Blog Archive

Monday, August 13, 2012

ஷாக் ஷாக்!!!!பேரைக் கேட்டாலே பதறுதே தில்லு!

அதிர்ச்சி
என்ன சார் காலில் செருப்பில்லாமல்  கம்பியைப் பிடிச்சீங்களா:)

 இதே  போல ஒரு காலை.. உணவு   மாத்திரைகள் எல்லாம்
உள்ளே தள்ளிவிட்டுக் கணினியின் அருகே வந்தேன்.
ஞாயிற்றுக்கிழமை , பழைய இண்திப்பாடல்கள் ரங்கொலியாக தூர்தர்ஷனில்  வரும்.

தர்மேண்த்ராவும் ராக்கியும் ''ஜில் மில்'' என்று வீடு கட்டப் போகும்  அழகை வர்ணித்தபடி இருக்கையில்,
கணீனியின் யுபிஎஸ் அலற ஆரம்பித்தது.
எ என்று திரும்புவதற்குள் இன்வர்ட்டர்  கர்ணகடூரமாக பலவித கர்ஜனைகள் செய்தது.
சத்தங்களைச் ஜீரணம் செய்வதற்குள்  டிவி பெட்டி   டமால்.பெட்டி வெடிக்கவில்லை. உள்ளே சத்தம்.

காம்பவுண்டுக்கு வெளியே ''சாமி ஏணிய விட்டு இறங்குங்க'உங்க பக்கத்தில மீட்டர்   பெட்டி வெடிக்குது.  சாலையோரம் போகிறவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று  நீட்டி இருக்கும் போகன்வில்லக் கிளைகளை
வெட்டும் வழக்கம் உண்டு இவருக்கு.

அவற்றை அள்ளிப் போட்டு உதவி செய்யும்  மாநகரத் தொழிலாளி எதேச்சையாக வந்திருக்கிறார்.

எஜமானர் கர்மமே கண்ணாயினார்.அதனால் காதுகளை மூடிக்கொள்ளலாமா. செய்வார் போல.
அவன் அலறினது எனக்கே கேட்டு நான் வெளியே வந்து தயவு செய்து உள்ளே   வருகிறீர்களா. .உலக மஹாயுத்தம் போல எல்லாம் பட் பட் என்று போகிறது என்று சொன்னேன். இரும்மா .ஏதாவது ஷார்ட் சர்க்யூட் ஆக இருக்கும் என்று இன்வர்ட்டர் பக்கத்தில் வந்தால் பொசுங்கின வாசனை.

கணீனி அவுட்,
தொலைக்காட்சி அவுட்,  காம்பவுண்ட்  சுவரை ஒட்டிய
   ஜங்க்ஷன்  பாக்ஸ் கொழுந்துவிட்டு எரிகிறது. சாலையில் அவரவர்
வேலையில் விரந்து கொண்டிருந்தார்கள்.
நான் உள்ளே வந்து ஈபியின் அவசர எண்ணை அழைத்தால் ஏதோ ஒரு வீதியில் (2 கிலோமீட்டர் தொலைவில்)      மெயிண்டினென்ஸ்.பத்துமணிக்கு வரும்மா என்கிறார். சார் வீட்ல டிவி கணினி எல்லாம் நின்னு போச்சு என்றால் பத்துமணிக்கு வந்துடும் என்று வைத்துவிட்டார்,.
அதிசயம் என்ன என்றால் எங்கள் வீட்டில் மட்டும் தான் பிரச்சினை.

அது இன்னும்கடுப்பு.:(
என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே கம்பீரமாக ஒருவர்
எங்கள்  வீட்டிற்கு இரண்டு  வீடு தள்ளி இருக்கும் கரூர்வைஸ்யா பான்K
அடுக்கு மாடிக் கட்டிடத்தின் செகரட்ரியாம், கையோடு  ஒரு மின் உதவியாளரை அழைத்து வந்தார்.
அந்தக் கட்டிடத்திலும் மின்சாரம் நின்று விட்டிருக்கிறது.
சரி பொறுப்புள்ள ஆண்பிள்ளைகள் இருக்கும் இடத்தில் நாமும் குரல் கொடுக்கவேண்டாம் என்று
உள்ளெ வந்து  குளிக்கும் அறையின் கைகழுவும் குழாயைத் திறக்கப் போனேன்.
சுர்ரீர்  என்று அடித்தது ஷாக்.
முதல் நாள் தான் புது ஹீட்டர் வாங்கிப் போட்டு இருக்கிறோம்.

ஆவீன மழை பொழிய என்று பாடிக் கொண்டே மீண்டும் வெளியே வந்தேன். என்ன ஆவின் பால் வல்லையா என்கிறார் எஜமான்.
அடிபட்ட கோபம்.
'எல்லாம் நீங்க மாட்டினீர்களே அந்த ஹீட்டர்தான் காரணம் அது ஷாக் அடிக்கிறது.
'உனக்கு எப்பவுமே அதீத கற்பனை. இதோ பார் நான் தொடுகிறேன் என்று வேறு குழாயைக் கெட்டியாகப் பிடித்தார். அடுத்த கணம்
அவசரமாக வந்தவரைப் பார்த்ததும் தெரிந்து கொண்டேன். மின் சக்தி ஆண்பெண்   பார்ப்பதில்லை என்று.

மூர்த்தியைக் கூப்பிடு.
லஸ் பவர் ஸ்டேஷனைக் கூப்பிடு.
வாசுவைக் கூப்பிடு.
கட்டளைகள் பறந்தன.
முதலில் எனக்கு   குளிக்கணும்.அப்புறம்தான் வேறவேலை.
மாடிக்குப் போய் குளி.
நான் மாட்டேன். அங்கயும் ஷாக் அடிச்சா,
சரி நான்  வெளியில் இருக்கும் வீட்டு மீட்டரையே அணைக்கிறேன்.
நீ போய்க் குளித்துவிட்டு சமையலைப் பாரு.


ம்ஹூம் எனக்கு நம்பிக்கை இல்லை.
குழாய்கள் அனைத்தும் சேர்ந்து எனக்கெதிராக சதி செய்வதாக ஒரு பிரமை.
கடைசியில் காலில் வீட்டுக்குப் போட்டுக் கொள்ளும்செருப்பைப் போட்டுக் கொண்டு,மாடிப்படி அருகில் இருக்கும் விருந்தினர்    டாய்லெட்டில்  எக்ஸ்ட்ரா     குழாய் இருப்பது நினைவுவர அங்கெ   ஒரு ஸ்டூலைப் போட்டுக் கொண்டு மஹா சுத்தமாகக் குளித்துவந்தேன்.
அதனால் என்ன எத்தனையோ பேர் கீத்துக் கொட்டகையில் குளிக்கவில்லையா. தண்ணியாவது இருக்கே என்று நினைத்தபடி
சாமி ரூமுக்கு வந்தாச்சு.
சமையலறைக் குழாயைத் தொட பயம்.
தண்ணீர் சுத்தம் செய்யும் ஆர்வோ  குழாயில்   கனெக்டாகி இருக்கே!!(தொடரும்)    :0)

















 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்



15 comments:

Yaathoramani.blogspot.com said...

அடுத்த பதிவை சீக்கிரம் போடுங்க
பயம்மா இருக்கு..

வல்லிசிம்ஹன் said...

வாங்க ரமணி.இந்தப் பதிவை எழுதும்போதே பயமா இருக்கு:)
இதற்கெல்லாம் ரிப்பேர் எனும் பேரில் கொடுத்த பணம் அது ஒரு எரிச்சல்.
தென்னை மரம் தேளு எல்லாம் கனெக்டாச்சு:)ஏன் இப்படி நடக்கிறது என்று மின்வாரியத்தில் கேட்டால் நம்ம சிஸ்டமே அதுதான் சார் என்று அந்த அம்மா சொல்கிறாங்க.:(நாளை மிச்சத்தையும் எழுதிவிடுகிறேன்.

Unknown said...

இங்கேயும் இதே பிரச்சினைதான் தினசரி கேபிள்பால்ட் ட்ரான்ஸ்போர்மேர் வெடிப்பது என்று பல ரூபங்களில் பணம்தான் விரயமாகிறது. நமக்குத்தான் பிபி ஏறுகிறது மின்வாரியம் கூலாகதான் இருக்கிறது. கவனமாகஇருங்கள் அம்மா.

துளசி கோபால் said...

ஐயோ என்னப்பா விளையாட்டாச் சொல்றீங்க இந்த வினையை!!!!!

சம்சாரத்தோடு விளையாடலாம்..... மின்சாரத்தோடு விளையாடலாகுமோ????

சிங்கத்துக்கு ஷாக் பலமோ? அடப்பாவமே!!!

கோமதி அரசு said...


நல்லவேளை ஷாக் பலமாக அடிக்கவில்லை, கடவுள் காப்பற்றினார் எனத் தெரிகிறது.

அப்புறம் என்ன ஆச்சு!
அடுத்த பதிவை படிக்க ஆவல்.

ஸ்ரீராம். said...

அட அநியாயமே.... ரொம்ப ரிஸ்கான விஷயங்கள்... தொடருங்கள். எதனால் இதெல்லாம்... மீட்டர் பெட்டியே எரிந்தால் மெயின் எங்கு அணைப்பது?

திண்டுக்கல் தனபாலன் said...

என்னமோ, ஏதோ என்று பயமா இருக்கு... அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை என்றால் சந்தோசம் அம்மா...

தொடருங்கள்... நன்றி…


அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

ஹுஸைனம்மா said...

// யுபிஎஸ் அலற ஆரம்பித்தது.
இன்வர்ட்டர் கர்ணகடூரமாக பலவித கர்ஜனைகள் செய்தது.
சத்தங்களைச் ஜீரணம் செய்வதற்குள் டிவி பெட்டி டமால். பெட்டி வெடிக்கவில்லை. உள்ளே சத்தம்
குளியல் அறை - சுர்ரீர் என்று அடித்தது ஷாக்//

ஆ... சர்வ சாதாரணமா எடுத்து எழுதுறீங்க...நானா இருந்தா அப்பவே தலைதெறிச்சு ஓடிருப்பேன்!!

//வெளியே மீட்டர் பாக்ஸ் கொழுந்துவிட்டு எரிகிறது. சாலையில் அவரவர் வேலையில் விரந்து கொண்டிருந்தார்கள்.//

நகரம்!! :-)))))

சாந்தி மாரியப்பன் said...

வாசிக்கறச்சயே பயம்மா இருக்கே..

வல்லிசிம்ஹன் said...

அதேதான் இந்திராமா.பிபி ஏறத்தான் செய்கிறது.இன்னும் வரப் போகிற மழைக்காலத்தில் எத்தனையோ....
நாம் எந்த சென்சுரியில் வாழ்கிறோம் என்பதே கேள்விக்குரியதாகிறது.

வல்லிசிம்ஹன் said...

சிங்கம் மத்தவங்களுக்குத்தான் ஷாக் கொடுப்பார்:)
அவரையே கொஞ்சம் பதம் பார்த்துவிட்டது இந்தத் தடவை:(
வெறும் மின்சாரத்தடை ரிப்பேர் குழு செய்யும் தவறு ஒரே ஒரு குடும்பத்துக்கே இத்தனை பணநஷ்டம் கொடுக்குமானால், நம்மைக் காப்பாற்ற அந்நியன்தான் வரவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோமதி. சுவரெல்லாம் ஷாக்.எங்கயோ எர்த் பழுதுபட்டுவிட்டது.
ஒரே ஒரு ஃபேஸ் அதிர்ச்சி கொடுக்காமல் இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

சாரி ஸ்ரீராம்.ஜங்ஷன் பெட்டி என்று சரியாகத்திருத்திவிட்டென்.
எங்கள் வீட்டு மெயின் மீட்டர் ஸ்விட்ச்சை அணைத்த பிறகும்
குளிக்கும் அறை ஷாக் அடித்தது:(

வல்லிசிம்ஹன் said...

அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் காப்பது கடவுள்தான் தனபாலன்.
இளவயதில் இதையெல்லாம் சமாளிக்கப் போதுமான தைரியம் இருந்தது. இப்பொழுது தாங்குவதற்கு உடலில் வலு இல்லை.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஹுசைனம்மா. அது த்ரில்,ஹாரர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
நகரத்தில் இந்த இதெல்லாம் சஹஜம். அவரவர் வீடு சரியில்லை என்றால் கேட்க வருவார்கள்.ஒரு பதினைத்து வீடுகளுக்கான ஜங்க்ஷன் பாக்ஸ் வெடிக்கிறது.
வழியோடு போகிறவர்கள் வேறேன்ன செய்வர்கள். தங்கள் மேல் படாமல் ஒதுங்கி வண்டி ஓட்டிப் போவார்கள்.இந்திரா சந்தானம் சொல்வது போல இது ஒரு பழகிய சீன் ஆகிவிட்டது.