Monday, July 30, 2012

கும்பகோணம் தொடர்வோம்-3

துர்க்கையின் கோவில் பிரகாரம்
ஞானம்பிகா தாயார்
காம்தேனுவின்  மகள் பட்டி
முல்லைவனநாதர்
ஸ்ரீபட்டீஸ்வரம் துர்க்கையம்மா
காலையில் எழுந்து அளவான   உணவை உள்ளே இறக்கிவிட்டு
உப்பிலி அப்பன் கோவிலை நோக்கிப் புறப்பட்டோம். எப்பொழுதும் திகட்டாத தரிசனம்.

தள்ளல் இடித்தல் இல்லை.
நிம்மதியாகப் பிரார்த்தனை செலுத்திவிட்டு  வெளியே வந்தால் ஆடியபடியே கஜராஜன் காட்சி அளிக்கிறார்.
அவருக்கு வேண்டும் அளவு சாப்பாடு வாங்கிக் கொடுத்தாலும் காசு கொடுத்தால் தான் தலையில் கைவைக்கிறார்!!எஜமான விசுவாசம் அப்படி.:)
ஆவர் ஆட்டத்தை ரசித்துவிட்டு மீண்டும் தங்கும் விடுதியை அடைந்து மதிய உணவை முடித்துக் கொண்டு 
பட்டீஸ்வரம் நோக்கிப் பயணம்.
இந்த அம்மாவைத் தேடி அலைந்த நாட்கள் முடிவுக்கு வந்தன.

பத்துவருடங்களுக்கு முன்னால்
காதிக்ராஃப்ட்  கடையில்   கண் முன் நின்றாள்.
கேட்டால் பட்டீஸ்வரம் அம்மா என்றார்கள். 
அழகி. சாந்தவதி..கம்பீரமானவள். எட்டுகைகள். அத்தனையிலும் ஆயுதங்கள். விஷ்ணுவின் சக்கிராயுதத்தையும் வைத்திருந்தாள்.

எல்லாவற்றிற்கு மேல் முகம் நிறைய முறுவல்.
இவளுக்கு எதற்கு ஆயுதம்.?
பார்த்தாலே பகைவர்கள் கால்களில் விழுந்துவிட மாட்டார்களா   தாயே!
உன்னைக் கண்டேன்.என்று மனம் நிறைய அவளைச் சேவித்துத் திரும்பினோம்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

18 comments:

துளசி கோபால் said...

அருமை!!!!

கோவில் வாசலுக்கு முன்னே கோவிலை நோக்கியபடி நிற்பவரைப் பார்த்தீர்களா??????

கோமதி அரசு said...

உன்னைக் கண்டேன்.என்று மனம் நிறைய அவளைச் சேவித்துத் திரும்பினோம்.//
நாங்களும் உங்களுடன் வந்து சேவித்த மனநிறைவு கிடைத்தது அக்கா.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான படங்கள்..

/// எல்லாவற்றிற்கு மேல் முகம் நிறைய முறுவல்...
இவளுக்கு எதற்கு ஆயுதம்...?
பார்த்தாலே பகைவர்கள் கால்களில் விழுந்துவிட மாட்டார்களா தாயே! /// அருமை...

நன்றி அம்மா.....

பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

ராமலக்ஷ்மி said...

/அழகி. சாந்தவதி..கம்பீரமானவள். எட்டுகைகள். அத்தனையிலும் ஆயுதங்கள். விஷ்ணுவின் சக்கிராயுதத்தையும் வைத்திருந்தாள்.

எல்லாவற்றிற்கு மேல் முகம் நிறைய முறுவல்./

தரிசனம் செய்த திருப்தி உங்கள் வரிகளில்.

முதல்படத்தில் யாழித் தூண்கள் அழகு. நெல்லை காந்திமதி அம்மன் சன்னதி எதிரில் உள்ள யாழி மண்டபத்தை நினைவு படுத்துகிறது.

Indhira Santhanam said...

நல்ல தரிசனம். சுருக்கமாக முடித்து விட்டீர்கள். நன்றி அம்மா.

நிரஞ்சனா said...

அழகி, சாந்தவதி. கம்பிரமானவள்ன்னு என்னமா நீங்க ரசித்ததை வெளிப்படுத்தியிருக்கீங்க. பயணத்தின் நினைவுகளை நீங்கள் பகிர்வது ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும்மா.

வெங்கட் நாகராஜ் said...

உங்களால் எங்களுக்கும் தரிசனம்... கிடைக்கட்டும் அவளின் கரிசனம்...

ஸ்ரீராம். said...

பட்டீஸ்வரம் படங்கள் இகே.... உப்பிலியப்பன் கோவில் படங்கள் எங்கே?!

வல்லிசிம்ஹன் said...

யார் துளசி?நான் யாரையும் பார்க்கலையே.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோமதி.நீங்களும் அடிக்கடி அவளைத் தரிசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தனபாலன். உங்கள் பதிவையும் படித்தேன். பின்னூட்டம் இட முடியவில்லை. அத்தனை பாடல்களும் எங்கள் குடும்பத்தில் அனைவரும் ரசிப்பவை. மனத்தில் ஏற்றியவை, மிகவும் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும்மா ராமலக்ஷ்மி.அநேகமா எல்லா அம்மன் சந்நிதானங்களிலும்
யாளியையும் யானையும் கலந்த உருவங்களைப் பார்க்கலாம்.எத்தனை அழகு சிற்பங்கள்.இன்னும் ஒருதடவை அவள் அழைத்தால் நன்றாக இருக்கும்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் இந்திரா. சுருக்கமாக முடித்ததற்குக் காரணம் நேரம் இல்லாமை. குழந்தைகள் எல்லோரும் அவரவர் இடத்திற்குக் கிளம்பிவிட்டார்கள். இனி ஒழுங்காக எழுதலாம்.பேரன் பேத்திகளுடைய மழலைகள் இன்னும் வீட்டை சுற்றி வந்துகொண்டிருக்கின்றன.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நிரூ,
தெய்வ சந்நிதானம் எப்பவும் நல்ல உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் இடம்.
வார்த்தைகளும் அவ்வாறே வந்துவிடுகின்றன. ஸ்ரீதுர்கா உனக்கு எல்லா நன்மைகளையும் அருளட்டும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெங்கட். அடுத்த தமிழ்நாடு விசிட் போது கண்டிப்பாக அவளைப் போய்ப் பார்ப்பீர்கள். இப்போதே முடிச்சுப் போட்டுக்கோங்க:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,முதல் பதிவிலியே போட்டுவிட்டேனே. யானையோட உப்பிலி அப்பனைத் தரிசனம் செய்யக் கிடைத்ததே. பார்க்கவில்லையா.:)

துளசி கோபால் said...

ஆஹா.... இல்லை இல்லைன்னு சொன்னவரை அங்கே கோவிலுக்கு முன்னால் நிக்கவச்சு இருக்கு இருக்குன்னு சொல்லவச்சுருந்தாங்களே:-))))

அமைதிச்சாரல் said...

அருமையான தரிசனம் வல்லிம்மா..