Blog Archive

Friday, June 08, 2012

கோடைவிடுமுறை என் உலகத்தில்

எங்களுக்குக்   கைகொடுக்கும் குழந்தைகள்.

 இப்போது   புரிந்திருக்கும் உங்களுக்கு.
முதல் வரவாக  பெண்ணின் குடும்பம் வந்து இறங்கி இருக்கிறது.

வெய்யிலையும் தாண்டி தாத்தா பாட்டியைப் பார்க்கு ஆவல். தாத்தாவிடம் இண்டர்நல்  கம்பஸ்ஷன்  எஞ்சின்  பற்றி விவாதிக்க
ஆவலாக வந்திருக்கிறான்    பெரிய பேரன்.
சூரிய ஒளியை வீணாக்காமல்  தாத்தாவிடம்
மாடியில் ஒரு சோலார் பானல் போட  புத்திமதி
சொல்லிக் கொண்டிருக்கிறான்.:)

சின்னவன் அவன் சொல்வதற்கெல்லாம் ஒத்து ஊதிக் கொண்டு

அவ்வப்போது  தனக்குத் தானே  பேசிக்கொண்டு தானே விளையாடிக்கொள்ளும்

அழகுத் தங்கம்.இருப்பது ஒரு கணினி.
பெரியவனுக்கு  பள்ளியில் கொடுத்த விஞ்ஞான பாடங்களை
விவரித்து ஆராய்ச்சி செய்யணம்.
சின்னவனுக்கு
எப்பொழுதும் பார்க்கும் விளையாடும் கணினி   விளையாட்டுகள்.
வெளியெ  அனுப்ப முடியாத வெய்யில்.
அதனால் எனக்கும் கணினிக்கும்    கிடைக்கும் தொடர்பு     ஒரு மணி நேரமே:)

மடிகணீனி வாங்கிக் கொள் பாட்டினு புத்திமதி வேறு.
விகல்பமில்லாத இந்த அன்பைத்தவிர வேறே  என்ன வேணும்.

அதனால் சுற்றிவளைத்துச் சொல்ல வருவது என்ன என்றால்   லீவு லெட்டர் கொடுக்கிறேன்.:)
எப்பவாவது வரும் வசந்தத்துக்குத் தான் எத்தனை மதிப்பு.
அந்த மகிழ்ச்சியை  அனுபவிப்பது  இன்னும் முக்கியம்.
மீண்டும் பிறகு  பார்க்கலாம் தோழர் தோழிகளே.





 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

26 comments:

ராமலக்ஷ்மி said...

லீவ் க்ராண்டட்:)!

குழந்தைகளுடன் விடுமுறை இனிதே கழிய வாழ்த்துகள்!

அப்பாதுரை said...

எஞ்சாய் பண்ணுங்க!

வெங்கட் நாகராஜ் said...

இந்த மகிழ்ச்சி தான் முக்கியம், பதிவுகளை, பதிவுலகை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்....

மகிழ்ச்சியில் திளைக்க வாழ்த்துகள் வல்லிம்மா..

சாந்தி மாரியப்பன் said...

பாலைவனத்தில் சோலையாய் இனிக்கக் கூடியது பேரப்பிள்ளைகள் விஜயம். இல்லையா வல்லிம்மா :-)

நல்லா எஞ்சாய் செஞ்சுட்டு வாங்க.

Vetirmagal said...

அடடே, பாட்டி , பேரன்கள் ராஜாங்கத்தில் என்ஜாய் பண்ணுங்கள்!

திவாண்ணா said...

ஹாவ் அ நைஸ் டைம்! மாவடு வெச்சு மாமரம் படம் போட்டது இந்த சின்னதுதானே?

மாதேவி said...

வசந்தப் பூக்கள் மலர்ந்து சிரிக்கட்டும்.

Geetha Sambasivam said...

நல்லா எஞ்சாய் பண்ணுங்க. குழந்தைகளுடன் பொழுது இனிமையாய்க் கழிய வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி. இந்த வெய்யிலில் பொழுது போவது அதுகளுக்குக்
கொஞ்சம் சிரமம்தான். நாங்கள் பங்களூரு வரும்போது சொல்கிறேன்:)

வல்லிசிம்ஹன் said...

கண்டிப்பா...துரை.சென்னையைச் சீக்கிரம் புரிந்து கொள்ள மாட்டார்கள். ப்ய் பாட்டி,ஒய் தாத்தா என்ற கேள்விகள் ஒரு நாளைக்கு ஐம்பது தடவையவது வரும்:)

ஸ்ரீராம். said...

இப்படிப் பட்ட பொன்னான தருணங்களை மிஸ் பண்ண மனம் வருமா.... ரசித்து அனுபவியுங்கள். அப்.....புறம் எங்களுடனும் பகிருங்கள்!

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் மிஸ் செய்ய மாட்டேன். என் உடல் நிலைமை கூட முன்னேறி விட்டதாகத் தோன்றுகிறது.:)
நன்றி வெங்கட்.
உங்கள் பெற்றோரும் இதையே சொல்லி இருப்பார்கள் இல்லையா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் சாரல்.
அபார சக்தி. அடுத்து என்ன செய்யலாம் என்கிற துடிப்பு.

எங்கள் உடலிலுமின்னும் சக்தியைப் புகுத்திவிடுகிறது!!!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்பா அதுதான் செய்யப் போகீறேன்.வெற்றிமகள்

வல்லிசிம்ஹன் said...

தம்பி வாசுதேவன்.அது பண்ணினது பேத்தி. கலையரசி.
வண்ணங்களின் ராணி.
இந்தச் சின்னவர் குங் ஃபூ ,டார்த் வேடர் கத்தி என்று சுழற்றுகிறார்:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி மாதேவி. அப்படியே ஆகட்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா. போனால் வராது பொழுது போனால் கிடைக்காது:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம் . பகிர்ந்து கொள்கிறேன். செட்டில் டௌன் ஆகட்டும். இன்னும் மாமரத்தையும்,கிணற்றையும் பார்த்தே முடிக்கவில்லை.:)

pudugaithendral said...

நல்லா எஞ்சாய் செய்யுங்க.

நிரஞ்சனா said...

ஒரு வாரமா பெங்களூர்ல சுத்திட்டு இன்னிக்குத்தான் வந்தேன். இங்க வந்தா நீங்க லீவு லெட்டர் நீட்டறீங்க... Ok! Have a nice time with grandsons! மீண்டும் நீங்க வர்றப்ப முதல் ஆளா ஓடி வந்துடறேன்!

கௌதமன் said...

Have a nice time with the grandsons!!

வல்லிசிம்ஹன் said...

நன்றி தென்றல்.
அப்படியே!!!

வல்லிசிம்ஹன் said...

நிரூ, இப்பக் கூட வீட்டுக்கு வரலாமே.

பங்களூர் குளிர்ந்து இருந்ததா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கௌதமன். அப்படியே செய்கிறேன்.

துளசி கோபால் said...

நல்லா எஞ்சாய் பண்ணுங்க.

மகளுக்கும் குழந்தைகளுக்கும் எங்கள் அன்பு.

கோமதி அரசு said...

எப்பவாவது வரும் வசந்தத்துக்குத் தான் எத்தனை மதிப்பு.
அந்த மகிழ்ச்சியை அனுபவிப்பது இன்னும் முக்கியம்.//


ஆம், மிகவும் முக்கியம் அது தானே நமக்கு ஊக்கமளிக்கும் டானிக்.

எங்களுக்கு கிடைத்தமாதிரி, எங்கள் மாமானார், மாமியாருக்கும் கொஞ்சம் டானிக் கொடுத்து வந்தோம் குழந்தைகளை அழைத்து சென்று காட்டி.

போனவாரம் தான் ஊரிலிருந்து வந்தோம்.

குழந்தைகளுக்கு பாட்டியின் அனபை தெரிவியுங்கள்.