Blog Archive

Saturday, July 21, 2012

கும்பகோணத்திற்கு ஒரு புண்ணியப் பயணம் 1

வஞ்சுளவல்லித் தாயாரும்   ஸ்ரீநிவாசப் பெருமாளும்
திருஞான சம்பந்தருக்காக விலகி  இருக்கும் நந்தி பகவான்
கோமளவல்லித்தாயார்
ஒப்பில்லா  அப்பன்
அருள்மிகு கர்ப்பரக்ஷாம்பிகா
 மே  மாதம்   மருமகள் தொலைபேசியபோது  தங்களது விடுமுறை நாட்கள் பயணத்தைப் பற்றியும், அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை  கோவிலுக்குச்  செலுத்த வேண்டிய  
பிரார்த்தனை  யையும் சொன்னார்.
உடனே    தோன்றியது மனக்கண்ணில் மற்ற கோவில்களும்.
பத்துவருடங்களுக்கு முன்னால்   தரிசனம் செய்த தெய்வத்திருத்தலங்கள்.
மீண்டும் காண வாய்ப்பு.
அதற்கேற்றார்ப் போல  மகளும் அவள் குடும்பமும்  வருவது.
ஒருவரையும் கேட்காமல் இரண்டுநாட்கள் கும்பகோணத்தில் தங்குவதாகத் திட்டம் போட்டு
பயண ஏஜண்டிடம்    சொல்லி ஜூலை 4 ஆம் தேதிக்குக் காலை ரயிலில் பயணச்சீட்டுகள் வாங்கிவிட்டேன். அப்படியே   அன்பு த்தோழி கீதா சாம்பசிவத்திடம்   வழிமுறைகளையும்  கேட்டுக் கொண்டேன்.

தங்குமிடம், பயணம் செய்ய ட்ராவல்ஸ்  வண்டி  எங்க   முன் பதிவு செய்யலாம் என்று கேட்டுக் கொண்டு,லஸ் விநாயகரையும் வேண்டிக் கொண்டு(எல்லோரும் இந்த ஏற்பாடுக்கு ஒத்துக் கொள்ள வேண்டுமே:))
ஒவ்வொரு   குடும்பமாக வந்திறங்கியது.
வந்த இரண்டுநாட்களில் கும்பகோணம் ரயிலேறியாச்சு.
கடைக்குட்டிப்   பேரனைப் பற்றித்தான்  கொஞ்சம் கவலை.
சீக்கிரம் சளிபிடித்துக் கொள்ளும். இன்னும் இரண்டு வயது கூட முடியவில்லை.

கவலையைத் தீர்க்கத் தானே  தாயும் தந்தையுமாக கடவுளர்களாக அமர்ந்திருக்கிறார்கள்.!
ஒவ்வொரு ஊராக வண்டி கடக்கும் போது மாயவரம் நிலையம் வந்தது. 
மாயவரத்துப் பதிவர்கள் அனைவரும் மனதில் வந்து போனார்கள்.
திருமதி அரசு,கயல்விழி,ஆயில்யன்     என்று இன்னும் எத்தனையோ  ஞாபகங்கள்.
அத்தனை ரயில் நிலையங்களின்  சுத்தமும்  நேர்த்தியும் மனதைக் கவர்ந்த்து.
குப்பையெல்லாம் நம் சென்னைக்குத் தானோ என்று நினைத்துக் கொண்டேன்:(
இளமைக்கால எழும்பூர் ரயில் நிலையமும் இப்போது இருக்கும்   நிலையும் மனதை என்னவோ செய்தது.
காலத்துக்கேற்ற  மாறுதல்கள்.கிணற்றுத்தவளையாக நான் இருந்தால்,நகரம் மாறாமல் இருக்குமா.

நிறைய நல்ல மாறுதல்களும்  வந்திருக்கின்றன. சுத்தம் தான் கொஞ்சம் போதவில்லை.
இதற்கு எதிர்மறையாக வழி  நெடுகப் பார்த்த ரயில் நிலையங்கள் மகா சுத்தம்.
கும்பகோணத்திற்கு நல்ல வெய்யில் நேரத்தில் மதியம் இரண்டிற்கு வந்தோம்.

கொண்டுவந்த ரொட்டிகளும், இட்லியும்,தயிர் சாதமும்  காலியாகி இருந்தன.
எங்களை அழைத்துப் போக வந்திருந்த   டெம்போ ட்ராவலரும்  ஓட்டுனர் மணியும் வந்தனர்.

சாரா   ரீஜன்சி  விடுதியை அடைந்தோம். 
அவரவர் அறைகளை அடைந்தோம்.   குழந்தைகளைத் தயார் செய்து,அவர்கள் சாப்பாட்டையும்   தயார் செய்து கொண்டு,
தாயார் கர்ப்பரக்ஷாம்பிகையை த் தரிசிக்கக் கிளம்பினோம்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

16 comments:

ஸ்ரீராம். said...

நல்ல பல பயண அனுபவங்கள் படிக்கக் கிடைக்கும் போல இருக்கே.... காத்திருக்கிறோம்.

சாந்தி மாரியப்பன் said...

ஆரம்பமே அமர்க்களமா இருக்கே.. தொடர்ந்து வருகிறேன் :-)

கோமதி அரசு said...

மாயவரம் நிலையம் வந்தது.
மாயவரத்துப் பதிவர்கள் அனைவரும் மனதில் வந்து போனார்கள்.
திருமதி அரசு,கயல்விழி,ஆயில்யன் என்று இன்னும் எத்தனையோ ஞாபகங்கள்.
அத்தனை ரயில் நிலையங்களின் சுத்தமும் நேர்த்தியும் மனதைக் கவர்ந்த்து.//

வல்லி அக்கா , எங்கள் நினைவு வந்தமைக்கு மகிழ்ச்சி.

மாயவரமும் பயணத்திட்டத்தில் இருந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். அடுத்தமுறை இங்கு வாருங்கள்.
ரயில் நிலைய் சுத்தம் பற்றி சொன்னதற்கு மகிழ்ச்சி, நன்றி.

ராமலக்ஷ்மி said...

படங்களுடம் பயண அனுபவமும் அருமை. தொடருகிறோம்.

வல்லிசிம்ஹன் said...

அனுபவங்களைச் சுருக்கச் சொல்ல நான் பழக வேண்டும் ஸ்ரீராம்:0)
ஒவ்வொரு இடத்திலும் தரிசனம் அற்புதம்.முடிந்த வரை சரியாகச் சொல்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சாரல். எங்கள் வீட்டு இரண்டு ரயில்கள் புறப்பட்டுவிட்டன.
இன்னும் ஒரு ரயில் அடுத்த வாரம் கிளம்பும். மனம் இப்பவே பாரமாக இருக்கிறது.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே கோமதி. எனக்கு மாயவரம் என்கிற பேரிலியே மயக்கம் உண்டு:)
. என் பள்ளித்தோழியின் தாத்தா பாட்டி அங்கே இருந்தார்கள். அந்த ஊரைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொள்ளுவாள்.
அப்போது இருந்தது போல இப்போது இருக்க வாய்ப்பில்லை என்றாலும் மயில்கள் இருக்குமோ என்று எட்டிப் பார்த்ததும் நிஜம்:)நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,நான் எடுத்த படங்கள் சிலவே. மற்றதெல்லாம் கூகிளார் உபயம்.கோவிலுக்குள் காமிரா அனுமதி இல்லை என்று விட்டார்கள்.
ஒவ்வொரு பிரகாரமும் அத்தனை சிற்பங்களுடன் அற்புதமாக இருந்தன!

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய, தெய்வீக பயண அனுபவம் ...
படங்கள் அருமை... பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்... வாழ்த்துக்கள் !

நிரஞ்சனா said...

ஆன்மீகம் பற்றிய என் (அரைகுறை) எண்ணங்களை சமீப பதிவில் எழுதியபோது பலர் தெரிவித்த கருத்துக்கள் என்னை வளமாக்கிக் கொள்ளவும் திருத்திக் கொள்ளவும் உதவின. முத்துப் போல நீங்கள் தந்திருந்த கருத்தும் எனக்கு உதவியது. மிக்க நன்றிம்மா. உங்களின் ஆன்மீகப் பயணத்தில் நானும் கூட வர்றேன்- தொடர்ந்து.

துளசி கோபால் said...

இதோ.... உங்க பயணத்தில் கூடவே வரப்போறேன்.

கோமளவல்லி கொஞ்சும் கிளிகளுடன் அட்டகாசமா இருக்காள்!

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நிருமா. எங்களுக்கும் சந்தேகங்கள் இருந்து வந்திருக்கின்றன. ஒலி பெருக்கிகளின் சத்தம் அநியாயம்தாம். நீங்கள் உங்கள் கருத்துகளைச் சொல்வதில் நான் தப்பு சொல்லவில்லை. இன்னும் என் குழந்தைகள் இந்தக் களேபரங்களை ரசிப்பதில்லை.
அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குச் சிலவற்றுக்கே என்னிடம் பதில் உண்டு.அம்மாவழி செல்லுங்கள்.அது போதும்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க வாங்க துளசி.அடுத்தாற்போல பட்டீஸ்வரம் தான்.:)

வெங்கட் நாகராஜ் said...

படங்களும் பயண அனுபவமும் அருமை. உங்களுடன் பயணம் செய்ய நானும் ரெடி...

வெங்கட் நாகராஜ் said...

படங்களும் பயண அனுபவமும் அருமை. உங்களுடன் பயணம் செய்ய நானும் ரெடி...