நாலு விளக்கு ஏற்றி வைத்து
அப்பா சாமி  நோ மோர் ஷாக். தாங்காதுன்னு வேண்டிக் கொண்டு
மீண்டும்   மின்வாரியத்தை உதவிக்கு அழைத்தால் அதிசயம்! அடுத்த அரைமணி நேரத்தில் கையில் வயர் , ப்ளையர் சகிதம்
ஒரு லைன்மேன்  வந்துவிட்டார்.

அசால்ட்டாக எரிந்து முடித்திருந்த ஜங்ஷன்  பொட்டியைத் திறந்தார். ஆறு இன்ச்  வயரை மாற்றி முடிச்சுப் போட்டு  படபட வென்று மூடிவிட்டு 300 ரூபாயும்  வாங்கிக் கொண்டு போய்விட்டார்.
ஐய்யா    ஷாக் அடிக்கிறதேன்னு சொல்வதற்குள்  ஆளைக் காணோம்.

பாதிசமையலை முடித்துக் கொண்டு
மைலாப்பூர்  டைம்ஸில்   தேடினேன். டிவி ரிப்பேர்,சகலரிப்பேர்   என்று ஒரு விளம்பரம். நம்பலாமா என்றேல்லாம் யோசிக்கவில்லை.  போனில் அழைத்ததும்    ஆளை அனுப்புவதாக  அவர் ஒத்துக் கொண்டார்.

சொன்ன இரண்டு மணி நேரத்தில்  இரண்டு  இளைஞர்கள் வந்தார்கள்.

யுபிஎஸ்   மாற்றணும்,
டிவி கழட்டியாச்சு.
என்ன டாமேஜ்னு ஓணர் சொல்வார்.
கவலைப் படாதீங்க சாயந்திரம் வந்துவிடுவோம்''
என்றவாறு    கிளம்பினார்கள்.

அவர்கள் சென்ற பிறகு  திகிலடித்தது. ஐய்யோ டிவியைக் கொடுத்துட்டோமே.
யாரென்றே தெரியாதே.
புலம்பாதே. பேப்பர்ல பார்த்துதானெ அழைத்தாய்.. ஒண்ணும் ஆகாது. சாப்பிட்டு  ரெஸ்ட் எடு .எல்லாம் சரியாகிவிடும்.
எங்க வீட்டு பாசிட்டிவ் சிங்கம்.
அதே போல அவர்களிடமிருந்து   ஃபோன் வந்தது.
யுபிஎஸ் 2000
டிவி ஸ்டபிலைசர் 700
டிவி ரிப்பேர்    7500....ரிப்பேர் ஆரம்பிக்கலாமா....
நான் இவரைப் பார்க்க  கம்ப்யூட்டர் இல்லாம
நீ இருக்க மாட்ட. அதே போலதான் டிவியும்..
சரின்னு சொல்லு.
சரி.
10200,.
சாயந்திரம் வந்தார்கள் யூபிஎஸ்    கேபிள் எங்கவீட்டுது அவங்க கொண்டு வந்ததற்குப் பொருந்த வில்லை.
தொலைபேசி அடாப்டர் அவுட்.மோடம் அடாப்டர் அவுட்.  ஸ்பீக்கர் அடாப்டர் அவுட்
ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பான்னு வடிவேலு மாதிரி   உட்கார முடியுமா.
இன்னும் 2000 எடுத்துக் கொடுத்தாச்சு. எல்லாவற்றுக்கும் பில் கொண்டு வந்தார்கள்.
பொருத்தினார்கள். எல்லாம் வேலை செய்ய ஆரம்பித்தது.

குளியலறை ஷாக் தான் பாக்கி. அதற்கும் ஒரு ஆள் தேடினோம். எங்கள் வழக்கமான  எலெக்ட்ர்ரிஷியன்  மந்த ஸ்ருதியில் இருந்ததால் கூப்பிடவில்லை.
 சிங்வி கடை  எலேக்ட்ரிஷியன் வந்தார்,.
எல்லா ப்ளக்லயும் வெறும் விரலை வைத்தே(!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!)
பரிசோதனை செய்தார்.
வீட்டுக்குள்  மின்வேகத்தடை   செய்யும்  ஐசொலேட்டர்  என்பதை வாங்கி வந்து மாட்டினார். அது ஒரு 3750.

இது ஷார்ட் சர்க்கியூட் ஆவதைக் கண்டதும் மின்சாரத்தை நிறுத்திவிடுமாம்.

இப்போ உங்க பாத்ரூம் ஷாக் அடிக்காது என்று சிங்கத்டிடம் சொல்லிவிட்டுக் கூலியை வாங்கிக் கொண்டு போய்விட்டார்.
பெண்கள் முகத்தைப் பார்க்க மாட்டார்  போலிருக்கு.:(
நான்   கேட்கவந்த கேள்விகள்     என் தொண்டையிலேயே நின்றன.
அவ்வளவுதான்பா கதை .
நேற்றிலிருந்துதான்  குழாயைத் தொடும் தைரியம் வந்தது.

அறிவாளி படத்தில் முத்துலட்சுமி   சுச்சு போட மறுப்பார். அது என்னைப் பிடித்துக்   கொள்ளும் என்பார்.
தங்கவேலு அதற்கு  'ஆமா அதுக்கு உம்மேல ஆசைபாரு. அப்படியே உன்னைப் பிடிச்சுக்கும்'' என்று சிரிப்பார்.
நாங்களும்அதைக்  கேட்டுச்   சிரிப்போம்.

இப்ப  மின்சாரம் எங்களப்  பார்த்துச் சிரித்துவிட்டது:(


 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

17 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) ஆக ரொம்ப பெரிய ஷாக் தான் போல..

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கயல். வெரி காஸ்ட்லி ஷாக்:)

திண்டுக்கல் தனபாலன் said...

எங்களுக்கு ஷாக் அடித்த மாதிரி இருக்கு அம்மா...

இவ்வளவு செலவா...?

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் தனபாலன்.

நாகரீக உலகிற்கு நாம் கொடுக்கும் விலை.
கவலை இல்லாத அரசுக்கு நாம் கொடுக்கும் மான்யம்.

மின்சாரம் பற்றின சரியான அறிவில்லாததும் பேரம் செய்யத்தெரியாத அறிவிலித் தனமும் கொடுக்கும் படிப்பினை.

Indhira Santhanam said...

பணம் விரயம் மட்டுமின்றி அந்த நேரம் பதட்டம் பயம் எல்லாம் சேர்ந்து மீண்டுவருவதற்குள் போதும் என்றாகிறது.நல்லவேளை பகவான் காப்பாற்றினார்.

ஸ்ரீராம். said...

யு பி எஸ், டிவி ஸ்டெபிலைசர் எல்லாம் புதுசுதானே.... ?
டிவி ரிப்பேருக்கு 7500?
எப்படியோ பிரச்னை தீர்ந்தால் சரி.. ஆனாலும் சுவிட்ச் போடப் போகும்போது கொஞ்ச நாள் லேசா பயம் இருக்கத்தான் செய்யும் இல்லை?!!

இனி எல்லாம் சுகமே...!

Geetha Sambasivam said...

படிக்கிறச்சேயே ஷாக் அடிக்கத் தான் செய்தது. என்றாலும் இத்தோடு சனியன் விட்டதுனு நினைச்சுப் பிள்ளையாருக்கு இன்னும் ஒரு நமஸ்காரத்தைப் பண்ணுங்க. வேறே ஏதானும் எக்கச்சக்கமாப் போயிருந்தா? ஆகவே இது தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன சமாசாரம் தான்! கடவுள் காப்பாற்றித் தான் இருக்கார்.

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் கடவுள் தான் காப்பாற்றினார்.
முன்னால் போல டிவியைக் கழற்றிக் கொண்டு போய்க் கூடவே இருந்த்து
ரிப்பேர் செய்திருந்தால் இன்னும் கொஞ்சம் பணவிரயத்தைத் தடுத்திருக்கலாமோ என்னவோ. எப்படியோ இனிமேல் ஜாக்கிரதையாக இருக்கணும் இந்திரா.

வல்லிசிம்ஹன் said...

எல்லாம் புதுசு தான் ஸ்ரீராம்.

வசந்த் அண்ட் கோல வாங்கிக் கொண்டுவந்தார்கள். எல் சி டி டிவியின் உள் போர்ட் பூராவும் எரிந்திருந்தது. புதுசாப் போட்டதால் இவ்வளவு செலவு என்று சொன்னார்.இந்த மாதிரி நேரத்தில்தான் பசங்க இங்க இல்லையேன்னு தோன்றுகிறது.ஆமாம் இனி எல்லாம் சுகமென்றே நம்புகிறேன்.

ஹுஸைனம்மா said...

ஒரு நாள்ல, பதினையாயிரம் ஆச்சா!! ஏயப்பா... அந்த ஷாக்கைவிட இந்த ஷாக்தான் பெரிசாத் தெரியுது இப்போ...

பணத்தைவிட, அததுக்கான டெக்னீஷ்யன்கள் (நம்பகமான) உடனே கிடைக்கீறதுதான் கஷ்டம் இப்பல்லாம்!!

கன்ஸ்யூமர் கோர்ட்டில் ஈ.பி. மேலே கேஸ் போட முடியுமான்னு பாருங்க.. (சிரிக்காதீங்க...) நம்ம தப்பே இல்லாம, இவ்வளவு நேர விரயம், பண விரயம், மன உளைச்சல், பயம்னு.. எத்த்னை கஷ்டம்..!!

//இந்த மாதிரி நேரத்தில்தான் பசங்க இங்க இல்லையேன்னு//
ம்ம்...

வல்லிசிம்ஹன் said...

நிஜம் அதுதான். கீதா
இரண்டு பேர்ல யாருக்கு உடம்புக்கு வந்தாலும் மனம் பயப்படுகிறது.
இருவருமே தைரியசாலிகள். பசங்க இருக்கும்போது ஒரு கவலை இல்லாமல் வாழ்க்கை ஓடியது.பாரமே இல்லை.
பணத்தைக் கொடுத்து ஏமாந்தோமோன்னு தோணித்து. நமக்கு டிவி பற்றி ஒன்றும் தெரியாது.
இத்தோட போச்சேன்னுதான் லஸ் பிள்ளையாருக்கு நமஸ்காரம் சொன்னேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஹுசைனம்மா.
மனசைக் கல்லாக்கிக் கொண்டுதான் பணத்தைக் கொடுத்தேன். மொத்த சர்க்யூட் போர்டும் போயிட்டதாச் சொன்னா என்ன செய்வது.ஆனால் டிவியில் பெரிதாகச் சத்தம் வந்தது உண்மை.
என்னமோ போங்க. அலுப்புதான்.
எங்க பழைய ஷார்ப் டிவி ஆறுவருஷம் தொந்தரவில்லமல் போச்சு.
மின்வாரியத்தைப் பற்றி கன்ச்யூமர் தோழர் ஒருவரிடம் கேட்டோம். அவர்களிடம் வயர் சப்ப்ளையே கம்மியாம். அதனால் இருப்பதை வைத்து ஓட்டுகிறார்களாம்.

மாதேவி said...

படிக்கும்போதே எங்களுக்கும் ஷாக்தான்.

என்ன செய்வது பாதுகாப்பு முக்கியம்தானே.

வல்லிசிம்ஹன் said...

கோமதி அரசு has left a new comment on your post "மின் வேகம் கட்டப் பணவேகம்":

அறிவாளி படத்தில் முத்துலட்சுமி சுச்சு போட மறுப்பார். அது என்னைப் பிடித்துக் கொள்ளும் என்பார்.
தங்கவேலு அதற்கு 'ஆமா அதுக்கு உம்மேல ஆசைபாரு. அப்படியே உன்னைப் பிடிச்சுக்கும்'' என்று சிரிப்பார்.
நாங்களும்அதைக் கேட்டுச் சிரிப்போம்.//

துன்பம் வரும் நேரத்தில் சிரிங்க என்று வள்ளுவன் சொன்னதை கடைபிடித்து விட்டீர்கள்.
எவ்வளவு பணநஷ்டம், மனகஷ்டம்!

வல்லிசிம்ஹன் said...

வாங்க மாதேவி.
இந்தச் சுதந்திர நாளிலாவது லஞ்சமும் அறியாமையும் ஒழிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, உங்கள் பின்னூட்டத்தைக் கஷ்டப்பட்டு மீட்டேன். ஸ்பாமுக்குப் போய் விட்டது.

உங்கள் கவலைக்கும் ஆதரவான வார்த்தைகளுக்கும் நன்றி.

துளசி கோபால் said...

அச்சச்சோ.....இது மின்சாரக்கொள்ளையா இருக்கே!!!!!

ஹைவோல்டேஜ்க்கு நிறைய காசு போல இருக்கு!!!!