About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Thursday, May 24, 2012

கிரிகெட் ஆடப் போகலாமா:)

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

இந்தியா  முன்னேறுகிறது.

காய்கறி விலை ஏறிவிட்டது. வாங்குகிறோம்.
வீதியில் இறங்கி நடக்க முடியவில்லை. அவ்வளவு வண்டிகள்.
முன்னேற்றம் தான்.

எங்கள் வீதியில் இருந்த பழையவீடுகள் 80(சுற்றி இருக்கும் பத்து க்ரௌண்ட் மனைகளோட))   கோடிகளுக்கு விற்கப்பட்டு
ஒரு அபார்ட்மெண்ட் 3 கோடி என்ற அளவில் விற்கப் படுகிறது.

கட்டினது தெரியவில்லை. குழந்தைகளும் துணி உலர்த்துக்   கொடிகளும்

கண்ணில் படுகின்றன.
ஒரே ஒரு வீதியில்  மூன்று அழகு நிலையங்கள்,
மூன்று துணிமணிக் கடைகள்.
மூன்று மருத்துவ மனைகள். ...
மூன்று பாங்குகள்.
இரண்டு தானியங்கி  பணம் வழங்கும் இயந்திரங்கள்..
அவைகளில்  எப்பொழுதும்   கூட்டம்..

இது இருக்கட்டும். ப்ளஸ்  2  தேர்வு முடிவுகள்
வந்து  எனக்குத் தெரிந்த  நாலைந்து குழந்தைகள்
நன்றாக மதிப்பெண்கள் பெற்றவர்கள்..
இரண்டு பெண்கள்  பொருளாதார்ம், வணிகம், கணக்கெடுப்பு
இந்த வகையில் பிரமாதமான   மதிப்பெண் எடுத்துத் தேர்வடைந்திருந்தார்கள்.

இரண்டு  பையன்களுக்கும் எஞ்சீயர்,அமெரிக்கா  கனவுகள்.

ஒரே ஒரு பையன்   விஸ்காம்,கிரிக்கெட்  இரண்டு அகாடமியில் சேரப் போவதாகச் சொன்னான்.

ஏன்பா என்றதற்Kஊ  இரண்டிலும் பணம்  உண்டு ஆந்டி.
நீங்க ஐபிஎல்  பார்ப்பதில்லையா.  என்றான்.
இல்லப்பா. எனக்கு ஈடுபாடு இல்லை.

அவர்கள் கோடீஸ்வரர்கள் ஆகி விடுவதில்
முனைப்பாக இருக்கிறார்கள்.
நூறு கோடியில் வீடு கட்டி இருக்கிறாராம் ஒருத்தர்.

எங்கள்  காலத்தில்  எண்பதுகளிலும் விழித்திருந்து இந்த விளையாட்டைப் பார்த்திருக்கிறேன்.
.
இப்போது உலக மயமான கிரிக்கெட்.. அவ்வளவு ரசிக்கவில்லை. அதுவும் ஒரு மாணவன் 750 ரூபாய் கொடுத்து, விளையாட்டைப் பார்க்க
வந்திருப்பதாகச் சொன்னான். தொலைக்காட்சியில் பார்த்தேன்.

மாற்று சிந்தனை உடைய எனக்கு இது ஒப்பவில்லை. ஒரு பக்கம்
கணினி படிப்புக்குக் கையேந்தும் வறுமைக் கோட்டு    மாணவர்கள்.
மறுபுறம்  அம்மா படிப்புக்காகக் கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு  கிரிக்கெட்
பார்க்கப் போகும் இன்னோரு  பையன்.

எல்லோர் கையிலும் கைபேசி.
கண்மண் தெரியாமல் சாலையில் விரையும் முகமூடிப் பெண்கள்.
சர்ரென்று எங்கள் வண்டியை தப்பான பக்கத்தில்
கடந்த பெண்ணைப்  பார்த்தால்   சிரிக்கிறாள்.
 ஒரு செகண்ட் இவர் சமாளிக்காமல் இருந்தால் வண்டி யோடு கீழே விழுந்திருப்பாள்


வந்திருந்த   பெண் நான் கூட ஸ்கூட்டி கேட்டிருக்கிறேன் . என் மதிப்பெண்ணுக்குப் பரிசாக. என்றாள். பதினெட்டு வயது..

''ஓடிப் போய்க் கல்யாணம் செய்துகொள்ளலாமா ''என்று ஒருவிளம்பரம்.

அந்த நிமிடத்துக்காக மட்டுமே வாழக் கற்றுக் கொண்டிருக்கும் ஒரு தலைமுறை.
ஒரு அணி எங்கயோ வெற்றி பெற்றால் சென்னையில்
பார்ட்டி  கொண்டாடும்    விடலைப் பையன்கள் பெண்கள்.

போன வார ஸ்காண்டல் வாரமாக  பல தொலைக் காட்சிகளில் பார்த்ததின் விளைவு இந்தப் பதிவு.

சிறுவர்கள் தெளிவாக இருக்கிறார்களோ இல்லையோ
நான் குழம்பிப் போயிருக்கிறேன்.
இன்று ஏறியிருக்கும் பெட்ரோல் விலை,
அதைத்  தொடரப் போகும் மற்றவிளைவுகள்..

வெளிநாட்டில் முடங்கியிருக்கும்   கறுப்புப் பணம். அதைச் சொல்ல ஏசி  வண்டியில் வந்து   தீர்மானங்கள் இயற்றும் கல்விமான்கள்.(?)

மேரா பாரத் மஹான்.
.23 comments:

துளசி கோபால் said...

நானும் கூடவே சேர்ந்து புலம்பவா?

அதென்ன பழைய வீடு 80 கோடியா?

யம்மாவ்!!!!!!!!!!!

நிரஞ்சனா said...

டூ வீலரை நிதான வேகத்தில் செலுத்தாமல் கன்னாபின்னாவென்று செலுத்துபவர்களைப் பார்த்தால் எனக்கும் கோபம் கோபமாக வருகிறது வல்லிம்மா. (இன்னிக்குக் கூட எழுதியிருக்கேன் இதப்பத்தி). கிரிக்கெட்டைப் பொறுத்தவரை நான் யார் ஜெயிச்சாங்கன்னு மட்டும் தெரிஞ்சுக்கற ரகம். கிரிக்கெட் இன்னிக்கு பணம் அள்ளித்தர்ற விளையாட்டாயிடுச்சு. ஆனா விஸ்காம் படிக்கறது நல்லதுதான்கறது என் கருத்து. (பின்ன... ஒரு விஸ்காம் ஸ்டூடண்ட் வேறென்ன ‌சொல்லுவாளாம்?)

அமைதிச்சாரல் said...

பழையவீடு 80 கோடியா!!!!! சென்னை ரொம்ப காஸ்ட்லியாத்தான் இருக்கும் போலிருக்கு.

உண்மையான விளையாட்டை ரசிக்காம எப்ப அது வியாபாரமாக்கினாங்களோ, அதுக்கப்புறம் அதை நான் பார்க்கறதில்லை.

ஹுஸைனம்மா said...

உங்களின் ஒவ்வொரு வரிக்கும் என்னோட “ஸேம் பிளட்” போட்டுகோங்க. :-((((

2 வருஷம் முன்னாடி தெரிஞ்சவர் 1.5 கோடின்னு வீடு வாங்கினார்; இப்ப 3 கோடியா! சபாஷ்!! நல்ல முன்னேற்றம்.

மேரா பாரத் மஹான். :-((((

ராமலக்ஷ்மி said...

முன்னேற்றம் கிலி ஏற்படுத்துவதாகவே உள்ளது. எங்கே போகிறோம் எனப் புரியாமல் கூட்டத்தால் தள்ளப்பட்டு நகருவதைப் போல எல்லாவற்றையும் கடக்க வேண்டியதிருக்கிறது.

அப்பாதுரை said...

கறுப்புப் பண கல்விமான் - nice.

வல்லிசிம்ஹன் said...

பத்து க்ரௌண்ட் மனையோட சேர்த்து அந்த விலைப்பா.
வீட்டை இடித்துவிட்டு பனிரண்டு வீடுகள்.

ஆறுவீடுகள் 3 கோடி .மிக்க ஆறு வீடுகள் அதற்கு மேல.
எங்கள் காலனிக்குள்ளயே மூன்று வீடுகள் அந்த மாதிரி
விலை போய் இடிக்க ஆரம்பித்தாச்சு!

வல்லிசிம்ஹன் said...

நானும் விஸ்காம் படிப்பதைத் தப்புன்னு சொல்லலை ராஜா.
காலம் மாறி நாளாச்சு.மல்டிமீடியால இருக்கிற வாய்ப்பு நிறையத்தான்.

உற்காகத்தில் ஓடும் வேகத்தைத்தான் நொந்துகொண்டேன்.:)
நிரூ என்னையும் பேட்டி எடுத்து டாக்கு எடுக்கலாம்!!!

வல்லிசிம்ஹன் said...

பழைய வீடு வித் பத்து க்ரௌண்ட் மனைகள் மா சாரல்.

எப்ப இவங்க பணத்துக்காக ஆட ஆரம்பிச்சாங்களோ அப்பவே ஊழலும்
பண போதை தலைக்கேறி தவறுகள் செய்ய ஆரம்பித்து
பார்க்கும் சின்னப் பசங்களுக்கும் அதே தோன்றாதா. அதுதான்
புலம்பலாகிவிட்டது. சாரல்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ஹுசைனம்மா.
எங்கள் சாலையிலிருந்த மரங்கள் காணாமல் போயாச்சு.
வெய்யில் ஏறாமல் என்ன செய்யும்.
கோடிக்கு என்ன மதிப்பு இருக்குப்பா இப்ப.
ஒரு பக்கம் பணமலை.
இன்னொரு பக்கம் ஒன்றுமே இல்லாதவர்கள்.
கோடியைப் பார்த்து சூடு போட்டுக்கொள்ளும்
ஆயிரங்கள்.:(

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி.
குழப்பத்தின் உச்சியில் ஓடிக்கொண்டிருக்கும்
கும்பலைத்தான் என்னால் பார்க்க முடிகிறது.
ஏதோ பதிவும் வலைப்பூவும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள
இருக்கிறது.நாங்கள் இளவயதில் அனுபவித்த பல
சந்தோஷங்கள் இப்ப இருக்கும் குழந்தைகளுக்குக்
காசு கொடுத்து கிடைக்கிறது

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். கல்வி கொடுத்த புத்தி
இவர்களைப் பணமான்கள் ஆக்கிவிட்டது..Durai.

ஸ்ரீராம். said...

உங்கள் வழக்கமான வார்த்தையான 'எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்' இந்தப் பதிவில் கடைசி வரியாக வந்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்! என்னமோ கொஞ்ச நாளாக முதலிலேயே எழுதி விடுகிறீர்கள்!
உலகம் வேகமாக மாறி வருகிறது...எல்லாமே ஃபாஸ்ட்! வியாபாரம்...அவசரம்! சந்தோஷங்களும் ஆனந்தங்களும் கூட ஃபாஸ்ட் புட் மாதிரி ஆகி விட்டது!

வல்லிசிம்ஹன் said...

இனிமேல் அப்படிச் செய்கிறேன் ஸ்ரீராம்.
தலை தெறிக்கும் வேகமாக இருக்கிறது;)

Geetha Sambasivam said...

எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் தான் இப்படி மனைகள், தனி வீடுகள், விவசாய நிலங்கள் குடியிருப்புகளாக மாறுகின்றன. கேட்டால் வளர்ச்சியைத் தடுக்க முடியாது என்கிறார்கள். எல்லாருமே சென்னையிலேயே வந்து அடைந்தால் என்ன செய்யறது? ஏற்கெனவே நெரிசல் தாங்கலை;

அதனால் ஏற்படும் சீதோஷ்ணப் புழுக்கம், மனப்புழுக்கம், உடல் புழுக்கம், குடிநீர்ப் பற்றாக்குறை! சொல்ல முடியலை.

இனிமேல் தனி வீடுகளையோ, தோட்டங்களையோ பார்ப்பதே அரிதோனு நினைக்கிறேன்.

Vetrimagal said...

மாணவர்கள் ரொம்ப தெளிவா இருக்கறா மாதிரி தெரிகிறது. அவங்க முன்னேற்றம் , பணம் பண்ணும் வழிகளில் உள்ளது என்ற முடிவுக்கு பின்னே , பெற்றோர் பங்கு எந்த அளவோ?
இந்த குழப்பம், நாட்டை பற்றியும் சமூக அமைப்பை பற்றியும் கவலைப்படும், நம் போன்றவர்களுக்கு மட்டும் தான்.


என் புதிய பதிவை பார்த்து உங்கள் கருத்தை சொல்ல வேண்டுகிறேன்.(முடிந்தால்)

http://vetrimagal.blogspot.in/2012/05/blog-post.html

நன்றி.

Vetrimagal said...

Geetha Sambasivam மேடம், அப்படி தமிழ்நாட்டில் மாத்திர்ம் இல்லை. பக்கத்தில் உள்ள அய்தராபாதை, பற்றி படித்தால், எந்த அளவுக்கு கட்டிட முதலைகள் நகரத்தை நாசமாக்கி இருக்கின்றன என்பது புரியும்.

சென்னையில் இப்போதும், சில மரங்கள், கடற்கரை இருப்பது கடவுள் அருள்!;-)

மாதேவி said...

சில நாட்களாக களனியில் கோளாறு:( வரமுடியவில்லை.

ஒரு மகிழ்ச்சியான செய்தி ஒருநாள் இரவு உங்கள் வீட்டிற்கு வந்திருந்தேனே
நீங்கள் தந்த அன்பானஉபசாரத்தில் மகிழ்ந்தேன்:))) நன்றி.

எங்கும் இதே வளர்ச்சிதான்.
தனிவீடுகள் காணாமல்போய் பிளாட்களாகிக் கொண்டிருக்கின்றன. பல இடங்களில் காத்து இல்லாமல் மூச்சுத்தான் முட்டுகின்றது.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் வெற்றிமகள்.
அவர்கள் எடுக்கும் முடிவுகளில் உறுதியாக இருந்து வளம் பெற வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அதேதான் கீதா.வயலுக்குப் பதிலா வீடு.நிழலில்லாமல் சாலைகள்.

மெரினாவில் கூட காற்றில்லை.
இனிமேலாவது குறைந்து மழை பெய்யணும்.இல்லாவிட்டால் அரபு நாடுகள் மாதிரி பணம் அதிகமாகித் தண்ணீருக்கு நிறையவிலை கொடுக்கவேண்டியதுதான்.
அவர்களாவது ஒழுங்காகச் செய்கிறார்கள்.நம் ஊர் ஊழல் எதையாவது சரியாகச் செய்யவிடுமோ தெரியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

நீங்க வந்தீங்களா.மாதேவி!
என்னதிது. கனவா.!!!!!!!விளையாடாதீங்கப்பா:)
தனி ஃப்ளாட்கள் மூச்சு முட்டத்தான் செய்கிறது.
அதிலயும் இந்தக் குழந்தைகள் சந்தோஷம் கண்டு கொள்கிறார்கள் பார்த்தீர்களா.

மாதேவி said...

ஆமாம் கனவில்தான் வந்திருந்தேன்.

கோமதி அரசு said...

உலகம் எங்கு போகிறது மாணவன் காசு சம்பாதிக்க படிக்கிறேன் என்கிறான்.

வருங்கால குழந்தைகளை நினைத்து நம்மை போன்றவர்கள் புலம்ப மட்டும் தான் முடியும் போல.