Blog Archive

Monday, May 14, 2012

கண்ணே பாப்பா..

2012 இல் பதிந்த  சம்பவம்
  


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 மூன்று நாட்களாகக் கண்வைத்தியரிடம்  கண்ணைப் பரிசோதித்து அலுத்து,  கண்ணாடி போட்டுக்கங்கன்னு   தீர்மானமா சொல்லிட்டாங்க.

அவங்க கொடுத்த  கண்ணாடியைப் பரிசோதனை செய்து கொண்டிருந்தேன்.
வைத்தியர்  உள்ளே இன்னோருவரை அறுத்துக் கொண்டிருந்தார்,. அறுவை  பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

''பாட்டி'
ஒரு குட்டிக் குரல் கேட்டது.
மனம் பூராவும் ஆநந்தம் துள்ளியது.
 யாரிந்த தேவதி என்று திரும்பினேன்.
ஒரு நான்கு வயதுக் குழந்தை (பெண்)
புடவையைப் பிடித்து  கண்ணு வலிக்கிறதா பாட்டி என்று கேட்டது.
எனக்கு அப்பவே கண்வலி போய்விட்டது.

இல்லடா கண்ணம்மா. சரியாப் போச்சு. இதோ கண்ணாடி போட்டுக்கப் போறேண்டா, என்றபடி குழந்தையைப் பார்த்தேன்.
ஆணைப் போலக் கால் நிஜாரும்,அரைக்கை சட்டையும்
போட்டு சுருள்குழலோடு பெரிய கண்களால் என்னைப் பார்த்தது அந்தத்
தேன்மலர்.
''ஏண்டா கேட்கறே''
 எங்க அம்மா இல்ல எங்க  அம்மா''
ஆமாம்'
அவங்களுக்குக் கண்ணு தொங்கிப் போச்சு''
!!!!!!!
என்னது? என்று அடுத்த வரிசையைப் பார்த்தேன்..
அங்கே ஒரு அம்மாவும் இந்தக் குழந்தையோட அண்ணாவும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்   கண் வீங்கி இருந்தது.

நான் இந்த ந்ண்டுசிண்டைப் பார்த்து, உன் பேர் என்னடா
என்றேன்.
இன்மாயி
என்னது?
அவளோட அண்ணா   ஹிரண்மயி  ஆந்டி என்று புன்னகைத்தான்.
ஹிரண்மயி இங்க வாடா, ஸ்கூல் போறியாம்மா என்றேன்.
அய்ய சூலெல்லாம் கிடையாது
சம்மல்சூல்(சம்மர் ச்கூல்)   தான் போறேன்.
ஆனா இன்னிக்குப் போலை.
ஏன் தெரியுமா
தெரியாதே.
காலைப் பாக்கறியா பாட்டி என்றது.
காண்பிடா   கண்ணு  என்றதும் சிரமப்பட்டு ஒரு துளியூண்டு கீறலைக் காண்பித்தது.
புண்ணு வந்திருக்கு. என்னால ஒக்காரவே முடியாது
அதனால தான் போல.
என்று    தாவி தாவிக் குதித்தது.:)
ஏய் வலிக்கப் போறதுடா என்றேன்.
குதிச்சா,டான்ஸ் ஆடினால் வலிக்காது
ஸ்கூலுக்குப் போய் உட்கார்ந்தால் வலிக்கும் என்று
ரொம்பப் பாவமா முகத்தை வைத்துக் கொண்டது.
அவளுடைய அம்மா,அப்பா,அண்ணா எல்லோரும்
புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள்.

மருந்து போட்டியாமா என்றால். அவளுக்குப் பிடித்த மிக்கிமௌஸ் பாண்ட் எயிட்  கிடைக்கலையாம்.:)
அதற்குள் என் முறை வரவே  உள்ளே  சென்றேன்.

வெளியே வரும்போது அந்த சிறிய சொர்க்கத்திடம் வரேண்டா கண்ணா
என்றதும். இங்கயே இரு பாட்டி என்றது. தாத்தாக்குப் பசிக்கு இன்னோரு நாள் வரேன் என்றதும். சரி பாட்டி  பைபை என்று கையசைத்துவிட்டது.
கண் நிறைய அந்தச் செல்வத்தைப் பார்த்துவிட்டுக் கீழே இறங்கிவந்து எஜமானரிடம் சொன்னேன். உனக்கு எப்பவும் பேரன்பேத்திகள் கிடைத்துவிடுவார்கள் என்றபடி வண்டியைக் கிளப்பினார்.

சின்ன சொர்க்கங்களைப் படைக்கும் கடவுளுக்கு நன்றி.
Posted by Picasa

21 comments:

நிரஞ்சனா said...

தேன் மலர்... சின்ன சொர்க்கம்... குழந்தைங்களை எவ்வளவு ரசனையா வர்னிச்சிருக்கீங்க, எவ்வளவு கவலை இருந்தாலும் குட்டிப் பாப்பாக்களோட மழலையக் கேட்டுட்டு இருந்தா போயிடும்கறது நிஜம்தான், அருமையான பகிர்வு வல்லிம்மா.

கௌதமன் said...

ஆஹா சுகமான பதிவு! இதைப் படித்துக் கொண்டிருக்கும் போதே என்னுடைய பேரன் என்னிடம், "டேய் தாத்தா, என்னடா படிச்சுகிட்டு இருக்கே?" என்று கேட்கின்றான்!

Geetha Sambasivam said...

கோடி துக்கம் போகும் குழந்தையின் முகத்திலே. அதுவும் மழலைன்னா கேட்கவே வேண்டாம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் நிரூமா.
அதுக்கும் எனக்கும் என்ன பந்தம். நிமிஷமாக ஒட்டிக் கொண்டது.
அவ்வப்போது கடவுளின் கரங்கள் நம்மைத் தொட இந்தத் தேவதைகளை அனுப்புகிறார்.

வல்லிசிம்ஹன் said...

அடச் செல்லமே. இன்னும் நாலு டா போடுடா கண்ணா,. நோயெல்லாம் பறந்துவிடும் இந்த மாதிரிக் குழந்தைகள் பக்கம் இருந்தால்.
மிக நன்றி கௌதமன்.

ராமலக்ஷ்மி said...

கண்ணைக் காட்டச் சென்ற இடத்தில் சொர்க்கத்தை காட்டிய கண்ணே பாப்பா:)! அழகான பகிர்வு.

வல்லிசிம்ஹன் said...

நிறையக் குழந்தைகள் வெட்கப்படும். இது அப்படியே என்னை ஆக்ரமித்துக் கொண்டது கீதா. அந்த இருபது நிமிஷம்
பொன்னான நேரம்:)

திண்டுக்கல் தனபாலன் said...

"ஆஹா ! என்ன அழகான பதிவு ! நன்றி அம்மா !"

ஸ்ரீராம். said...

உங்கள் ரசனையும் சுவாரஸ்யமும் எங்களையும் தொற்றிக் கொண்டது.... தேன்மலர், சொர்க்கம் என்று உங்கள் வார்த்தைகளும் சூழ்நிலையை நிலை நிறுத்துகின்றன.

Kavinaya said...

அம்மா, உங்க குரலில் நீங்களே சொல்லி கேட்பது போலவே இருந்தது! ச்சோ ச்வீட்! :) கண்ணைப் பார்த்துக்கோங்க.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி எதிர்பாராத ஆநந்தக் குளியல்.ரொம்ப நாளாச்சு இதுபோல சந்தோஷம் அனுபவித்து.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.வருகைக்கும் பின்னூட்டத்துக்க்கும்.

வல்லிசிம்ஹன் said...

அத்தனையும் நிஜம் என்கிற போது விவரிக்க ஏது வார்த்தை. அதுதான் உங்ககிட்டயும் வந்து விட்டது. ஸ்ரீராம்

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கவிநயா. ஜெட் லாகே போயிருக்காதே!!

எப்பவாவது இந்த அன்பு கிடைக்கிறது.அதுதான் உண்மையாக எல்லாரையும் இழுக்கிறது.

Anonymous said...

சகோதரி தங்கள் பக்கம் இன்று தான் வருகிறேன். அருமையான ஆக்கம் சொர்க்கம். குழந்தைகள் என்றால் எனக்கும் உயிர்.93லிருந்து 2008 வரை நர்சரிப் படிப்பு டெனிசில் படித்து டென்மார்க்கில் வேலை செய்தேன்.3-11வயதுக் குழந்தைகளுடன். மேலும் வாசிப்பேன் . நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வேதா இலங்காதிலகம்.உங்களைப் பார்த்தால் பொறாமையாகக் கூட வருகிறது:)
அதிர்ஷ்டப்பட்டவர் அல்லவா குழந்தைகளை நெருங்க முடியும்!!மேலும் வாசிக்கப் போவது இன்னும் மகிழ்ச்சி.பதிவுக்கு வந்ததற்கு மிகவும் நன்றிமா.

மாதேவி said...

ஆகா... சின்ன சொர்க்கம் படிக்கும்போதே இனிக்கின்றது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,
தெய்வம் எந்த ரூபத்திலோ வந்து உதவி செய்யும்னு சொல்வார்கள். இந்தக் குழந்தையும் அன்புத்தெய்வம்தான் மா.

சாந்தி மாரியப்பன் said...

//குதிச்சா,டான்ஸ் ஆடினால் வலிக்காது
ஸ்கூலுக்குப் போய் உட்கார்ந்தால் வலிக்கும் என்று
ரொம்பப் பாவமா முகத்தை வைத்துக் கொண்டது.//

ச்சோ ஸ்வீட்..

நீங்க சொல்லியிருக்கும் விதமும் அழகு வல்லிம்மா :-)

கோமதி அரசு said...

சின்ன சொர்க்கங்களைப் படைக்கும் கடவுளுக்கு நன்றி.//

அவர்கள் தானே நம் மீண்ட சொர்க்கங்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோமதி. அவர்கள் சொர்க்கத்தை மீட்டுத் தருகிறார்கள்.
நன்றி அம்ம.