Blog Archive

Sunday, July 22, 2012

சொ செ சூ

உயிர்கொல்லிகள் ஜாக்கிரதை!




 நினைத்ததே    இல்லை. கொசுவையும் கரப்பான் பூச்சியையும் கொல்லும் மஸ்கிடோ  ஸ்ப்ரே  என்னையும் பதம் பார்க்கும் என்று.இரண்டு நாட்கள் முன்
 ஆடி மாத  ஈக்களின் தொல்லை அதிகமாக இருந்தது.
ஜன்னல்களில் போட்டிருக்கும் வலைகளையும் தாண்டி இரண்டு ஈக்கள் வீட்டுக்குள்ளும் வந்துவிட்டன.
அவை என்னைத் தான் தேடி வந்ததோன்னு நினைக்கிறபடி  குளிக்கும் அறைக்குள்ளும் புகுந்து விட்டன.
இதேதடா வம்பு  என்று எடுத்தேன் ஹிட்   குழாயை.
அதான் விளம்பரத்தில் சொல்கிறார்களே, ஒரு கறுப்பு ஹிட் இருந்தால் போதும்.உலகத்தையே ஜெயிக்கலாம் என்று.:(
ஹிட்  அடித்த கையோடு  குளிக்க நுழைந்து கதைவையும் சாத்திவிட்டேன். ஒரே ஒரு மூச்சு தான் இழுத்திருப்பேன்.

அவ்வளவுதான்     தொண்டையை யாரோ  இறுக்கியது போல
மூச்சு விட முடியாமல்(gasp) இழுக்க ஆரம்பித்துவிட்டது.
முதலில் ஒன்றும் புரியவில்லை. பிறகுதான்  அவசரமாகக் கதவை த் திறந்து வெளியே வந்து  ஃபானைப் போட்டுத் தடால் என்று உட்கார்ந்தவள் ஒரு பத்துநிமிடத்துக்காவது போராடியிருப்பேன்.

மகனோ என்ன  ஆச்சு என்று தெரியாமல் அம்மா அம்மா என்று கதவுக்கு அப்பாலிருந்து கேட்கிறேன்.
வாயிலிருந்து வார்த்தை வந்தால் தானே!!
கொஞ்சம் நிதானம் வந்தபிறகு கதவைத் திறந்து நான் சரியாக இருக்கிறேன் என்று தெளிந்த பிறகு மீண்டும் குளிக்கப் போனேன்.

படித்த முட்டாள் என்று இதைத்தான் சொல்வார்கள். நிதானம் இல்லாமல்  இவ்வளவு  அவசரம் வேண்டுமா.
இந்த  சாதனங்களின் வீர்யம் தெரியாமலயே  உபயோகித்து வந்திருக்கிறேன்.
விவேகம் இல்லாமல் நான் செய்த இந்தத்   தவறை வேறு யாரும் செய்யக் கூடாது என்றே பதிவிட்டேன்.

அதிர்ஷ்டவசமாக வேற ஒன்றும் நடக்கவில்லை.
பக்கவிளைவாக வயிற்றுவலியும் தலைவலியும் மட்டும்.
கடவுளுக்கு நன்றி.


 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

28 comments:

துளசி கோபால் said...

அட ராமா!!!!

மருந்தடிச்சு மூடி வச்சுட்டு ஒரு பத்து இல்லை பதினைஞ்சு நிமிசம் பொறுத்துக் கதவைத் திறக்க வேணாமோ?

போகட்டும்.... தலைக்கு வந்தது சவுரியோடு போச்சுன்னு வச்சுக்க வேண்டியதுதான்.

ஆமாம்.... இது என்ன இந்த நேரத்தில் பதிவு? நோ தூக்கம்?

Geetha Sambasivam said...

ஆமாம்.... இது என்ன இந்த நேரத்தில் பதிவு? நோ தூக்கம்?//

ஆமா இல்ல?

இப்போ உடம்பு சரியாயிடுச்சு தானே? கவனமா இருங்க. நேத்திக்கு அவரும் ரொம்பவே கவலைப்பட்டார். எப்போவுமே ஜன்னலைத் திறந்து வைச்சுட்டு இந்த மாதிரியான மருந்துகளைத் தெளியுங்க.

வல்லிசிம்ஹன் said...

அதான் விசுக்கி அழுத ஜன்மத்துக்கு வேற என்ன தெரியும்:(

இவ்வளவு அசட்டுத்தனம் ஒரு கிழத்துக்கு வேண்டாம்.நம்மால் எல்லாருக்கும் கஷ்டம்னு நினைத்தாலெ வருத்தமா இருக்குப்பா.
காடராக்ட் ஆனதுக்கப்புறம் தூக்கமும் போச்சுப்பா.மூணரை மணிக்கெல்லாம் எழுந்துக்கறேன்.:)சாமி கும்பிடலாம்!!

வல்லிசிம்ஹன் said...

வரணும்மா கீதா. நம் பாத்ரூம் ஜன்னல் பக்கத்து வீட்டு வரவேற்பறைக்கு
எதிராப்பில இருப்பதால் மூடி வலையும் போட்டாச்சு.அறையில் மின்விசிறி உண்டு.இனி எக்ஸாஸ்ட் விசிறியும் போடவேண்டும்.
பழைய வீடு.
அவசரப் படுவதே வழக்கமாகிவிட்டது. இப்போ எந்தப் பட்டணம் கொள்ளைபோகிறதுன்னு இப்படிப் பண்ணினாய்னு சிங்கமும் கோபித்துக் கொண்டார். பிள்ளையார் தான் நல்ல புத்தி கொடுக்கணும்.

துளசி கோபால் said...

ஜன்னலைத் திறந்து வச்சுட்டு மருந்தடிச்சா என்ன பயன்? பூச்சிக்கு ஆயுஸு நூறாகுமே1

சாந்தி மாரியப்பன் said...

மருந்தடிச்சு வெச்சுட்டு அதை நாமளும் சுவாசிக்கும்படியா அறைக்குள்ள இருக்கலாமோ. உடம்புக்குக் கேடு இல்லையா வல்லிம்மா?.. அதுலயும் மருந்து கண்ணுல பட்டுட்டா இன்னும் ஆபத்தாச்சே. இப்பத்தான் உடம்பு சரியில்லாம ஆகி தேறி வந்துட்டிருக்கீங்க. பத்திரமாப் பார்த்துக்கோங்கம்மா..

வல்லிசிம்ஹன் said...

அது!துளசி இந்த ஈ என்ன செய்கிறது. உள்ளெ போகிறது .மேல உட்கார்கிறது. உனக்காச்சு எனக்காச்சுன்னு சண்டை.அதுக்காக போர்க்களத்துக்குள் நுழைந்திருக்க வேண்டாம்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல்.
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் னு நம்மளையே நினைச்சுக்கறோம் பாருங்க. அதான் என் தப்பு.இனி ஜன்மத்துக்கு இந்த மாதிரி செய்ய மாட்டேன்.
கவலைகொள்ளவைத்துவிட்டேன். மன்னிக்கணும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ நான் ஹிட் அடிச்சுவிடனும்னாலே மூக்கில் துணியெல்லாம் சுத்திக்கிட்டு.. ராத்திரி தூங்கறதுக்கு முன்ன அடிச்சுவிட்டுட்டு அந்தப்பக்கமே திரும்ப மாட்டேன்.. இப்படி செய்து மாட்டிக்கிட்டீஙகளே நல்லவேலை ஒன்னுமாகல..டேக் கேர்..

திவாண்ணா said...

:-((
ஜீவ காருண்யமே நல்லது! உயிர் வாழ அதுகளுக்கு இல்லாத ரைட்டா?

திண்டுக்கல் தனபாலன் said...

கவனம் வேண்டும் அம்மா...!
பகிர்வுக்கு நன்றி...

கௌதமன் said...

கருப்பு ஹிட் அடிக்கு முன்பு, என்னுடைய பையர் என்னை 'வீட்டை விட்டு வெளியே போ' என்று அன்பாகத் துரத்தி விட்டு விடுவது வழக்கம்.

கௌதமன் said...

ஆமாம், 'சொ செ சூ' என்றால் என்ன? சொன்னதை செய்திட சூசகமா?

ஹுஸைனம்மா said...

இந்த வகையறாக்களெல்லாம் கெடுதல்னு தெரியும், ஆனாலும் இந்தளவுக்கான்னு பதறுது. கரப்புக்கு மட்டும் பயன்படுத்துவதுண்டு, அப்பவும் அந்தப் பக்கம் கொஞ்ச நேரமாவது போவதில்லை. இனி இன்னும் ஜாக்கிரதையா இருக்கணும். தகவலுக்கு நன்றிம்மா.

ஆமா, ரெண்டே ரெண்டு ஈக்கு இவ்வளவு பயமா? :-)))

வல்லிசிம்ஹன் said...

அன்பு கயல்,நல்ல வேளை எங்கள் பெண் ஊருக்க்குச் சென்ற அடுத்த நாள். இல்லாவிட்டால் ஹாஸ்பிடலுக்கு அழைத்துப் போயிருப்பாள்ள்.:)
இனிமே ஹிட் என்றால் மட்டையைத்தான் தூக்கணும்:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் தம்பி வாசுதேஎவன். ஜீவகாருண்யம் ரொம்ப முக்கியம். ஏனெனில் அந்த ஈக்கள் இன்னும் இருக்கின்றன:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்ன். இனி முழுக்கவனத்துடன் வேலை செய்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கௌதமன்.சொ செ சூ என்றால் சொன்ந்த செலவில் சூனியம் வச்சிக்கிறது:) இணைய இடியம்!

ஆசிடுக்கெல்லாம் பயப்படாதவள், இந்தச் சின்ன ஹிட்டுக்கு அடங்கிவிட்டேன்:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஹுசைனம்மா.ரமலான் மாத நோன்பு ஆரம்பித்திர்ருக்கணுமே,.
கரப்பான்பூச்சீயெல்லாம் துடைப்பத்தால் போட்டு விடுவேன். ஈக்கள் என்றால் அருவெறுப்ப்பு:(

அதான் அந்த அவச்சரம்.ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

ஸ்ரீராம். said...

மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இதுபோன்ற விஷயங்களுக்கு தப்பித்தவறி நாம் இன்ஹேல் செய்துவிட்டால் ஆண்டிடோட் என்னவென்று அதன் விளக்கத்திலேயே கண்ணுக்கே தெரியாத சைசில் கொடுத்திருப்பார்கள். அதைப் படித்து வைத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக எதை உபயோகிக்கும் முன்னரும் அதில் எழுதியிருப்பதை ஒருமுறையாவது படித்துப் பார்த்து விடுவது உத்தமம்.

கோமதி அரசு said...

வல்லி அக்கா, கவனமாய் இருங்கள்.

கொசுக்கு மருந்து அடித்துவிட்டு சிறிது நேரம் கழித்து குளிக்க போய் இருக்கலாம்.

பால கணேஷ் said...

நான் ஈ படத்துல வர்ற மாதிரி புத்திசாலி ஈயா அது இல்லாத வரைக்கும் ஹிட்டுக்கு அழிஞ்சிடும். பகீர் அனுபவம் தான். எங்களுக்கும் ஒரு பாடம். ஆனா படிக்கறப்ப நீங்க பட்ட கஸ்டத்த நினைச்சு வேதனையா இருந்தது.

pudugaithendral said...

உடம்பை கவனிச்சுக்கோங்க வல்லிம்மா

pudugaithendral said...

ஆமா, ரெண்டே ரெண்டு ஈக்கு இவ்வளவு பயமா? //

ஹுசைனம்மா இனி ஈயை அம்புட்டு சாதரணமா சொல்லிட முடியாது. நான் ஈ படத்துல ஒரு ஈ அடிக்கற கொட்டத்தை பாருங்க.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம், படித்துப் பார்த்துட்டு உபயோகிக்கணும்:)
ஆண்டிடோட் போடுவார்கள் என்றே தெரியாது.
கொஞ்ச காலத்துக்கு நோஹிட் :)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோமதி. அன்று அவசரமாகக் கோவில் வேலை இருந்தது.
பிள்ளையார் வேண்டுதல். இனிக் கவனமாக இருப்பேன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் பாலகணேஷ்.உனக்கும் பெப்பேன்னு அதுகள் ஓடிப் போய்விட்டது.நான் மாட்டிக்கொண்டேன். [பரவாயில்லை , இதுவும் ஒரு பாடம்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா தெறல். அப்படிச் சொல்லுங்க. ஈயா கொக்கா. 40 ஈக்களைப் பேப்பராலியே வீழ்த்திய எங்கள் சிங்கத்துக்கே இவை அடங்கவில்லை;)