Blog Archive

Sunday, May 06, 2012

முழு நிலாவும் புயலாக வந்த காற்றும்.

இரவு மூன்று மணிக்கு அடித்த சூறைக்காற்று.
சித்ரா பவுர்ணமி நிலாவைப் பிடிக்க வந்தவளுக்குக் கதவை திறந்ததும் முகத்தில் அடித்தது காற்று.எதிர்வீட்டுத் தென்னங்கீற்று  இப்படி ஆடி நான் பார்த்ததே இல்லை.
 ஆளைவிடு சாமின்னு உள்ள வந்து அழகர் ஆற்றில் இறங்குவதைப் பார்க்க வந்துவிட்டேன்.

ராத்திரி இந்த மாதிரிக் காற்று அடித்தது என்றால்
உன்னையார்  மூன்று மணிக்கு
வெளிய   போகச் சொன்னது என்று ஆரம்பித்துவிட்டார்.;0)


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

19 comments:

ஹுஸைனம்மா said...

//உன்னை யார் மூன்று மணிக்கு வெளிய போகச் சொன்னது//

அதானே, எனக்கும் அதான் தோணுது!! பயமில்லாம எப்பிடி மூணுமணிக்கு வெளியே போனீங்க? :-)))

ஸ்ரீராம். said...

வசந்த், ஜெயா டிவிக்களில் அழகர் ஆற்றில் இறங்குவதைப் பார்த்தீர்களா.... அவர் எப்போது இறங்கினார் என்றே காட்டவில்லை...விளம்பர இடைவேளையில் இறங்கி விட்டார் போலும்! திடீரென பார்த்தால் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளியிருந்தார்!

நிரஞ்சனா said...

My Goodness! புயல் மாதிரி காத்துல ஆடற தென்னங்கீத்து... இவ்வளவு அருமையாப் படமாக்க முடியும் நினைக்கவே இல்ல. Chanceஏ இல்ல. SUPER MA!

வல்லிசிம்ஹன் said...

வாங்க ஹுசைனம்மா. ஏதோ பைத்தியம்னு நினைத்துக் கொள்ளுங்கள். :) ஜன்னல் திரையை விலக்கிப் பார்த்தபோது எதிர் கட்டிடத்தின் உச்சியில் தெரிந்தது.அடுத்தநிமிடம் அதன் பின் போய்விடும் என்று தெரியும்.
அதான் அவசரம்.
வெளியே வந்தால் இந்தக் காற்று:)
உள்ளே வந்ததற்கு க் காரணம் கதவ்ய் சாத்திக் கொண்டால் யார் திறப்பார்கள் என்ற பயம் தான்.
ஏசி அறைக்குள் அவர் காதில் விழாது!!!!

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம் உங்கள் மெயில் ஐடி தெரிந்திருந்தால் நன்றி சொல்லி இருப்பேன்.
முதலில் வசந்த் டிவியிலும் பின் ஜெயாவிலும் பார்த்தேன்.
வசந்தில் விளம்பரமே இல்லை. ஜயவில் தான் சொதப்பல். இறங்கப்போறார் போறார்னு நினைத்துக் கொண்டிருந்தபோது மண்டப்பந்தலுக்குள் வந்துவிட்டார். அதுவும் அந்த அறுவையான ''நல்லதோர்''னு சோக கீதம்:)எப்படியோ அழகரையும் குதிரையையும் பார்த்தாச்சு. என்ன ஒரு கம்பீரம். நன்றி ஸ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

ஹை நிரூ!!
கீழ கிடந்த இலைகள் சருகுகள் பறந்த வேகத்தைப் பார்க்கணுமே!!
உள்ளே வந்து செய்திகள் க்ளிக் செய்தால் பாம்பன் முதலிய இடங்களில் சூறைக்காற்றும், கடல் உள்ளே வந்ததும் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் சி என்என்
நிருபர் மாதிரிப் பெருமைப் பட்டுக் கொண்டேன்.காகிதப்புலி:)

pudugaithendral said...

நேத்து சாயந்திரமே இங்க நல்ல காத்து அடிச்சு பெய்ய இருந்த மழையையும் எங்கோ கொண்டு போயிடிச்சு. அதனால சந்தமாமாவை மிஸ் செஞ்சிட்டேன். :)

உங்க போட்டோவுல பாத்திட்டேன். நன்றி

சாந்தி மாரியப்பன் said...

காத்துல ஆடும் கீத்துகள்.. இந்த மாசப் போட்டிக்குப் பொருத்தமா இருக்கும் வல்லிம்மா..

நீங்க தைரியலக்ஷ்மி வல்லிம்மா ;-))

RAMA RAVI (RAMVI) said...

படங்கள் அற்புதமாக இருக்கு. தென்னகீத்து காத்தில் ஆடுவதை மிக அழகாக எடுத்திருக்கீங்க..

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா தென்றல், தென் மாவட்டத்தில் எல்லாம் மழை . இங்க வெறும் காற்றுதான். உங்க ஊரிலுமா.!!
இந்தத் தடவை சந்தாமாமா பாதை மாறி வேறு வழியாகப் போகிறார். கண்டுபிடிப்பதற்குள் மஹா கஷ்டமாகிவிடுகிறது:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல். அப்படியே எங்கள் அம்மா நினைவு வருகிறது. என்ன இந்தத் தைரியலக்ஷ்மியுடன் அசட்டுத் தைரியத்தையும் சேர்த்துவிடுவார்.
அடுத்த தடவை மெரினாவுக்குப் போய் எடுக்க நினைக்கிறேன். மறுபாதியின் துணை வேண்டும்:)))

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

வரணும் ரமா. பயங்கரமா அந்த மரம் ஆடுவதைப் பார்த்தேன். பையன்கள் பெண்ணுக்கு அனுப்ப ஆசைப்பட்டுப்
படங்கள் எடுத்தேன். அதை அப்படியே பதிவில் போட்டுவிட்டேன்மா

மாதேவி said...

ஆட்டம் போடும் தென்னங் கீற்றை படமே எடுத்துவிட்டீர்கள்.

காத்து அடிக்கும்போது வெளியே போகப் பயமாக இருக்கவில்லையா.

வல்லிசிம்ஹன் said...

பயம்தான் பா. இனிமே செய்ய மாட்டேன். அந்த நேரத்தில் வெளியே வருவது யாருக்குமே நல்லது இல்லை.
அப்புறம் அந்தக் காற்று நின்று விட்டது.

பாச மலர் / Paasa Malar said...

அந்த நேரத்தில் அதுவும் இந்தக் காற்றில் வெளியே இனிமேல் போகாதீர்கள்...படங்கள் சொல்கின்றன காற்றின் தாண்டவத்தை..

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் மலர். தவறுதான்.
திருடர்கள் பயம் உண்டுதான். மற்றபடி

இப்படி நேரங்கெட்ட நேரத்தில் காற்று
அடிப்பது அதிசயமா இருந்தது.கொஞ்சம் பயமாக இருந்தது.

இனி இந்த மாதிரி அட்வென்ச்சர் எல்லாம் கிடையாது.நன்றி மா.

Geetha Sambasivam said...

இந்தக் காற்றை எல்லாம் முகத்தில் அப்படியே வாங்கி அனுபவிக்கக் கொடுத்து வைச்சிருக்கீங்க; பயம் எதுக்கு?? காற்றின் வேகம் முகத்தில் மோதுகையில்! அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா! என்ன ஆனந்தமா இருக்கும்! என்னிக்கு இது? சித்ரா பெளர்ணமி அன்னிக்கா? சரிதான், இங்கே முதல்நாள் சனியன்று மழை கொட்டித் தீர்த்ததில் சந்தமாமா வரவே இல்லை; தாமதமா வந்திருக்கார். அப்போ மாடியைப் பூட்டிடுவாங்க. போக முடியலை. :(((

வல்லிசிம்ஹன் said...

எனக்கும் காத்து ரொம்பப் பிடிக்கும் கீதாமா.
இது வேற மாதிரிக் காத்து.பகல்வேளையில் இன்னும் ரசித்திருப்பேன். இரவு நேரம்.ஏதோ சரியாகத் தோன்றவில்லை:)