Monday, June 18, 2012

பெயர் சொல்ல வந்தவர்கள்

  பாட்டி ஸ்டோரி சொல்லு.
பாட்டி தூங்காதே ஸ்டோரி   சொல்லு.

சின்னவன் பக்கத்தில் படுத்துக் கொண்டு தவடையைப் பிடிக்கப் பெரியவன்  சிரிக்கிறான்.
கிஷா! பாட்டி  படுத்துக்கொண்ட பிறகு கதை கேட்டால் நிறைய
கதைகளைக் கலந்துவிடுவாள்.:)
'பாட்டி !  ஆதிமூலமே  சொல்லு. அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். என்று தன்னுடைய   ஃபீஸிக்ஸ்  புத்தகத்தில் ஆழ்ந்தான்.

பெண் அமெரிக்கத் தோழியுடன்    தன் வீட்டுச் செடிகளைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தாள்.
நடு நடுல பிள்ளைகளைக் கண்டித்தாள்.
பாட்டிக்கு  ப்ரஷர் ஜாஸ்தி ஆகிடும். படுத்தாதீங்கடா''

பாட்டி எலஃபண்ட்  ,க்ராக்  கதை சொல்லூ
சரிடா.
கஜேந்திரன்னு ஒரு    நல்ல யானை இருந்தது.
.அது உம்மாச்சிக்குத் தினம்   ஒரு லோட்டஸ் பூவை எடுத்துக் கொண்டு கோவிலுக்குக் கொண்டு போய் க் கொடுக்கும்.
அங்க உம்மாச்சி காலில் அதை வைப்பார்க்கள்.

ஏய் சின்னவா   எல்லா யானையும் நல்லது இல்லை
சிலது வயல்ல  புகுந்து  சாப்பிட்டுடும்.

போ அண்ணா. யானை  நல்லது .இல்ல பாட்டி.?
ஆமாண்டா. ரொம்ப  நல்லதுமா.
சொல்லு சொல்லு.
அன்னிக்கு ஒரு நாள்  அதுவழக்கம் போல தன் சிநேகிதர்களோடயும் அம்மா யானையோடயும் வந்து நல்ல தாமரையா
எடுக்கும் போது அங்க ஒரு  முதலை வந்துட்டது.
முதலையா.வாட் இஸ் முதலை.

டேய் க்ராக் டா. ஓ அதுவா  நான்பார்த்திருக்கிறேன்.
ஸ்லைமி க்ரீச்சர்!!
அது என்ன பண்ணித்து. யானை   காலைப் பிடிச்சுண்டுத்தா.
ஆமாம்.
உம்மாச்சி  ஓடி வந்து சுத்ஸ்ரீஷன் சக்கிரம் போட்டதும் அது ஓடிப் போயிடுத்தா?

??????????
இது நான். உனக்குத்தான் தெரிஞ்சிருக்கே என்னைச்  சொல்லச் சொன்னியே?
நீ வேற மாதிரி சொல்வியோன்னு பார்த்தேன்.

கதையை நீதான் மாத்திட்டியே. முதலை ஓடிப் போயிடுத்துன்னு சொன்னியே.
ஆமாம் பாட்டி யூ ஷுட் நாட் கில்    எனி  ஒன்.!!!
ஓகே.
உம்மாச்சிக்கு எப்படித் தெரியும் இந்த யானை அவரைக் கூப்பிடலையே.
'
ஓ!1பாட்டி! உனக்குத் தெரியல.
உம்மாச்சி பார்த்துண்டே இருப்பார்.
யார்க்காவது ட்ரபிள்னு தெரிஞ்சால்
ஹி   வில் கம் ஃப்ளையிங்.

ஓ! அப்படி மாறிடுத்தா கதை.
சரி நீ சொல்லு
ஆதிமூலமே, நாராயணா'

ஆடிமூலமே  நானான்னா.
சரிடா  அவரும் வந்துடுவார் கதை கேட்க
இப்ப தூங்கு.
நாளைக்கு ராமர்  கதை. என்றபடி அம்மாவைட் தேடிப்போனான்.:)
புதுயுகப் பேரன்.:)

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

16 comments:

நிரஞ்சனா said...

இன்னிக்கு குழந்தைகள் இங்கிலீஷ் கலந்து கதை சொல்றதோட நிறைய சேஞ்சும் பண்ணி சொல்ல வேண்டியிருக்கு. கதை சொன்ன அனுபவத்தை ரசிச்சுப் படிச்சேன். அருமை.

அமைதிச்சாரல் said...

//பாட்டி படுத்துக்கொண்ட பிறகு கதை கேட்டால் நிறைய
கதைகளைக் கலந்துவிடுவாள்.:)//

ச்சோ ஸ்வீட் :-)))))

பாச மலர் / Paasa Malar said...

அனுபவம் அருமை..

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமா பொழுது போகுது போல.... ! தம்ழும் ஆங்கிலமும் கலந்து கதை ஜோராத்தான் இருக்கு.

Geetha Sambasivam said...

ஆதிமூலமே, நாராயணா! :))))))

Indhira Santhanam said...

ஆங்கிலம் கலந்த கஜேந்த்ரமோக்ஷம் அருமை .குழந்தைகளுடன் நாமும் குழந்தையாக மாறும் குதூகலமான நேரம் தொடரட்டும் அம்மா

Indhira Santhanam said...

ஆங்கிலம் கலந்த கஜேந்த்ரமோக்ஷம் அருமை .குழந்தைகளுடன் நாமும் குழந்தையாக மாறும் குதூகலமான நேரம் தொடரட்டும் அம்மா

வெங்கட் நாகராஜ் said...

கதைகளையும் காலத்திற்கேற்ப மாற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது.... :)

ரசித்தேன்....

துளசி கோபால் said...

எலிஃபெண்ட் அண்ட் க்ரோக் கதை சூப்பர். அதுவும் அந்தக் குழந்தை சொல்லித்து பாருங்கோ!!!

//ஓ!1பாட்டி! உனக்குத் தெரியல.
உம்மாச்சி பார்த்துண்டே இருப்பார்.
யார்க்காவது ட்ரபிள்னு தெரிஞ்சால்
ஹி வில் கம் ஃப்ளையிங்.//

அது!!!!! தான் உண்மை. உம்மாச்சிக்கு நம்மைக் காப்பாத்தறதைத் தவிர வேறென்ன வேலை?

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்துப் படித்தேன் அம்மா ! நன்றி !

ராமலக்ஷ்மி said...

//யூ ஷுட் நாட் கில் எனி ஒன்.!!!//

நியாயம்தானே:)?

வல்லிசிம்ஹன் said...

இது கதை கேட்டுக் கொண்ட அனுபவம் நிரூ மா:)புதுக்கதை.நோ வொர்ரீஸ்.

வல்லிசிம்ஹன் said...

பெரியவன் ,சின்னவருக்கு முன்னாலயே கதை கேட்டவர். அதனால் பாட்டியின் தூக்கம் தெரியும்.
போ பாட்டி ரெண்டு கதையாஇயும் ஒண்ணு சேர்த்துட்ட என்பான்:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி மலர்.காலையில் கொஞ்ச நேரம் கிடைத்தது.இரவுக் கதை சொல்வதைப் பதிந்துவிட்டேன்:)

Vetrimagal said...

அருமை!
என் பேத்திக்கு கதை சொல்ல அய்டியா கிடைச்சாச்சு!

கோமதி அரசு said...

ஓ!1பாட்டி! உனக்குத் தெரியல.
உம்மாச்சி பார்த்துண்டே இருப்பார்.
யார்க்காவது ட்ரபிள்னு தெரிஞ்சால்
ஹி வில் கம் ஃப்ளையிங்.//

பேரக் குழந்தைகள் கதை சொல்லும் போது நாம் உலகையே மறந்து விடுவோம்.

நானும் என் பேத்தி கதை கேட்பதை எழுதி இருக்கிறேன். பேரனுக்கு விளையாடத் தான் கம்பெனி கொடுக்க வேண்டும். கதை கேட்க பொறுமை கிடையாது.