Blog Archive

Wednesday, June 06, 2012

வளரும் உறவுகள்

கொடுக்காப்புளி ருசித்த காலம்



தபால் சேலத்திலிருந்துதான்.

குழந்தை பிறக்கணும்னால்   மதுரைக்குத்தான்
போகணுமா. இங்க வைத்துக் கொள்ளக் கூடாதா.
பாண்டில் பட்டன் இல்லை.
சட்டையில் க்ரீஸ் போகலை.

தோய்க்கிறவன் சரியாச் செய்ய மாட்டேன் என்கிறான்.
நெஸ்கபே  பிடிக்கலை.
சாப்பாடு  ஒத்துக்கவில்லை  இத்யாதி இத்யாதி.

இத்தனைக்கும் உள்ளூரிலியே சித்தப்பா இருந்தார்.
போனால்   அழகாக ஒருவேளைச் சாப்பாடாவது
சரியாக இருந்திருக்கும்.
பதில் கடிதத்தில் தயிர் தோய்ப்பது எப்படி.
சாதம் குக்கரில் செய்வது எப்படி என்றேல்லாம் எழுதினால்
எவனுக்கு நேரம் இருக்கு.
வொர்க்க்ஷாப் முதல் சைரனுக்கு நான் அங்க இருக்கணும்னு
அப்பதான் தொழிலாளிகளுக்கு  எல்லாம் டிஜிப்லின் வரும்னு பதில்.

இப்படியே   நாட்கள் தள்ளிவிட்டோம்

நடுவில் லக்ஷ்மியும் வந்தாள்.
பரோடாவிலிருந்து   போபாலுக்கு மாறிவிட்டதாகவும்
உலகமே   அதிசயமாக   இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். அதுக்குள்ள எதுக்கு முதல் குழந்தை.

இரண்டு வருடமாவது  எஞ்சாய் செய்ய வேண்டாமா. நாங்கள் பார் பாங்கில்  லீவு வரும்போதெல்லாம் காஷ்மீர்,டெல்லி என்று போய் விட்டு வந்துவிடுவோம்.
உங்க ஆத்துக்காரர் ராத்திரி 12 மணிவரை வேலை செய்வாராமே.
நீ தனியாக   உட்கார்ந்திருப்பியா.
இல்லையே   எனக்குத் துணைக்கு ஆள் உண்டு. நிறைய புத்தகங்கள் படிப்பேன். அழகாக ரேடியோ வாங்கிக் கொடுத்து இருக்கிறார்.
அவர் வரும் வரை கேட்பேன்.
ராத்திரி விழித்தால் என்ன . பகலில் தூங்கிக் கொள்கிறேன்.
அவர் வேலை அப்படிப்பட்டது  என்றேன்.

உனக்குப் புத்தகம் இருந்தால் போதும்,  எனக்கு அப்படி இல்லைமா.
என்று மேலும்  வளவளத்த பிறகு, குழந்தை பிறந்ததும் பார்க்க வருவதாகச் சொல்லிப் போனாள்.

பிறகு அவளுக்கும் இரு ஆண் குழந்தைகள் பிறந்தார்கள்.

எனக்கும் மூன்றாவதாகப் பையன் பிறந்தான்.
எங்கயோ இந்தூரிலிருந்து என்னை சென்சார் செய்து கடிதம் போட்டாள். ரெண்டு போறும்னால் கேட்கலியே  என்று பொறுமினாள்.:)

எனக்குக் கஷ்டமே இல்லை  லக்ஷ்மின்னால் ஒத்துக் கொள்ள மாட்டாள்!!

நாற்பது வருடங்கள் கழித்து இப்போது பார்த்தபோது நிறைய சேதிகள். மதுரைக்குத் திரும்பி விட்டதாகவும் பிள்ளைகள் அமெரிக்காவில் இருப்பதால் அங்கே ஒரு வருடம் இங்கே ஒரு வருடம் இருப்பதாகவும் சொன்னாள்.

அப்பா  இறைவனடி சேர்ந்தது.,தம்பிகளும் அமெரிக்காவில் இருப்பது என்று நீண்டு போன பேச்சில் ஒன்றைக் கண்டுபிடித்தேன். குற்றமே சொல்லவில்லை. என்ன  இப்படி  சாதுவாயிட்டியேலக்ஷ்மி  என்று ஆச்சரியப் பட்டேன்.



பசங்களுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதுன்னு சொன்னேனே  என்று முடித்தாள்:)

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்









27 comments:

Geetha Sambasivam said...

அருமை. நல்ல நினைவலைகள். ஒவ்வொருவருக்குச் சீக்கிரம் குழந்தை பிறக்கணும்னு ஆசை; ஒவ்வொருத்தருக்கு மெதுவாப் பிறந்தாப் போதும்னு.

மூணு இல்லாட்டியும் இரண்டாவது வேணும் தான். இப்போல்லாம் ஒண்ணோட நிறுத்திக்கிறாங்களே, இது கொடுமை! பல விதங்களிலும் சரியில்லை. ஒரு நாள் விபரமாக எழுதணும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா ஒண்ணோட நிறுத்திக்கறது ரொம்பவே சரியில்லை. படிக்கவைக்க முடியாதாமே. நல்ல வேளை இங்க பசங்க ரெண்டு ரெண்டு பெற்றுக்கொண்டார்கள். பெரியவனுக்குத்தான் ஒன்றோட நிற்கிறது சங்கல்பம் எப்படியோ.இந்த வீட்டில் எல்லோருக்கும்(பெரியவர்களுக்கு)ஐந்துக்கு மேல குழந்தைகள் இருக்கும். ஒரு நாள் கிழமை என்றால் பெரிய கூட்டம்தான். நன்றாகவும் இருக்கும்.

சசிகலா said...

அப்பா இறைவனடி சேர்ந்தது.,தம்பிகளும் அமெரிக்காவில் இருப்பது என்று நீண்டு போன பேச்சில் ஒன்றைக் கண்டுபிடித்தேன். குற்றமே சொல்லவில்லை. என்ன இப்படி சாதுவாயிட்டியேலக்ஷ்மி என்று ஆச்சரியப் பட்டேன்.
பசங்களுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதுன்னு சொன்னேனே என்று முடித்தாள்:)// வாழ்வின் யதார்த்தை சொல்லிச் சென்றது வரிகள் .

ஹுஸைனம்மா said...

//பசங்களுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதுன்னு சொன்னேனே//

ஹா.. ஹ.. ரொம்ப சுத்தம் (ரொம்பவே ஓவர்தான்) பார்க்கும் என் அம்மாவிடம் நாங்கள் கிண்டல் செய்வதுண்டு, நல்லவேளை உனக்கு ஆம்பளைப்புள்ளை இல்லை. மருமக வந்தா அவ பாடு திண்டாட்டம்தான்னு...

ஒரே குழந்தையாக இருக்கும் என் சில நண்பர்களின் ஆதங்கம், வருத்தம் எல்லாம் இப்பவும் நினைவில் இருக்கு.

ராமலக்ஷ்மி said...

/ஒன்றைக் கண்டுபிடித்தேன். குற்றமே சொல்லவில்லை./

நல்ல மாற்றம்தான்:).

கொசுவத்தி போல கொடுக்காப்புளிகள் சுருள மீட்டெடுத்த நினைவுகள் மிக அருமை!

நிரஞ்சனா said...

நாள் கிழமை என்றால் கூட்டம்தான், கொண்டாட்டம்தான். இதற்காகவல்லவா அதிகம் உறவுகள் வேண்டும். மிகக் குறைந்த உறவுகள் என்பதனால் நிறையப் பேரை உறவாக்கிக் கொள்ளும் எனக்கு இதைப் படிக்கையில் மிகமிக சந்தோஷமா இருக்கும்மா.

ஸ்ரீராம். said...

அருமை.
ஒண்ணோடப் போறும்னு சொல்றவங்க ஹஸ்பென்ட் அன்ட் வொய்ஃப் வேலைல இருக்கறவங்கதான். பார்த்துக்க ஆள் இருக்காது... இன்னும் கொஞ்ச நாள் கழித்துப் பாருங்க... இப்படி விளம்பரம் வரும்..."நாமே இருவர்.... நமக்கெதற்கு ஒருவர்?" :)))

ரிஷபன் said...

சரளமாய் சொல்லிப் போன விதத்தில் ஒரு அழகு.

வெங்கட் நாகராஜ் said...

சுகமாய் ஒரு கொசுவத்தி......

நாம் இருவர் நமக்கு இருவர்....
நாம் இருவர் நமக்கு ஒருவர்...
நாம் இருவர் நமக்கெதற்கு இன்னொருவர்....

இப்படித்தான் போய்க்கொண்டு இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சசி கலா.உண்மையே. வாழ்வு நமக்கு எத்தனையோ சொல்லிக் கொடுக்கிறது.அதை அவ்வப்போது
நினைவு வைத்துக் கொள்வது நல்லது மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ஹுசைனம்மா.மாமியார் வேலை கயிறு மேல் நடப்பது போலத்தான்.அன்பாக மட்டுமே இருக்கணும். குறை காணக் கூடாது.
அநாவசியப் பேச்சு கூடாது.
மாமியார் கற்றுக் கொடுத்த பாடங்கள் இப்பொழுது உபயோகமாகும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்பா ராமலக்ஷ்மி. கொடுக்காப்புளி
சுருட்டி இருப்பது வாழ்க்கைச் சக்கரத்தை நினைவு படுத்தும்.சிலது பழுத்து இனிக்கும். சிலது பழுக்காமல் கசக்கும்:0
நாம்தான் கனியிருப்பக் காய் கவராமல் பழக வேண்டும்:)

வல்லிசிம்ஹன் said...

நிரூக்குட்டி,
அப்படித்தான் இருக்கணும்.அன்பினால் வசப்படும் நண்பர்கள் அதிகம் வேண்டும்.
இப்போ நான் புதிசா உனக்கு ஒரு பெரியம்மா கிடைத்துவிட்டேன் பார்:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.அதுவும் திருமணமே வேண்டாம் என்கிற காலம் இது:)
அப்புறமென்ன குழந்தை.
பணம்,வீடு,கார் இப்படிப்போய்க் கடைசிலியேதான் குடும்பம் நினைவுக்கு வருகிறது. நிலைமை மாறலாம்.பெற்றோர் நலமாக இருந்தால் பிள்ளைகளும் நலமாக இருப்பார்கள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ரிஷபன்.ரொம்ப நன்றிமா.இன்னும் வளரக் கதை இருக்கிறது. உடல் மசியவில்லை.
கொஞ்ச நாட்கள் போகட்டும்.தொடரலாம்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெங்க்ட்.டெல்லி வெய்யில் எப்படி இருக்கிறது.

தினம் தினம் செய்தியாக வருகிறது.குடும்ப நலன் பற்றி.அதைக் காப்பாற்றக் குழந்தைகள் வேணும்.
இரண்டாவது கண்டிப்பாக வேணும்:)

அப்பாதுரை said...

மெதுவா ஊஞ்சல் அசைவது போல அசைபோடறீங்க. nice.
கொடுக்காபுளி படம் சூபர். சட்னு எழுபதுகளுக்குத் தாவியாச்சு!

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை. உங்கள் வலைச்சர வாரம் முழுவதும் வாசிக்க முடியாமல் இரத்த அழுத்தம் படுத்திவிட்டது.சாரி.
கொடுக்காPPஉளி நானே இப்பதான் பார்க்கிறேன். உடனே படம் எடுத்துவிட்டேன்:)
எனனக்கு எதையும் மறக்க முடியாத மனம்.அது அப்பப்போ எழுதிடுன்னு பயமுறுத்துகிறது:)
நன்றி மா.

சாந்தி மாரியப்பன் said...

//குற்றமே சொல்லவில்லை. என்ன இப்படி சாதுவாயிட்டியே லக்ஷ்மி என்று ஆச்சரியப் பட்டேன்.

பசங்களுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதுன்னு சொன்னேனே என்று முடித்தாள்:)//

சுருங்கச்சொல்லி விளங்க வெச்சிட்டாங்க லஷ்மி :-)

Vetirmagal said...

எல்லாம் சரி, அந்த கொருக்காபிளிகாய் எனக்கு இப்போதே வேண்டும் போல இருக்குதே என்ன செய்யறது?

பொறாமையா இருக்கு!

மாதேவி said...

கொடுக்காப் புளி படத்தையும் போட்டு நல்ல கதையையும் கூறிவிட்டீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சாரல். ஆமாம் பட்டாசா வெடிக்கறவள் இப்படி அமைதியானது என்னவோ மாதிரி இருந்தது:)

வல்லிசிம்ஹன் said...

ஹைதராபாதில் இல்லாத வெரைட்டியா வெற்றிமகள். கிடைக்கும் பாருங்கள்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி , வாழ்க்கையையே சொல்கிற மாதிரி ஒருவட்டத்துக்குள்
புளிப்பு இனிப்பு எல்லாமே கலந்தது தான் வாழ்க்கை என்று சொல்வது போல இருந்தது.:)

Matangi Mawley said...

கொடுக்காபுளி ... never seen that before!!!
So smooth... like a butter melting at the touch of a hot knife!

துளசி கோபால் said...

ஆஹா.... கொடுக்காப்புளி!!!!!!

நாக்கைச் சப்புக் கொட்டிக்க வேணும்தான்:(

கடைசி வரி....... சூப்பர் பஞ்ச்!!!!!

கோமதி அரசு said...

சிறு வயதில் சாப்பிட்டது. பச்சைகலர், ரோஸ் கலர்லில் இனிப்பும் துவரப்புமாய் . வாழ்க்கையில் இப்படித்தான் இரண்டும் கலந்து இருக்கும் என்பது போல்.

நினைவலைகள் அருமை.