Blog Archive

Wednesday, July 25, 2012

கும்பகோணம் புண்ணியம் கிடைத்தது--2

ராமாயணக்காட்சிகள்
கர்ப்பரகஷாம்பிகா    கோவில் குளம்
ஆடிக்காட்டிய யானை
அருள்மிகு கர்ப்பரக்ஷாம்பிகை கோவிலை   தங்கும் விடுதியிலிருந்து 45 நிமிடப் பயணத்தில் அடைந்தோம். வண்டியை 35 மைல் வேகத்தில்தான் ஓட்டவேண்டும் என்று ஓட்டுனர்  மணி  சொன்னாதால்   பக்கத்தில் இருக்கும் இடங்களுக்கு கூட  மெதுவாகச் செல்ல முடிந்தது.
வெகு குறுகலான  பாதைகள்..தெருவோர திறந்த வெளி கழிவுநீர்ப்பாதைகள்.
கும்பகோணம் மாறவில்லை.
எனக்கு அருவருப்பும் தோன்றவில்லை.
முல்லைவனநாதர் கோவிலை அடைந்த போது அங்கே இருந்த அமைதி
அளவிட முடியாதது.

புனுகினால் செய்த திருமேனிக்கு அபிஷேகம் கிடையாது என்றும் சொன்னார்.வருடத்துக்கு ஒரு முறை  புனுகு சட்டத்தை நீக்கிவிட்டு 
மீண்டும் சார்த்துவார்களாம்.ஆவுடையாருடனும் ஒளிர்ந்தமுல்லைவனநாதரை  மனமார வணங்கிவிட்டு
அம்பாளின் இருக்குமிடம் நோக்கிவிரைந்தோம்.சுகந்தமானகாற்று.
அமைதி.
கண் நிறைக்கும் பசுமை.நந்தவனம் எல்லாம் தாண்டி அம்பிகையின் திருவாசலில் நுழைந்தோம்.1997இல்  இவளை நினைத்து 
வேண்டிக்கொண்டதும், மணிஆர்டர் அனுப்பி நெய், தைலம் எல்லாம் பெற்றுக்கொண்டதும், பிறகு மகன்களின்     சந்ததிக்காகவேண்டிக்கொண்டதும் நினைவுக்கு வர கண்ணில் நீர்.
அம்மா.அனைவரின்      அன்னையரின் கர்ப்பத்தை எப்போதும் மகிழ்வாகவைத்திரு.
உனக்குத் தெரியும்.யார் யாருக்கு எப்பொழுது மகவு வேண்டும் என்று. இதோ இங்கே கட்டியிருக்கும் தங்கத் தொட்டில்களே  ஸாட்சி.
மரத்தொட்டிலும் இருந்தது.

வந்த சிசுக்களுயும் வரப் போகும் சிசுக்களையும் நீயே அல்லவா காப்பாற்றுகிறாய்.உன்னிடம் பிரார்த்தனை செய்தோம். வழிகாட்டினாய்.உன்னை நாட்கள் கழித்தாவது வந்து தொழும் பாக்கியம்  கொடுத்தாய் நன்றி தாயே என்று சொன்னபடி அவளின் சௌந்தரிய மேனியையும் அழகான மடிசார்க் கட்டுப் புடவையையும்,அங்கிருந்த  அர்ச்சகரின்   அருமை வாசகங்களையும் கேட்டுக் கொண்டோம்,மருமகள்களும் மகளும் தனித் தனியே அவரவரின் பிரார்த்தனைகளை நிறைவேற்றினார்கள்.
வெளியே வரும்முன் அவளிடம் மீண்டும் நன்றி சொல்லிவிட்டு, முல்லைவனத்தைப் பார்க்கவந்தோம். அங்கெ முல்லைப் ப்பூ  விற்றுக் கொண்டிருந்த பெண்ணிடம்  பூவை வாங்கிக் கொண்டு
கும்பகோணம் திரும்பவும் இருள் சேரவும் சரியாக இருந்தது. அதற்கு மேல் குழந்தைகள் பசி தாங்காது என்று தெரியும்.
வழியில் நல்ல் சாப்பாட்டு விடுதி கிடைக்குமா என்றூ  தேடி  ஒருவிடுதியை  மகன் கண்டுபிடித்தார்.

ஒருவாறு ஈக்களையும், ஏசிக் குளிரையும் தாங்கிக் கொண்டு  இட்லி மட்டும் சாப்பிட்டுவிட்டு வந்து சேர்ந்தோம்.
அடுத்த நாள் உப்பிலி அப்பனைத் தரிசிக்கணுமே.  நடுவில் கண்ணில் அகப்பட்ட   நிலவையும்  படம் பிடித்துக் கொண்டேன்.:)



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

16 comments:

துளசி கோபால் said...

கர்பரக்ஷாம்பிகை கோவிலுக்கு நான் போனதில்லை.

நம்ம சண்டிகர் டென்டிஸ்ட் இந்தக்கோவிலுக்கு நேர்ந்துக்கிட்டு குழந்தை பிறந்ததா சொல்லி கோவிலுக்கு வழி கேட்டாங்க.

அம்பாளின் மகிமை வடக்கேகூடத் தெரிஞ்சுருக்கு பாரேன்னு நினைச்சேன்!

வெங்கட் நாகராஜ் said...

இரண்டு வருடங்களுக்கு முன் இக்கோவிலுக்குச் சென்றிருக்கிறேன்.... நல்ல கோவில். அமைதியான சூழல்..

நல்ல பகிர்வுக்கு நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

இதோ இங்கே கட்டியிருக்கும் தங்கத் தொட்டில்களே ஸாட்சி.

அந்தத் தங்கத்தொட்டில்களைப்பார்த்து மனம் நிறைந்தது நிஜம் ....

திண்டுக்கல் தனபாலன் said...

குடும்பத்தோடு சென்று வந்ததுண்டு...
கர்ப்பரக்ஷாம்பிகை கோவில் இருப்பது நிறைய பேருக்கு தெரியாது... உங்கள் பதிவின் மூலம் நிறைய பேர் அறிவார்கள்...
அப்படியே ஒரு முறை எங்க ஊருக்கு வாங்க... கோட்டை மாரியம்மன் கோவில், சௌந்தராஜ பெருமாள் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், தாடிக்கொம்பு சௌந்தராஜ பெருமாள் கோவில் - இப்படி நிறைய கோவில்கள் உண்டு... நன்றி அம்மா...

ராமலக்ஷ்மி said...

அழகான பகிர்வு. நல்ல தரிசனம் பெற்றது அறிந்து மகிழ்ச்சி.

ஸ்ரீராம். said...

மாறாத, மாற்ற முடியாத கும்பகோணம் சாலைகள் சந்தோஷம் தருபவைதான். கோவில்களில் அந்த ஏகாந்தமும் அமைதியும்தான் பொக்கிஷம்.

அடுத்து உப்பிலியப்பன் கோவிலா? அட, எங்கள் கல்யாணம் நடந்த ஊர்!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி.நாங்கள் சென்ற சமயம், குருக்கள்
குழந்தைகள் அனைவருக்கும் ரோஜா மாலை போட்டுக் சந்தோஷப்படுத்தினார். மருமகள் அக்காவுக்காக
ஒரு குட்டி தொட்டில் கட்டிவிட்டு வந்தாள்.
இந்தக் கோவிலுக்கு வருவோம் என்று நினைத்தது கூட இல்லை.

வல்லிசிம்ஹன் said...

குழந்தைக்கு நல்ல ஆசிகள் கிடைக்கும்.
நன்றி வெங்கட். இதோ இந்த ஞாயிறுடன் என் வசந்த நாட்கள்
தற்கால விடுமுறை எடுத்துக் கொள்கின்றன.
அடுத்த வசந்தத்துக்குக் காத்திருக்கவேண்டியதுதான்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் இராஜராஜேஸ்வரி எத்தனை ஏக்கங்களையோ
தீர்த்து வைத்திருக்காள் இந்தத் தேவி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தனபாலன்.
மலைமேல் ஆஞ்சனேயரையும் , பஸாரில் கோவில் கொண்டிருக்கும் அபிராமியையும்,
வெள்ளைப்பிள்ளையாரையும்
விட்டு விட்டீர்களே:0)

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி.அத்தனை மகிழ்க்கியையும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்,
அங்க்கதான் திருமணமா.
அப்ப வருஷாவருஷம் போய்க் ஸேவிக்க வேண்டியதுதான்:)

கோமதி அரசு said...

வந்த சிசுக்களுயும் வரப் போகும் சிசுக்களையும் நீயே அல்லவா காப்பாற்றுகிறாய்.//
ஆம் எல்லோருக்கும் தாய் அல்லவா!

நல்ல பகிர்வு.

நிரஞ்சனா said...

கர்ப்ப ரக்ஷ்ர்ம்பிகை ஆலயம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். நேரில் தரிசிக்கும அனுபவம் எனக்குக் கிட்டவில்லை. உங்கள் மூலம் அதை அடைந்ததாய் ஓர் உணர்வு. நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோமதி,அவள் மனதுவைத்துவீட்டால் நடப்பது எல்லாம் நல்லதே என்று தோன்றுகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நிரூ, வேளை வரும்போது நீயும் தரிசனம் செய்வாய். அத்ற்கு இன்னும் நாட்கள் இருக்கிறதல்லவா.